10th Geography Guide Unit 2 Tamil Medium

10th Geography Guide Unit 2 Tamil Medium

Unit 2. இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

10th Social Science – Geography Tamil Medium Book Back & Additional Question – Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide Geography Samacheer Kalvi Tamil Medium Full Guide. SSLC Geography Unit 2 Answers. 10th Social Science Geography 2nd Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide Unit 2. இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science – Geography Unit 2. இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back & Additional Question – Answers

 I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1.மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ………………..

அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) பஞ்சாப்
ஈ) மத்தியப் பிரதேசம்

விடை: இ) பஞ்சாப்

2.கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு …………….. காற்றுகள் உதவுகின்றன.

அ) லூ
ஆ) நார்வெஸ்டர்ஸ்
இ) மாஞ்சாரல்
ஈ) ஜெட் காற்றோட்டம்

விடை: இ மாஞ்சாரல்

3.ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ………………. ஆகும்.

அ) சமவெப்ப கோடுகள்
ஆ) சம மழைக்கோடுகள்
இ) சம அழுத்தக்கோடுகள்
ஈ) அட்சக் கோடுகள்

விடை: அ) சமவெப்ப கோடுகள்

4.இந்தியாவின் காலநிலை ……………… ஆக பெயரிடப்பட்டுள்ளது.

அ) அயன மண்டல ஈரக் காலநிலை
ஆ) நிலநடுக் கோட்டுக் காலநிலை
இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
ஈ) மித அயனமண்டலக் காலநிலை

விடை: இ அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

5.பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
ஆ) இலையுதிர்க் காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்

விடை: ஆ) இலையுதிர்க் காடுகள்

6.சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ………………..

அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
ஈ) கர்நாடகா

விடை: ஆ) ஆந்திரப் பிரதேசம்

7.யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது …………………

அ) நீலகிரி
ஆ) அகத்திய மலை
இ) பெரிய நிக்கோபார்
ஈ) கட்ச்

விடை: ஈ) கட்ச்

II. பொருத்துக.

  1. யானை பாதுகாப்புத் திட்டம் – பாலை மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள்
  2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் – அக்டோபர், டிசம்பர்
  3. வடகிழக்குப் பருவக் காற்று – கடற்கரைக் காடுகள்
  4. அயன மண்டல முட்புதர் காடுகள் – யானைகள் பாதுகாப்பு
  5. கடலோரக் காடுகள் – இமயமலைகள்
விடை :- 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

III. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 1.கூற்று : இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி

விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி

IV. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

1.ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.

அ) பாலைவனம்
ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) மகாநதி டெல்டா

விடை: அ) பாலைவனம்

2.இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

அ) அட்ச பரவல்
ஆ) உயரம்
இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
ஈ) மண்

விடை: ஈ) மண்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

1.காலநிலை பாதிக்கும் காரணிகளை பட்டியலிக.

  • அட்சப் பரவல்
  • கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • பருவக்காற்று
  • நிலத்தோற்றம்
  • ஜெட் காற்றுகள்

2.“வெப்ப குறைவு விகிதம்” என்றால் என்ன?

  • புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
  • இதற்கு ‘வெப்ப குறைவு விகிதம்’ என்று பெயர்.

3.“ஜெட் காற்றோட்டங்கள்” என்றால் என்ன?

  • வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட் காற்றுகள்” என்கிறோம்.

4.பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.

  • இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
  • பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
  • இந்தியா ஒரு ஆண்டின் கணிசமான காலத்தில் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

5.இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.

10th Geography Guide Unit 2 Tamil Medium

6.‘பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?

  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு எனப்படுகிறது.

7.அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.

  • மேற்கு கடற்கரை,
  • அசாம்,
  • மேகாலயாவின் தென்பகுதி,
  • திரிபுரா,
  • நாகலாந்து,
  • அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன.

8.இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.

  • கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
  • மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
  • இவை “மாங்குரோவ் காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

9.இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.

  • மன்னார் வளைகுடா
  • நீலகிரி
  • சுந்தரவனம்
  • அகத்தியமலை
  • கஞ்சன்ஜங்கா

10th Geography Guide Unit 2 Tamil Medium

VI. வேறுபடுத்துக.

1.வானிலை மற்றும் காலநிலை. வ.எண் வானிலை

வானிலை
  • வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளி மண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.
  • வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம் மற்றும் மழை ஆகியன வானிலையின் முக்கிய கூறுகள் ஆகும்.
  • மாறக்கூடியது
காலநிலை
  • காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
  • அட்சப்பரவல், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, கடல் மட்டத்திலிருந்து உயரம், பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை காலநிலையை பாதிக்கும் காரணிகள்
  • மாறாதது

2.அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
  • ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகிறன.
  • இக்காடுகளிலுள்ள மரங்கள் பசுமையாகக் காணப்படுகின்றன.
  • ஆண்டு வெப்பநிலை 22oC க்கு அதிகமாக அதிகமாக இருக்கும்
  • மேற்கு தொடர்ச்சி மலை, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன.
  • இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
இலையுதிர்க் காடுகள்
  • ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக் காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  • ஆண்டு வெப்பநிலை 27oC ஆக இருக்கும்
  • பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மத்திய இந்தியா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தென் இந்தியா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
  • தேக்கு, சால், சந்தன மரம், ரோஸ் மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன மேலும் நறுமண திரவியங்கள், வார்னீஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை கிடைக்கின்றன.

3.வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று.

வடகிழக்கு பருவக்காற்று
  • வடகிழக்குப் பருவக்காற்றின் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை
  • இக்காற்று நிலப்பகுதியிலிருந்து வங்காள விரிகுடா கடலை நோக்கி வீசுகிறது
  • இப்பருவக்காற்றின் மூலம் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாகவின் உட்பகுதிகள் நல்ல மழையைப் பெறுகின்றன.
தென்மேற்கு பருவக்காற்று
  • தென்மேற்கு பருவக்காற்றின் காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை
  • இக்காற்று இந்தியப் பெருங்கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது
  • இப்பருவக்காற்றின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலகளின் மேற்கு சரிவுகள், வடகிழக்கு இந்திய பகுதிகள் குறிப்பாக மேகாலயா நல்ல மழையைப் பெறுகின்றன.

VII. காரணம் கண்டறிக.

1.மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.

  • மேற்கு கடலோர சமவெளி குறுகலானது. சராசரியாக 65 கி.மீ பரப்பு கொண்டது. எனவே குறுகலானது.

2.இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.

  • இந்தியா வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பருவமழை என்பது இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணியாகும்.

 3.மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.

  • கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளதால் தாவரங்கள் குளிர்ச்சியாக உள்ளது.

VIII. விரிவான விடையளி.

 1.தென்மேற்கு பருவக் காற்று குறித்து எழுதுக.

  • தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் அல்லது மழைக்காலம்:
  • இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவக்காற்று விளங்குகிறது.
  • பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
  • உலகளாவிய காலநிலை நிகழ்வான எல்நினோ தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு எனப்படுகிறது.
  • இக்காற்று இந்தியாவின் தென்முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
  • வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. மேகாலாயாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழையைத் தருகிறது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.

