10th Tamil guide unit 3

10th Tamil Guide Unit 3.3

10th Tamil Guide Unit 3.3

இயல் 3.3. மலைபடுகடாம்

10th Tamil Guide Unit 3.3 TN 10th Samacheer kalvi Guide Lesson 3, Unit 3.3 Book Back and Additional Question and answer. SSLC Tamil Unit 3.3. மலைபடுகடாம்  Full Answer key 2022. SSLC Tamil Reduced Syllabus Guide. 10th Tamil Unit 3 Free Online Test. 10th Tamil Full Guide Samacheer kalvi guide. Unit Test Question paper. 1st and 2nd Revision Test Syllabus & Time Table. 10th Tamil Chapter 3 Answers. TN Goc Announced KALVI TV Videos.

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil guide unit 3

 

3.3. மலைபடுகடாம்

 

10th Tamil Guide Unit 3.3
 
 
அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,
 
அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,
 
நும்இல் போல நில்லாது புக்கு,
கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்
 
அடி : 158 –169
 
சொல்லும் பொருளும்
  1. அசைஇ – இளைப்பாறி,
  2. கடும்பு – சுற்றம்,
  3. ஆரி – அருமை,
  4. வயிரியம் – கூத்தர்,
  5. இறடி – தினை,
  6. அல்கி – தங்கி
  7. நரலும் – ஒலிக்கும்
  8. படுகர் – பள்ளம்
  9. வேவை – வெந்தது
  10. பொம்மல் – சோறு
 
பாடலின் பொருள்
நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.
 
 
I. சொல்லும் பொருளும்
  • அசைஇ – இளைப்பாறி
  • அல்கி – தங்கி
  • கடும்பு – சுற்றம்
  • நரலும் – ஒலிக்கும்
  • ஆரி – அருமை
  • படுகர் – பள்ளம்
  • வயிரியம் – கூத்தர்
  • வேவை – வெந்தது
  • இறடி – திசை,
  • பொம்மல் – சோறு

 

II. பகுபத உறுப்பிலக்கணம்

 
1.  மலைந்து = மலை + த் (ந்) + த் + உ
  • மலை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி
2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + உ
  • பொழி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

 

III. இலக்கணக் குறிப்பு

  • அசைஇ – சொல்லிசை அளபெடை
  • கெழீஇ – சொல்லிசை அளபெடை
  • பரூஉக் – செய்யுளிசை அளபெடை
  • குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடை

 

IV. பலவுள் தெரிக.

“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-
  1. புத்தூர்
  2. மூதூர்
  3. பேரூர்
  4. சிற்றூர்
விடை :

  1. சிற்றூர்

10th Tamil Guide Unit 3.3

V. குறு வினா

 

இறடிப் பொம்மல் பெறுகுவிர் – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
  • தினைச் சோற்றையும் உணவாகப் பெறவீர்கள்.

 

VI. சிறு வினா

 

1. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?
திணை              கிடைக்கும் உணவுப் பொருட்கள்
முல்லை             வரகு, சாமை
மருதம்             செந்நெல், வெண்ணெல்
 
 
2. கூத்தனைக் கூத்தன் ஆற்றப்படுத்தலைக் கூத்தாராற்றப்படை எவ்வாறு காட்டுகிறது.
வழிகாட்டல்:-
  • பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையங்கள்.
நன்னின் கூத்தர்கள்:-
  • பகைவரே இல்லாமல் ஆட்சி செய்பவன், பகை வந்தாலும் எதிர் கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
இன் சொற்கள்:-
  • நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.
உணவு:-
  • நெய்யில் வெந்த மாசிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

 

10th Tamil Guide Unit 3.3

VII. நெடு வினா

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச்சட்டம்

  • முன்னுரை
  • உணவு
  • கல்வி
  • தொழில்
  • நன்னடை
  • முடிவுரை
 
முன்னுரை:-
  • அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.
உணவு:-
  • அன்றைய பாணர்கள், கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.
கல்வி:-
  • கல்வி கற்க முடியாதவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பல் வழிகாட்டல் செய்கின்றனர்.
தொழில்:-
  • இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஓரவு போக்கப்படுகின்றது.
நன்னடை:-
  • சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய் இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.
முடிவுரை:-
  • வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

மலைபடுகடாம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மலைபடுகடாம் ______________ நூல்களுள் ஒன்று.
விடை : பத்துபாட்டு
 
2. மலைபடுகடாம் நூலை ______________  எனவும் அழைக்கின்றனர்.
விடை : கூத்தராற்றுப்படை
 
3. நன்னன் என்னும் குறுநில மன்னன் மலைபடுகடாம் நூலின் ______________  ஆவான்.
விடை : பாட்டுடைத் தலைவன்
 
4. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் ______________ மலைபடுகடாம் நூலை பாடியுள்ளார்.
விடை : பெருங்கெளசிகனார்
 
5. நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றவர் ______________ 
விடை : கூத்தர்

 

II. குறு வினா

 
1. ஆற்றுப்படை என்றால் என்ன?
  • ஆற்றப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்ற வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
2. மலைப்படுகடாம் பெயர்க்காரணம் கூறுக
  • மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
3. நன்னனின் ஊரில் கூத்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் யாவை?
  • நெய்யில் வெந்த மாசித்தின் பொரியல்
  • தினைச் சோறு
4. மலைபடுகடாம் குறிப்பு வரைக
  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • 583 அடிகளை கொண்டது.
  • கூத்தராற்றுப்படை என அழைக்கப்படுகிறது.
  • மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
  • நன்னன் என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
  • மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்.
 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) அசைஇ – 1. சுற்றம்
ii) அல்கி – 2. கன்றின் நெருப்பு
iii) கன்று எரி – 3. இளைப்பாறி
iv) கடும்பு – 4. தங்கி
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 1, 2, 3, 4,
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 3, 4, 2, 1
 
2.பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) ஆரி – 1. பள்ள ம்
ii) நரலும் – 2. கூத்தர்
ii) படுகர் – 3. அருமை
iv) வயிரியம் – 4. ஒலிக்கும்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
ஆ) 3, 4, 1, 2
 
3.பொருந்தாத பொருளுக்கான இணை எது?
அ) வேவை – வெந்தது
ஆ) இறடி – தினை
இ) பொம்மல் – சோறு
ஈ) நரலும் – சுற்றம்
Answer:
ஈ) நரலும் – சுற்றம்
 
4.மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
ஆ) பத்துப்பாட்டு
 
5.மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?
அ) 483
ஆ) 543
இ) 583
ஈ) 643
Answer:
இ) 583
 
6.மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) விறலியாற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
ஈ) கூத்தராற்றுப்படை
 
7.மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது
அ) யானை
ஆ) மேகம்
இ) மான்
ஈ) வானம்
Answer:
அ) யானை
 
8.இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெருங்கௌசிகனார்
இ) மருதனார்
ஈ) நக்கீரர்
Answer:
ஆ) பெருங்கௌசிகனார்
 
9.‘மலைந்து’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) மலைந்து+உ
ஆ) மலைந்+த்+உ
இ) மலை +த்(ந்)+த்+உ
ஈ) மலை +த்+த்+உ
Answer:
இ) மலை +த்(ந்)+த்+உ
 
10.‘பொழிந்த’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) பொழிந்து+அ)
ஆ) பொழி+த்+த்+உ
இ) பொழி+த்+ந்+த்+அ
ஈ) பொழி+த்(ந்)+த்+அ
Answer:
ஈ) பொழி+த்(ந்)+த்+அ
 
11.பொருந்தாததைக் கண்டறிக.
அ) திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
ஆ) சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
இ) பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Answer:
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ண னார்
 
12.அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்
அ) அசைவாடிய
ஆ) இளைப்பாறி
இ) அமைதியாகி
ஈ) இன்பமாகி
Answer:
ஆ) இளைப்பாறி
 
13.கன்று எரி – என்பதில் ‘எரி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) நெருப்பு
ஆ) கொம்பு
இ) வால்
ஈ) நீர்
Answer:
அ) நெருப்பு
 
14.அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
அ) கரும்
ஆ) சிவந்த
இ) வெண்மையான
ஈ) நீலநிற
Answer:
ஆ) சிவந்த
 
15.அல்கி என்பதன் பொருள்
அ) அழிந்து
ஆ) தங்கி
இ) உள்ளே
ஈ) வெளியே
Answer:
ஆ) தங்கி
 
16.பொருத்துக.
1. இறடி – அ) தங்கி
2. அல்கி – ஆ) பள்ளம்
3. படுகர் – இ) வெந்து
4. வேவை – ஈ) தினை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ)
 
17.கூத்தராற்றுப்படை என்றழைக்கப்படும் நூல்
அ) திருமுருகாற்றுப்படை
ஆ) மலைபடுகடாம்
இ) பொருநராற்றுப்படை
ஈ) சிறுபாணாற்றுப்படை
Answer:
ஆ) மலைபடுகடாம்
 
18.நன்னன் எந்நில மன்னன்?
அ) பெருநில
ஆ) குறுநில
இ) சிறுநில
ஈ) மா
Answer:
ஆ) குறுநில
 
19.மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
அ) நன்ன ன்
ஆ) பாரி
இ) கபிலர்
ஈ) பெருங்கௌசிகனார்
Answer:
அ) நன்னன்

Leave a Reply