10th Tamil Unit 2 Book Back Answers Guide New Revised Syllabus

10th Standard Tamil New Revised Syllabus Lesson 2 – Unit 2 உயிரின் ஓசை Book Back Question and answers download. Poem Unit 2: Book Back Answers and Solutions. book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. 10th All Subject Book Back question and answers.
- 10th Tamil Unit 1 to 7 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
-
10th Tamil Unit 1 Book Back Answers Guide New Revised Syllabus
இத்தகவல் பயனுள்ள வகையில் இருந்தால் தங்கள் நண்பர்கள் whatsapp குழுவில் பகிரவும் ….. நன்றி!
பலவுள் தெரிக.
1. பரிபாாடல் அடியில் ‘விசும்பில், இசைையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தைையும் பாட்டைையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியைையும்
ஈ) வானத்தைையும் பேரொலியைையும்
விடை: ஈ) வானத்தைையும் பேரொலியைையும்
2. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் சூன் 15 ஐ உலகக் காற்று நாளாாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமைையே.
செய்தி 3 – இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
விடை: ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
3. பொருந்தும் விடைவரிசையைைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் – 1. மேற்கு
ஆ) கோடை – 2. தெற்கு
இ) வாடை – 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
விடை: ஆ) 3, 1, 4, 2
4. ‘மகிழுந்து வருமா?’ என்பது –
அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்த்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) பெயரெச்சத்தொடர்
விடை: ஆ) எழுவாய்த்தொடர்
5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைைந்தது –
அ) வேற்றுமைை உருபு
ஆ) எழுவாாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொொல்
விடை: அ) வேற்றுமைை உருபு
குறுவினா
1. ‘நமக்கு உயிர் காாற்று
காாற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காாற்று நாள்
விழிப்புணர்வுக்காான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.
2. ‘எழுது என்றாாள்’ என்பது விரைவு காாரணமாாக, ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடராானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாாறு அடுக்குத்தொடராாகும்?
- ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது, உவகை காரமாணக சிரித்து சிரித்து பேசினார் என அடுக்குத் தொடராகும்
3. கட்டுரைை படித்த – இச்சொற்களுக்கு இடைையில் வேற்றுமைை உருபைப் பயன்படுத்தித் தொடரைை விரித்து எழுதுக.
- கட்டுரையை படித்த மாணவன் தேர்வில் வெற்றி பெற்றான்.
4. மென்மைையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
-
மேகங்கள் முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும்போது துணிச்சலானவை.
- மேகங்கள் உயிரினங்களின் தாகம் தீர்க்கும்போது மிகவும் கருணையுள்ளவை.
5. தமிழர்கள், வீசுகின்ற திசையைைக் கொண்டு காாற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
-
காற்று கிழக்கிலிருந்து வீசும்போது அது ‘கொண்டல்’ எனப்படுகிறது.
-
காற்று மேற்கிலிருந்து வீசும்போது அது ‘கோடை’ எனப்படுகிறது.
-
காற்று வடக்கிலிருந்து வீசும்போது அது ‘வாடைக்காற்று’ எனப்படுகிறது.
-
காற்று தெற்கிலிருந்து வீசும்போது அது ‘தென்றல் காற்று’ எனப்படுகிறது.
சிறுவினா
1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… முதலிய தலைப்புகளில் காற்று தன்னனைப் பற்றிப் பேசுகிறது. இவ்வவாறு ‘நீர்’ தன்னனைப் பற்றிப் பேசினால்… உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
- நானே! நீர்
- உலகில் முக்கால் பாகம் நான்
- நான் இல்லை என்றால் உலகம் இல்லை
- ஆதவனின் அணைப்பில் கருவுற்று மேகமாய் வளர்ந்து மழையாய் பிறப்பேன் நான்
- விண்ணிலிருந்து நான் விழுந்தால் என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
- மலையில் விழுந்து நதியில் ஓடி கடலில் சங்கமிக்கும் சரித்திர நாயகன் நான்
2. உயிர்கள் உருவாாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைைக் குறிப்பிடுக.