2.இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்:
  • ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டர் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
  • மேற்குதொடர்ச்சி மலை கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
  • இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை , மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க்காடுகள்:
  • இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இதனை ‘பருவக்காலக் காடுகள்’ என்றும் அழைக்கலாம்.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  • தேக்கு மற்றும் சால் மிக முக்கிய மரங்களாகும்.
அயன மண்டல வறண்ட காடுகள்:
  • ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
  • பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் :
  • இக்காடுகளை ‘முட்புதர் காடுகள்’ என்றும் அழைப்பர்.
  • கருவேலம், சீமை கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அல்பைன்/இமயமலைக்காடுகள்:
  • உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இக்காடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • கிழக்கு இமயமலைக்காடுகள், மேற்கு இமயமலைக்காடுகள்:
  • அல்பைன் காடுகள்:
  • இவ்வகைக்காடுகள் ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன.
  • ஓக், சில்வர், பீர், பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள் இக்காட்டின் முக்கிய மரவகைகளாகும்.
அலையாத்திக் காடுகள்:
  • கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
  • மகாந்தி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
  • இவை “மாங்குரோவ் காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

10th Geography Guide Unit 2 | Additional Question and Answers Tamil Medium

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.சமச்சீர் காலநிலை ………………. காலநிலை எனப்படுகிறது.

அ) பிரிட்டிஷ்
ஆ) பிரெஞ்சு
இ) ரஷ்ய
ஈ) எதுவுமில்லை

விடை: அ) பிரிட்டிஷ்

2.சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் ………….. இருக்கும்.

அ) வெப்பமாக
ஆ) குளிராக
இ) மிதமாக
ஈ) மித குளிராக

விடை: ஆ) குளிராக

3.வானிலை நிபுணர்களை ……………… பிரிவாக பிரித்துள்ளனர்.

அ) 3
ஆ) 4
இ) 2
ஈ) 5

விடை: ஆ) 4

4.தென்னிந்தியாவில் காற்றின் திசையானது ……………… ஆக உள்ள து.

அ) கிழக்கு-மேற்கு
ஆ) மேற்கு-கிழக்கு
இ) வடக்கு-தெற்கு
ஈ) தெற்கு-வடக்கு

விடை: அ) கிழக்கு-மேற்கு

5.இந்திய காலநிலை முக்கிய அம்சமாக ………………. விளங்குகிறது.

அ) வடமேற்கு
ஆ) தென்மேற்கு
இ) தென்கிழக்கு
ஈ) வடகிழக்கு

விடை: இ) தென்மேற்கு

6.……………… மழைப்பொழிவை இந்தியா தென்மேற்கு பருவக்காற்று மூலம் பெறுகிறது.

அ) 25%
ஆ) 75%
இ) 57%
ஈ) 52%

விடை: ஆ) 75%

7.இந்தியாவின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு …………………….. ஆகும்.

அ) 181 செ.மீ
ஆ) 118 செ.மீ
இ) 150 செ.மீ
ஈ) 105 செ.மீ

விடை: ஆ) 118 செ.மீ

8.இலையுதிர்க்காடுகள் ………………….. வெப்பத்தைக் கொண்டுள்ளது.

அ) 22°C
ஆ) 27°C
இ) 25°C
ஈ) 42°C

விடை: ஆ) 27°C

9.பாலைவனக் காடுகளை ………… என்பர்.

அ) முட்புதர்க் காடுகள்
ஆ) வறண்ட காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்

விடை: அ) முட்புதர்க் காடுகள்

10.…………….. காடுகளை மாங்குரோவ் காடுகள் என்பர்.

அ) அல்பைன்
ஆ) மலைக் காடுகள்
இ) அலையாத்தி
ஈ) வறண்ட காடுகள்

விடை: இ அலையாத்தி

11.IBWL ………………ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

அ) 1972
ஆ) 1960
இ) 1952
ஈ) 1925

விடை: இ 1952

12.இந்தியா …………….. தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளது.

அ) 120
ஆ) 102
இ) 140
ஈ) 104

விடை: ஆ) 102

13.இந்தியா ………….. உயிர்க்கோள காப்பகங்களை கொண்டுள்ளது…

அ) 18
ஆ) 81
இ) 8
ஈ) 14

விடை: அ) 18

14.புலிகள் பாதுகாப்பு திட்டம் …………. ஆண்டு தொடங்கப்பட்டது.

