You are currently viewing 7th Science Guide Term 2 Lesson 2

7th Science Guide Term 2 Lesson 2

7th Science Guide Term 2 Lesson 2

7th Std Science Term 2 Solution | Lesson.2 மின்னோட்டவியல்

7th Standard Science Samacheer kalvi guide Term 2 Lesson 2 மின்னோட்டவியல் Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Science Text Book Download PDF.

7th Science Guide Term 2 Lesson 2 மின்னோட்டவியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘ x’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

  1. 10 ஆம்பியர்
  2. 1 ஆம்பியர்
  3. 10 வோல்ட்
  4. 1 வோல்ட்

விடை : 10 ஆம்பியர்

2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

  1. சாவி L மட்டும்
  2. சாவி M மட்டும்
  3. சாவிகள் M மற்றும் N மட்டும்
  4. சாவி L அல்லது M மற்றும் N

விடை : சாவி L அல்லது M மற்றும் N

3. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.

  1. 5 mA
  2. 25 mA
  3. 250 mA
  4. 2500 mA

விடை : 250 mA

4. கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?

விடை :  b

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு _________-ல் அமையும்விடை : எதிர்
  2. ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய ________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.விடை : 6.242 x 1018
  3. மின்னோட்டத்தை அளக்க ___________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

விடை : அமீட்டர்

  1. மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ____________ பிணைக்கப்பட்டிருக்கும்.விடை : தளர்வாக
  2. மின்கடத்துத்திறனின் S.I. அலகு ______ ஆகும்.விடை : சீமென்ஸ் / மீட்டர் (s/m)

III. சரியா – தவறா எனக் குறிப்பிடு. தவறு எனில் சரியான விடையை எழுதுக

  1. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.விடை : தவறு
  2. வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.விடை : தவறு
  3. பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப் படுகின்றனவிடை : சரி
  4. மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறாம்.விடை : தவறு
  5. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.விடை : சரி

 

IV. பொருத்துக

1. மின்கலம்

மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது

2. சாவி

மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்

3. மின்சுற்று

அதிக மின் பளு

4. குறு சுற்று

மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை

5. மின் உருகி

வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

V. ஒப்புமைப்படுத்துக

  1. நீர் : குழாய் : மின்னூட்டம் : __________விடை : கம்பி
  2. தாமிரம் : கடத்தி : மரக்கட்டை : _________விடை : இன்சுலேட்டர்
  3. நீளம் : மீட்டர் அளவு கோல் : மின்னோட்டம் : _______விடை : அம்மீட்டர்
  4. மில்லி ஆம்பியர் : 10-3 : மைக்ரோ ஆம்பியர் : ______.விடை : 10-6

VI. கூற்று – காரணம்

  1. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
  2. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
  3. A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
  4. A என்பது தவறு, ஆனால் R என்பது சரி

1. கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.

காரணம் (R) : தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது

விடை : A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

2. கூற்று (A) : அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை

காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை

விடை : A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

VII. குறு வினாக்கள்

1. மின்னோட்டத்தின் வேகம் என்ன?

  • மின்னோட்டத்தின் வேகம் ஒளியின் வேகத்தில் 1/100 பங்கு வேகத்தில் பயணிக்கிறது

2. மின்கடத்துத்திறனின் S.I. அலகு என்ன?

  • மின்கடத்துத்திறனின் அலகு சீமென்ஸ் / மீட்டர் (s/m) ஆகும்

3. மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

  • மின்கலம்

4. மின் உருகி என்பது என்ன?

  • மின் உருகியானது பெரும்பாலான மின்சாதனங்களிலும் வீட்டில்
  • பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும்.உருகி இழையானது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.

5. மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.

  • மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர்கொதிகலன்

6. அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக

  • ரப்பர், மரம், பிளாஸ்டிக், கண்ணாடி.

7. மின்கலம் என்பது என்ன?

  • மிகச்சிறிய அளவிலான மின்னோட்டத்தை மிகக் குறைந்த காலத்திற்க உருவாக்கும் மூலங்கள் மின்கலங்கள் என அழைக்கப்படுகின்றன. மின்கலன்கள் வேதியாற்றலை மின் ஆற்றலாக மாற்றுபவையாகும்.

VIII. சிறு வினாக்கள்

1. மின்னோட்டம் வரையறு

  • மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும்.
  • மின்னூட்டத்தின் S.I

2. பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு – வேறுபடுத்துக

தொடர் இணைப்பு

பக்க இணைப்பு

1. ஒற்றை மூடிய மின் இணைப்பு

பல கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு

2. மின் விளக்கு குறைந்த பிரகாசத்துடன் ஒளிர்தல்

மின் விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்தல்

3. மின் விளக்குகள் மின் திறனை பகிர்ந்து கொள்ளுதல்

ஒவ்வொரு மின் விளக்கும் மின் திறன் பெறுதல்

4. ஒரு மின்விளக்கு பழுதானால் மற்றவை ஒளிராது

ஒரு மின்விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிரும்

3. மின் கடத்துத்திறனை வரையறு

  • கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின் கடத்துத்திறன் எனப்படும் இது பொதுவாக σ (சிக்மா) என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. மின்கடத்துத்திறனின் அலகு சீமென்ஸ் / மீட்டர் (s/m) ஆகும்.

IX. நெடு வினா

1. தொலைபேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக

  • தொலைபேசிகளில், மாறும் காந்த விளைவானது ஒரு மெல்லிய உலோகத் தாளை (டையபார்ம்) அதிர்வுக்கு உட்படுத்துகிறது. டையபார்ம்களாளது காந்தங்களால் ஈர்க்கக்கூடிய ஒரு உலோகத்தால் செய்யப்படுகின்றன.
  • மின்னோட்டவியல் பாட வினா மற்றும் விடைகள்

  • தொலைபேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச்சுருளுடன் டையபார்ம் இணைக்கப்பட்டிருக்கும்.
  • கம்பிகள் வழியே மின்னோட்டம் பாயும் போது மென்மையான இரும்புப் பட்டையானது ஓர் மின்காந்தமாக மாற்றம் அடைகிறது.
  • டையபார்மானது மின்காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது.
  • மறுமுனையில் உள்ள நபர் பேசும் போது பேசுபவரின் குரலானது மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்றமுறச் செய்கின்றது, இந்த மாற்றம் கேட்பானில் உள்ள டையபார்மை அதிர்வுறச் செய்து ஒலியை உண்டாக்குகிறது

2. மின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக

ஓர் கம்பியின் வழியே மின்னோட்டம் பாயும் போது மின்னாற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது, வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டது ஆகும். நிக்ரோம் அவ்வகையானப் பொருளுக்கு எடுத்துக்காட்டாகும். (நிக்கல், இரும்பு மற்றும் குரோமியம் சேர்ந்த கலவை) மின்னோட்டத்தின் வெப்ப விளைவானது பல்வேறு செய்முறைப் பயன்பாடுகளை கொண்டதாகும்.

மின்னோட்டவியல் பாட வினா மற்றும் விடைகள்

மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர்கொதிகலன் ஆகியவை இவ்வகையான விளைவினை அடிப்படையாகக் கொண்வை. இச்சாதனங்களில் அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டிருக்கும்.

மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகள்

  • பாயும் மின்னோட்டத்தின் அளவு
  • மின்தடை
  • மின்னோட்டம் செலுத்தப்படும் நேரம்

Leave a Reply