- நிலம்
- நீர்
- காற்று
- வானம்
- நெருப்பு
3. வகுப்பறைையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய பாடலைைப் பாடிக் காட்டினாார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினாார். –
வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைைத் தொடர்களைக் கண்டறிக.
- பாடிக் காட்டினார் – வினையெச்சத் தொடர்
- கேட்டுப் பாடினர் – வினையெச்சத் தொடர்
- கேட்ட பாடலில் – பெயரெச்சத்தொடர்
- சிறுவினாக்களைக் கேட்டார் – இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
-
எழுதுபவருக்குப் பரிசு – நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
நெடுவினா
1. காற்று மாசுபாட்டடைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
குறிப்புச்சட்டகம்
- முன்னுரை
- மரம் வளர்த்தல்
- இயற்கையைப் பாதுகாத்தல்
- காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை:
இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது. காற்று எங்கும் நிறைந்திருக்கிறது. நாம் மூச்சுவிட காற்று மிகவும் அவசியமானதாகும். காற்று மாசுபடாமல் காக்க நாம் என்றும் பாடுபட வேண்டும்.
மரம் வளர்த்தல்:
நாம் உயிர்வாழ காற்று மிகவும் அவசியமானதாகும். உயிர்வளி இல்லையேல் நம் உயிர் வாழ்வு இல்லை. மரங்கள் தான் நமக்கு சுவாசிக்க ஆக்சிஜனைத் தருகின்றன. அதனால் வீட்டைச் சுற்றிலும், வீதிகளிலும் மரங்களை நட்டுப் பாதுகாப்போம்.
இயற்கையைப் பாதுகாத்தல்:
- இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் நம் வாழ்வு வளமடையும். குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டக்கூடாது.
- பூமியை அழகோடு வைத்திருக்க வேண்டும். நெகிழிப் பைகளை வெளியிடங்களில் வீசும் போது நிலம் மட்டுமல்ல காற்றினால் அவை பறந்து செல்லும்போது. காற்றும் மாசுபடுகிறது.
- மிகுதியாகப் பட்டாசுகளை வெடிப்பதை நிறுத்தினால் தூய காற்று கிடைக்கும். புகை வடிகட்டி இல்லாமல் செயல்படும் தொழிற்சாலைகளைத் தடைசெய்ய வேண்டும்.
- காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் :
- பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். தனிமனிதரின் மிகுதியான ஊர்திப் பயன்பாடுகளைக் குறைக்க வேண்டும்.
- மின்னாற்றல் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்தி காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.
- குளோரோ புளோரோ கார்பன் என்னும் நச்சுக் காற்றை வெளிவிடும் இயந்திரங்களான குளிர் சாதனப்பெட்டியின் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும்.
- கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய புதைவடிவ எரிபொருள்களைத் தவிர்க்க வேண்டும் . வீட்டுச் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். இயற்கை வாயு மூலம் சமையலை மேற்கொள்ளலாம்.
முடிவுரை:
இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களுள் காற்று மாசுபாடு ஒன்றாகும். ஆகவே,காற்றை மாசுபடாமல் காப்போம். தூய்மையான காற்றைச் சுவாசித்து நெடுங்காலம் வாழ்வோம்!.
2. “பிரும்மம்” கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
குறிப்புச்சட்டகம்
- முன்னுரை
- புது வீடு
- பல ஆலோசனைகள்
- அம்மாவின் கருத்து
- அப்பாவின் முடிவு
- முருங்கை மரத்தின் வளர்ச்சி
- முருங்கை மர நிழலில்
- உறவுகள் தேடி
- பலத்த காற்று
- முடிவுரை
முன்னுரை :
இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். இந்த இயற்கைக்கு நாம் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடன்களில் மரம் வளர்த்தலும் ஒன்றாகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படிப் பின்னிப் பிணைந்துவிட்டது என்பதை இக்கதையில் காண்போம்.