அ) April 1973
ஆ) Sep 1937
இ) Nov 1793
ஈ) Oct 1903

விடை: அ) April 1973

15.உலகளாவிய காலநிலை நிகழ்வு …………………. எனப்படுகிறது.

அ) எல்நினோ
ஆ) பருவமழை வெடிப்பு
இ) மாஞ்சஹல்
ஈ) எதுவுமில்லை

விடை: அ) எல்நினோ

16.இந்திய காலநிலையை பாதிக்கும் முக்கிய காரணி ……………… ஆகும்.

அ) நிலத்தோற்றம்
ஆ) வனஉயரி
இ) பருவகால காற்று
ஈ) ஜெட் காற்று

விடை: இ) பருவகால காற்று

17.யுனெஸ்கோவின் கீழுள்ள உயிர்க்கோள காப்பகங்கள் …………….. ஆகும்.

அ) 18)
ஆ) 11
இ) 17
ஈ) 12

விடை: ஆ) 11

18.பருத்தி ஆடைகளை ……………… காலத்தில் அணிகிறோம்.

அ) குளிர்
ஆ) கோடை
இ) இலையுதிர்க் காலம்
ஈ) பனிக்காலம்

விடை: ஆ) கோடை

19.இந்தியா ……………… வனவிலங்கு சரணாலயங்களைக் கொண்டுள்ளது.

அ) 551
ஆ) 515
இ) 505
ஈ) 102

விடை: ஆ) 515

20.…………… என்பது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டலத் தன்மையைக் குறிக்கும்.

அ) காலநிலை
ஆ) வானிலை
இ) மான்சூன்
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) வானிலை

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.……………. இந்தியாவை இருசம பாகங்களாகப் பிரிக்கிறது.

விடை:கடகரேகை

2.இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் முக்கிய காரணி …………….. ஆகும்.

விடை:பருவக்காற்று

3.ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டல தன்மையைக் குறிப்பது ……………….

விடை:வானிலை

4.ஒரு குறிப்பிட்ட பகுதியின் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பது …………………..

விடை:காலநிலை

5.வளிமண்டல குறுகிய பகுதியில் வேகமாக நகரும் காற்றுகள் …………………….. எனப்படும்.

விடை:ஜெட்காற்றுகள்

6.மான்சூன் என்ற சொல் ……………. என்ற அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.

விடை:மௌசிம்

7.மௌசிம் என்பதன் பொருள் ……………… ஆகும்.

விடை:பருவகாலம்

8.இந்தியக் காலநிலை ……………. பருவங்களைக் கொண்டுள்ளது.

விடை:4

9.…………….க் காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது.

விடை:கோடை

10.தென்மேற்கு பருவக் காற்றுக் காலத்தின் மற்றொரு பெயர் ……………….

விடை:மழைக்காலம்

11.உலகின் மிக அதிகளவு மழை பெறும்பகுதி ……………

விடை:மௌசின்ராம்

12.மௌசின்ராம் ……………. அமைந்துள்ளது.

விடை:மேகாலயாவில்

13.இயற்கைச்சூழ்நிலை அல்லது காடுகளை வாழிடமடாகக் கொண்டு வாழும் விலங்குகள் …………….. எனப்படுகின்றன.

விடை:வன உயிரினங்கள்

14.………………. என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

விடை:உயிர்க்கோள பெட்டகம்

15.சுமார் …………………… மேல் உள்ள இமயமலைகளில் காணப்படும் காடுகள் அல்பைன்.

விடை:2400மீ

கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.கூற்று : ஜெட் காற்றுகள் குறுகிய பகுதியில் பொதுவாக நகரும்.
காரணம் : வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை ஜெட் காற்றுகள் உருவாக்கும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி

விடை: ஈ) கூற்று தவறு காரணம் சரி

V. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

1.வடகிழக்கு பருவக்காற்று மூலம் நல்ல மழைப்பொழிவு பெறும் மாநிலம் ஆகும்.

