12th Bio-Botany Unit 9 தாவரச் சூழ்நிலையியல் பாடம் 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

 12th Botany Unit 9 Lesson 8 Additional 3 Marks

 12th Botany Unit 9 Lesson 8 Additional 3 Marks

TN 12th Bio-Botany Unit 9, 8th lesson Additional 3 Marks, 8th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் – Additional 3 Marks

 12th Botany Unit 9 Lesson 8 Additional 3 Marks

 12th Botany Unit 9 Lesson 8 Additional 3 Marks

மூன்று மதிப்பெண் வினாக்கள்

1. பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
 • பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பால் வெப்ப நிலை அதிகரிப்பதோடு, பருவநிலை மாற்றம். பெரும் சூழல் மண்டலங்கள் மாற்றம் போன்ற வற்றை ஏற்படுத்துகின்றன.
 • வெப்பத்தினால் பெருமளவில் பாதிக்கப்படுவது பவளப் பாறைகள் அதிகம் நிறைந்த சூழல் மண்டலங்களாகும்.
 • எ.கா: பவளப் பாறைகள் வெளிர்தல் தமிழ் நாட்டில் மன்னார் வளைகுடா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
2. புவி வெப்பமடைதலை நாம் ஏன் தடுக்க வேண்டும்?
 • புவியின் வெப்பம் அதிகரிக்கும் போது துருவப் பகுதியில் பனிக்குன்றுகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகின் பல பகுதி களிலுள்ள கடலோர நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும்.
 • காலநிலையில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மூலம் கடும் வெள்ளப்பெருக்கு. அதிக வறட்சி போன்றவை நிலவும்.
 • உயிரிப்பன்மயத் தன்மை குறைந்து வருவதோடு சில சிற்றினங்கள் அழியும் நிலை ஏற்படும்.
3. புவிவெப்பமடைதலுக்கான முக்கிய காரணம் யாது ? 
 • பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவுப் பொருட்களின் உற்பத்தி நார் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் தேவையும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. இதுவே புவி வெப்பமடை தலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
4. புவி வெப்பமடைதல் தற்போது அச்சுறுத்தும் சவாலாக உள்ளது. அதனை தடுக்கும் வழிமுறைகள் யாவை?
 • புலிப்பரப்பின் மீது தாவரப் போர்வையை அதிகரித்தல், அதிக மரங்களை வளர்த்தல்.
 • தொல்லுயிர் படிம் எரிபொருட்கள், பசுமை இல்ல வாயுக்கள் பயன்பாட்டைக் குறைத்தல்;’
 • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வள ஆதாரங்களைப் பெருக்குதல், நைட்ரஜன் உரங்கள் மற்றும் ஏரோசோல் குறைந்த அளவு பயன்படுத்துதல்.
5. ஓசோன் அடுக்கு ஏன் அழைக்கப்படுகிறது?
 • ஓசோன் கவசம் என்று ஓசோன் அடுக்கு புவியின் மீவளிமண்டல அடுக்கின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இது சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர் களைப் பெருமளவில் கவர்ந்து கொள்கிறது.
 • எனவே இவ்வடுக்கினை ஓசோன் கவசம் என்றும் அழைக்கலாம்.
6. டாப்ஸன் அலகு என்றால் என்ன? 
 • மொத்த ஓசோனை அளவிட உதவும் ஓர் அலகு டாப்ஸன் அலகு
 • 0* வெப்பநிலையில் 1 வளிமண்டல அழுத்தத் தில் (புவிப்பரப்பின் மீதுள்ள காற்ற ழுத்தம்) 0.01 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட தூய ஓசோன் மூலக்கூறுகள் எண்ணிக்கை ஒரு டாப்ஸன அலகு (0.001 atm.cm) எனப்படும்.
 • புவிப்பரப்பின் மீது காணப்படும் மொத்த ஓசோன் அடுக்கு 0.3.செ.மீ (3 மி.மீ) தடிப்புள்ளது. இது 300 DU என குறிப்பிடப்படும்.
7. ஓசோன் அடுக்கை தம்மால் பார்க்க முடியுமா? 
 • ஓசோன் மிகவும் மெல்லிய அடுக்கு இது வளி மண்டலத்தில் (மிகவும் குறைந்த அளவில் இருந்தாலும்) நீல நிறத்தை தோற்றுவிக்கும்.
 • நமது கண்களால் பார்க்க முடியாது ஆனால் செயற்கை கோள்கள் மூலம் காணாலாம்.

