You are currently viewing 12th Tamil Guide Unit 1.1 Answers

12th Tamil Guide Unit 1.1 Answers

12th Tamil Guide Unit 1.1 Answers

12th Tamil Guide Unit 1.1 Answers. TN12th Standard Tamil Samacheer kalvi Guide இயல்: 1.1 இளந்தமிழே! Book Back and Additional Question with answers.
+2 Tamil Important Questions with answers for Mid Term, Quarterly, Half-yearly, Revision Exams, and also Public Exams. STUDENTS GUIDE 360 Helps for TET, TNPSC, TRB all competitive exams.

12th Tamil Samacheer Kalvi Guide இயல்: 1.1 இளந்தமிழே! Book Back & Additional Question-Answers

12th Tamil Guide Unit 1.1 Answers

1. “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது
அ) க மட்டும் சரி
ஆ) க, உ இரண்டும் சரி
இ) ந மட்டும் சரி
ஈ) க, ங இரண்டும் சரி

Answer: ஈ) க, ங இரண்டும் சரி

12th Tamil Guide இயல்: 1.1 இளந்தமிழே! – குறுவினா Answers

1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

  • செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.
 

சிறுவினா

1. ‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

  • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.
 
 

2.பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

2.பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

 

Answer:

 நெடுவினா

1. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.
செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

இலக்கணக் குறிப்பு

  • செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் – பண்புத்தொகைகள்
  • முத்து முத்தாய் – அடுக்குத்தொடர்
  • சிவந்து – வினையெச்சம்
  • வியர்வை வெள்ளம் – உருவகம்
  

உறுப்பிலக்கணம்

12th Tamil Guide Unit 1.1 Answers

புணர்ச்சி விதி

 1. செம்பரிதி = செம்மை + பரிதி

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + பரிதி என்பது செம்பரிதி எனப் புணர்ந்தது.

 2. வானமெல்லாம் = வானம் + எல்லாம்

  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + எ = மெ) வானெமல்லாம் எனப் புணர்ந்தது.

 3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்

  • இஈஐ வழி யவ்வும் என்ற விதிப்படி, உன்னை + ய் + அல்லால் என்றானது. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ய் + அ = ய) உன்னையல்லால் எனப் புணர்ந்தது.

 4. செந்தமிழே = செம்மை + தமிழே

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + தமிழே என்றானது.முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, (ம் திரிந்து ந் தோன்றி), செந்தமிழே எனப் புணர்ந்தது.

12th Tamil Guide Unit 1.1 Answers

கூடுதல் வினாக்கள்

 பலவுள் தெரிக

1. ‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?

அ) குற்றால மலை
ஆ) விந்திய மலை
இ) இமய மலை
ஈ) சாமிமலை

Answer:அ) குற்றால மலை

2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?

அ) அக்கினி
ஆ) ஒளிப்பறவை
இ) அக்கினிசாட்சி
ஈ) சூரியநிழல்

Answer: இ)p அக்கினிசாட்சி

3. ‘சாய்ப்பான்’ என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை

அ) சாய்ப்பு + ஆன்
ஆ) சாய் + ப் + ஆன்
இ) சாய் + ப் + ப் + அன்
ஈ) சாய் + ப் + ப் + ஆன்

Answer: ஈ) சாய் + ப் + ப் + ஆன்

4. கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?

அ) ஒரு கிராமத்தின் கதை
ஆ) ஒரு கிராமமே அழுதது
இ) ஒரு கிராமத்தின் நதி
ஈ) ஒரு புளியமரத்தின் கதை

Answer: இ) ஒரு கிராமத்தின் நதி

5. ‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?

அ) ஈறுபோதல், இனமிகல்
ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
இ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஈ) ஈறுபோதல்

Answer: ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

6. ‘வியர்வை வெள்ளம்’ – இலக்கணக் குறிப்புத் தருக.

ஆ) உவமையாகுபெயர்
ஆ) கருவியாகு பெயர்
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை

Answer: இ) உருவகம்

7. இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?

ஆ) சூரிய காந்தி
ஆ) சூரிய பார்வை
இ) ஒளிப்பூ
ஈ) சூரிய நிழல்

Answer: ஈ) சூரிய நிழல்

8. கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.

கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.

அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டும் கருத்தும் தவறு
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

Answer: ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

9. ‘இளந்தமிழே’ என்னும் பாடல் நூலின் ஆசிரியர்

அ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஆ) பெருந்தேவனார்
இ) தமிழண்ண ல்
ஈ) மு. வரதராசனார்

Answer: அ) சிற்பி பாலசுப்பிரமணியம்

10. பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்

அ) கோப்பெருந்தேவி
ஆ) வேண்மாள்
இ) தமிழன்னை
ஈ) ஒளவையார்

Answer: இ) தமிழன்னை

11. …………… முதலான வள்ளல்களை ஈன்று தந்தவள் தமிழன்னை.

அ) சடையப்ப வள்ளல்
ஆ) சீதக்காதி
இ) பாரி
ஈ) நெடுங்கிள்ளி

Answer: இ) பாரி

12. எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ – என்று பாடியவர்

அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) திரு.வி.க

Answer: இ) சிற்பி பாலசுப்பிரமணியம்

13. ‘இளந்தமிழே’ என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை

அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) கலி விருத்தம்
ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Answer: ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

14. பொருத்திக் காட்டுக.

i) செம்பரிதி – உருவகம்
ii) முத்து முத்தாய் – வினையெச்சம்
iii) சிவந்து – அடுக்குத்தொடர்
iv) வியர்வைவெள்ளம் – பண்புத்தொகை
அ) 4321
ஆ) 3412
இ) 2143
ஈ) 3214

Answer: அ) 4321

15. செம்பரிதி – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைக் கண்டறிக.

அ) ஈறுபோதல்
ஆ) இனமிகல்
இ) ஆதிநீடல்
ஈ) முன்நின்ற மெய்திரிதல்

Answer: அ) ஈறுபோதல்

16. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – என்ற விதிக்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.

அ) உன்னையல்லால்
ஆ) வானமெல்லாம்
இ) செந்தமிழே
ஈ) செம்பரிதி

Answer: ஆ) வானமெல்லாம்

17. ‘இளந்தமிழே’ என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
அ) சூரிய நிழல்
ஆ) ஒரு கிராமத்து நதி
இ) ஒளிப்பறவை
ஈ) நிலவுப்பூ

Answer: ஈ) நிலவுப்பூ

18. சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததைக் கூறுக.
அ) கவிஞர்
ஆ) ஓவியர்
இ) பேராசிரியர்
ஈ) மொழிபெயர்ப்பாளர்

Answer: ஈ) மொழிபெயர்ப்பாளர்

19. சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தமிழ்
ஈ) காமராசர்

Answer: அ) பாரதியார்

20. சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்?

அ) மூன்று
ஆ) இரு
இ) நான்கு
ஈ) பல

Answer: ஆ) இரு

21. சிற்பி பாலசுப்பிரமணியன் சாகித்திய அகாதெமியின் …………….. இருக்கிறார்.

அ) தலைவராக
ஆ) செயலாளராக
இ) பொருளாளராக
ஈ) உறுப்பினராக

Answer: ஈ) உறுப்பினராக

 குறுவினா 

1. தொழிலாளர்களின் கைகள் எதனைப் போலச் சிவந்துள்ளதாகக் கவிஞர் சிற்பி கூறுகிறார் ?

  • மாலையில் மறையும் கதிரவனின் கதிரொளி போல தொழிலாளரின் கைகள் சிவந்துள்ளதாகக் கூறுகிறார்.

2. தமிழ்மொழியின் பழமைநலம் எவை?

  1. தமிழ்மொழி பாண்டியர்களின் அவையிலே தன்னிகரற்ற செம்மொழியாய் ஆட்சி செய்தது.
  2. பாரி போன்ற வள்ளல்கள் பலரை தமிழ் மண்ணிற்குத் தந்த பழமை நலம் கொண்ட மொழி.

3. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை என்ன ?

  • ‘தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’, என்பதே கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை ஆகும்.

4. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூற்களில் சிலவற்றை எழுதுக.

  • ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி.

5. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முகங்களைக் குறிப்பிடுக.

  • கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.

6. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?

