You are currently viewing 12th Tamil Public Exam 2026 – Full Answer key

12th Tamil Public Exam 2026 – Full Answer key

12th Tamil Public Exam 2026 – Full Answer key

மொழிப்பாடம் – பகுதி I – தமிழ்
கால அளவு : 3.00 மணி நேரம் ] [ மதிப்பெண்கள் : 90
 

பகுதி – I

 
குறிப்பு :

(i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14


(ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய

விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து

எழுதவும்.



1. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்

(அ) இலக்கண விளக்கம்

(ஆ) தண்டியலங்காரம்

(இ) தொல்காப்பியம்

(ஈ) முத்துவீரியம்

Ans:  (ஆ) தண்டியலங்காரம்

2. பொருத்துக.

(1) சேரன் – (i) மீன்

(2) சோழன் – (ii) யானை

(3) பாண்டியன் – 

(iii) வில் – (4) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் (iv) புலி
 
(அ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)

(ஆ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)

(இ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)

(ஈ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)

Ans:  (அ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)

3. பிழையான தொடரைக் கண்டறிக.

(அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

(ஆ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

(இ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

(ஈ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

Ans:  (அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

4. ‘பிறகொரு நாள் கோடை’ கவிதையின் ஆசிரியர்

(அ) நக்கீரர்

(ஆ) தண்டி

(இ) நகுலன்

(ஈ) அய்யப்ப மாதவன்

Ans:  (ஈ) அய்யப்ப மாதவன்

5. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது :

(அ) மணிமேகலை

(ஆ) கம்பராமாயணம்

(இ) புறநானூறு

(ஈ) சிலப்பதிகாரம்

Ans:  (ஈ) சிலப்பதிகாரம்

6. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

(அ) கடுக்காய்

(ஆ) வசம்பு

(இ) மாவிலைக்கரி

(ஈ) மணத்தக்காளியிலைச் சாறு

Ans:  (அ) கடுக்காய்

7. ‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் :

(அ) ஜெயமோகன்

(ஆ) புதுமைப்பித்தன்

(இ) எஸ். இராமகிருஷ்ணன்

(ஈ) கு. அழகிரிசாமி

Ans:  (ஆ) புதுமைப்பித்தன்

8. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள நூல்

(அ) குறுந்தொகை

(ஆ) தொல்காப்பியம்

(இ) புறநானூறு

(ஈ) திருக்குறள்

Ans:  (ஈ) திருக்குறள்

9. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.



(அ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

(ஆ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

(இ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.

(ஈ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

Ans: (ஈ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

       அச்சாணி அன்னார் உடைத்து.

 

10. பொருத்துக.

(1) பாரதியார் – (i) மருமக்கள் வழி மான்மியம்

(2) பாரதிதாசன் – (ii) ஏசுகாவியம்

(3) கவிமணி – (iii) பாஞ்சாலி சபதம்

(4) கண்ணதாசன் – (iv) பாண்டியன் பரிசு

(அ) (1)-(iii), (2)-(ii), (3)-(i), (4)-(iv)

(ஆ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)

(இ) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i)

(ஈ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)

Ans:  (ஆ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)

11. ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

பூத்த

மலரொன்று

பறக்கிறது

(அ) வண்ணத்துப்பூச்சி

(ஆ) ஈசல்

(இ) விட்டில்பூச்சி

(ஈ) பொன்வண்டு

Ans:  (அ) வண்ணத்துப்பூச்சி

12. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞரைக் கண்டறிக.

சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்

(அ) புதுமைப்பித்தன்

(ஆ) அம்பை

(இ) சூடாமணி

(ஈ) அசோகமித்திரன்

Ans:  (அ) புதுமைப்பித்தன்

11. புதிருக்கு ஏற்ற விடை தருக.

அடைமழை பெய்த அடுத்த நாள்

படைபடையாய் வந்ததாம்

பரங்கி நாட்டு விமானம்

எதிரி சுடாமலேயே

இறகொடிந்து இறந்ததாம் – என்ன ?