 

8. மாஸ்ட்ரியல் ஒப்பந்தம் ஏன் ஏற்படுத்தப்பட்டது?
 • 1970 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிலில் மனிதன் வாயிலாக வெளியிடப்படும். குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) ஓசோன் மூலக்கூறுகளை அதிக அளவில் சிதைத்து அதன் அளவை குறைத்து விடுவது கண்டறியப்பட்டது.
 • எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப் பட்ட வியன்னா கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஒழுங்கு நடைமுறைகள் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
 • பிற்காலத்தில் இந்த செயல்முறைகள் அனைத்து சர்வதேச அளவிலான மான்ட்ரியல் ஒப்பத்தம் என அழைக்கப்பட்டது.
9. மான்ட்ரியல் ஒப்பந்தம் என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?
 • 1987 ல் கனடாவில் நடைபெற்ற சர்வதேசப் பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் வளிமண்டலத்தில்,

i) ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களை களைவது குறித்தும்,

ii) படிப்படியாக அத்தகைய பொருட்கள் உற்பத் தியை நிறுத்தி பயன்பாட்டைக் குறைக்கவும் குறிக்கோளாகக் கொண்டு விவாதிக்கப்பட்டது.
10. தூய்மை மேம்பாடு செயலதிட்டம் (அல்லது) க்யோட்டோ உடன்படிக்கை (அல்லது) ஒப்பந்தம் என்றால் என்ன? 
 1. தூய்மை மேம்பாடு செயல்திட்டம் (Clean Development Mechanism – CDM) க்யோட்டோ ஒப்பந்தம், (or) உடன்படிக்கை (Kyoto protocol, (2007) எனவும் இதனை வரையறுக்கலாம்.
 2. இதில் சரியான குறிக்கோளுக்காக செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது வானிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அபாயத்திலிருந்து பாதகாப்பது மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படுவதைக் குறைப்பது போன்ற முக்கிய குறிக்கோள் களுக்கான செயல் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
 3. CDM திட்டத்தின் மூலம் பலவேறு நாடுகளில் நச்சு வாயுக்களின் வெளியேற்றம் குறைந்திருப் பதோடு சுற்றுச்சூழல் தொடர்ந்து மேம்பாடடைய ஊாக்குவிக்கப்பட்டும் வருகிறது;
11. புரதவங்கி மற்றும் உயிரிவேலி மற்றும் காப்பரணாகத் தீவன மரங்கள் இதை வேறுபடுத்துக. 
புரதவங்கி
 • தீவன உற்பத்திக்காகப் பல்நோக்குடைய மரங்களை வேளாண் மற்றும் சுற்றுப்புற நிலங்களின் உள் மற்றும் எல்லாப் பக்கங்களிலும் நடவு செய்து வளர்க்கப்படுகிறது.
 • எ.கா: அக்கேசியா நிலோடிகா, அல்பிஜியா லெப்பக், இண்டிகா.
உயிரிவேலி மற்றும் காப்பரணாகத்
 • தீவன மரங்கள் வெளி விலங்குகள் (அல்லது) பிற உயிரிக் காரணி களின் தாக்கத்திலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கப் பல்வேறு வகையான தீவன மரங்கள் மற்றும் காப்பரண்கள் ஆகியன உயிரி வேலியாக வளர்க்கப் படுகிறது.
 • எ.கா: கிளரிசிடியா சிபியம், செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா, அக்கேசியா சிற்றினம்.
12. சமூகக் காடுகள் என்றால் என்ன? 
 • உள்ளூர் சமூகத்தால் நீடித்த நிலைத்த காடுகளைப் பராமரித்தல் அதன் நோக்கம்