புது வீடு:
புதிய வீட்டுக்கு இவர்கள் குடிப் பெயர்ந்தார்கள். வீட்டுக்கு முன்னால் நாலு முழ வேஷ்டியை விரித்தது போன்ற இடம் அது. அந்த இடத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஒவ்வொருவரும் விவாதித்தனர்.
பல ஆலோசனைகள்:
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களைத் தெரிவித்தார்கள். பாட்டி ஒரு பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். பசு மூலம் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் கிடைக்கும் என்றார் பாட்டி.
அம்மாவின் கருத்து:
ஒரு வெண்டை, ஒரு கத்தரி, ஒரு தக்காளிச்செடி போடலாம். வீட்டுக்குப் பயன்படும் என்றார் அம்மா. தங்கை இதனைக் கடுமையாக எதிர்த்தார்.மல்லிகை, கனகாம்பரம், ரோஜாச் செடிகள் போன்றவற்றை வளர்க்கலாம் என்றார்.
அப்பாவின் முடிவு:
காலியாகக் கிடக்கும் இடத்தில் முருங்கை நடலாம் என்றார். முருங்கை மரம் எந்த பாதிப்பும் தராது. கபத்தைக் கரைக்கும். கால்சியம் சத்து உள்ளது. வீட்டு முகப்பில் ஓர் அழகைத் தரும். நிழலும் தரும். குளிர்ச்சியாய் இருக்கும். முருங்கை எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.
முருங்கை மரத்தின் வளர்ச்சி :
முருங்கை மரம் மெல்ல வளர்ந்திருந்தது. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவும் எங்களுக்குத் தெரிந்தே நிகழ்ந்தது. புதிய புதிய தளிர்களோடு முருங்கை மரம் வளர்ந்து
முருங்கை மர நிழலில்:
நண்பகல் வேளைகளில் அம்மரத்தின் கீழ் அமர்வதே சுகம். அம்மரத்துக்கடியில் புத்தகங்கள் படிப்பதும், எழுதுவதும் சுகமான அனுபவமாக இருந்தது.
உறவுகள் தேடி :
முருங்கை மரம் வைத்த பின் அதன் கீரைகளை எல்லோருக்கும் கொடுத்து உறவுகளை வளர்த்துக் கொண்டார்கள். முருங்கை காக்கை குருவிகளுக்கு இல்லம் ஆயிற்று. முருங்கை இல்லாத சமையல் இல்லை என்றான்.
பலத்த காற்று :
பலத்த காற்று வீசியது. ஜன்னல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடித்துப் பயம் எழுப்பின. முருங்கை விழுந்து கிடந்தது. வீட்டைச் சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். எல்லாரும் கீரைகளாகவும், காய்களாகவும் அவரவர் சக்திகளுக்கேற்ப திரட்டிக் கொண்டு சென்றார்கள்.
முடிவுரை:
துண்டாகி நின்றிருந்த மரத்தில் சிறுதளிர் தோன்றியது. முருங்கை திரும்பவும் வளரத் தொடங்கியது.
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பபாடலில் தவழும் காற்றறையும் கவிதை நயத்ததையும் பாராட்டி
உரைசெய்க.
- மலர்ந்த மலராத பாதி மலரைம், விடிந்து விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.
- கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவிநயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
- வளரும் – வண்ணமே
- நதியில் – பொதிகை
- மலர்ந்து x மலராத
- விடிந்தும் x விடியாத
- வண்ணமே – அன்னமே
- பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமை அணி வந்துள்ளது)

கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைைக்க.
அ) இயற்கைை – செயற்கைை
- இயற்கைை வளங்களைக் காக்கச் செயற்கைைப் பொருள்களைத் தவிர்ப்போம்.
