10th Tamil Unit 1 to 7 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
10th Tamil katchiyai kandu kavinura ezhuthuga – காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
10th Standard Tamil Unit 1 to 7 New Revised syllabus Important 5 Mark Questions – காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. katchiyai kandu kavinura ezhuthuga. 10th Tamil All Unit Book Back Answers.
Unit 1 – இயல் 1
தலைப்பு : கல்வி
பூட்டின் திறவுகோல் சாவி
அறிவின் திறவுகோல் புத்தகம்
புத்தகம் நாளும் படித்திடுவோம்
அறிவை நாளும் பெருக்கிடுவோம்
நாளும் பொழுதும் படித்திடு
உலகை நீ வென்றிடு!
Unit 2 – இயல் 2
சுற்றுச்சூழல் சீர்கேட்டால்
சுதந்திர காற்றை இழந்தோமே!
மரங்களை மனிதன் வெட்டியதால்
மண்ணும் மலடு ஆனதே
உயிர்க்காற்று இன்றி தவித்தோமே
உயிர்வளிக் குடுவை சுமந்தோமே!
Unit 3 – இயல் 3
Aug – 2022 – Public Question Paper
வறுமையில் வாடிய எனக்கு
ஒருநாள் கிடைத்தது நல்லுணவு….
உண்ணும் வேளையில் நீ வந்தாய்…
பசியால் இணைந்தோம்..
பகிர்ந்து உண்ணலாம்..
வா! தோழா வா!
Unit 4 – இயல் 4
March – 2024 – Public Question
மரமே! மரமே!
மரித்துப் போன மரமே!
மரங்களை வெட்டி வீழ்த்தியே
வெட்ட வெளியில் தவிக்கின்றான்
சூரிய ஒளியில் துடிக்கின்றான்
வெட்டிய மரங்களின் மீதமர்ந்து
மரத்தின் பெருமை படிக்கின்றான்.
மரங்களைப் பற்றி படித்தது போதும்
மரங்களை நடுவோம் வாருங்கள்..
Unit 5 – இயல் 5
ஆடும் ஆட்டம் பாருங்கள்
துள்ளி தாளம் போடுங்கள்
ஆண்கள் ஆட்டம் பாருங்கள்
துள்ளி தாளம் போடுங்கள்
கை கால்களை உயர்த்தியே
ஆடும் ஆட்டம் பாருங்கள்
உருமி மேளம் கேளுங்கள்
துள்ளி தாளம் போடுங்கள்
Unit 6 – இயல் 6
April 2023 – Public Question
ஏர்பிடித்து உழுபவன்…
ஏற்றம்கட்டி இறைப்பவன்…
இறைவனுக்கு அடுத்தவன்…
இருதொழிலே தெரிந்தவன்…
வள்ளலாரின் மூத்தவன்…
வழுவாமல் காப்பவன்…
பசிப்பிணி அறிந்தவன்…
பயிர்களை ஆள்பவன்…
பேரிடரைப் பொறுப்பவன்…
பெருமைதான் சொல்லிடவோ..!