அ) அஸ்ஸாம்
ஆ) பீகார்
இ) ஒரிசா
ஈ) மேற்கு வங்காளம்

விடை: இ ஒரிசா

2.வங்கக் கடலில் உருவாகும் புயலால் மழை பெறும் மாநிலம்

அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரா
இ) கர்நாடகம்
ஈ) மத்தியப்பிரதேசம்

விடை: ஈ) மத்தியப் பிரதேசம்

சுருக்கமான விடையளிக்கவும்.

1.வானிலை, காலநிலை என்றால் என்ன?

வானிலை :
  • வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.
காலநிலை:
  • காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

2.பருவக்காற்று – வரையறு.

  • “மான்சூன்” என்ற சொல் “மௌசிம்” என்ற அரபு சொல்லிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம் ஆகும்.
  • பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
  • இக்காற்று கோடைக்காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கியும், குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் விசுகிறது.

3.நார்வெஸ்டர் என்றால் என்ன?

  • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் (அல்லது) கால்பைசாகி என்றழைக்கப்படுகிறது.
  • இக்காற்று கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளான பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது.

4.இயற்கைத் தாவரங்கள் குறிப்பு வரைக.

  • இயற்கைத் தாவரம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது.
  • இவை இயற்கையான சூழலில் காணப்படுகின்றன.
  • ஒரு பகுதியில் இயல்பாகவே நீண்ட காலமாக மனிதர்களின் தலையீடு இன்றி இயற்கையாக வளரும் மரங்கள், புதர்கள், செடிகள், கொடிகள் போன்ற அனைத்து தாவர உயிரினங்களையும் இயற்கைத் தாவரங்கள் என்கிறோம்.

5.இந்திய வனவிலங்கு வாரியம் – குறிப்பு வரைக.

  • 1952ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பாகும்.
  • இந்திய வனவிலங்கின் செழுமைத் தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க 102 தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.

காரணம் கண்ட றிக.

1.தமிழ்நாடு தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் குறைந்த மழையைப் பெறுகிறது.

  • மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ளதால் குறைந்த மழையைப் பெறுகிறது.

2.சமச்சீர் காலநிலை – பிரிட்டிஷ் காலநிலை

  • சமச்சீர் காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ (அ) மிகக் குளிராகவோ இல்லாததால் பிரிட்டிஷ் காலநிலை எனப்படுகிறது.

விரிவான விடையளி.

1.இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் யாவை?

  • அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

அட்சங்கள் :

  • இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரை அமைந்துள்ளது.
  • 23°30′ வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சமபாகங்களாக பிரிக்கிறது.
  • கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது.
  • கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.
உயரம்:
  • புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
  • இதற்கு “வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.
  • எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கும்.
  • உதகை தென்னிந்தியாவின் இதர மலை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளைவிட மிகவும் குளிராக உள்ளது.
கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு:
  • இந்தியாவில் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை.
  • இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.
  • இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.
பருவக்கால காற்று:
  • இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
  • இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
  • தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது. இதேபோல் தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.
ஜெட் காற்றோட்டங்கள்:
  • வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட்காற்றுகள்” என்கிறோம்.
  • கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.

2.வடக்கிழக்கு பருவக்காற்று காலம் விவரி.

  • செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியிலிருந்து வங்காளவிரிகுடா நோக்கி வீசுகிறது.
  • பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ் விசை) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது.
  • எனவே இக்காற்று வடகிழக்கு பருவக்காற்று என அழைக்கப்படுகிறது.
  • இப்பருவக்காலம் இந்திய துணைக்கண்ட பகுதியில் வட கீழைக் காற்றுத் தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது எனலாம்.
  • வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன.
  • கடற்கரைப் பிரதேசங்களில் கனமழையுடன் கூடிய பலத்த புயல் காற்று, பெரும் உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
  • இப்பருவத்தில் நாடு முழுவதும் பகல் நேர வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.

Leave a Reply