ஆ) கொடு – கோடு
- மதி எழுதுகோல் கொடுத்ததால் நான் புத்தகத்தில் கோடு போட்டேன்.
இ) கொள் – கோள்
- தெரிந்து கொள் பூமியும் ஒரு கோள் தான்.
ஈ) சிறு – சீறு
- திருவிழாக்களில் சிறுசிறு வியாபாரிகளிடம் ஊரார் சீறி விழுந்தனர்.
உ) தான் – தாம்
- தான் என்ற எண்ணத்தை ஒழித்துத் தாம் என்ற எண்ணத்தை உருவாக்குவதே ஒற்றுமை.
ஊ) விதி – வீதி
- சிலம்பில், கண்ணகி தன் விதிப்படி மதுரை வீதியில் நின்றாள்
உ) தான் – தாம்
-
தான் என்ற எண்ணத்தை ஒழித்து தாம் என்ற எண்ணத்தை உருவாக்குவதே ஒற்றுமை
ஊ) விதி – வீதி
- சிலம்பில் கண்ணகி தன் விதிப்படி மதுரை வீதியில் நின்றால்.
மொழிபெயர்க்க.
The Golden sun gets up early in the morning and starts its bright rays to
fade away the dark. The milky clouds start their wandering. The colourful
birds start twitting their morning melodies in percussion. The cute
butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze.
The breeze gently blows everywhere and makes everything pleasant.
செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர், ஆல மலர், பலா மலர்.
மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலா
நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்ததே காட்சிப்படாமல் உள்ளளேயே
பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.
பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பபெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்ககை.
இலுப்பபைப் பூக்கள் இனிப்பபானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றறைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்ததை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றி கனியாகி அதிலிருந்து, ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
– கோவை.இளஞ்சசேரன்
1. மலரில் சில எளியவைை ஆகக் காரணங்கள் யாவைை?
- மலர்களின் பயன்பாடு, நாற்றம்,மக்களது விருப்பில் இடம்பெறாமை. பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன .
2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக்
- கண்டறிக. மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
3. பத்தியில் இடம்பெற்றுள்ள தொகாநிலைத் தொடர்கள் நான்கினை எடுத்தெழுதுக.
- பூ உண்டு – எழுவாய்தொடர்
- கண்ணிற்குக் காட்சி – நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- மரத்தின் மீதேறி – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- பறித்து உண்ணும் – வினையெச்சத்தொடர்
- குடிநீருக்குத் தன் – நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- காய் தோன்றி – மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
வாாழ்த்துமடல் எழுதுக.
மாவட்ட அளவில் நடைைபெற்ற மரம் இயற்கைையின் வரம் எனும் தலைைப்பிலாான கட்டுரைைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாாழ்த்தி மடல் எழுதுக.
அ அ அ,
…|…|….
அன்புள்ள நண்பா/தோழி,
மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுகிறேன். வாழ்த்துகள்! நீ இன்னும் நிறைய பரிசு பெற வேண்டும்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
உறைமேல் முகவரி:
இ இ இ,
86, கம்பர் நகர்,
தஞ்சை
பத்தியைைத் தொடர்ந்து எழுதி நிறைைவு செய்க.
பாரதியின் வசனநடைை – சிட்டுக்குருவி
சிறியதாானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலைை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மைை நிறமுடைைய பட்டுப்போர்த்த வயிறு; கருமைையும் வெண்மைையும் கலந்த சாாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகைை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைைக் குழந்தைையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைைச் சுமந்து கொண்டு…….. சிட்டுக்குருவி அங்குமிங்கும் ஓடியது. மரத்தின் கிளைகளில் தாவி தாவி குதித்தது. கீச்கீச் என சப்தமிட்டது. ஓய்வில்லாமல் பறந்து பறந்து மரக்கிளையில் அமர்ந்து இரையைச் சாப்பிட்டது. ஓய்வில்லாமல் ஓடும் சிட்டுக்குருவியின் சுறுசுறுப்பும், பறக்கும் அழகும் இரசித்து மகிழத்தக்கதாகும்.
