You are currently viewing Sirupanchamoolam Important Notes

Sirupanchamoolam Important Notes

Sirupanchamoolam Important Notes

சிறுபஞ்சமூலம் All Exam Important Points

Sirupanchamoolam Important Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes சிறுபஞ்சமூலம். Tamil eligibility test. All Exams Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

சிறுபஞ்சமூலம்

          • ஆசிரியர்   : காரியாசன்
          •  சமயம்    : சமணம்
          • பாடல்கள்  : கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள்.
  • மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவரும் கணிதமேவியாரும் ஒரு சாலை மாணாக்கராவர்.
  •  ஐந்து வேர்கள்: கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, சிறுநெருஞ்சி.
  • ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனநோயைப் போக்குவன.
  • இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
  • பெரும்பஞ்சமூலம்: வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை முதலியனவற்றின் வேர்கள்
  •  இவரை மாக்காரியாசான்” என்று பாயிரச் செய்யுள் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறது.
  • மருந்தால் பெயர் பெற்ற நூல்.
  • பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். மூலம் என்றால் வேர் என்று பொருள். வேரால் பெயர் பெற்ற நூல்.
  •  சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • பெரும்பான்மை பொது  அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும்  இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
  • தோல்கன்றைக் காட்டிப் பசுவைக் கறக்கும் பழக்கம் கொடியது என்று கூறுகிறது.

அறிவுடையார் தாமே உணர்வர்

“பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு”                                        

– காரியாசன்

 அணி : எடுத்துக்காட்டு உவமையணி.

சொற்பொருள் :

  •  நாறுவ – முளைப்பு, தாவா – கெடாதிருத்தல்.

பாடல் பொருள் :

  •  மேதைகள் பிறர் உணர்த்தாமல் தாமே எதையும் உணர்ந்து கொள்வர் .

இலக்கணக்குறிப்பு:

  •  அறிவார், வல்லார் – வினையாலணையும் பெயர்கள். விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
  • தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்:

  •  காய்க்கும் – காய்+க்+க்+உம். காய்- பகுதி, க்-சந்தி, க்-எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச்ச விகுதி
  • உரையாமை = உரை + ய் + ஆ + மை. உரை-பகுதி; ய்-சந்தி (உடம்படுமெய்), ஆ – எதிர்மறை இடைநிலை, மை -தொழிற்பெயர் விகுதி.

“கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை

எண்வனப்பு  இத்துணையாம் என்றுரைத்தல் – பண் வனப்புக்

கேட்டார்நள் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு

வாட்டான் நன் றென்றல் வனப்பு” 

                                                             காரியாசன்

  • அணி: சொற்பொருள் பின்வருநிலை அணி.

பாடலின் பொருள் :

    • கண்ணுக்கு அழகு                  – இரக்கம் கொள்ளல்
    • காலுக்கு அழகு        -பிறரிடம் இரந்து செல்லாமை
    •  ஆராய்ச்சிக்கு அழகு    – தமது முடிவைத் துணிந்துரைத்தல்
    • இசைக்கு அழகு        – கேட்போர் நன்றெனப் புகழ்தல்
    • அரசனுக்கு அழகு      – குடிமக்களை வருத்தாமல் காப்பவன் என்று உரைத்தல்.

சொற்பொருள்

  • கண்ணோட்டம்   – இரக்கம் கொள்ளுதல்
  • கிளர்வேந்தன்    – புகழுக்குரிய அரசன்
  • எண்வனப்பு                  – ஆராய்ச்சிக்கு அழகு
  •  வாட்டான்       – வருத்த மாட்டான்.
  • வனப்பு          -அழகு

இலக்கணக்குறிப்பு:

  • கண்ணோட்டம், செல்லாமை, உரைத்தல், என்றல் -தொழிற்பெயர்கள்
  • கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்கள்.

மேற்கோள்

  •  “நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு ” 
  • “பேதைக்கு உரைத்தாலும் செல்வாது உணர்வு”
  • “படைதனக்கு யானை வனப்பாகும்”
  •  “சொல்லின் வனப்பே வனப்பு”
  • “குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
  • உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்
  • இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு”
  • பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
  • ஏகும் சொர்க்கத்து இனிது”

Leave a Reply