10th Tamil Guide unit 8 | 10th Tamil Samacheer kalvi guide unit 8.2

10th Tamil Guide unit 8.3

10th Tamil Guide unit 8.3 | 10th Tamil Samacheer kalvi guide Chapter 8.3

8.3. காலக்கணிதம்

10th Tamil Guide Unit 8.3 TN 10th Tamil Samacheer kalvi guide Unit 8.3 Book Back Answers. 10th Tamil Chapter 8.1 to 8.5 Full Answer key based on reduced syllabus 2022. 10th Tamil Free Online Test. 10th Tamil இயல் 8.3 காலக்கணிதம் Book Answers. TN 10th Tamil 8th Lesson Full Answers. 10th Tamil Full Guidehttps://www.studentsguide360.com/  

 • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide unit 8.3 | 10th Tamil Samacheer kalvi guide unit 8

10th Tamil Guide unit 8.3 | 10th Tamil Samacheer kalvi guide Chapter 8.3

காலக்கணிதம் 

-கண்ணதாசன்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்!
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
*மாற்றம் எனது மானிடத் தத்துவம்; 
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! 
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை 
என்ப தறிந்து ஏகுமென் சாலை! 
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; 
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! 
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; 
நானே தொடக்கம்; நானே முடிவு; 
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!*

நூல் வெளி

‘காலக்கணிதம்’ என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

‘முத்தையா’ என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

I. பலவுள் தெரிக.

4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………

 1. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
 2. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
 3. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
 4. என்மனம் இறந்துவிடாது இகழ

விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

10th Tamil Guide unit 8.3

II. குறு வினா

‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’
அ) அடி எதுகையை எடுத்தெழுதுக.
ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க


அ) அடி எதுகை

 • கொள்வோர் – உள்வாய்

ஆ) இலக்கணக் குறிப்பு

 • கொள்க – வியங்கோள் வினைமுற்று
 • குரைக்க – வியங்கோள் வினைமுற்று

10th Tamil Guide unit 8.3

III. நெடு வினா

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

– கண்ணதாசன்

திரண்ட கருத்து:-

 • கவிஞன் நானே காலத்தை கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்த ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம் பொன்னை விட விலையுயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள். சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:-

காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
விஞன் – ருப்போடு, வை சரி – வை தவறாயின்….
மோனை நயம் பெற்று வந்துள்ளது.

எதுகை நயம்:-

மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
ருப்படு – பொருளை – உருப்பட : சீர் எதுகை வந்துள்ளது.

முரண்:-

நாட்டுக்கு அரண்
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ, சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகம்
ஆக்கல் X அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுந்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:-

அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத்தொடுப்பது இயைபு ஆகும்
…. புகழுடைத் தெய்வம்
…. பொருளென் செல்வம் – இயைபு நயமும் உள்ளது

அணி நயம்:-

கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக
யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்
என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:-

சந்தம் தமிழக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

காலக்கணிதம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1.கவிஞன் காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
விடை : காலத்தைக் கணிப்பதால்


2.கண்ணதாசனின் இயற்பெயர் ‘முத்தையா’
விடை :விடை : முத்தையா

3.சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக கண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
விடை : சாகித்திய அகாதெமி விருது

4. _________ மாவட்டத்தில பிறந்தவர் கண்ணதாசன்.
விடை : சிவகங்கை

II. குறு வினா

1. கவிஞன் என்பவன் யார்?

 • மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக்களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.

2. கவிஞன் எதனால் காலத்தை வென்றவனாகிறான்?

 • கவிஞன் காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
 • கண்ணதாசன் எதற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
 • கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

3. கண்ணதாசன் குறிப்பு வரைக

 • கண்ணதாசனின் இயற்பெயர் ‘முத்தையா’
 • சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
 • இவரது பெற்றாெர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
 • 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
 • சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்.
 • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய காெண்டு சேர்த்தவர்.
 • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
 • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

பலவுள் தெரிக

1.காலத்தை வெல்பவன் ………………………..
அ) ஆசிரியர்
ஆ) அரசர்
இ) கவிஞன்
ஈ) ஓவியன்
Answer:
இ) கவிஞன்


2.கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Answer:
ஆ) முத்தையா

3.கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ………………………..
அ) இராமநாதபுரம்
ஆ) நெல்லை
இ) புதுக்கோட்டை
ஈ) சிவகங்கை
Answer:
ஈ) சிவகங்கை

4.கண்ண தாசன் பிறந்த ஊர் – ………………………..
அ) சிறுகூடல்பட்டி
ஆ) கூடல் மாநகர்
இ) முக்கூடல்
ஈ) சிவகங்கை
Answer:
அ) சிறுகூடல்பட்டி

5.கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………………………..
அ) 1939
ஆ) 1942
இ) 1949
ஈ) 1950
Answer:
இ) 1949

6.கண்ண தாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல்………………………..
அ) வாழ நினைத்தால் வாழலாம்
ஆ) கலங்காதிரு மனமே
இ) மலர்களைப் போல் தங்கை
ஈ) உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
Answer:
ஆ) கலங்காதிரு மனமே

7.கண்ணதாசன் திரைப்படப் பாடல் வாயிலாக மக்களுக்கு………………………..உணர்த்தினார்.
அ) மெய்யியலை
ஆ) உலகியலை
இ) ஆன்மீகத்தை
ஈ) இலக்கணத்தை
Answer:
அ) மெய்யியலை

8.சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ………………………..
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Answer:
இ) சேரமான் காதலி

9.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மேத்தா
Answer:
ஆ) கண்ண தாசன

10.கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
அ) தத்துவம்
ஆ) கொள்கை
இ) ஞானம்
ஈ) பண்பாடு
Answer:
அ) தத்துவம்

11.கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறார்?
அ) தன் நூல்களை
ஆ) உரைகளை
இ) இதழ்களை
ஈ) வளமார் கவிகளை
Answer:
ஈ) வளமார் கவிகளை

12.‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்றவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதி
இ) கண்ண தாசன்
ஈ) பெரியார்
Answer:
இ) கண்ண தாசன்

13.‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – இவ்வடிகளில் அமைந்த நயம்.
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை

14.‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?
அ) என்னுடல் x என்மனம்
ஆ) புல்லரிக்காது x இறந்துவிடாது
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்
ஈ) புகழ்ந்தால் x என்மனம்
Answer:
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்

15.‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

16.‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

17.‘வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்’ – எனக் கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

Leave a Reply