You are currently viewing 7th Science Guide Term 3 Lesson 2

7th Science Guide Term 3 Lesson 2

7th Science Guide Term 3 Lesson 2

7th Std Science Term 3 Solution | Lesson.2 அண்டம் மற்றும் விண்வெளி

7th Standard Science Samacheer kalvi guide Term 3 Lesson 2 அண்டம் மற்றும் விண்வெளி Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Science Text Book Download PDF.

7th Science Guide Term 3 பாடம் 2 அண்டம் மற்றும் விண்வெளி

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர _________ நாட்களாகும்

  1. 25
  2. 26
  3. 27
  4. 28

விடை : 27

2. இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது _________ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.

  1. பரணி
  2. கார்த்திகை
  3. ரோஹிணி
  4. அஸ்வினி

விடை : அஸ்வினி

3. தொலை நோக்கியைக் கண்டறிந்தார்

  1. ஹான் லிப்பெர்ஷே
  2. கலிலியோ
  3. நிக்கொலஸ் காப்பர்நிக்கஸ்
  4. தாலமி

விடை : ஹான் லிப்பெர்ஷே

4. அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு _________ என்று பெயர்.

  1. நீள்வட்ட விண்மீன் திரள்
  2. ஒழுங்கற்ற விண்மீன் திரள்
  3. குழுக்கள்
  4. சுருள் விண்மீன் திரள்

விடை : சுருள் விண்மீன் திரள்

5. _________ துணைக் கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.

  1. GSAT- 13
  2. GSAT- 14
  3. GSAT- 17
  4. GSAT- 19.

விடை : GSAT- 19.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. வளர்பிறை என்பது _________விடை : வளர்த்தல் () வெளிச்சத்தில் விரிவடைதல்
  2. சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் _________விடை : நிக்கொலஸ் காப்பர்நிக்கஸ்
  3. அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ___________ ஆகும். விடை : நீள்வட்ட மாதிரி
  1. ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் _________ஆகும்.விடை : உச்சா மேஜர்
  2. இந்தியா ஏவிய முதல் ஏவுகணை _________ஆகும்.விடை : ஆர்யபட்டா

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியானகூற்றை எழுதுக

  1. முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்.விடை : தவறு
  • சரியான விடை : முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு கிழக்கில் தோன்றும்.
  1. நிலவானது நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.விடை : சரி
  2. கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.விடை : தவறு
  • சரியான விடை : தாலமி புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.
  1. நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.விடை : தவறு
  • சரியான விடை : நமது பால்வெளித் திரளானது கோடிட்ட விண்மீன் திரள் ஆகும்.
  1. நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையாது.விடை : சரி

IV. பொருத்துக

  1. ரோகிணி – GSLV-Mark III
  2. GSAT-14 – GSLV Mark III M1
  3. GSAT-19 – SLV-3
  4. சந்த்ரயான் 2 – PSLV-XL C25
  5. மங்கள்யான் – GSLV-D5

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

V. ஒப்புமை

  1. பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன் திரள் :: புது நட்சத்திரங்கள் :————— விடை : சுருள் விண்மீன் திரள்
  1. அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் : ———— விடை : அல்ஃபா சென்டாரி

VI. மிகக் குறுகிய விடையளிக்கவும்

1. ————— என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு /கூனல் நிலவு)

விடை : பிறை நிலவு

2. ————— மற்றும் ———– —- கோள்கள் நடு இரவில் தோன்றாது.விடை : வெள்ளி மற்றும் புதன்

3. சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்.

687 நாட்கள்

4. வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்?

கிப்ஸ் கட்டத்தில்

5. அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ______________?

விடை : சுருள் விண்மீன் திரள்

6. உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?

ரஷ்யா

VII. குறுகிய விடையளி

1. நீள்வட்ட மாதிரி என்றால் என்ன?

  • குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது ‘நீள்வட்ட மாதிரி’ என அழைக்கப்படுகிறது

2. நான்கு வகையான விண்மீன் திரள்களின் பெயர்களைக் கூறுக.

  • விண்மீன் திரள்களின் வகைகள்
  • சுருள் விண்மீன் திரள்கள்
  • நீள்வட்ட விண்மீன் திரள்கள்
  • ஒழுங்கற்ற விண்மீன் திரள்கள்

3. விண்மீன் மண்டலம் என்றால் என்ன?

  • பூமியில் இருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது.

4. PSLV மற்றும் GSLV யின் விரிவாக்கம் தருக

  • PSLV : Polar Satellite Launch Vehicle.
  • GSLV : Geosynchronous Satellite Launch Vehicle.

VIII விரிவான விடையளி

1. விண்மீன் மண்டலத்தைக் குறித்து சிறு குறிப்பு வரைக.

  • பூமியில் இருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது.
  • சர்வதேச வானியல் சங்கம் 88 விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது.
  • பழைய விண்மீன் மண்டலங்களில் பலவும் கிரேக்க அல்லது இலத்தீன் புராணக் கதைகளில் வரும் கதாபத்திரங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன.
  • உர்சா மேஜர் (சப்த ரிஷி மண்டலம்) ஒரு பெரிய விண்மீன் மண்டலம் ஆகும், அது வானத்தின் பெரும்பகுதியை
  • உள்ளடக்கியுள்ளது.
  • இந்த நட்சத்திர மண்டலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஏழு பிரகாசமான நட்சத்திரங்களின் பெரிய குவளை (இந்திய வானியலில் ஏழு துறவிகள்) என அழைக்கப்படும் ஒரு குழுவாகும்.
  • இலத்தீன் மொழியில் ‘சிறிய கரடி’ என்று பொருள்படும் உர்சா மைனர் வட வானத்தில் உள்ளது.
  • துருவ நட்சத்திரம் – போலாரிஸ் (துருவ) இந்த விண்மீன் மண்டலத்தில் உள்ளது.
  • முக்கிய குழுவான ‘சிறிய டிப்பர்’, ஏழு நட்சத்திரங்களைக் கொண்டிருக்கிறது மற்றும் இது உர்சா மைனரில் உள்ள நட்சத்திரங்கள் போல் காணப்படும்

Leave a Reply