You are currently viewing 6th Social Science Geography Guide Term 3 Lesson 2

6th Social Science Geography Guide Term 3 Lesson 2

6th Social Science Geography Guide Term 3 Lesson 2

6th Standard Social Science Term 3 Guide Geography Lesson 2 புவி மாதிரி – Tamil Medium

6th Standard Social Science Term 2 Geography Lesson 2 புவி மாதிரி Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.

6th Social Science Guide Term 3 Lesson 2 புவி மாதிரி Book Back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. புவியின் வடிவம்

  1. சதுரம்
  2. செவ்வகம்
  3. ஜியாய்டு
  4. வட்டம்

விடை : ஜியாய்டு

2. வடதுருவம் என்பது

  1. 90° வ அட்சக்கோடு
  2. 90° தெ அட்சக்கோடு
  3. 90° மே தீர்க்கக்கோடு
  4. 90° கி தீர்க்கக்கோடு

விடை : 90° அட்சக்கோடு

3. 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  1. தெற்கு அரைக்கோளம்
  2. மேற்கு அரைக்கோளம்
  3. வடக்கு அரைக்கோளம்
  4. கிழக்கு அரைக்கோளம்

விடை : கிழக்கு அரைக்கோளம்

4. 23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  1. மகரரேகை
  2. கடகரேகை
  3. ஆர்க்டிக் வட்டம்
  4. அண்டார்டிக் வட்டம்

விடை : கடகரேகை

5. 180° தீர்க்கக்கோடு என்பது

  1. நிலநடுக்கோடு
  2. பன்னாட்டு தேதிக்கோடு
  3. முதன்மை தீர்க்கக்கோடு
  4. வடதுருவம்

விடை : பன்னாட்டு தேதிக்கோடு

6. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.

  1. நள்ளிரவு 12 மணி
  2. நண்பகல் 12 மணி
  3. பிற்பகல் 1 மணி
  4. முற்பகல் 11 மணி

விடை : நண்பகல் 12 மணி

7. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

  1. 1240 நிமிடங்கள்
  2. 1340 நிமிடங்கள்
  3. 1440 நிமிடங்கள்
  4. 1140 நிமிடங்கள்

விடை : 1440 நிமிடங்கள்

8. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

  1. 82 ½°கிழக்கு
  2. 82 ½° மேற்கு
  3. 81 ½° கிழக்கு
  4. 81 ½° மேற்கு

விடை : 82 ½°கிழக்கு

9. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை

  1. 171
  2. 161
  3. 181
  4. 191

விடை : 181

10. தீர்க்கக் கோடுகளின்மொத்த எண்ணிக்கை

  1. 370
  2. 380
  3. 360
  4. 390

விடை : 360

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ___________விடை : நில நடுக்கோடு
  2. புவியி ன் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள் ___________விடை: அட்ச கோடுகள்
  3. புவியில் 90° அட்சங்கள் ___________ என அழைக்கப்படுகின்றனவிடை : துருவங்கள்
  4. முதன்மை தீர்க்கக்கோடு ___________ என அழைக்கப்படுகிறது விடை: க்ரீன்விச் தீர்க்கக்கோடு
  1. உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை ___________விடை: 24

III. பொருந்தாததை வட்டமிடுக

1. வடதுருவம்,  தென்துருவம்,  நிலநடுக்கோடு,  பன்னாட்டு தேதிக்கோடு

விடை : பன்னாட்டு தேதிக்கோடு

2. மகரரேகை,  கடகரேகை,  நிலநடுக்கோடு,  முதன்மைதீர்க்கக்கோடு

விடை : முதன்மைதீர்க்கக்கோடு

3. வெப்பமண்டலம்,  நேர மண்டலம்,  மிதவெப்ப மண்டலம்,  குளிர்மண்டலம்

விடை : நேர மண்டலம்

4. இராயல் வானியல் ஆய்வுமையம்,  முதன்மை தீர்க்கக்கோடு,  கிரீன்விச், பன்னாட்டு தேதிக்கோடு

விடை : பன்னாட்டு தேதிக்கோடு

5. 10° வடக்கு,  20° தெற்கு,  30° வடக்கு,  40° மேற்கு

விடை : 40° மேற்கு

IV. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.