  • இலக்கியச் சிந்தனைகள், மலையாளக்கவிதை, அலையும் சுவரும்.

7. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எம்மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன?

  • ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி.

8. சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்?

  • 1. சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியன் இரு முறை பெற்றுள்ளார் .
  • 2. மொழிபெயர்ப்புக்காகவும், ‘ஒரு கிராமத்து நதி’ என்னும் கவிதை நூலிற்காகவும் சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றுள்ளார்.

 சிறுவினா

1. குளிர் பொதிகைத் தென்தமிழ் ஏன் சீறி வர வேண்டும் எனச் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்?

  • உள்ளத்தில் பொங்கிவரும் உணர்வுகளை உணர்ச்சி மிகு கவிதையாக எழுத முத்தமிழே உதவி செய்கின்றது.
  • பாண்டியமன்னர்கள் அமைத்த சங்கத்திலே, தன்னிகரற்ற செம்மொழியாய் இருந்து ஆட்சிச் செய்தது.
  • பாரி போன்ற வள்ளல்கள் பலரை இத்தமிழ் மண்ணிற்குத் தந்தது.
  • அன்றிருந்த தமிழர் நலமும் தமிழ்நாட்டுப் பொதுமை நலமும் மீண்டும் பிறப்பதற்கு நீ குயில் போலக் கூவி வர வேண்டும்.
  • இன்று தமிழர்களைச் சூழ்ந்திருக்கும் அடிமைத்தனமும், அறியாமையும் அகன்றிட அவர்கள் சிறைப்பட்டிருக்கும் கூட்டினை உடைத்திட நீயும் சிங்கம் போலச் சீறி புறப்பட்டு வர வேண்டும்.

2. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிக் குறிப்பு வரைக.

பெயர் : பாலசுப்பிரமணியம். சிறப்புப்
பெயர் : சிற்பி (எழுத்துகளைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்).
பெற்றோர் : சி. பொன்னுசாமி – கண்டியம்மாள்.
ஊர் : ஆத்துப்பொள்ளாச்சி, கோவை.
பணி : பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் . சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
விருது : “ஒரு கிராமத்து நதி” எனும் கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது.
படைப்புகள் : ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி.

கற்பவை கற்றபின்

1. தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக.

Answer:
வேதன் : எனக்கு மொழி வாழ்த்து வைப்பு முறையைப் பற்றிய ஒரு விளக்கம் தேவை.
மதன் : சொல்லுங்க! மொழி வாழ்த்து வைப்பு முறையில் என்ன விளக்கம் வேண்டும்?
 
வேதன் : இப்போதெல்லாம் இறைவாழ்த்து இருந்த இடத்தில் மொழி வாழ்த்து வைக்கப்படுகிறதே, அதுதான்.
 
மதன் : அது இடமாற்றம் இல்லை . ஒதுக்கப்படுவதும் இல்லை .
 
வேதன் : நேற்று போல் இன்று இல்லை என்கிறீர்களா?
 
மதன் : அதாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்விருப்பதெய்வங்களைவணங்கிவிட்டுத் தொடங்குவதுதான் வழக்கம்.
 
வேதன் : தற்போது புத்தகங்களில் அப்படி இல்லையே.
 
மதன் : வணங்குவது வேறு, இடம் பெறவில்லை என்பது வேறு. இது மொழிப்புத்தகம். எனவே, மொழியைத் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
 
வேதன் : மொழி தெய்வத்தை எவ்வாறு வணங்கலாம்?
 
மதன் : மொழி தெய்வத்தைப் பல புலவர்கள் பலவாறு போற்றியுள்ளனர். பாரதிதாசன் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் – என்பார்.
 
வேதன் : அப்போ, மொழிப்பாடங்களில் மொழிக் கடவு(ளை)ள் வாழ்த்தை வைப்பது சரிதானா?
 
மதன் : நிச்சயமாக, மொழி வளம், மொழி சிறக்க, மொழி தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதால் மொழி வாழ்த்தினை இடம் பெறச் செய்வது சாலச்சிறந்தது.
 
வேதன் : நன்றி மதன்.
 
மதன் : நன்றி வேதன், மீண்டும் சந்திப்போம்.

Leave a Reply