You are currently viewing 7th Tamil Term 2 Unit 2.5 Book Back Answers

7th Tamil Term 2 Unit 2.5 Book Back Answers

7th Tamil Term 2 Unit 2.5 Book Back Answers

TN 7th Standard Tamil Term 2 – Lesson 2 – இயல் 2.5 ஓரெழுத்து ஒரு மொழி பகுபதம் பகாப்பதம் Book back answers

TN 7th Tamil Term 2 Unit 2.5 Book Back Answers. 7th Standard Tamil Term 2 Lesson 2 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 2 – 2nd Lesson இயல் 2.5 ஓரெழுத்து ஒரு மொழி பகுபதம் பகாப்பதம் Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Term 2 Lesson 2 Book Back Answers

7th Standard Tamil Term 2 – Lesson 2 இயல்2.5 ஓரெழுத்து ஒரு மொழி பகுபதம் பகாப்பதம்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.

  1. 40
  2. 42
  3. 44
  4. 46

விடை : 42

2. ‘எழுதினான்’ என்பது _______.

  1. பெயர்ப் பகுபதம்
  2. வினைப் பகுபதம்
  3. பெயர்ப் பகாப்பதம்
  4. வினைப் பகாப்பதம்

விடை : வினைப் பகுபதம்

3. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.

  1. நான்கு
  2. ஐந்து
  3. ஆறு
  4. ஏழு

விடை : ஆறு

4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.

 

  1. பகுதி
  2. விகுதி
  3. இடைநிலை
  4. சந்தி

விடை : இடைநிலை

II. பொருத்துக

  1. பெயர்ப் பகுபதம் – அ. வாழ்ந்தான்
  2. வினைப் பகுபதம் – ஆ. மன்
  3. இடைப் பகாப்பதம் – இ. நனி
  4. உரிப் பகாப்பதம் – ஈ. பெரியார்

விடை : 1 – , 2 – , 3 – , 4 –

III. சரியான பகுபத உறுப்பை எழுதுக.

1. போவாள் = போ + வ் + ஆள்

  • போ – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

2. நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்

  • நட – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

IV. பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.

1. பார்த்தான் = பார் + த் + த் + ஆன்

  • பார் – பகுதி
  • த் – சந்தி
  • த் – நிகழ்கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

2. பாடுவார் = பாடு + வ் + ஆர்

  • பாடு – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – ஆண்பால் வினைமுற்று விகுதி

V. குறுவினா

1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி என்பர்

2. பதத்தின் இருவகைகள் யாவை?

பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்

3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்

VI. சிறுவினா

1. விகுதி எவற்றைக் காட்டும்?

திணை, பால், முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டும்

2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

(எ.கா.)

வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்

  • வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
  • த் – சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்

  • பொருட் பெயர்ப்பகுபதம்
  • இடப் பெயர்ப்பகுபதம்
  • காலப் பெயர்ப்பகுபதம்
  • சினைப் பெயர்ப்பகுபதம்
  • பண்புப் பெயர்ப்பகுபதம்
  • தொழில்பெயர்ப்பகுபதம்

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பொருந்தா இணையை தேர்ந்தெடு

  1. கா- சோலை
  2. கூ- பூமி
  3. கை- இறந்துபோ
  4. கோ-அரசன்
  5. து- உண்

விடை : கைஇறந்துபோ

2. பொருந்தா இணையை தேர்ந்தெடு

  1. சீ- இகழ்ச்சி
  2. சே- உயர்வு
  3. சோ- மதில்
  4. தா- நெருப்பு
  5. போ- செல்

விடை : தாநெருப்பு

3. பொருந்தா இணையை தேர்ந்தெடு

  1. தூ- அன்பு
  2. தே- கடவுள்
  3. தை- தைத்தல்
  4. நா- நாவு
  5. பை- இளமை

விடை : தூஅன்பு

4. பொருந்தா இணையை தேர்ந்தெடு

  1. நை- இழிவு
  2. நோ- மாமரம்
  3. பா- பாடல்
  4. பூ- மலர்
  5. பே – மேகம்

விடை : நோமாமரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. “மீ” என்னும் பொருள் தரும் சொல் _______விடை : வான்
  2. “மை” என்னும் பொருள் தரும் சொல் _______விடை : அஞ்சனம்
  3. “வெள” என்னும் பொருள் தரும் சொல் _______விடை : கவர்
  4. “மூ” என்னும் பொருள் தரும் சொல் _______விடை : மூப்பு
  5. “யா” என்னும் பொருள் தரும் சொல் _______விடை : அகலம்

I. பொருத்துக

  1. ஆ — அ. இறைச்சி
  2. ஈ — ஆ. அம்பு
  3. ஊ — இ. தலைவன்
  4. ஏ — ஈ. பசு
  5. ஐ — உ. கொடு

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

III. சிறு வினா

1. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் யார்?

நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் ஆவார்.

2. பகாப்பதம் என்றால் என்ன?

பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.

பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.

மொழியை ஆள்வோம்!

I. கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களாக வகைப்படுத்துக.

நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை, பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்

பொருள் இடம் காலம்
வடை நல்லூர் காலை
அன்னம் பள்ளி புதன்
பாரதிதாசன் சோலை ஐந்து மணி

 

சினை குணம் தொழில்
முகம் செம்மை கேட்டல்
தோகை பெரியது வருதல்
இறக்கை விளையாட்டு

II. சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)

  1. _____________ பெயர் என்ன?விடை : உன்
  2. _____________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்.விடை : நாம்
  3. _____________ எப்படி ஓடும்?விடை : அவை
  4. _____________ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?விடை : நீ
  5. _____________ வந்து கொண்டு இருக்கிறார்கள்.விடை : அவைகள்

III. பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

  1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
  2. இவர் தான் உங்கள்ஆசிரியர்.
  3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை.
  4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை. நீயே கூறு.
  5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?
தன்மை முன்னிலை படர்க்கை
எங்கள்

 

எனக்கு

நானும்

நீர்

உங்கள்

நீ

உங்களோடு

 

இவர்

 

அது

 

மொழியோடு விளையாடு!

I. கீழே உள்ள குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக.

 

  1. காலையில் பள்ளி மணி ________________விடை : ஒலிக்கும்
  1. திரைப்படங்களில் விலங்குகள் ________________காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.விடை : நடிக்கும்
  2. கதிரவன் காலையில் கிழக்கே ________________விடை : உதிக்கும்
  3. நாள்தோறும் செய்தித்தாள் ________________ வழக்கம் இருக்க வேண்டும்.விடை : வாசிக்கும்

II. ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

  1. _____________ புல்லை மேயும்.விடை :
  2. _____________ சுடும்விடை : தீ
  3. _____________ பேசும்.விடை : கை
  4. _____________ பறக்கும்விடை :
  5. _____________ மணம் வீசும்விடை : பூ

III. பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.

  1. தா – கொடு
  2. தீ = நெருப்பு
  3. பா = பாடல்
  4. தை = தைத்தல்
  5. வை = புல்
  6. மை = அஞ்சனம்

IV. பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.

ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி

1. ஆறு

  • ஈ ஆறு கால்களை உடையது.
  • தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது

2. விளக்கு

  • பாடலின் பொருளிளை விளக்கு
  • அம்மா வீட்டில் விளக்கு ஏற்றினார்

3. படி

  • பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்
  • இளமையில் படித்தல் அவசியம்

4. சொல்

  • பெரியோர் சொல் கேள்
  • தஞ்சை சொல்(நெல்) வளம் மிகுந்தது

5. கல்

  • இளமையில் கல்
  • எறும்பு ஊர் கல்லும் தேயும்

6. மாலை

  • பூவினால் செய்யப்படுவது மாலை
  • சூரியன் மறைவது மாலை நேரம்

7. இடி

  • மழையின் போது இடி இடித்தது
  • மரத்தின் மீது வண்டி இடித்து விட்டது

நிற்க அதற்கு தக

I. கலைச்சொல் அறிவோம்.

  1. கோடை விடுமுறை – Summer Vacation
  2. நீதி – Moral
  3. குழந்தைத்தொழிலாளர் – Child Labour
  4. சீருடை – Uniform
  5. பட்டம் – Degree
  6. வழிகாட்டுதல் – Guidance
  7. கல்வியறிவு – Literacy
  8. ஒழுக்கம் – Discipline

Leave a Reply