You are currently viewing Muthumozhi Kanchi Importnat Notes

Muthumozhi Kanchi Importnat Notes

Muthumozhi Kanchi- முதுமொழிக்காஞ்சி

Muthumozhi Kanchi Importnat Notes – TET – TNPSC

Muthumozhi Kanchi Importnat Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes முதுமொழிக்காஞ்சி. Tamil eligibility test. All Exams very ude full Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

முதுமொழிக்காஞ்சி

    • ஆசிரியர்     : மதுரைக் கூடலூர் கிழார்
    • ஊர                : மதுரை
    • காலம்           :5ம் நூற்றாண்டு

 

  • மொத்தம் 100 அடிகள் உள்ளன
  • ஒவ்வொரு பத்தின் முதலடியும் “ஆர்கலி உலகத்து” என தொடங்கும்.

முதுமொழிக் காஞ்சியிலுள்ள பத்துகள்:

  1. சிறந்த பத்து

  2.  அறிவுப் பத்து

  3. பழியாப் பத்து

  4. துவ்வாப் பத்து

  5. அல்ல பத்து

  6. இல்லைப்பத்து

  7. பொய்ப்பத்து

  8.  எளியபத்து

  9.  நல்கூர்ந்த பத்து

  10. தண்டாப் பத்து

  • இப்பாடல்கள்  குறள் வெண் செந்துறை என்னும் யாப்பு அணியினால் பாடப்பெற்றவை’
  • ஐங்குறுநூற்றை தொகுத்தவரும் இவரே என்றும் கூறுவர் .
  • நிலையாமையைப் பற்றி கூறுகிறது.
  • இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளனர்.
  • முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
  • இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
  • இந்நூல் “அறவுரைக்கோவை” எனவும் வழங்கப்படுகிறது.
  • இதில் 10 அதிகாரங்களும் ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்களும் உள்ளன.
  • இந்நூல் கற்போரின் குற்றங்களை நீக்கி அறம், பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளைஅறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப்படுதல்

மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை

வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை

இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை

 நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று

குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று

கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

 செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று

முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று”

 

சொற்பொருள் :

  • ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்; மேதை – அறிவு நுட்பம் வண்மை – ஈகை, கொடை;
  • நாணம் – செய்யத்தகாதனவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல் ;
  • தற்செய்கை – தன்னைச் செல்வம் முதலியவற்றில் மேம்படுத்திக் கொள்ளல்.

Leave a Reply