You are currently viewing 6th Tamil Guide Term 1 Lesson 3.3

6th Tamil Guide Term 1 Lesson 3.3

6th Tamil Guide Term 1 Lesson 3.3

TN 6th Standard Tamil Book Back Answers Term 1 Lesson 3.3 கணியனின் நண்பன்

6th Tamil Guide. 6th Std Tamil Term 1 Lesson 3.3 கணியனின் நண்பன் Book Back Question and answers download pdf. 6th all subject book back question and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 1 Lesson 1.1

6th Tamil Book Back Answers Term 1 – Lesson 3.3 அறிவியல், தொழில்நுட்பம் – கணியனின் நண்பன்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________

  1. நூலறிவு
  2. நுண்ணறிவு
  3. சிற்றறிவு
  4. பட்டறிவு

விடை : நுண்ணறிவு

2. தானே இயங்கும் இயந்திரம் _______________.

  1. கணினி
  2. தானியங்கி
  3. அலைபேசி
  4. தொலைக்காட்சி

விடை : தானியங்கி

3. “நின்றிருந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. நின் + றிருந்த
  2. நின்று + இருந்த
  3. நின்றி + இருந்த
  4. நின்றி + ருந்த

விடை : நின்று + இருந்த

4. “அவ்வுருவம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. அவ்வு + ருவம்
  2. அ + உருவம்
  3. அவ் + வுருவம்
  4. அ + வுருவம்

விடை : + உருவம்

5. “மருத்துவம் + துறை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. மருத்துவம்துறை
  2. மருத்துவதுறை
  3. மருந்துதுறை
  4. மருத்துவத்துறை

விடை : மருத்துவத்துறை

6. “செயல் + இழக்க” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது__________

  1. செயலிழக்க
  2. செயல்இழக்க
  3. செயஇழக்க
  4. செயலிலக்க

விடை : செயலிழக்க

7. “நீக்குதல்” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________

  1. போக்குதல்
  2. தள்ளுதல்
  3. அழித்தல்
  4. சேர்த்தல்

விடை : சேர்த்தல்

8. “எளிது” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________

  1. அரிது
  2. சிறிது
  3. பெரிது
  4. வறிது

விடை : அரிது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ___________________

விடை : எந்திரங்கள்

  1. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு _________________விடை : செயற்கை நுண்ணறிவு.
  2. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ___________________விடை : டீப் புளூ.
  3. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ___________________ விடை : சவுதி அரேபியா

III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. தொழிற்சாலை

விடை : தொழிற்சாலை என்பது மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதாகும்

2. உற்பத்தி

விடை : சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எங்கள் ஊரில் உள்ளது

3. ஆய்வு

விடை : ஆய்வு என்பது ஒரு தேடல் வகை

4. செயற்கை

விடை : மனிதர்கள் விவசாயத்தில் செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றன

5. நுண்ணறிவு

விடை : மனிதர்கள் நுண்ணறிவால் சிந்திக்கின்றனர்

IV. குறுவினா

1. ரோபோ என்னும் சொல் எவ்வாறு உருவானது?

  • காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர்  1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.
  • ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.
  • ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது

2. ‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.

  • 1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார்.
  • ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.

V. சிறுவினா

1. எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.

  • மனிதர்களை விட மீத்திறன் மிக்கதாக இருப்பதனால், மனிதர்களை விட விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட முடிகின்றது.
  • மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய எந்திர மனிதன் பயன்படுகிறான். உணவங்களில் உணவு பரிமாறுவதற்குப் பயன்படுகிறான்.
  • பொது இடங்களில் வழிகாட்டுவதற்குப் பயன்படுகிறான். வெடிகுணடுகளைச் செயலிழக்கச் செய்கிறான்.
  • விளையாட்டுத்துறையிலும், மருத்துவத்துறையிலும் முத்திரை பதித்து வருகிறான். மனிதனால் செல்ல முடியாத இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறான்.
  • பயம் அறியாதவன் இந்த எந்திர மனிதன்

2. துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?

  • வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துவப்பகுதிகள் மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை இருப்பதில்லை.
  • இங்கு ஆய்வு செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அவர்கள் பல உபாதைகளுக்கு ஆட்படுவர் அல்லது இறந்தும் போவார். அப்படி நடந்தால் ஆய்வு பாதியில் நின்றுவிடும். முழுமையும் பெறாது.
  • ஆனால் எந்திரமனிதர்கள் எந்த பருவநிலையிலும் இயங்கும் தன்மை பெற்றவர்கள். இவர்களை பயன்படுத்தினால் ஆய்வு எந்த தடங்கலுமின்றி முழுமைபெறும்.
  • அதனால் தான் துருவப்பகுதியில் ஆய்வு செய்ய எந்திர மனிதர்களை அனுப்புகின்றனர்.

கணியனின் நண்பன் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. மனித ஆற்றல் குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே ___________________விடை : தானியங்கிகள்
  2. ‘நான் ஓர் எந்திரமனிதன் . என்னை __________________ என்றும் அழைப்பார்கள் விடை : ரோபோ
  1. ஐக்கிய நாடுகள் சபை ______________ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது.விடை : புதுமைகளின் வெற்றியாளர்
  2. _________________, ________________, ________________ மனிதரை விட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும். விடை : நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை
  1. சூழ்நிலைகளை உணர்வதற்கான ___________________ ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றனவிடை : நுண்ணுணர்வுக் கருவிகள் (Sensors)
  2. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தானியங்கிகள் _______________, _________________ போன்ற பணிகளைச் செய்கின்றன. விடை : உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல்
  1. எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு ___________________ ஆகும்விடை : செயற்கை நுண்ணறிவு
  2. சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ள ரோபோவின் பெயர் __________________விடை : சோபியா

II. சிறுவினா

1. சோபியா பற்றிய விவரங்கள் குறிப்பிடுக

  • “உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சோபியா’.
  • மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை.

2. தானியங்கிகள் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் யாது?

  • மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றை இயக்குவதற்கு மனித ஆற்றல் தேவைப்பட்டது. இக்குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே தானியங்கிகள்.

Leave a Reply