10th Tamil Guide Unit 2.5

10th Tamil Guide Unit 2.3

10th Tamil Guide Unit 2.3

 2.3. முல்லைப்பாட்டு

10th Tamil Samacheer kalvi Guide Lesson 2. SSLC Tamil Guide Unit 2.3 Full Book Back and Additional Question with answers. 10th Tamil Unit 2 Free Online Test. 10th Tamil Unit 2.1 to 2.5 Full Answers. TN 10th Tamil Reduced Syllabus Full Answers. 10th 1st and 2nd Revision Test Syllabus and Time Table 202210th Standard Tamil Nadu Start Board Syllabus, Samacheer Kalvi Guide, 10th Tamil Unit 2 Full Guide, 10th Tamil Unit 2 Book Back Question And Answers, Also Additional Question and answers. Unit 1 to 9 Full Guide.

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide Unit 2.3

10th Tamil Guide Unit 2.3 –  2.3. முல்லைப்பாட்டு

I. சொல்லும் பாெருளும்
  • நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
  • நேமி – வலம்புரிச்சங்கு
  • காேடு – மலை
  • காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
  • நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
  • தூஉய் – தூவி
  • விரிச்சி – நற்சாெல்
  • சுவல் – தாேள்
II. இலக்கணக்குறிப்பு
  • மூதூர் – பண்புத்தாெகை
  • உறுதுயர் – வினைத்தாெகை
  • கைதாெழுது – மூன்றாம் வேற்றுைமத் தாெகை
  • தடக்கை – உரிச்சாெல் தாெடர்

III. பகுபத உறுப்பிலக்கணம்

பாெறித்த – பாெறி + த் + த் +அ
பாெறி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயெரச்ச விகுதி

10th Tamil Guide Unit 2.3

IV. பலவுள் தெரிக

“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
  • 1. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
  • 2. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
  • 3. கடல் நீர் ஒலித்தல்
  • 4. கடல் நீர் கொந்தளித்தல்
விடை : கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
 

V. குறு வினா

1. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

  • தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்துவாடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.

2. மாஅல் – பொருளும், இலக்கணக் குறிப்பும் தருக
மா அல்
பொருள்:  திருமால் – பேருருவம்
இலக்ககணக்குறிப்பு: செய்யுளிசை அளபெடை – உரிச்சொல் தொடர்

10th Tamil Guide Unit 2.3

VI. நெடு வினா

முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுக
குறிப்புச்சட்டம்

  • மழை
  • தெய்வ வழிபாடு
  • கன்றின் வருத்தம்
  • வருந்தாதே
  • முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது

மழை:-

  • மேகம் அகன்ற உலகத்தை வளைத்து பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.

தெய்வ வழிபாடு:-

  • முது பெண்கள் காவலையுடைய ஊர்பக்கறம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுக்ள நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்து முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவபர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.

கன்றின் வருத்தம்:-


“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி”

சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்
வருந்தாதே:-

  • புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டு வந்து விடுவார் “வருந்தாதே” என்றாள் இடைமகள்.

முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது:-

  • இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டாேம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாேதே!

முல்லைப்பாட்டு – கூடுதல் வினாக்கள்

 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. முல்லைப்பாட்டு _____________ நூல்களுள் ஒன்று.
விடை : பத்துபாட்டு


2. முல்லைப்பாட்டு ___________ அடிகளை கொண்டது
விடை : 103

3. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் _____________
விடை : முல்லைப்பாட்டு

4. இயற்கைச் சூழல் நமக்குள் _____________  தூண்டுகிறது.
விடை : இனிய உணர்வுகளைத்

5. தமிழர்கள் _____________ இயைந்த வாழ்வைக் காெண்டிருந்தனர்.
விடை : இயற்கையாேடு

II. குறு வினா

1. முல்லைப்பாட்டு நூல் குறிப்பு வரைக

  • பத்துபாட்டு நூல்களுள் ஒன்று.
  • 103 அடிகளை கொண்டது
  • ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
  • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல்.

 

2. நப்பூதனார் குறிப்பு வரைக

  • முல்லைப் பாட்டினை பாடியவர்.
  • காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனாவார்.

 

3. முல்லை நிலத்திற்குரிய பொழுதுகள் யாவை?

  • பெரும்பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
  • சிறுபொழுது – மாலை.

 

4. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள கருப்பொருள்கள் யாவை?

  • நீீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு
  • மரம் – கொன்றை, காயா, குருத்தம்
  • பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ

பலவுள் தெரிக

1.முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?
அ) 101
ஆ) 102
இ) 103
ஈ) 104
Answer:
இ) 103


2.முல்லைப்பாட்டு எந்த நூல் வகையைச் சார்ந்தது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) கீழ்க்க ணக்கு
ஈ) சிற்றிலக்கியம்
Answer:
ஆ) பத்துப்பாட்டு

3.முல்லைத் திணைக்குரிய பூ வகை
அ) காந்தள்
ஆ) பிடவம்
இ) தாழை
ஈ) பாதிரி
Answer:
ஆ) பிடவம்

4.முல்லைப்பாட்டு எந்தக் கணக்கு நூல்களுள் ஒன்று?
அ) பதினெண்மேல் கணக்கு
ஆ) பதினெண்கீழ்க்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) பதினெண்மேல் கணக்கு

