You are currently viewing Thirikatukam Important Notes

Thirikatukam Important Notes

Thirikatukam Important Notes – திரிகடுகம்

Thirikatukam Importnat Notes – TET – TNPSC

Thirikatukam Importnat Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes திரிகடுகம். Tamil eligibility test. All Exams very important Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

திரிகடுகம்

 

    • ஆசிரியர்         : நல்லாதனார்.
    • ஊர்                      : திருத்து – (திருநெல்வேலி மாவட்டம்)
    • பாடல்கள்           : 100 வெண்பா
    • சிறப்புப்பெயர்     : செரு அடுதோள் நல்லாதன் : வைணவர்
    • சமயம்           : வைணவர்

 

  • சுக்கு,மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு திரிகடுகம் எனப்பெயர்.
  • அது போன்று திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்துகள் கற்போரின் மனத்திலுள்ள அறியாமையாகிய இருளைப் போக்கி குன்றின் மேலிட்ட விளக்காக திகழ்கிறது.
  • திரி என்ற சொல்லுக்கு திரித்தல், விளக்குத்திரி, மூன்று போன்ற பொருள் பல உண்டு
  • சுக்கு,மிளகு, திப்பிலி இவை மூன்றும் உடல் நோயைப் போக்கும் செரு அடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
  • ஒவ்வொரு பாடலிலும் இம்மூன்றும் (அ) இம்மூவர் என்ற வார்த்தை இடம் பெறுகிறது.
  •  “அம்மை” என்னும் வனப்பு வகையைச் சார்ந்தது

“உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்

 பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்

சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்

தூஉயம் என்பார் தொழில்

இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்

நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்

துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்

நன்றறியும் மாந்தர்க் குள.

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

 நிறையிலான் கொண்ட தவமும் – நிறைஒழுக்கம்

 தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்

தூற்றின்கண் தூவிய வித்து”                                                                     

  -நல்லாதனார்

சொற்பொருள் :

  • நெறி – வழி
  • உண்பொழுது – உண்ணும் பொழுது
  • தூ உயம் – தூய்மை உடையோர்.
  • மாந்தர் – மக்கள்
  • தூறு – புதர்
  • வித்து விதை
  • சாயினும் – அழியினும்
  • வனப்பு – அழகு
  •  ஈயும் – அளிக்கும்
  • நிறை ஒழுக்கம் – மேலான ஒழுக்கம்
  • தேற்றாதான் – கடைபிடிக்காதவன்
  •  பால்பற்றி – ஒரு பக்கச் சார்பு (நடுநிலைமையிலிருந்து மாறுதல்)

மேற்கோள்:

  • “நெஞ்சம் அடங்குதல் வீடாகும்”

  • “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதானி”

  • “தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்”

  •  “நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்”

  • “கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி”

  • “பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்

  •  திறன்வேறு கூறிற் பொறையும் அறவினையைக்

  • காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்

  • ஊராண்மை என்னும் செருக்கு”

Leave a Reply