11th Revision Test Original Question Paper and Answer key 2022

11th Tamil 1st Revision Answer key 2022

11th Tamil 1st Revision Answer key 2022

11th Tamil First Revision Answer key 2022. 11th Standard Tamil 1st Revision Test Answer Key April 2022. 11th Standard Tamil Revision Exam Original and Model Question Paper with Answer key Both Tamil and English Medium Download PDF 2022. 11th All subject Model Questions 2022. 11th Tamil 1st Revision Exam Official Question Paper. 11th Tamil Full Guide Salmacheer kalvi guide Book Back and Additional Question and answers. 11th Tamil Free Online Test.

11th Revision Test Original Question Paper and Answer key 2022

பகுதி-1

குறிப்பு:

  • i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
  • ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும்ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.
1.’கபாடபுரங்ளைக்காவு கொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்’ -அடிமோனையைத் தெரிவு செய்க.

அ) கபாடபுரங்களை-காவு கொண்ட

ஆ) காலத்தால்-கனிமங்கள்

இ) கபாடபுராங்களை-காலத்தால்

ஈ) காலத்தால் – சாகாத

2.புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

அ) ஸ்டெஃபான் மல்லார்மே

ஆ) பாப்லோ நெருடா

இ) இந்திரன்

ஈ) வால்ட் விட்மன்
3.தவறான இணையைத் தேர்வு செய்க.

அ) மொழி + ஆளுமை – உயிர் + உயிர்

ஆ) தமிழ் + உணர்வு – மெய் + உயிர்

இ) கடல் + அலை – உயிர் + மெய்

ஈ) மண் + வளம் – மெய் +மெய்

4.உலகச் சிட்டுக்குருவிகள் நாள் :

அ) ஜனவரி 20

ஆ) மார்ச் 20

இ) ஏப்ரல் 20

ஈ) மார்ச் 21

5.’வான் பொய்த்தது’ – என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப் பொருள் :

அ) வானம் இடிந்தது

ஆ) மழை பெய்யவில்லை

இ) மின்னல் வெட்டியது

ஈ) வானம் என்பது பொய்யானது

6.சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களின் ஒரு ______ன் வாழ்வை எழுதிச் சென்றது
அ) பறவை

ஆ) பஞ்சு

இ)இலை

ஈ) மேகம்

7.’பள்ளு’ எவ்வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று?

அ) 76

ஆ)86

இ) 96

ஈ) 99

8.’காட்டின் மூலவர்’ என அழைக்கப்படும் விலங்கு

ஆ) சிங்கம்

ஆ)புலி

இ) கரடி

ஈ) யானை
9.திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்று அழைத்தவர்

அ) பேராசிரியர் ஜார்ஜ் எஸ்.ஹார்ட்

ஆ) கமில் சுவலபில்

இ)ஜி.யு.போப்

ஈ) இராபர்ட் கார்டுவெல்

10.”துஞ்சல்’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு :

அ) வினைத்தொகை

ஆ) வினையாலனையும் பெயர்

இ) தொழிற்பெயர்

ஈ) உரிச் சொற்றொடர்

11.ஈறுபோதல்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
ஆ) பெருவழி

ஆ) மாசற்றார்

இ) காட்சியழகு

ஈ) பள்ளித்தோழன்

12.ஒப்புரவு என்பதன் பொருள்

அ) அடக்கமுடையது

ஆ) பண்புடையது

இ) ஊருக்கு உதவுவது

ஈ) செல்வமுடையது

13.ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியம் அல்ல பல -இக்குறள் பெற்றுள்ள அதிகாரம் எது?

அ) துறவு

ஆ) நிலையாமை

இ) தவம்

ஈ) வவியறிதல்

14.Asesthestics – என்பதன் கலைச்சொல்

அ) இதழாளர்

ஆ) அழகியல்

இ) புலம் பெயர்தல்

ஈ) கலை விமர்சகர்

பகுதி – II

பிரிவு – 1 – எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

15.இனம், மொழி குறித்து இரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக.

