10th STD Tamil இயல் 1 Book Back & Additional Question-Answers

 10th Tamil Guide Unit 1.1

 10th Tamil Guide Unit 1.1

இயல் 1: அமுதஊற்று // 1.1. அன்னை மொழியே

 

 10th Tamil Guide Unit 1.1. Samacheer Kalvi 10th Tamil Guide Unit 1.1 Question Answer. TN 10th Standard Tamil Book Back and Additional Question and answers. TN Samacheer kalvi Guide. 12th Standard All Unit Full answer key. Class 10 இயல் 1: அமுதஊற்று Book Full Answers. 10th Lesson 1 Free Online Test.  Tamilnadu state board 10th Tamil New Reduced syllabus Guide 2021 and New full Syllabus full Guide PDF Download. our website https://www.studentsguide360.com/  Teachers prepared the 10th Tamil Guide solutions. TN 10th Tamil New Reduced syllabus-based important question. 10th Tamil Guide Reduced syllabus based 2021 and Full new syllabus based on important questions with answer, Samacheer Kalvi 10th Tamil Book Back Answers. Guide, 10th Tamil Unit 1 Book back Question and Answers, 10th Tamil Unit 1 Book Back and additional question and answers, TN Students Guide. 10th Tamil All Units Full Answer key

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

 10th Tamil Guide Unit 1.1

 10th Tamil Guide Unit 1.1

 1.1. அன்னை மொழியே

 10th Tamil Guide Unit 1.1

 

அழகார்ந்த செந்தமிழே!

*அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே! 
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! 
கன்ணிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் 
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
 
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! 
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! 
மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே 
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!*

செப்பரிய நின்பெருமை

செப்பரிய நின்பெருமை

செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை 
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்? 
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும் 
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்
 
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச் 
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த 
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

-கனிச்சாறு

நூல் வெளி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
இவர் உலகியல் நூறு பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

I. பலவுள் தெரிக

“எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
  1. எந் + தமிழ் + நா
  2. எந்த + தமிழ் + நா
  3. எம் + தமிழ் + நா
  4. எந்தம் + தமிழ் + நா
விடை : எம் + தமிழ் + நா

II. குறு வினா

“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்

III. சிறு வினா

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!”
 
  • அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
  • குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
  • பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
  • கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
  • பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்
“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”

IV. நெடு வினா

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
தாயே! தமிழே! வணக்கம்,
 
தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.
 
என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.

சுந்தரனார்

  • நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய பெண்ணாக பூமியையும்,
  • பாரதத்தை முகமாகவும், பிறை போன்ற நெற்றியாகவும்,
  • நெற்றியில் இட்ட பொட்டாக தமிழும்,
  • தமிழின் மணம் எத்திசையும் வீசுமாறு உருவகப்படுத்திப் பாடியுள்ளார் சுந்தரனார்
  • “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்….”

பெருஞ்சித்திரனார்

  • குமரிக்கண்டத்தில் நின்று நிலைபெற்ற மண்ணுலகம் போற்ற வாழ்ந்த பேரரசியே!
  • பழமைக்கு பழமையானவளே!
  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் புகழே!
  • பாட்டுத்தொகையே! கீழ்கணக்கே! சிலம்பே! மேகலையே! என்று பெருங்சித்திரனார் தமிழை முடிதாழ வணங்கி வாழ்த்துகிறார்.
  • “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!”

நிறைவுரை

  • இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.

அன்னை மொழியே – வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்
  1. பெருஞ்சித்திரனார்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா
விடை : பெருஞ்சித்திரனார்
2. செந்தமிழ் பிரித்து எழுதுக.
  1. செந் + தமிழ்
  2. செம் + தமிழ்
  3. செ + தமிழ்
  4. செம்மை + தமிழ்
விடை : செம்மை தமிழ்

II. குறு வினா

1. பெருஞ்சித்திரனார் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை?
  • தென்மொழி
  • தமிழ்ச்சிட்டு
2. பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் எவை?
  • உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • கனிச்சாறு
  • பள்ளிப்பறைவைகள்

3. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு

III. சிறு வினா

பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
  • இவர்  எழுதிய தென்மொழி, தமிழ்ச்சிட்டு நூல்கள் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்தன.
  • உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.

10th Tamil Guide Unit 1.1

Additional One Marks – பலவுள் தெரிக

1.ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி
Answer:
அ) யசோதர காவியம்
 
2.உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
அ) தேன்சிட்டு
ஆ) வண்டு
இ) தேனீ
ஈ) வண்ணத்துப்பூச்சி
Answer:
ஆ) வண்டு
 
3.“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
Answer:
இ) பாண்டியன்
 
4.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பள்ளிப்பறவைகள்
Answer:
இ) தென்தமிழ்
 
5.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு
Answer:
அ) தமிழ்ச்சிட்டு
 
6.பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
இ) 1.ஆ 2.இ 3.ஈ. 4.அ
ஈ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
 
7.‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பாவியக்கொத்து
Answer:
ஆ) கனிச்சாறு
 
8.“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பெருஞ்சித்திரனார்
 
9.“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்
அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்
Answer:
ஆ) துரை. மாணிக்கம்
 
10.“நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
அ) 18
ஆ) 10
இ) 8
ஈ) 5
Answer:
அ) 18
 
11.“மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு
Answer:
ஆ) மூன்று
 
12.துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
Answer:
அ) பெருஞ்சித்திரனார்
 
13.பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.
அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்
Answer:
ஆ) முன்னைக்கும் முன்னை
 
14.‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.
அ) பாடல் பத்து, எண் தொகை
ஆ) பா பத்து, எட்டுத் தொகை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
ஈ) பத்தும் எட்டும்
Answer:
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
 
15.பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன? அ) எண்சுவை எண்பது
ஆ) உலகியல் நூறு
இ) நூறாசிரியம்
ஈ) கனிச்சாறு
Answer:
ஈ) கனிச்சாறு
 
16.செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல – பயின்று வரும் அணி
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) தற்குறிப்பேற்றணி
Answer:
அ) உவமையணி
 
17.செந்தமிழ் – பிரித்து எழுதுக.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செ + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
Answer:
ஈ) செம்மை + தமிழ்
 
18.செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) அன்மொழித்தொகை
Answer:
அ) பண்புத்தொகை
 
19.உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) மோனை
 
20.தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
              —-இப்பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) தென்னன்
ஆ) மன்னும்
இ) இன்னறும்
ஈ) இவையனைத்தும்
Answer:
ஈ) இவையனைத்தும்

குறுவினா

1.வண்டு – தேன் தமிழர் – தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
வண்டு – தேன் :
2.தமிழ் எவற்றின் காரணமாகத் தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்?
Answer:
ஆகிய இவையே தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.

This Post Has One Comment

Leave a Reply