9th Tamil Unit 4 Book Back Answer
Class 9 Tamil New Syllabus இயல் 4 Book Back Question and Answer.
Ninth Standard Tamil New Syllabus இயல் 4 கசடற மொழிதல் – கல்வியில் சிறந்த பெண்கள், குடும்ப விளக்கு, உயிர்வகை*, வீட்டிற்கு ஒரு புத்தகசாலை, துணை வினைகள் Book Back Question and Answer 2025 – 20256. 9th Tamil along with the corresponding book back questions and answers. This post covers the book back answers and solutions for 9th Tamil Nadu State Board 9th Standard Tamil textbook Answers. 9th All Subject Text Books Download pdf. Class 9 samacheer kalvi guide.
இயல் 4
திறன் அறிவோம்
பலவுள் தெரிக.
1. கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ) நஞ்சை நிலம்
ஆ) களர் நிலம்
இ) உவர் நிலம்
ஈ) புஞ்சை நிலம்
Ans: ஆ) களர் நிலம்
2. கீழ்க்காண்பனவற்றுள் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் சரியான குழுவினைக் கண்டறிக
அ)நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், பண்டித ரமாபாய்
ஆ) நப்பசலையார், பொன்முடியார். நீலாம்பிகை அம்மையார், ஒளவையார்
இ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார். ஔவையார்
ஈ) நக்கண்ணையார். ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், மூவலூர் இராமாமிர்தம்
Ans: இ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார். ஔவையார்
3. ‘இரு’ என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?
அ) பட்டம் இருக்கிறது.
ஆ) பட்டம் செய்திருக்கிறேன்.
இ) எங்கே இருக்கிறது?
ஈ) வானில் மேகம் இருக்கிறது.
Ans: ஆ) பட்டம் செய்திருக்கிறேன்.
4. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
ஆ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி.
1.அ மட்டும் சரி
2.அ,ஆ இரண்டும் சரி
3.அ,ஆ இரண்டும் தவறு
4. ஆ மட்டும் சரி
Ans: 2.அ,ஆ இரண்டும் சரி
5. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே”
இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல்
ஆ) தொடு உணர்வு
இ) கேட்டல்
ஈ) காணல்
Ans: ஆ) தொடு உணர்வு
குறுவினா
1. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
- பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.
- எனவே, அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
2. துணைவினைகளின் பண்புகள் இரண்டினை எழுதுக.
- துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன
- இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.
- பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
3. “மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே”
– இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும் மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
மூவறிவு உயிர்: தொடு உணர்வு, சுவைத்தல், நுகர்தல் (மெய், வாய், மூக்கு) உடைய உயிரிகளான கரையான், எறும்பு முதலியன
நான்கறிவு உயிர்: தொடு உணர்வு, சுவைத்தல்,நுகர்தல்.காணல் (மெய், வாய், மூக்கு,கண்) உடைய உயிரிகளான – நண்டு, தும்பி முதலியன
ஐந்தறிவு உயிர்: தொடு உணர்வு, சுவைத்தல், நுகர்தல், காணல்,கேட்டல் (மெய்,வாய்,மூக்கு, கண், செவி) திறன்களை உடைய-பறவை, விலங்கு முதலியன.
4. பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும் என்பதைக் ‘குடும்ப விளக்கு’ கருத்தின் வழி எழுதுக.
- சமைக்கும் பணி, பெண்களுக்குத் தவிர்க்க முடியாத கடமை எனவும், அப்பணி நல்ல தாய்மார்களுக்கே உரியது எனவும்
- தமிழ்த்திரு நாட்டில் இருக்கின்ற வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.
5. ‘கொடு’ என்பது முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமையுமாறு தொடர்கள் எழுதுக.
-
முதல்வினை: நான் அவருக்குப் பணம் கொடுப்பேன்
-
துணைவினை: பாடம் சொல்லிக் கொடுப்பேன்
சிறுவினா
1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
பெண்பாற் புலவர்கள்
- சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.
- ஒளவையார். ஒக்கூர் மாசாத்தியார். ஆதிமந்தியார். வெண்ணிக்குயத்தியார். பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார். நக்கண்ணையார். காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார். காவற்பெண்டு, நப்பசலையார் ஆகியோர். சங்க காலப் பெண்பாற் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
2. சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்”.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
- உணவைச் சமைப்பவர் இன்பம் சமைப்பவர் ஆவார்
ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
- பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வன்று. அவர்கள் உணவை மட்டும் சமைப்பதில்லை. மேலாக இன்பத்தையும் சேர்த்துச் சமைக்கின்றனர்.
