Moothurai Avvaiyar TNPSC Important Notes
மூதுரை – ஔவையார்
Moothurai Avvaiyar Important Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes மூதுரை ஒளவையார். Tamil eligibility test. All Exams Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

மூதுரை – ஔவையார்
- ஆசிரியர் : ஆத்திடி பாடிய ஔவையார்
- நூல்கள் : ஆத்திசூடிகொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை
- மூதுரையின் ஆசிரியர் – ஒளவையார்
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்
- மூதுரையில் முப்பத்தொரு (31) பாடல்கள் உள்ளன.
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோள் சிறப்புடையவன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு”
– ஒளவையார்
சொற்பொருள்:
- மாசற – குறை இல்லாமல்,
- சீர்தூக்கின்- ஒப்பிட்டு ஆராய்ந்து
பாடலின் பொருள் :
- மன்னரையும் கற்றவரையும் ஒப்பிட்டு பார்த்தால் கற்றவரைக்கு சிறப்பு. மன்னனுக்கு தன்னுடைய நாட்டை தவிர வேறு நாட்டில் எவ்வித சிறப்புமில்லை. ஆனால் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
பிற்கால ஔவையார்
ஆசிரியர் : ஔவையார் (இவர் சங்ககால ஔவையாருக்கு பிற்பட்டவர்.)
கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாக கூறுவர்.
கல்விக்கு எல்லை இல்லை
“கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் பெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்”
– ஔவையார்
சொற்பொருள்:
- மெத்த – மிகுதியாக
- புலவீர் – புலவர்களே
- கலைமடந்தை – கலைமகள்