“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

16.வளருங் காவில் முகில் தொகை – ஏறும் பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?

‘சோலையில் மேகக்கூட்டம் ஏறும்’ என்பது பொருள். அதாவது, தென்கரை நாட்டின் மரங்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.

மரங்கள் நிறைந்த இடத்தில் மழை பொழியும் என்னும் குறிப்பை, இதன்மூலம் அறியமுடிகிறது.

17. தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

புகழ்: புதன் புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.

பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

18.சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

செயலின் வலிமை, தன்னின் வலிமை, பகைவனின் வலிமை, துணையானவரின் வலிமை

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

19.பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது. ஏன்?

எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

20.”கோட்டை” என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
‘கோட்டை என்னும் சொல்,
  1. கோட்ட,
  2. கோடு,
  3. கோட்டே,
  4. கோண்டே,
  5. க்வாட்

எனத் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படுகிறது

21.”வரை” என்னும் சொல்வழக்குக் குறித்து அறியப்படுவது யாது?

‘நுனிமுதல் அடிவரை’, அடிமுதல் நுனிவரை’ என்னும் தொடர்களில் வரை’ என்ற சொல், ‘விளிம்பு’ என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரிவு -3

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக.

22.இரண்டனுக்கும் இலக்கணக் குறிப்பு தருக.

அ) செங்கயல் – பண்புத்தொகை

ஆ) மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை

23.உறுப்பிலக்கணம் தருக.

அ) ஈன்ற

ஈன்ற = ஈன் + ற் + அ

  • ஈன் – பகுதி
  • ற் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி
    ஆ) முனிவிலர்
24.புணர்ச்சி விதி தருக.

அ) புகழெனில்

புகழ் + எனின்

உடல்மேல் உயிர் வந்நு ஒன்றிவது இயல்பே

ஆ)பூங்கொடி

பூ + கொடி

பூப்பெயர் முன் இன மென்மையுந்தோன்றும்

25. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

அ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது.

முயற்சி செய்தால் அதற்க்கேற்ற பலன் வராமல் போகாது.

26. பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.

அ)விசா – நுழைவு இசைவு

ஆ) போலிஸ் – காவல்

27. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக.

அ) ஓர் பயிர் பறவை வளர வேண்டும் அழகான தண்ணீர் மயில்.

  • பயிர் வளர தண்ணீர் வேண்டும்.
  • மயில் ஓர் அழகான பறவை.
28.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ) உளை, உலை. உழை

29. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக

அ) கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவார்

30.விடைக்கேற்ற வினாவை அமைக்க

அ) திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.டி போப்.

திருக்குறளை மொழிபெயர்த்தவர் யார்? எதற்க்காக மொழிபெயர்த்தார்?

பகுதி – III

( பிரிவு – 1)

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

31 சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

பல தலைமுறை கடந்தும் தனது திவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவள். தமிழ் மொழியாகிய யலினை அறிவு கொண்டு உழுது, நற்கருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உருவியவள்.

ஒலிக்கும் கடலையும் நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை தொன்மையான கபாடபுரங்களைப் பலிகொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமை சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி எழுதக் தற்பாத்தவள்.

ஆதலால் தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எனப் பாடத்தான் வேண்டும் என சு. வில்வரத்தினம் பாடுகிறார்.

32. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?

சிற்றூர்களால் கூரை வேய்ந்த வீடுகள் இருந்த காலத்தில், நீர்வளம் கரைபுரண்டது; மரங்கள் நிறைந் திருந்தன; அவற்றில் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன.

தூக்கணாங் குருவிகள் கட்டிய கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் அசைந்தன; அவை, தூக்கணாங் குருவிகளின் வீடுகளாகும்.