- அனைவருக்கும் உணவினைச் சமைத்தல் உயிரை உருவாக்குவது போன்றதாகும். சமைத்த உணவை அன்போடு பரிமாறுவதில் தான் சுவை இருக்கின்றது.
3. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
மருத்துவர் முத்துலெட்சுமி
- தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணைமேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம், இருதாரத் தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
- அடையாற்றில் 1930 இல் அவ்வை இல்லம்,1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
4.நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
- தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார், மறைமலையடிகளாரின் மகள் ஆவார்.
- தனித்தமிழ்ப் பற்றுடையவர்;
- இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு. பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
- பிறமொழி கலவாது தமிழ்மொழி பேசும் ஆர்வலர்க்கு இவர் ஓர் நற்சான்று.
நெடுவினா
1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
முத்துலெட்சுமி
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
- சென்னை மாநகராட்சியின் முதல் துணைமேயர்.
மூவலூர் இராமாமிர்தம்
- தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி.
- எழுத்தாளர்.
- திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.
- தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்.
பண்டித ரமாபாய்
- சமூகச் சேவகியான பண்டித ரமாபாய் தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பெண்களின் உயர்வுக்கு உழைத்தவர்.
- சமூகத் தன்னார்வலர்.
சாவித்திரி பாய் பூலே
- 1848ஆம் ஆண்டு பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
மலாலா
- பன்னிரண்டு வயதில் பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமென்று குரல் கொடுத்து அதற்காகப் போராடி பின்னர் நோபல் பரிசும் பெற்றவர் வீரச்சிறுமி மலாலா ஆவார்.
2. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துக்களை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
கல்வியறிவற்ற பெண்கள்:
- கல்வியறிவு இல்லாத பெண்கள் பயிர் விளைவதற்குப் பொருத்தமற்ற பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலான பொருள்கள் விளையலாம். நல்ல பயிரைப் போல் சிறந்த அறிவுடைய மக்கள் வளரமாட்டார்கள்.
கல்வியறிவுடைய பெண்கள் :
- கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அங்கே சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
வானூர்தி செலுத்துதல்:
- வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல், ஆண்களுக்கு மட்டுமுள்ள வேலை என்ற அன்றைய நிலைமாறி இன்று ஆணும் பெண்ணும் எல்லாப் பணிகளையும் செய்கின்றனர்.
ஒளிரும் இயல்புடையவள் :
- மின்னல் போல் ஒளிரும் இயல்புடையவள் பெண். ஆனால், கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள்.
சமையல்:
- சமையல் பெண்கள் சார்ந்த வேலையாக இருந்தாலும் இன்று ஆண்களும் அது சார்ந்த வேலைகளைச் செய்கின்றனர்.
முன்னேற்றம்:
- அன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் மிகக் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் அதிகம். எனவே நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றே கூறலாம்.
- பெண் கல்வியறிவு பெற்றதால், தவிர்க்க முடியாத கடமை எனப் பெண்களுக்கு வைத்திருந்த சில வேலைகள் இன்று இருபாலருக்கும் உரியது என்று மாறியது.
3. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகளை விளக்குக.
குறிப்புச்சட்டகம்
முன்னுரை
மனவளம்
வீட்டிற்கோர் புத்தக சாலை
நூல்கள்
திருக்குறள் வேண்டும்
முடிவுரை
முன்னுரை:
- நாட்டுநிலை உலகநிலைக்கு ஏற்ப வளர்ந்ததாக வேண்டும். இதற்கு வீட்டுநிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை.
மனவளம்:
- ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே, வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டாலும், நமது நாட்டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெறமுடியும்.
வீட்டிற்கோர் புத்தக சாலை:
- ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம் மறைந்து தற்பொழுது கணினியில் மக்கள் யாவற்றையும் தெரிந்துகொள்ளும் காலம். வீட்டிற்கோர் புத்தகசாலை அமைய வேண்டும். மக்களின் மனதிலே உலக அறிவு புக வழி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும்.