2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.

3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக

  1. 1 மற்றும் 3 சரி
  2. 2 மற்றும் 3 சரி
  3. 1 மற்றும் 2 சரி
  4. 1, 2 மற்றும் 3 சரி

விடை : 1 மற்றும் 2 சரி

2. கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. இரண்டு கூற்றுகளும் சரி
  4. இரண்டு கூற்றுகளும் தவறு

விடை : இரண்டு கூற்றுகளும் தவறு

V. பொருத்துக

  1. 0° அட்சக்கோடு – துருவம்
  2. 0° தீர்க்கக்கோடு – பன்னாட்டு தேதிக்கோடு
  3. 180° தீர்க்கக்கோடு – கிரீன்விச்
  4. 90°அட்சக்கோடு – நிலநடுக்கோடு

விடை : 1 – , 2 -, 3 –, 4 –

VI. பெயரிடுக

1. புவியில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.

அட்சக்கோடுகள்

2. புவியில் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.

தீர்க்கக்கோடுகள்

3. புவியின் முப்பரிமாண மாதிரி.

புவி மாதிரி

4. தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் இந்தியா அமைந்துள்ள அரைக்கோளம்

கிழக்கு அரைக்கோளம்

5. தீர்க்கக்கோடுகள் மற்றும் அட்சக்கோடுகளின் வலை அமைப்பு.

புவி வலைப்பின்னல்

VIII. சுருக்கமாக விடையளி

1. ஜியாய்டு என்பது என்ன?

  • புவியானது துருவப் பகுதிகளில் தட்டையாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்றுப் பருத்தும், கோள (Spherical) வடிவமாக காணப்படுகிறது.
  • ஆனாலும் புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது.
  • எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்று அழைக்கப்படுகிறது.

2. தலநேரம் என்பது என்ன?

  • ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
  • ர்க்கக் கோட்டிற்கும் மாறுபடும். 0° கிரீன்விச் தீர்க்கக்கோட்டிற்குச் சூரியன் உச்சநிலையில் வரும் நண்பகல் 12 மணி இந்த இடத்திற்குத் தலநேரம் ஆகும்.

3. ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?

  • சூரியன் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தீர்க்கரேகை வரிசையில் இருக்கும்.

4. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

அட்சக்கோடுகள்

  • புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.

தீர்க்கக்கோடுகள்

  • புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும

5. புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.

  • வடக்கு அரைக்கோளம்
  • தெற்கு அரைக்கோளம்
  • கிழக்கு அரைக்கோளம்
  • மேற்கு அரைக்கோளம்.

IX. காரணம் கூறுக

1. 0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.

  • இங்கிலாந்து நாட்டின் இலண்டனுக்கு அருகிலுள்ள கிரீன்விச் என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ (Royal Astronomical observatory) அமைந்துள்ளது.
  • இம்மையத்தின் வழியே செல்லும் தீர்க்கக் கோட்டினைத் தீர்க்கக் கோடுகளின் தொடக்கக் கோடாக வைத்துக் கொள்வதென, 1884ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன.
  • எனவே இக்கோடு 0° என வரையறுக்கப்பட்டது. இக்கோடு ‘முதன்மை தீர்க்கக்கோடு’ (Prime Meridian) எனவும், கிரீன்விச் வழியே செல்வதால் ‘கிரீன்விச் தீர்க்கக்கோடு’ (Greenwich Meridian) எனவும் அழைக்கப்படுகிறது

2. புவியின் வடக்கு மற்றும் தெற்குபகுதியில், 66½° அட்சக்கோடு முதல் 90° துருவம் வரை உள்ள பகுதிகள் குளிர் மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

  • வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66½° வ) முதல் வடதுருவம் (90° வ) வரையிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66½° தெ) முதல் தென்துருவம் (90° தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது.
  • எனவே இப்பகுதி “குளிர்மண்டலம்” என அழைக்கப்படுகிறத

3. பன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.