இன்று மண்வளம் குறைந்தது; தாய்மடி சுரக்காததால், அதில் வாழ்ந்த உயிரினங்கள் மறைந்து போயின என்பதை, அழகிய பெரியவன் ஒப்பீடு செய்கிறார்.

33.திருமலை முருகன் பள்ளு – குறிப்பு எழுதுக

பண்புளிப்பட்டணம், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகிலுள்ள ஊர். இதனைப் ‘பண்பை ‘ எனவும், ‘பண்பொழில்’ எனவும் அழைப்பர். இவ்வூரிலுள்ள சிறுகுன்று திருமலைக் குன்று.

இத்திருமலைக் குன்றில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பெரியவன் கவிராயர் என்பவரால் பாடப்பட்டது, ‘திருமலை முருகன் பள்ளு’.

கலித்துறை, கலிப்பா, சிந்து முதலான பாவகைகளால் பாடப்பட்ட இந்நூல், பள்ளிசை’ எனவும், ‘திருமலை அதிபர் பள்ளு’ எனவும் வழங்கப்படுகிறது.

34. புகழுக்குரிய பண்புகளாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறை வழி நின்று கூறுக.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

35. அதிகாரத்தை உருவாக்கிக் கொடுக்கும் மொழி, ‘வாளினும் வலிமையனது’ என இந்திரன் கூறுவனவற்றை எழுதுக.

 

36) ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.

எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய மாட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளிமான மொழியைக் கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொரும் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

37.‘மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது’ – என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கவும்
38.மலைக் குடியிருப்புகள் குறித்து நீவிர் அறிவன யாவை?

பிரிவு – 3

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

39.வேற்றுமை அணி அல்லது உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.
40.பின்வரும் பாடலைப் படித்துப் பொருளுணர்ந்து மையக்கருத்தினை எழுதி ஏற்யுடைய நயங்கள் மூன்றினை எழுதுக

கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே!பகல்

மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு

வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்

கூட்டினில் உறங்குவயோ? வெண்ணிலாவே!

வாடிவாடிப் போவதேனோ! வெண்ணலாவே!

பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும் பாரில்வர அஞ்சினையோ? வெண்ணிலாவே! – கவிமணி

40.பகுதி, விகுதி இடைநிலை ஆகியவற்றைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.

 

42 தற்போதைய உணவு முறை நல்வாழ்வை வளர்க்கிறது/குறைக்கிறது – உங்கள் கருத்தை எழுதுக.

43.தமிழாக்கம்.
  • அ) The Pen is mightier then the Sword.
  • ஆ) A Picture is worth thousand words.
  • ஈ) Knowledge rules the world.

பகுதி -IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

44.அ) இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதற்கான காரணங்களாக இளம்பெருவழுதி கூறுவனவற்றை எழுதுக.

(அல்லது)

ஆ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்கவும்,
திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை நாட்டுவளம் :

வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள், ‘இந்தளம்’ என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைகேட்டு வாய்க்காலில் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில், மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை, வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.

தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும், முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும். இத்தன்மை கொண்ட திருமலையில், புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.

திருமலை முருகன் பள்ளு கூறும் தென்கரை நாட்டுவளம் :

தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில், மேகக் கூட்டங்கள் தங்கி செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில், அகில்புகையின் நறுமணம் பாடிக்கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும். செங்கோலைக் கொண்ட மன்னர், தென்கரை நாட்டை நீதி தவறாமல் காவல் காப்பர். இளைய பெண்கள், பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.

இங்குள்ள குளங்களின் அலைகள், முத்துகளை ஏந்தி வரும்; பலவலைகள், கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும். இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றைமலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் வீற்றிருக்கின்றார்.

45.அ) பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிடுக.

பேச்சுமொழிச் சிறப்பு :

எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்து மொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி.

எழுத்து மொழி இயல்பு :

எழுத்து பொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பாக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்துமொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது.