(அ) மீன்

(ஆ) பறவை

(இ) நட்சத்திரம்

(ஈ) ஈசல்

Ans:  (ஈ) ஈசல்

14.  இலக்கணக் குறிப்பு தருக.

‘வியர்வை வெள்ளம்’

(அ) உருவகம்

(ஆ) உவமை

(இ) பண்புத்தொகை

(ஈ) வினையெச்சம்

Ans:  (அ) உருவகம்

 

பிரிவு -1

குறிப்பு: எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6

15. மறக்கக் கூடாதது. மறக்கக் கூடியது எவற்றை ?

  • ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.
  • ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.
 

16. “துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு

பழமொழிகளில் எதற்குப் பொருந்தும் ?

(அ) நிலிழன் அருமை வெயிலில் தெரியும்.

(ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
 

17. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

  • மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.
 

18. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை நூல்கள் யாவை?

  • ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி.

 

பிரிவு -2

குறிப்பு : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
19. விரிபெரு தமிழர் மேன்மை

ஓங்கிடச் செய்வ தொன்றே

உயிர்ப்பணியாக் கொண்டோன்”

-யார் யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
 
20. ‘முறை வைப்பது’ என்றால் என்ன?
 
21. ‘படத்தொகுப்பில் குலஷோவ் விளைவு” என்றால் என்ன?
 

பிரிவு – 3

 

குறிப்பு: எவையேனும் ஏழனுக்கு விடை தருக.  7×2=14

 
22. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

அச்சாணி இல்லாத தேர்போல

அல்லது

உள்ளங்கை நெல்லிக்கனி போல
 
23. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும்

எவை?


24. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

விலை, விளை, விழை
 
அல்லது
 
கலை, களை, கழை

25. வேறு ஒரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.

மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
 
26. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக்

கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
 
27. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

வாழைக்காட்டில் குயில்கள் அலறிக் கொண்டும் காகங்கள் கூவிக் கொண்டும்

இருந்தன.
 
28. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

அண்ணைக்கு அவனுக்கு பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
 
29. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.

(அ) செம்பரிதி

அல்லது

(ஆ) முன்னுடை


30. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

(அ) வந்து

அல்லது

(ஆ) நினைக்கின்ற



பகுதி – III



பிரிவு -1

குறிப்பு: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.  2×4=8



31. “செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!”

தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
 

(அ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.



அல்லது

(ஆ) பொருண்மொழிக்காஞ்சித் துறையைச் சான்றுடன் விளக்குக.

 

  1. இலக்கிய நயம் பாராட்டுக.

    (பாடலின் மையக்கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக).

    பூமிச்சருகாம் பாலையை

    முத்துபூத்த கடல்களாக்குவேன்

    புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்

    புதிய தென்றலாக்குவேன்

    இரவில் விண்மீன் காசினை – செலுத்தி

    இரவலரோடு பேசுவேன்!

    இரவெரிக்கும் பரிதியை – ஏழை

    விறகெரிக்க வீசுவேன்

    நா. காமராசன்
  2. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.

    (அ) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

    அல்லது

    (ஆ) ஆனைக்கும் அடிசறுக்கும்.
  3. மாற்றுச்சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) வேண்டி விண்ணப்பம் எழுதுக.

பகுதி – IV



குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18

 

(அ)நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து

எழுதுக.

அல்லது

(ஆ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி

நின்று நிறுவுக

45.

(அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த

அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு ? விளக்குக.

அல்லது

(ஆ) ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், கதையும், கதை சொல்லும் முறையுமே

இக்கூற்றை ஆராய்க.

46. (அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று

ஆகியவற்றை விவரிக்க.

அல்லது



(ஆ) ‘உரிமைத் தாகம்’ கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.



பகுதி – V



47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. 4+2=6



(அ) “ஒருமையுடன்” எனத் தொடங்கும் தெய்வமணிமாலை பாடலை எழுதுக.

(ஆ) ‘மகற்கு’ என முடியும் குறளை எழுதுக.

Leave a Reply