12th Bio-Botany Unit 8 உயிரி தொழில்நுட்பவியல் பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

 12th Botany Unit 8 Lesson 5 Additional 2 Marks

 12th Botany Unit 8 Lesson 5 Additional 2 Marks

12th Bio-Botany Samacheer kalvi guide Tamil Mesium

12th Botany  பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide

 12th Botany Unit 8 Lesson 5 Additional 2 Marks

 VII. இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1. திசு வளர்ப்பில் ஹேபர்லாண்ட ஆற்றிய பணிகள் யாவை?
  • முழு ஆக்குத்திறன் கருத்தை முன்மொழிந்தார்
  • ஆய்வுக் கூட சோதனை முறையில் தனித்து எடுக்கப்பட்ட தாவரச் செல்கள் (அ) திசுவிலிருந்து முழுத் தாவரத்தை வளர்த்தார்
  • நாஃப்ஸ் உப்புக்கரைசலை முதன் முறையில் பயன்படுத்தினார்.
2.முராஷிகி மற்றும் ஸ்கூஜீம் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக 
  • திசு வளர்ப்பு ஊடகத்தை முறைப்படுத்தினார்கள் A இது திசு வளர்ப்பின மைல்கல்லாகும்
  • அனைத்து வகையான திசு வளர்ப்புகளுக்கும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஊடகமாகும்.
3.முதல் சிற்றினங்களுக்கிடையேயான உடல் கலப் பினங்களை உருவாக்கியவர் யார்? குறிப்பு வரைக 
  • கார்லசனும், அவருடைய சகாக்களும் நிக்கோட்டி யான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ் டோர்ஃபி தாவரங்களுக்கிடையேயான முதல் சிற்றினங்களுக்கிடையிலான முதல் உடல் கலப்பினங்களை 1971 இல் உருவாக்கினார்.
4.முழுஆக்குத்திறன் என்றால் என்ன?
  • மரபியல் திறன்களைக் கொண்டுள்ள உயிருள்ள தாவரச் செல்களை ஊட்ட (கரைசல்) ஊடகத்தில் வளர்க்கும் போது அவை முழுத் தனித்தாவரமாக வளர்ச்சியடையும் திறனே, முழு ஆக்குத்திறன் எனப்படும்.
  • இதுவே திசு வளர்ப்பின் அடிப்படையாகும்.
5.நாஃப்ஸ் உப்புக் கரைசலின் கூறுகள் யாவை? 
இது சுக்ரோஸ் கரைசலில் கரைந்துள்ள பல்வேறு உப்புக்கள் யாவை?
  • கால்சியம் குளோரைடு : 3.0 கிராம் >
  • பொட்டாசியம் நைட்ரேட் : 1.0 கிராம்
  • மெக்னீசியம் சல்ஃபேட் : 1.0 கிராம்
  • டைபேசிக் பொட்டாசியம் பாஸ்பேட் : 1.0 கிராம்
IIசுக்ரோஸ் : 50 கிராம்
அயனிகள் நீக்கப்பட்ட நீர் : 1000 மிலி
6.மறுவேறுபாடுறுதல் (Re differentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (De differentiation) வேறுபடுத்துக

மறுவேறுபாடுறுதல்

வேறுபாடிழத்தல்

ஏற்கனவே வேறுபாடுற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல் ஆகும்

முதிர்ச்சி அடைந்த செல்கள் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறிக் கேலஸ் போன்ற திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி

 

7. PEG – குறிப்பு வரைக.
  • PEG – பாலி எத்திலின் கிளைக்கால்
  • இது ஒரு புரோட்டோபிளாஸ்ட்களை இணைக்கும்
  • இணைவுக் காரணியாக உள்ளது. இவ்வாறு இணைந்த புரோட்டோபிளாஸ்ட்கள் கைபிரிட் எனப்படுகின்றன.
8.அகார் என்றால் என்ன? 
  • இது ஊடகத் தயாரிப்பில் திட நிலைப்படுத்து வதற்கு பயன்படுத்தப்படும் கடல்பாசிகளி லிருந்து பெறப்படும் ஒரு சிக்கலான மியூசிலேஜ் பாலி சாக்கரைடுகளாகும்
  • ஜெலிடியம்
  • கிராசிலேரியா
  • ஜெலிடியெல்லா எனும் பாசிகளிலிருந்து பெறப் படுகிறது.
9. தன்னழுத்த கலனின் பயன் யாது? 
  • இந்தக் கருவி நீராவியின் மூலம் நுண்ணுயிர் நீக்கம் செய்ய பயன்படுகிறது.
  • 15 psi – (121°C வெப்ப நிலை) வெப்ப நிலையில்
  • 15-30 நிமிடங்களுக்கு உட்படுத்தும் முறையாகும்.
  • கண்ணாடிக் கலன்கள், இடுக்கி, கத்தி அனைத்து உபகரணங்களையும் நுண்ணுயிர் நீக்கம் செய்யும் முறை இதுவேயாகும்.