மொழியோடு விளையாடு
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
-
1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும் – விடை: நறுமணம்
-
2. பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும். – விடை: புதுமை / Aug – 2022
-
3. இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. – விடை: காற்று
-
4. நான்கெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். – விடை: விண்மீன் / Jul 24, Mar 25
-
5) ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம். – விடை: காடு / Agu 22, Mar 25
நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது; வாடைக் காற்று வீசியது. – காற்றின் பாடல்
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன. – மொட்டின் வருகை
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்துசென்று மலர்களில் அமர்கின்றன. – மிதக்கும் வாசல்
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள். – உயிர்ப்பின் ஏக்கம்
5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம் – நீரின் சிலிர்ப்பு
6. குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம். – வனத்தின் நடனம் / Sep 20
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
செயல் திட்டம்
அகராதியில் காண்க
-
அகன்சுடர்- உயர்ந்த தீபம்
-
ஆர்கலி- கடல், மழை, பறவை
-
கட்புள் – விழித்திருக்கும் பறவை
-
கொடுவாய்- வளைந்த வாய்.
-
திருவில் – வானவில்
வானொலி அறிவிப்பு
புதிய புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் முன்னெசரிக்கை:
-
1. புயல் வந்தால் பாதுகாப்பாக இருப்பேன்
-
2. புயல் வந்தால் உணவை எடுத்து வைப்பேன்
-
3. புயல் வந்தால் குடிநீரை எடுத்து வைப்பேன்
-
4. புயல் வந்தால் மின்சாரம் துண்டிப்பேன்
படிப்போம்; பயன்படுத்துவோம்!
-
Storm – புயல் (April – 2023)
-
Land Breeze – நிலக்காற்று
-
Tornado – சூறாவளி
-
Sea Breeze -கடற்காற்று
-
Tempest – வன்புயல்
-
Whirlwind – சுழல்காற்று
பணி வாய்ப்பு வேண்டி தன்விவரப் படிவத்தை நிரப்புதல்
1. பெயர். : ………….
2. பாலினம் : ………..
3. பிறந்த நாள் மற்றும் வயது. : 10-11-2010 / 15
4 தேசிய இனம் : இந்தியன்
5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : சேதுராமன்
6. வீட்டு முகவரி. : 17/45, பாரதி நகர், தஞ்சை
7. தொலைபேசி /அலைபேசி எண் : 9080372018
8. 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்: 475/500
9. தாய்மொழி : தமிழ்
10. பயின்ற மொழிகள். : ஆங்கிலம், இந்தி
11. தட்டச்சு. : முதுநிலை தமிழ்
12. கணினி : MS Office
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மைையென உறுதிகூறுகிறேன். தங்கள்
நிறுவனத்தில் பணியினைத் தந்தால் எனது பணியைைச் சிறப்பாகவும்
உண்மைையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மைையுள்ள,
உங்கள் கிராாமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறைை
இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைைக.
பூம்பாாறைை,
10.07.2025
அனுப்புநர்
செ. தமிழரசன்,
50, அன்னை இல்லம்,
காந்தி தெரு,
பூம்பாறைை,
திண்டுக்கல் மாாவட்டம் 625 001.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.
ஐயா,
பொருள் : நூலக வசதி வேண்டுதல் – சார்பு.
வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தைை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைைக்கு எனது வாாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைைவில் உள்ள நூலகத்திற்கு நாாள்தோறும் சென்று வருகின்றோம். எங்கள் கிராாமத்தில் கிளை நூலகம் அமைைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப்போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மைையுள்ள,
செ. தமிழரசன்.
உறைைமேல் முகவரி
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.
இத்தகவல் பயனுள்ள வகையில் இருந்தால் தங்கள் நண்பர்கள் whatsapp குழுவில் பகிரவும் ….. நன்றி!