 • வளிக்கார்பன் சேகரிப்பு
 • மாற்றங்களை குறைத்தல்
 • மாசுபாடு நீக்கம்
 • காடழிப்பு
 • காடுகள் மீட்டெடுப்பு மற்றும்
 • இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.
 • மேலும் சுற்றுச்சூழல் சமூகம், கிராமப்புற வளர்ச்சி ஆகிய நன்மைகளுக்கு உதவுகிறது.
13. வன விரிவாக்க மையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஏன்?
வன விரிவாக்க மையங்களின் முக்கியச் செயல்பாடுகள் யாவை? வன விரிவாக்க மையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஏனென்றால்
 • மர வளர்ப்பு பயிற்சி அளித்தல்,
 • மர வளர்ப்பு பற்றிய விளம்பரமும், பிரச்சாரமும் செய்தல்.
 • நடவு களங்களை உருவாக்கி விளக்குதல்.
 • மலிவு விலையில் நாற்றுகள் வழங்குவதை அதிகரித்தல்,
 • பயிற்சி மற்றும் முகாம்களின் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் காடு களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
14. காடுகள், மண், கடல் ஆகியன இயற்கை கார்பன் தேக்கிகள் என ஏன் அழைக்கப்படுகிறது? கார்பன் தேக்கிகள் என்றால் என்ன?
 • வளிமண்டலத்தில் உள்ள கார்பனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கரியமில வாயுவாக வெளியேறாமல் தடுத்துச் சேமித்து வைக்கும் திறன் பெற்ற அமைப்புகள் கார்பன் தேக்கி எனப்படுகிறது.
 • எ.கா : காடுகள், மண், கடல் ஆகிய இயற்கை தேக்கிகளாகவும், நிலத்தேக்கிகள் செயற்கை தேக்கிகளாகவும் அறியப்படுகின்றன.
15. ஜூகோர்னியா கிராஸிபஸ் ஏன் பெங்காலின் terror என்று அழைக்கப்படுகிறது 
 • இதன் பரந்து விரிந்த வளர்ச்சி தாவர மிதவை உயிரிகளின் வளர்ச்சியை பாதித்து முடிவில் நீர்வாழ் சூழ்நிலையையே மாற்றி விடுகிறது.
 • மேலும் நீரின் ஆக்ஸிஜன் அளவை குறைப்ப தோடு நீர் நிலையில் யூடிராபிக்கேஷனுக்கம் வழிவகுக்கிறது.
 • இது மனித உடல் நலத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எவ்வாறெனில் இது நோயை உருவாக்கும் கொசுக்களின் இனப்பெருக்க உறை விடமாக உள்ளது
16. சிப்கோ இயக்கம் மற்றும் அப்பிக்கோ இயக்கம் வேறுபடுத்துக.
சிப்கோ இயக்கம்
 • இமயமலை பகுதியிலுள்ள மக்கள் விளையாட்டு பொருள் தயாரிப்பு நிறுவனம் மரங்களை வெட்டு வதற்கு எதிராக மரங்களை கட்டித்தழுவி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 • 1972ல் இமயமலை பகுதியில் உள்ள பழங்குடி பெண்களால் தொடங்கப்பட்டது. பின்னர் சுந்தர்லால் பகுகுனா என்பவரால் சிப்கோ இயக்கம் என மாற்றப்பட்டது.
அப்பிக்கோ இயக்கம்
 • கிராம வாசிகள் காடுகளை காப்பாற்றுவதற்காக மரங்களை வெட்டுதல் ஒற்றைச் சிற்றின வளர்ப்பு வனக் கொள்கை, காடு அழிப்பு ஆகியவற்றிற்கு | எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கினர்.
 • இந்த இயக்கம் கர்நாடகாவில் சிர்சிக்கு அருகிலுள்ள குப்பிகட்டே என்ற சிறிய கிராமத்தில் பாண்டுரங்க ஹெக்டேவினால் தொடங்கப்பட்டது.
17. வாழிடப் பேணுகை பாதுகாப்பு, புறவாழிடப் பேணுகை பாதுகாப்பு இவற்றை வேறுபடுத்துக.