 12th Botany Unit 8 Lesson 5 Additional 2 Marks

10. MS ஊடகத்தில் காணப்படும் சிறு மூலக்கூறுகள் யாவை?
1.சோடியம் மாலிப்டேட்
2. குப்பிரிக் சல்பேட்
3.கோபால்ட் குளோரைடு.
11. திசு வளர்ப்பில் உருவாக்கப்படும் சிறு செடிகளை ஏன் வன்மையாக்குதலுக்கு உட்படுத்த வேண்டும்? 
ஆய்வக சோதனை முறையில் கட்டுப்படுத்தப் பட்ட முறையில் ஈரப்பதமான அறையில் வளர்க் கப்பட்ட நாற்றுருக்களை மாறுபடும் இயற்கைச் சூழலான. மண், ஒளி, வெப்பம் ஆகிய வற்றிற்குப் பழக்கப்படுத்துவதே வன்மையாக்குதல் எனப்படும். இதனால் அது இயல்பாக வளரும் திறனை, தகவமைத்துக் கொள்கிறது.
12. பிரிகூறு என்றால் என்ன? 
தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தை அதிக அளவில் வளர் ஊடகத்தில் உருவாக்குவதற்கு தேவைப் படும் தாவரத் திசுவின் கூறு பிரிகூறு எனப்படும்.
13. MS வளர்வூடகத்தின் பல்வேறு கூறுகள் யாவை? 
1. பெரும் ஊட்டப்பொருட்கள்
2. நுண் ஊட்டப்பொருட்கள்
3.சிறிய ஊட்டப்பொருட்கள்
4. இரும்புப் பொருட்கள்
5. வைட்டமின்கள்
6.வளர்ச்சி ஹார்மோன்கள்
இவற்றுடன் திடப்படுத்தும் காரணி அகார். இவை அனைத்தும் குறிப்பிட்ட விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
14. ஒரு தாவர செல்லின் செல்சுவரை எவ்வாறு நீக்கலாம்?
  • தெரிவு செய்யப்பட்ட தாவரத் திசுப்பகுதி (explant) இன் செல்சுவரை நீக்கி புரோட்டோபிளாஸ்டை பிரித்தெடுக்க அதனை வைக்க வேண்டிய கரைசல்.
  1. 0.5% மேசரோசைம் மற்றும் 13% சார்பிட்டாலில் அல்லது மானிட்டாலில் கரைந்துள்ள 2% ஒனோசுகா செல்லுலேஸ் நொதி.
  2. இக்கரைசலில் தாவரத்திசுப்பகுதி தன்டு மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும் இவை 25°C வெப்பநிலையில் 5.4 pH நிலையில் இரவு 2. முழுவதும் வைக்க வேண்டும்.
  3. பின் மென்மையாக அசைத்து செல்களைத் தனிமைப்படுத்தும் போது புரோட்டோ பிளாஸ்ட்கள் பெறப்படுகிறது.
  4. பின் இவை 20% சுக்ரோஸ் கரைசலுக்கு மாற்றப் பட்டு உயிர்ப்புத் தன்மை காக்கப்படுகிறது.
  5. பின் மையவிலகலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் செல்சுவரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

 

15. உறுப்புகளாக்கம் என்றால் என்ன?