(அல்லது)

ஆ) இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன – கூற்றினை மெய்ப்பிக்க.
46.அ) பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?

(அல்லது)

ஆ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.

யானைகளின் பண்பும்

யானைகள், தம் இனத்தோடு சேர்ந்து கூட்டமாக வாழும். இவை, அதிக நினைவாற்றல் கொண்டவை. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் என்னும் மூன்று சிற்றின யானைகளே, உலகில் காணப்படுகின்றன. இவை, ஏறத்தாழ எழுபதாண்டுகள் உயிர் வாழும்.

காட்டின் பயன்கள் :

யானைகள், ஓர் அற்புதமான படைப்பு. என்றைக்கேனும் தமிழ்நாட்டில் யானை இல்லாமல் போனால் அதற்கப்பன் நம் பண்பாட்டுக்கே அர்த்தமில்லாமல் போகும் என்பது, யானை மருத்துவரின் துணிவு. நாட்டுவளம் செழிக்கக் காட்டு விலங்குகள் தேவை. காட்டுயிரிகளால் காடுகளில் பல அரியவகை மரம், செடி, கொடிகள் தழைத்து வளர்கின்றன. பலவகைகளில் நற்பயனளிக்கும் காடுகளை, மக்கள் பாதுகாக்க வேண்டும்.

மனிதனின் விதைப்பால் விலங்குகள் அறுவடை செய்கின்றன :

மனிதனின் கீழ்மையான செயல்களால் யானைகளின் மரணங்கள் நிகழ்கின்றன. சுற்றுலா என்னும் பெயரில் காட்டுக்குள் புகுவோர், படித்தவர்கள்கூடக் குடித்துவிட்டுக் குப்பிகளை எறிகின்றனர். நெகிழிப் பொருள்களை வீசிவிட்டு வருகின்றனர். மென்மையான பாதத்தை உடைய யானைகள், உடைந்த குப்பிகளின்மேல் கால்பதித்து, உடைந்த புட்டிகள் கால்களுக்குள் புதைவதால், கால் வீங்கிச் சீழ் பிடித்து இறக்கின்றன.

யானை வைத்தியம் :

பழகிய யானைகள், அசையாமலிருந்து வைத்தியம் செய்து கொள்ளும். கூடி வாழும் இயல்புடைய யானைகள், இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்தே இருக்கும் என்பதை, மருத்துவர் சுட்டுவதால் அறியமுடிகிறது. யானைகள், முகாமில் துதிக்கைகளை உயர்த்தி ஒலி எழுப்பி வரவேற்பது, அவை நன்றி மறவாதவை என்பதை உணர்த்தும். குட்டியானை ஒன்று 300 கிலோமீட்டர் கடந்து தேடி வந்து மருத்துவம் செய்து கொண்டதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. சிறுதகவல்களைக் கூட யானை மறப்பதில்லை. வன உயிர்களின் பண்பு, பாராட்டத்தக்க செயல்பாடுகளை உடையன. இப்படிப்பட்ட கதைகளை, வரலாறுகளைப் படித்த பின்னராவது மனிதன் மரங்களை வெட்டுவது, விலங்குகள் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பது, அவற்றின் வாழ்விடங்களை மாசுபடுத்துவது என்னும் செயல்களைக் கைவிட வேண்டும். நாம் நலமாக வாழ விரும்புவதுபோலப் பிற உயிரினங்களையும் மகிழ்ச்சியாக வாழவிட வேண்டும். உலகின் நல வாழ்வுக்கு விலங்குகளின் வாழ்வும் இன்றியமையாதது என்பதை, யானை டாக்டர் கதை வாயிலாக அறியமுடிகிறது.

பகுதி V

47.அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக,

அ) ஏடு தொடக்கி வைத்து’ – எனத் தொடங்கும் சு.வில்வரத்தினம் பாடலை எழுதுக.

ஆ) ‘நன்று’ என முடியும் குறளை எழுதுக.

Leave a Reply