12th Tamil Book Back Answers Unit 6.1

12th Tamil Book Back Answers Unit 6.2

12th Tamil Book Back Answers Unit 6.2

இயல்:6.2 கவிதைகள்

12th Tamil Book Back Answers Unit 6.2. TN 12th Tamil Lesson 6 Book Answers. TN 12th Standard Tamil Unit 6.2 Book Back Full Answer key and additional questions with answers. Samacheer kalvi guide. New Reduced syllabus. இயல்:6.2 கவிதைகள். HSC Second Year Tamil Unit 6.2 answers. 12th Tamil All Unit Full Answers on ou website STUDENTS GUIDE 360. 12th All Subject Study Materials.

12th Tamil Book Back Answers Unit 6.2

பாடநூல் வினாக்கள் | 12th Tamil Book Back Answers Unit 6.2

பலவுள் தெரிக

1. ஆர்ப்பரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம்; மகாமௌனம் – அடிகள் புலப்படுத்துவது

அ) இரைச்சல்

ஆ) குறைக்கும் கூத்தாடும்

இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்

ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.

Answer:

இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்

குறுவினா

1. மூச்சு நின்றுவிட்டால்

பேச்சும் அடங்கும் – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.

Answer:

  • “எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்”
  • “சான்றோர் கொள்கையும் மாண்டால் அடங்கும்”

சிறுவினா

1. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.

Answer:

1. நிரந்தரமாக இருக்க எண்ணினோம்.

நிரந்தரமில்லாமல் சென்றுவிடுகிறோம்.

2. உயர்ந்த கொள்கைகளும் உயிர்போனால்

உதாசினப்படுத்தப்படும்.

3. உண்மைகள் எல்லாம் சில உண்மைகளைத்

திரைமறைவு செய்வதற்கே.

4. ஆர்ப்பரிப்பில் அடங்காத மனம்

அமைதியில் அடங்கிவிடும்.

5. கடலின் உள்நிகழ்வே கடல் அலைகள்

மனதின் வெளிப்பாடே புறச்செயல்கள்

  • நகுலனின் கவிதைகளே இங்கே பேசப்பட்டுள்ளன. நகுலனின் கவிதையின் முழங்கு பொருளே இவை.
  • எனவே, கவிஞன் தான் நினைத்தவற்றைச் சொல்வடிவத்தில் சுருக்கிச் சொல்ல முற்படும்போது உதிர்ந்த முத்துக்களே இவை.

12th Tamil Book Back Answers Unit 6.2

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. நம் பாடப்பகுதியிலுள்ள ‘கவிதைகள் ……. . என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

அ) நகுலன் கவிதைகள்

ஆ) கண்ணாடியாகும் கண்கள்

இ) நாய்கள்

ஈ) வாக்குமூலம்

Answer:

அ) நகுலன் கவிதைகள்

2. கவிஞர் நகுலனின் இயற்பெயர்

அ) டி.கே. நீலமேகம்

ஆ) டி.கே. துரைசாமி

இ) இராகோபாலன்

ஈ) கிருஷ்ணமூர்த்தி

Answer:

ஆ) டி.கே. துரைசாமி

 

3. கவிஞர் நகுலன் பிறந்த ஊர்

அ) தஞ்சாவூர்

ஆ) கும்பகோணம்

இ) திருச்சி

ஈ) விழுப்புரம்

Answer:

ஆ) கும்பகோணம்

 

4. கவிஞர் நகுலன் வாழ்ந்த ஊர்

அ) தஞ்சாவூர்

ஆ) கர்நாடக மாநிலத்தின் மாண்டியா

இ) கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்

ஈ) ஆந்திர மாநிலத்தின் கடப்பா

Answer:

இ) கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்

 

5. கவிஞர் நகுலன் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) அண்ணாமலை

ஈ) திருவள்ளுவர்

Answer:

இ) அண்ணாமலை

 

6. கவிஞர் நகுலன் எழுதியுள்ள புதினங்கள்

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer:

ஆ) ஏழு

 

7. கவிஞர் நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்?

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) பாரதி

 

8. ‘இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று எழுதியவர்

அ) நாகூர் ரூமி

ஆ) பாரதிதான்

இ) நகுலன்

ஈ) ஆத்மாநாம்

Answer:

இ) நகுலன்

குறுவினா

 

1. நகுலன் (டி.கே. துரைசாமி) பற்றிக் குறிப்பு வரைக.

Answer:

பெயர் : நகுலன்

பிறப்பு : கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்

கல்வி : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம்

சிறப்பு : புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகளை

நறுக்கென்று : கூறுபவர். அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதியவர் படைப்புகள் : மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி ஆகிய புதினங்களை எழுதியுள்ளார். பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

 

2. புதுக்கவிதை என்றால் என்ன?

Answer:

புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளையும், புதிய கருத்துகளையும், புதுமையாகச் சொல்வது புதுக்கவிதை ஆகும்

 

3. ‘இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்.’ இக்கவிதைக்குப் பொருத்தமான பழமொழியை எழுதுக.

Answer:

கானல் நீர் போல.

 

4. ‘ஆர்ப்பரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம்.’ இக்கவிதைக்குப் பொருத்தமான பழமொழியை எழுதுக.

Answer:

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்காது.

புணர்ச்சி விதி

1. பிரயோஜனமில்லை – பிரயோஜனம் + இல்லை

Answer:

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + இ + மி) பிரயோஜனமில்லை என்று புணர்ந்தது.

Leave a Reply