கேலஸ் செல்கள் வேறுபாடுகளுக்கு உள்ளாகி உடலக்கருக்களை உருவாக்குகின்றன. இவை கருவுருக்கள் எனப்படும்.
ரைகோஜெனிசிஸ் :
  • இவற்றிலிருந்து வேர் உருவாவது ரைசோ ஜெனிசிஸ் எனப்படும்
காலோஜெனிசிஸ் :
  • இவற்றிலிருந்து தண்டு உருவாவது காலோ ஜெனிசிஸ் எனப்படும்.
16. செயற்கை விதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
தாவரத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக் கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர் தொழில் நுட்ப முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்றவை செயற்கை விதைகளாகும். இவற்றின் மேல் சுக்ரோஸ் மற்றும் சோடியம் ஆல்ஜினேட் போன்ற மந்தமான பொருட்கள் கருவுருக்களின் மீது பூசப்படு கின்றன.
17.இரண்டாம் வளர்சிதை மாற்ற பொருட்களையும் அவை பெறப்படும் தாவரங்களையும் அட்டவணைப்படுத்துக
இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்கள்
  • டிஜாக்ஸின்
  • கோடின்
  • கேப்சைசின்
  • வின்கிரிஸ்டைன்
  • குவினைன்
தாவரங்கள்
  • டிஜிடாலிஸ் பர்புரியா
  • பப்பாவர் சாம்னிபெரம்
  • கேத்தராந்தஸ் ரோசியஸ்
  • கேப்சிகம் அனுவம்
  • சின்கோனா ஆஃபிசினாலிஸ்
பயன்கள்
  • இதயத்திற்கு மருந்து
  • வலிநிவாரணி
  • வாதவலியை குணப்படுத்த
  • புற்றுநோய்க்கு எதிர்மருந்து
  • மலேரியா எதிர்மருந்து
18. இந்தியாவில் அறிவு சார் சொத்துரிமையின் பல்வேறு கூறுகள் யாவை? இந்தியாவில் அறிவு சார் சொத்துரிமை :
 
  • இது பிரித்தறிய முடியாத மனித அறிவின் படைப்புகள், பதிப்புரிமம், காப்புரிமம் மற்றும் வணிக முத்திரை ஆகிவற்றை முதன்மையாக உள்ளடக்கியது.
19.பின்வருவனவற்றை வரிவாக்கம் செய் PTC, RCGM, GEAC, ELSI, GMO
1. PTC – Culture) தாவரத்திசு வளர்ப்பு (Plant Tissue
2. RCGM-மரபணு கையாளுதல் ஆய்வுக்குழு(Review Committee on Genetic Manipulation)
3. GEAC – மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுb(Genetic Engineering Approval Committee)
4. ELSI – உயிரி தொழில் நுட்பவியலின் அகன்ற அறநெறி சட்ட மற்றும் சமுதாயம் பிரச்சனை களின் விளைவு (Ethical Legal and Social Implications)
5. GMO – மரபியல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் (Genetically Modified Organism)
20. உறை குளிர் பாதுகாப்பு செயல் பாதுகாப்பான்கள் என்றால் என்ன? 
  • டைமெத்தில் சல்ஃபாக்சைடு. கிளிசரால் (அ) சுக்ரோஸ் ஆகியவை உறை குளிர் பாதுகாப்பு செயல்முறைக்கு முன்பாக சேர்க்கப்படுவதால் இவை தீவிர குளிர் விளைவுகளிலிருந்து செல்கள் (அ) திசுக்களை பாதுகாக்கின்றன.
21. ELSI ? ஆய்விற்கான எங்கிருந்து பண உதவி பெறப்படுகிறது? 
  • நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் மற்றும் US-ன் டிபார்ட்மென்ட் ஆஃப் எனர்ஜியானது.
  • மனித மரபணு தொகைய செயல்திட்டத்தின் A பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு
  • ELSI ஆய்விற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
22.உடல் கலப்பினமாக்கல் என்றால் என்ன?
வேறுபட்ட செல்களின் உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட்டை இணைத்துப் பெறப் படுவது சைபிரிட் (cybrid) என அழைக்கப்படுகிறது. இதன் பின்பு உட்கரு இணைவு நடைபெறுகிறது. இந்நிகழ்வானது உடல் கலப்பினமாக்கல் (Somatic hybridization) என அழைக்கப்படும்.
23.கேமீட்டக நகல்கள் வேறுபாடு வரையறு.
கேமீட்டக தாவர மீன் உருவாக்கத்தில் கேமீட்டிலும், கேமீட்டகத் தாவரத்திலும் காணப்படும் வேறுபாடு ஆகும்.
24.உயிரி பாதுகாப்பு என்றால் என்ன?
  • உயிரி ஒருங்கிணைந்த தன்மையின் அடிப்படையில் பெரியளவில் இழப்பை தடுப்பது உயிரி பாதுகாப்பு ஆகும்.
  • இதில் சூழ்நிலையியலும் மனித உடல்நலமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

Leave a Reply