வாழிடப் பேணுகை பாதுகாப்பு

புறவாழிடப் பேணுகை பாதுகாப்பு

 • இயற்கை வாழிடங்களில் காணப்படும் மரபியல் ஆதாரங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு என்பதாகும்.

 • அச்சுறுத்தலுக்குட்பட்ட வனமரங்கள், மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் பாதுகாக்கப்படு கின்றன.

 • சிற்றினங்கள் இயற்கைச் சூழலுக்கு வெளியே பாதுகாக்கப்படுகின்றன.

 • இவை தாவரவியல் தோட்டங்கள், விலங்கியல் பூங்காக்களைத் தோற்றுவித்தல், பாதுகாப்பு உத்தி களான மரபணு, மகரந்தம், விதை அகவளர் முறை பாதுகாப்பு நாற்றுகள், திசுவளர்ப்பு மற்றும் DNA  வங்கிகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

18. புவியியல் சேகரிப்பு என்றால் என்ன? 
 1. வளிமண்டலத்தின் கார்பன் டை ஆக்ஸைடை உயிரிதொழில்நுட்பம் மூலமாக கைப்பற்றி நிலத்தடி பாறைகளுக்கிடையே உட்செலுத்தி சேமிக்கும் முறையாகும்.
 2. நிலைத்த சேமிப்பிற்காகப் பல பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 3. பெருங்கடல்களில் திரவச் சேமிப்பாகவும், உலோக ஆக்ஸைடைப் பயன்படுத்திக் கார்பன் டை-ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் அல்லது திடசேமிப் பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது. 4. இதுவே புவியியல் சேகரிக்கப் பயன்படுகிறது.
19. சமூகத்திற்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டினால் ஏற்படும் பயன்கள் யாவை?
 • ஓர் ஆரோக்கியமான சுற்றுச்சூழல்.
 • உயிரிப்பன்மயத் தொகுப்பினை பராமரித்தல்,
 • குறைந்தளவு வளங்கள் பயன்பாடு.
 • குறைந்த அளவு வாயு வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சேதம் ஆகிய பயன்கள் ஏற்படுகின்றன.
20. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?
 • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல் மேலாண்மையின் ஒரு உபாயமாகும்.
 • சூழல் மண்டலம் மற்றம் உயிரியல் சமுதாயங்கள் மீது ஏற்படுத்தப்படும் தாக்கத்தை வெகுவாக குறைக்கவும். இயற்கை வளங்களை உகந்த அளவு பயன்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பரிந் துரைக்க உதவிபுரிகிறது.
21. உயிரிப்பன்மயத் தாக்க மதிப்பீடு என்றால் என்ன? 
 1. உயிரிப்பன்மயத் தாக்க மதிப்பீடு என்பது வளர்ச்சி திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலுக்கும், முடிவு களுக்கும் உதவும் ஒரு கருவியாகும்.
 2. இது வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதியளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
22. உயிரிப்பன்மத் தாக்க மதிப்பீட்டின் பயன்கள் யாவை?
 • நிவமாற்றம் மற்றும் பயன்பாடு காப்பதிலும்,
 • நிலத் துண்டாக்குதல் மற்றும் தனிமைப்படுத்துதலும்.
 • வளங்கள் பிரித்தெடுத்தல்,
 • புகை வெளியேற்றம், கழிவுகள், வேதி பொருட்கள், புற உள்ளீடு செய்யவும்.
 • மரபு மாற்றப்பட்ட சிற்றினங்கள் அந்நிய மற்றும் ஆக்கிரமிப்பு சிற்றினங்களை அறிமுகப் படுத்துதல்,
23. ஏரிக்களின் முக்கியத்துவம் யாது?
 • ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலை தொகுப்பு களினால் சுற்றுச்சூழல் பயன்பாடுகள் அளிக்கப் படுகிறது.
 • ஏரிகள் மழைநீரைச் சேமித்து நமக்கு குடிநீர் அளிக்கிறது.
 • நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி நன்னீர் உயிர்ப்பன்மத்தையும் ஏரி அமைந்துள்ள வாழ் விடங்களையும் பாதுகாக்க உதவுகிறது.
 • ஏரிகள் நீர் பராமரிப்பு மற்றும் காலநிலை தாக்கங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தொடர் தீர்வுகளை அளித்து வருகிறது.
 • நுண்ணூட்டப் பொருட்களை தேக்கிவைப்பதற்கும், மழைப்பொழிவிற்கும் வழிவகை செய்கிறது.
 • மாசுக்களை அகற்றவும், பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் கார்பன் சேகரிப்பிற்கும் இவை உதவு கிறது.
24. (நைட்ரஸ் ஆக்ஸைடு), N,O உருவாதல் எழுதுக.
 • இயற்கையில் பெருங்கடல்களிலிருந்தும் மழைக்காடுகளிலிருந்தும் N,O உருவாகிறது.
 • நைலான். நைட்ரிக் அமில உற்பத்தி வேளாண் உரங்களைப் பயன்படுத்துதல், வினைவேக மாற்றிகள் பொருத்தப்பட்ட மகிழுந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் கரிமப் பொருட்களை எரித்தல் போன்றவற்றின் மூலம் NO செயற்கை யாக உருவாகிறது.
25. மீத்தேன் உருவாதல் பற்றி சிறு குறிப்பு வரைக. 
 • மீத்தேன் CO, வைக் காட்டிலும் 20 மடங்கு வெப்பத்தை வளிமண்டலத்தில் கூட்டுகிறது.
 • நெல் பயிரிடல் காலநடை வளர்ப்பு, நீர் நிலைகளில் வாழும் பாக்டீரியங்கள் மற்றும் நெல்லுயிரி படிம எரிபொருட்களின் உற்பத்தி, கடல், ஈரத்தன்மையற்ற நிலம், காட்டுத்தீ வாயிலாக மீத்தேன் உருவாகிறது.

Leave a Reply