5.பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்
அ) குறிஞ்சிப்பாட்டு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப்பாலை
ஈ) திருமுருகாற்றுப்படை
Answer:
ஆ) முல்லைப்பாட்டு

6.பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
இ) 1.ஈ 2.ஆ 3.இ 4.அ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

7.வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலி மன்னன்
ஈ) நான்முகன்
Answer:
ஆ) திருமால்

8.குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துத் தந்தவன்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer:
இ) மாவலிமன்னன்

9.மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து நின்றவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer:
ஆ) திருமால்

10.“கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி”
– இவ்வடிகளில் ‘மேகம்’ என்னும் பொருள்தரும் சொல்

அ) கோடு
ஆ) செலவு
இ) எழிலி
ஈ) கொடு
Answer:
இ) எழிலி

11.“கொடுங்கோற் கோவலர்” – இதில் குறிப்பிடப்படும் கோவலர் யார்?
அ) கோவலன்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) இடையர்
Answer:
ஈ) இடையர்

12.முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) மாங்குடிமதேனார்
இ) நப்பூதனார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) நப்பூதனார்

13.மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுவது எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) திருக்குறள்
இ) நாலடியார்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) சங்க இலக்கியம்

14.‘நனந்தலை உலகம்’ என்பதில் ‘நனந்தலை’ என்பதன் பொருள்
அ) கவர்ந்த
ஆ) அகன்ற
இ) சுருங்கிய
ஈ) இழந்த
Answer:
ஆ) அகன்ற

15.‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்
அ) மலர்கள்
ஆ) மான்கள்
இ) விண்மீன்கள்
ஈ) கண்க ள்
Answer:
அ) மலர்கள்

16.பொருத்திக் காட்டுக:
i) மூதூர் – 1. உரிச்சொற்றொடர்
ii) உறுதுயர் – 2. மூன்றாம் வேற்றுமைத்தொகை
iii) கைதொழுது – 3. வினைத்தொகை
iv) தடக்கை – 4. பண்புத்தொகை

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 3, 4, 2
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

17.பொறித்த – பகுபத உறுப்பிலக்கணத்தின்படி பிரிக்கும் முறை
அ) பொறி + த் + த் + அ
ஆ) பொறித்து + அ
இ) பொறி + த்(ந்) + த் + அ
ஈ) பொறி + த் + த
Answer:
அ) பொறி + த் + த் + அ

18.தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றவர்கள்
அ) இளம் பெண்கள்
ஆ) முதிய பெண்டிர்
இ) தோழிகள்
ஈ) சான்றோர்
Answer:
ஆ) முதிய பெண்டிர்

19.சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட எது பசியால் வாடிக் கொண்டிருந்தது?
அ) பசு
ஆ) இளங்கன்று
இ) எருமை
ஈ) ஆடு
Answer:
ஆ) இளங்கன்று

20.பசியால் வாடிக் கொண்டிருந்த இளங்கன்றின் வருத்தத்தைக் கண்டவள்
அ) குறமகள்
ஆ) இடைமகள்
இ) தலைவி
ஈ) தோழி
Answer:
ஆ) இடைமகள்

21.‘கைய கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இடைமகள் இளங்கன்றிடம்
ஆ) முதுபெண்டிர் பசுவிடம்
இ) தலைவன் காளையிடம்
ஈ) தலைவி மேகத்திடம்
Answer:
அ) இடைமகள் இளங்கன்றிடம்

22.‘நன்னர் நன்மொழி கேட்டனம்’ – யார் யாரிடம் கூறியது?
அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது
ஆ) தலைவி முதுபெண்டிரிடம் கூறியது
இ) தோழி தலைவியிடம் கூறியது
ஈ) தலைவி தலைவனிடம் கூறியது
Answer:
அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது

23.பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டின் அடிகள்
அ) 1 – 17
ஆ) 17 – 25
இ) 4 – 16
ஈ) 5 – 20
Answer:
அ) 1 – 17

24.முல்லையின் நிலம்
அ) காடும் காடு சார்ந்த இடமும்
ஆ) மலையும் மலை சார்ந்த இடமும்
இ) வயலும் வயல் சார்ந்த இடமும்
ஈ) கடலும் கடல் சார்ந்த இடமும்
Answer:
அ) காடும் காடு சார்ந்த இடமும்

25.இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) எந்நிலத்துக்குரிய உரிப்பொருள்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) பாலை
Answer:
ஆ) முல்லை

26.கார்காலத்துக்குரிய மாதங்கள் 
அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஆவணி, புரட்டாசி
ஈ) கார்த்திகை, மார்கழி
Answer:
இ) ஆவணி, புரட்டாசி

27.நப்பூதனாரின் தந்தை 
அ) பொன்முடியார்
ஆ) பொன்வணிகனார்
இ) மாசாத்துவாணிகனார்
ஈ) மாணிக்கநாயனார்
Answer:
ஆ) பொன்வணிகனார்

28.பொன்வணிகனாரின் ஊர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) காவிரிப்பூம்பட்டினம்
ஈ) குற்றாலம்
Answer:
இ) காவிரிப்பூம்பட்டினம்

Leave a Reply