நூல்கள் :
- ஒவ்வொரு வீட்டிலும், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்களும், மக்களின் அறிவுக்குத் தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிமையும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டும். தமிழ் சார்ந்த நூல்களும், சங்க இலக்கியங்களும் இருத்தல் வேண்டும். நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள்,தொலைதேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள் விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
திருக்குறள் வேண்டும்:
- பூகோள, சரித ஏடுகளும் வேண்டும். நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கொரு திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
முடிவுரை:
- வீட்டுக்கோர் புத்தகசாலை அமைத்துக்கொண்டால், நாட்டுக்கு நல்லநிலை ஏற்படும். எனவே கேட்டின் நீக்கிட வீட்டிற்கொரு புத்தகசாலை அமைக்க வேண்டும்.
மொழிபெயர்க்க .
Akbar said, “How many crows are there in this city?”
- எத்தனை காகங்கள் இந்த நகரத்தில் இருக்கின்றன என்று அக்பர் கேட்பார்.
Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord.”
- ஒரு நொடி கூடச் சற்றும் தாமதிக்காமல் பீர்பால் சொன்னார் “ஐம்பதாயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்பது காகங்கள் உள்ளன அரசே” என்றார் பீர்பால்.
“How can you be so sure?” asked Akbar.
- எப்படி உன்னால் உறுதியாகக் கூற முடியும் என்று அக்பர் கேட்டார்.
Birbal said, “Make your men count, My Lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives else where.”
- “காகங்களைக் கணக்கிடும் போது அதிகமாக இருப்பதாக அறிந்தால் உறவினர் காகங்கள் இங்கு வந்துள்ளதாகப் பொருள். குறைவாகக் காணப்பட்டால் அவர்கள் உறவினர்களைக் காண வெளியே சென்றிருப்பதாகப் பொருள்” என்று பீர்பரல் சொன்னார்.
“Akbar was pleased very much by Birbal’s wit”.
- பீர்பாலின் நகைச்சுவையான பதிலை அக்பர் வெகுவாகப் பாராட்டினார்.
பிழை நீக்கி எழுதுக.
1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.
- விடை: மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்.
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்.
- விடை : நல்ல தமிழில் எழுதுவோம்.
3. பவளவிழி தான் பரிசு உரியவள்
- விடை : பவளவிழி தான் பரிசுக்கு உரியவள்.
4. துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
- விடை : துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
5. குழலியும் பாடத் தெரியும்.
- விடை : குழலிக்கும் பாடத் தெரியும்.
பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
1. மனிதனையும் விலங்குகளையும் (வேறு ) …………………………மொழியாகும். விடை: வேறுபடுத்துவது
2. திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு )…………………… விடை: பெற்றுள்ளன
3. காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து)………………………. மொழி தமிழ். விடை: புதுப்பித்துக்கொள்ளும்
4. என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு)………………………….. விடை: தேடிப்பார்க்கிறேன், தேடி அலைகிறேன்
நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.
அண்ணாவின் வாழ்க்கையில் …..
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலக்கட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர். முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே சோதனை செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப்பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,”தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம் “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே அண்ணா. “நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில் தான் இருக்கிறது”. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள் தான் உயர்பதவிக்கு வரவேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன் என்றார்.
வினா விடை:
1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
- விடை : மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வருவாய் அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது.
2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
- விடை: அரிசி வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறதா என்ற சோதனையில் இருந்த வருவாய் அலுவலர் அண்ணாவின் மகிழுந்து என அறியாமல் அவற்றை நிறுத்திச் சோதனையிட்டதால் அண்ணாவிடம் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்.
3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
- விடை: நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அலுவலரின் கையில் தான் இருக்கிறது என்று வருவாய் அலுவலரின் செயலை அண்ணா பாராட்டினார்.
4. பத்தியில் இடம்பெறும் இடைச்சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக.
விடை:
- 1. நூலகத்தில் நல்ல நூல்களைப் பெற முடியும்.
- 2. அனைவரையும் வரவேற்கிறோம். அறிவுத்திறத்தைப் பெறுங்கள்.
5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.
- தலைப்பு : அண்ணா கண்ட நேர்மை அதிகாரி.
விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.
புத்தகம் படிக்கும் தஞ்சாவூர் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 19 முதல் 28 வரை நம்மூரிலுள்ள சரசுவதி மகால் நூலகத்தில் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக்கல்வி அமைச்சர் இப்புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும். அனைவரும் வாருங்கள், அறிவுத்திறம் பெறுங்கள்.
சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக..
