You are currently viewing 10th Science Book Back Answer Biology Unit 23

10th Science Book Back Answer Biology Unit 23

10th Science Book Back Answer Biology Unit 23

10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson 23. Visual Communication (காட்சித்தொடர்பு)

10th Science Book Back Answer Biology Unit 23. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 23. காட்சித்தொடர்பு Book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.

10th Science Book Back Answer Tamil Medium

10th Standard Science Book Back Answers Lesson 23 Visual Communication ( ( காட்சித்தொடர்பு )

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?

  1. Paint
  2. PDF
  3. MS Word
  4. Scratch

விடை; Scratch

2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்

  1. கோப்புத் தொகுப்பு
  2. பெட்டி
  3. Paint
  4. ஸ்கேனர்

விடை ; கோப்புத் தொகுப்பு

3. நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது ?

  1. Script area
  2. Block palette
  3. Stage
  4. Sprite

விடை; Script area

4. நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது?

  1. Inkscape
  2. Script editor
  3. StageSprite

விடை ; Script editor

5. பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?

  1. Block palette
  2. Block menu
  3. Script area
  4. Sprite

விடை; Block menu

10th Science Book Back Answer Biology Unit 23

II. பொருத்துக.

  1. நிரலாக்கப் பகுதி Script Area குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes
  2. கோப்புத் தொகுப்பு Folder அசைவூட்ட மென்பொருள் Animation software
  3. ஸ்கிராச்சு Scratch நிரல் திருத்தி Edit programs
  4. ஆடை திருத்தி Costume editor கோப்பு சேமிப்பு Store files
  5. நோட்பேடு Notepad –  நிரல் உருவாக்கம் Build Scripts

விடை; 1 – E, 2 – D, 3 – B, 4 – C, 5 – A

10th Science Book Back Answer Biology Unit 23.

III. சுருக்கமாக விடையளி

1. ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?

  • அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு(SCRATCH).
  • இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language). எம்ஐடி (Massachusetts Institute of Technology – MIT) என்னும் பல்கலைத் தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது.

2. திருத்தி (EDITOR) குறித்தும் அதன் பகுதிகள் குறித்தும் எழுதுக?

நிரல்களையும் இஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.

ஸ்கிராச்சு மென்பொருளைத் திறந்தவுடன் மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சாளரம் புலப்படும். இடப்புற மேல் பகுதியில் ஸ்டேஜ் பிரிவும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் ஸ்பிரைட் பட்டியல் பிரிவும் வலப்புறத்தில் ஸ்கிரிப்ட் எடிட்டர் பிரிவும் இருக்கும்.

ஸ்கிரிப்ட் எடிட்டரின் மேல்பகுதியில் Script, Costume, Sound என மூன்று தத்தல்கள் இருக்கும். ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.

1) Script Area:

இங்கு நிரல் (Script) கட்டமைக்கப்படுகிறது.

2) Block Menu:

இங்கிருந்து பிளாக்கு வகைமையைத் (blocks category-Programming Statements) தேர்வு செய்யமுடியும்.

3) Block Palette:

இங்கு பிளாக்குகளை (block) தேர்வு செய்யலாம்.

ஆடை தத்தலைத் (Costume tab) தேர்வு செய்தால் ஆடை திருத்தி (Costume editor) புலப்படும்.

3. மேடை (STAGE) என்றால் என்ன?

  • ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ்; என்பர்.
  • இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
  • தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

4. ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?

  • ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் (Characters) ஸ்பிரைட்கள் என்பர். ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
  • ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

5. ஸ்கிராச்சு சூழல் திருத்தி (Scratch Environment Editor) முக்கிய பகுதிகளைக் யாவை?

ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது.

அவை

  • ஸ்டேஜ் (Stage)
  • ஸ்பிரைட் (Sprite)
  • ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script Editor)

Leave a Reply