You are currently viewing 6th Science Guide Term 1 Unit 6

6th Science Guide Term 1 Unit 6

6th Science Guide Term 1 Unit 6

6th Standard Science Guide | Term 1 – Lesson 6 உடல் நலமும் சுகாதாரமும்

| Tamil Medium

6th Standard Science Term 1 Lesson 6 உடல் நலமும் சுகாதாரமும் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers

 

6th Science Guide Term 1 Lesson 6 உடல் நலமும் சுகாதாரமும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1.  நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு _________ தேவைப்படுகிறது

  1. கார்போஹைட்ரேட்
  2. கொழுப்பு
  3. புரதம்
  4. நீர்

விடை : புரதம்

2. ஸ்கர்வி ______ குறைபாட்டினால் உண்டாகிறது.

  1. வைட்டமின் A
  2. வைட்டமின் B
  3. வைட்டமின் C
  4. வைட்டமின் D

விடை : வைட்டமின் C

3. கால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

  1. வைட்டமின் B
  2. கொழுப்பு
  3. புரதம்
  4. தாதுஉப்புகள்

விடை : தாதுஉப்புகள்

4. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ______

  1. அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது
  2. அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது
  3. அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
  4. அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

விடை : அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

5. பாக்டீரியா, ஒரு சிறிய _______ நுண்ணுயிரி.

  1. புராேகேரியாேட்டிக்
  2. யூகேரியோட்டிக்
  3. புரோட்டோசோவா
  4. செல்லற்ற

விடை : புராேகேரியாேட்டிக்

II. சரியா? தவறா? – தவறு எனில் சரியான விடையை எழுதுக

  1. நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.விடை : தவறு
  2. நம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.விடை :சரி
  3. அனைத்து பாக்டீரியாக்களும் நீளிழைகளை பெற்றுள்ளனவிடை : தவறு
  4. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.விடை : சரி
  5. ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்விடை : தவறு

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. ஊட்டச்சத்து குறைபாடு ___________________ வழிவகுக்கிறது விடை : குறைபாட்டு நோய்களுக்கு
  1. பெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு ___________________ நோயை ஏற்படுத்துகிறது.விடை : முன் கழுத்து கழலை
  2. வைட்டமின் D குறைபாடு ___________________ நோயை ஏற்படுத்துகிறது விடை : ரிக்கெட்ஸ்
  1. டைபாய்டு நோய், ___________________ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.விடை : உணவு
  2. குளிர் காய்ச்சல் (இன்புளுயன்சா) ___________________ நுண்ணுயிரியால் ஏற்படுகிறதுவிடை : வைரஸ்

IV. பின்வரும் ஒப்புமையைப் பூர்த்தி செய்க

  1. அரிசி :: கார்போஹைட்ரேட்:: பருப்பு வகைகள் : ___________________?

விடை : புரதம்

  1. வைட்டமின் D : ரிக்கெட்ஸ் :: வைட்டமின் C : ___________________?

விடை : ஸ்கர்வி

  1. அயோடின் : முன் கழுத்து கழலை நோய் :: இரும்பு : ___________________?

விடை : இரத்த சோகை

  1. காலரா :: பாக்டீரியா ::சின்னம்மை : ___________________?

விடை : வைரஸ்

V. பொருத்துக

  1. வைட்டமின் A – ரிக்கெட்ஸ்
  2. வைட்டமின் B – மாலைக்கண் நோய்
  3. வைட்டமின் C – மலட்டுத்தன்மை
  4. வைட்டமின் D – பெரி பெரி
  5. வைட்டமின் E – ஸ்கர்வி

Ans : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

VI. நிரப்புக

VI. சிறு வினாக்கள்

1. கீழ்க்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

அ. காெழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப்பாெருட்கள்

இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு

அ. வைட்டமின் குறைபாட்டு நோய்கள்.

மாலைக் கண் நோய், பெரி பெரி

2. கார்பாேஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.

கார்பாேஹைட்ரேட்

புரதம்

1. கார்பாேஹைட்ரேட் சர்க்கரைப் பொருளால் ஆனது.

புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனது.

2. ஆற்றலை அளிக்கிறது

வளர்சிக்கு உதவுகிறது

எ.கா. தேன், உருளைக்கிழங்கு, அரிசி, முழுதானியங்கள், கோதுமை

எ.கா. கோழி, மீன், பால், பருப்புகள்

3. சரிவிகித உணவு – வரையறு

  • அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியொன விகிதத்தில் கைரந்துள்ள உணவை சரிவிகித உணவாகும்.

3. வாழிடம் என்பதை வரையறு.

  • ஒவ்வொரு உயிரினமும், உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.

4. பழங்களையும் காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவக்கூடாது. ஏன்?

  • பழங்களையும் காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவினால் அதிலுள்ள வைட்டமின் சத்துக்கள் நீரில் கரைந்து வீணாகிவிடும்

5. வைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.

  • சாதாரண சளி மற்றும் சின்னம்மை

6. நுண்ணுயிரிகளின் முக்கிய பண்பு என்ன?

தன் சுத்தத்தை அலட்சியம் செய்யும் பொது நோய் வாய்ப்படும் ஆபத்து அதிகரிக்கிறது. நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியின் உதவி இன்றி பார்க்க முடியாது. பெரும்பாலான நுண்ணுயிரிகள் நான்கு முக்கிய பிரிவுகளாக உள்ளன

  • பாக்டீரியா
  • வைரஸ்
  • புரோட்டோசோவா
  • பூஞ்சைகள்
6th Science Guide Term 1 Unit 6

VI. குறுகிய வினா

1. வைட்டமின்களையும் அவற்றின் குறைப்பாட்டினால் ஏற்படும நோய்களையும் அட்டவணைப்படுத்துக.

 

யிர்சத்து வைட்டமின்

மிகுதியாக காணப்படுவது

இதில் குறைபாடு இருந்தால் கிடைக்கும் நோய்

அறிகுறிகள்

1. வைட்டமின் A

மீன் எண்ணெய், முட்டை, பால், நெய், கேரட், சோளம், மஞ்சள் நிற பழங்கள், கீரைகள்

மாலைக்கண் நோய்

குறைவான கண் பார்வை மங்கலான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமம்

வைட்டமின் B

முழு தானியம், தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயிறு வகை, பச்சை காய்கறிகள்

பெரி பெரி

நரம்பு பலவினம், உடல் சோர்வு

வைட்டமின் C

ஆரஞ்ச நெல்லிக்காய், பச்சை மிளகாய், தக்காளி

ஸ்கர்வி

ஈறுகளில் இரத்த கசிவு

வைட்டமின் D

மீன், எண்ணெய், முட்டை, பால், சூரிய ஒளியில் நமது தோலில் உருவாகிறத

ரிக்கெட்ஸ்

பலவீனமான, வளைவான எலும்புகள்

வைட்டமின் E

தாவர எண்ணெய்கள், பச்சை காய்கறிகள், முழு கோதுமை, மாம்பழம், ஆப்பிள், கீரைகள்

நரம்பு பலவீனம், மங்கலான கண் பார்வை, மலட்டுத்தன்மை

குழந்தை இன்மையும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது

வைட்டமின் K

பச்சை காய்கறிகள், தக்காளி, முட்டைகோஸ், முட்டை, பாலாலான தயாரிப்புகள்

பலவீனமான எலும்புகள், பற்கள், மற்றும் இரத்தம் உறையாமை போன்றவை

சிறிய வெட்டு பட்டிருந்தால் கூட அதிகப்படியான இரத்தப்போக்கு

 

Leave a Reply