- மாணவர்கள்
- புத்தகம்
- ஆசிரியர்
- பாடவேளை
- கரும்பலகை
- அறை
- எழுதுகோல்
- அழிப்பான்
- வழிபாட்டுக் கூட்டம்
- மடிக்கணினி
- கல்லூரி
- உயர்நிலை
- சீருடை
எ.கா. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
-
1. ஆசிரியர் முதல் பாடவேளையில் கரும்பலகையில் எழுதினார்.
-
2. கல்லூரியில் மடிக்கணினி பயன்படுத்தலாம்.
-
3. உயர்நிலை வரையுள்ள மாணவர்களிடம் புத்தகம், எழுதுகோல் அழிப்பான் போன்றவை கட்டாயம் இருத்தல் வேண்டும்.
-
4. ஆசிரியர் அறைக்குள் மாணவர்கள் யாரும் செல்லக்கூடாது.
-
5. பாடவேளைக்குரிய புத்தகத்தை மாணவர்கள் எடுத்துவர வேண்டும்.
-
6. மாணவர்கள் அழிப்பானைக் கொண்டு கரும்பலகையில் உள்ளவற்றை அழித்தனர்.
அகராதியில் காண்க.
அரங்கு -இடம், நாடகமேடை, சூதாடுமிடம், சபை
ஒட்பம் – அறிவு, அழகு, நன்மை,மேன்மை
கான் – காடு, வாசனை, பூ, வாய்க்கால், சலதாரை
நசைஆசை,குற்றம், எள்ளல், விருப்பம்
பொருநர் – வீரர், அரசர், தலைவர், பகைவர், கூத்தர்
படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து எழுதுக
Ans:
- கருப்பு மலர்கள்
- கிழவனும் கடலும்
- ஒரு கிராமத்து நதி
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
படியேறு படியேறு பெண்ணே
படித்துப் படித்துப் படியேறு
முயன்றால் முடியாததும் உண்டோ!
பட்டம் நீயும் பெற்றிடலாம்
பாரினில் என்றும் உயர்ந்திடலாம்.
கடிதம் எழுதுக.
உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப் படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
அனுப்புநர்:
அஅஅஅ
அரசு மேல்நிலைப்பள்ளி,
பெறுநர்:
உயர்திரு, மேலாளர் அவர்கள்,
நெய்தல் பதிப்பகம்,
தியாகராசர் நகர்.
சென்னை -600 017.
மதிப்பிற்குரிய ஐயா.
பொருள்: தமிழ் – தமிழ் -ஆங்கிலம் கையடக்க அகராதி அனுப்புதல் சார்பு.
வணக்கம். தங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி எங்கள் பள்ளி நூலகத்திற்கு 10 பிரதிகள் தேவைப்படுகின்றன. தங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ள அகராதி படிப்பதற்கும் பொருள் காண்பதற்கும் மிக எளிமையாக அமைந்துள்ளதால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
தயவு கூர்ந்து நாங்கள் கேட்ட பிரதிகளைப் பதிவஞ்சல் வழியாகப் பள்ளி நூலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
இப்படிக்கு.
அஅஅஅ
05.09.2018,
உறைமேல் முகவரி :
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்,
நெய்தல் பதிப்பகம்.
தியாகராசர் நகர்.
சென்னை – 600 017.
நிற்க அதற்குத் தக…
எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்
1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
எவரையும் காயப்படுத்தாமல் நடந்துகொள்வது. குறைகூறாமல் பேசுவது என் பொறுப்பு.
2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.
பள்ளிச்சுவர். வீட்டுச்சுவர். பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு.
3. எனக்குப் பள்ளிச் சுவர்களில் எழுதப்பட்டுள்ள பழமொழிகள், பொன்மொழிகள் வாசிக்கப் பிடிக்கும். பொன்மொழிகள் எழுதிய பள்ளிச் சுவர்களில் விளம்பரம் ஒட்டுவதைத் தடுப்பது என் பொறுப்பு.
4. பள்ளியில் பசுமைத் தோட்டங்களை அமைக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.
பள்ளியிலுள்ள பசுமைத் தோட்டங்களைப் பராமரிப்பது, தோட்டங்களைப் பிறர் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது என் பொறுப்பு.
படிப்போம்; பயன்படுத்துவோம்!
-
Social Reformer – சமூகச் சீர்திருத்தவாதி
-
Volunteer – தன்னார்வலர்
-
Saline Soil – களர்நிலம்
-
Ocean – பெருங்கடல் (அ) மாக்கடல்
-
Auxiliary Verb – துணைவினை