  • பன்னாட்டு தேதிக்கோடு வளைந்து செல்வதற்குக் காரணம், இது நேராகச் சென்றால், ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும்.
  • இந்த குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைத்து வரையப்பட்டுள்ளது.

X. விரிவான விடை தருக

1. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

  • சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள கோளான புவியில் நாம் வாழ்கின்றோம்.
  • இது மிகப்பெரிய அளவில் இருப்பதாலும், இதன் மேற்பரப்பின் மிகச் சிறிய பகுதியில் நாம் வசிப்பதாலும், புவியின் உருவத்தை நம்மால் முழுமையாகப் பார்த்துணர முடியாது.
  • அவ்வாறு பார்க்க வேண்டுமெனில், விண்வெளிக்குச் சென்று முழுமையாகப் பார்க்கலாம்.
  • எனவே, புவியை முழுமையாகப் பார்த்துணரவும், அதிலுள்ள சிறப்பம்சங்களை அறியவும் புவியைப் போன்று கற்பனையாக முப்பரிமாணத்தில், குறிப்பிட்ட அளவையில் உருவாக்கப்பட்டதே புவி மாதிரி (Globe) ஆகும்.

2. அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.

3. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?

முக்கிய அட்சக் கோடு வகைகள்

  • ‘தாழ் அட்சக்கோடுகள்
  • மத்திய அட்சக் கோடுகள்
  • உயர் அட்சக்கோடுகள்

‘தாழ் அட்சக்கோடுகள்

  • 0° அட்சக் கோட்டிலிருந்து 23½° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப் பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘தாழ் அட்சக்கோடுகள்’ Low Latitudes எனவும்

மத்திய அட்சக் கோடுகள்

  • 23½° வடக்கு முதல் 66½° வடக்கு வரையிலும், 23½° தெற்கு முதல் 66½° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘மத்திய அட்சக் கோடுகள்’ Middle Latitudes எனவும்

உயர் அட்சக்கோடுகள்

  • 66½° வடக்கு முதல் 90° வடக்கு வரையிலும், 66½° தெற்கு முதல் 90° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் ‘உயர் அட்சக்கோடுகள்’ High Latitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.

மண்டல வகைகள்

  • வெப்பமண்டலம்
  • மிதவெப்ப மண்டலம்
  • குளிர் மண்டலம்

வெப்பமண்டலம் (Torrid Zone)

  • நிலநடுக்கோட்டிலிருந்து (0°) வடக்கில் கடகரேகை (23½° வ) வரை மற்றும் தெற்கில் மகரரேகை (23½° தெ) வரை சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. எனவே, இப்பகுதி ‘வெப்பமண்டலம்’ என அழைக்கப்படுகிறது.

மிதவெப்ப மண்டலம் (Temperate Zone)

  • வட அரைக்கோளம் கடகரேகை (23½° வ) முதல் ஆர்க்டிக் வட்டம் (66½° வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23½° தெ) மகரரேகை முதல் (66½° தெ) அண்டார்டிக் வட்டம் வரையுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது.
  • எனவே இப்பகுதி ‘மித வெப்பமண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது.

குளிர் மண்டலம் (Frigid Zone)

  • வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66½° வ) முதல் வடதுருவம் (90° வ) வரையிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66½° தெ) முதல் தென்துருவம் (90° தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது.
  • எனவே இப்பகுதி “குளிர்மண்டலம்” என அழைக்கப்படுகிறது.

4. இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக

  • இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 680 7’ கிழக்கு முதல் 970 25’ கிழக்கு வரை உள்ளது.
  • இதனடிப்படையில், சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன.
  • ஆகவே, இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
  • எனவே, இந்தியாவின் மையத்தில் செல்லும் 82½° கிழக்கு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக்கொண்டு இந்திய திட்டநேரம் IST (Indian standard time) கணக்கிடப்படுகிறது

Leave a Reply