10th tamil guide 5th lesson

10th Tamil Guide Unit 5.4

10th Tamil Guide Unit 5.4

இயல் 5.4 புதியநம்பிக்கை

10th Standard Tamil Samacheer kalvi Guide Unit 5.4 Full Answers. TN 10th Tamil Book Back Answers, SSLC Tamil இயல் 5.4 புதியநம்பிக்கை Book Back and Additional Questions and answers. 10th Tamil 5th Lesson Free Online Test. 10th Tamil Important one Marks, 2 Marks, 5 Marks Question with answers, 10th All Subject All District Question Collections. 10th All Unit Samacheer kalvi Guide Unit 1 to 9 Full Answer.

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide Unit 5.4

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

1.கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – என்கிறது வெற்றிவேற்கை.

மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
Answer:
முன்னுரை :
  • வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த வகையில் கல்வி அறிவற்ற, இருட்சமூகத்தில் ஒற்றைச் சுடராய் பிறந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றி, மேரி மெக்லியோட் பெத்யூன் கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமை வாழ்க்கை :
  • மேரி தன் தாய் தந்தையோடு பருத்திக் காட்டில் வேலை செய்யும் கல்வி அறிவற்ற உழைக்கும் குடும்பம். அச்சூழலிலும் மேரி தனக்கென்ற தனி பாதை வகுப்பாள். அது, எதுவாகினும் தான் முதலில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவாள்.
மேரிக்கு ஏற்பட்ட அவமானம்:
  • மேரி ஒருநாள்தாயுடன் வில்சன்வீட்டிற்குச் செல்கிறாள். அங்குக்குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு வியப்புற்றாலும் அவள் கண்கள் அங்கு இருந்த புத்தகத்தின் மீதே சென்றது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்றபோது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி உன்னால் படிக்கமுடியாது என்று கூறினாள். அந்த வார்த்தை அவள் மனதைக் கிழித்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறினாள்.
மேரியின் ஏக்கம் :
  • வில்சனின் வீட்டில் நடந்த அவமானங்களை எண்ணி கண்ணீர் வடித்துத் தன் தந்தையிடம் நான் படிக்க வேண்டும். படித்தால்தான் இச்சமூகம் மதிக்கும் என்று கூறுகிறாள்.
தந்தையின் அறிவுரை :
  • மேரி நாம் பள்ளிச் செல்லமுடியாது. நமக்கென்று தனியாகப் பள்ளிக்கூடம் இல்லை. வெளியூரில் பள்ளியில் வெள்ளைக்காரர்கள் படிக்கும் பள்ளிதான் இருக்கிறது. அதிலும் நம்மைச் சேர்க்கமாட்டார்கள் என்றார்.
மேரியின் தன்னம்பிக்கை:
  • பதினொரு வயது நிரம்பிய மேரி வயல்காட்டிலிருந்து பருத்திமூட்டையைச் சுமந்துகொண்டு வீட்டிற்கு வந்தாள். அப்போது வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத பெண் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, நீ படிக்க வேண்டும்; உன் வேலைகளை முடித்துக்கொண்டு சீக்கிரம் வரவேண்டும் என்றார். மேரிக்கு நா எழவில்லை, வாயடைத்து நின்று வாசிக்கப் புறப்பட்டாள்; படிக்கத் தொடங்கினாள்.
  • புதிது புதிதாக கற்றாள். தன் பாதையை மெல்ல மெல்ல உயர்த்தினாள். இறுதி வகுப்பு படித்து, சான்றிதழ் பெற்றாள்.
பட்டமளிப்பு விழா :
  • தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்த மேரி, வில்சனின் இளைய மகள் என்னை அவமதிக்காவிட்டால் இந்த ஊக்கம் கிடைத்திருக்காது. அச்சிறுமியின் செயல் எனக்கு நேரிடாவிட்டால் இந்த விருது பெற இயலாது என்று எண்ணி பெருமிதம் அடைந்த மேரிக்கு எழுத படிக்கத் தெரியும் எனப் பட்டம் அளித்துச் சிறப்பித்தது.
மேற்படிப்பு :
  • பட்டமளிப்பு விழாவின்போது வில்சன் தோளில் மேரியை அணைத்து ‘நீ எனக்கு என்ன செய்யப் போகிறாய்’ என்றார். “மிஸ் நான் மேலும் படிக்க விரும்புகிறேன்” என்றார். ஆனால் அலைகடலில் அகப்பட்ட கப்பல் கரைசேர இயலாத நிலைபோல் இருந்தாள்.
புதியதோர் பயணம் :
  • மீண்டும் தன் பணியினைப் பருத்திக்காட்டில் தொடங்கினார்கள். அப்போது மிஸ் வில்சன் அங்கு வந்து, வெள்ளைக்காரப் பெண்மணி ஒரு கருப்பின குழந்தையின் படிப்பிற்காக பணம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய். நீ மேல்படிப்பிற்காக டவுனுக்குப் போகவேண்டும் தயாராகு என்றார் மேரியிடம்
ஊரே கூடுதல் :
  • மேரி மேல்படிப்பிற்குச் செல்ல தொடர்வண்டி நிலையத்தில் ஊரே ஒன்று கூடியது. அனைவரும் குட்பை மேரி, குட்பை வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி விடை கொடுத்தனர்.
முடிவுரை:
  • சாதாரணப் பெண்ணாகப் பிறந்து சாதனைப் பெண்ணாக மாறியது மேரியின் வாழ்வு.மேலும், சமுதாயத்தின் அறியாமை இருளைப் போக்க தோன்றிய மேரிஜேன்னின் வாழ்வியல் நிகழ்வுகளைப் போல நாமும் அவமானங்களை வெகுமானமாக மாற்ற முயற்சிப்போம்.
  • என்பதனை உணர்வோம்! வெற்றி பெறுவோம்!!!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரி மெக்லியோட் பெத்யூன் ………………………..உருவாக்கிடக் காரணமானது.

அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
ஆ) தெருமுனையில் ஒரு கல்லூரியை
இ) மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை
ஈ) கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை
Answer:
அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை

2.மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த

விதங்கள்………
i) சமையல் செய்து
ii) தோட்டமிட்டு
iii) பொது இடங்களில் பாட்டுப் பாடி
iv) பிச்சையெடுத்து
அ) i, ii, iii – சரி
ஆ) ii, iii, iv – சரி
இ) நான்கும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
அ) i, ii, iii – சரி

3.அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன் – சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்.

அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
ஆ) கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட
இ) மறுமணம் மறுக்கப்பட்ட
ஈ) உழைக்கும்
Answer:
அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட

4.மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக் கல்வியாளரின், வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்

அ) அகிலன்
ஆ) கமலாலயன்
இ) கீதாலயன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) கமலாலயன்

5.கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருநெல்வேலி
ஆ) மதுரை
இ) தூத்துக்குடி
ஈ) குமரி
Answer:
இ) தூத்துக்குடி

6.“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்று குறிப்பிடும் நூல்

அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) நற்றிணை
Answer:
இ) ஐங்குறுநூறு

Leave a Reply