You are currently viewing 7th Social Science Geography Guide Term 1 Unit 1

7th Social Science Geography Guide Term 1 Unit 1

7th Social Science Geography Guide Term 1 Unit 1

7th Standard Social Science Geography Guide Term 1 Lesson 1 புவியின் உள்ளமைப்பு

7th Standard Social Science Geography Guide Term 1 Lesson 1 புவியின் உள்ளமைப்பு Samacheer kalvi guide Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Social Science Text Book Download PDF.

7th Social Science Geography Guide Term 1 Unit 1 புவியின் உள்ளமைப்பு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. நைஃப் _______________ ஆல் உருவாக்கப்பட்டது.

  1. நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
  2. சிலிக்கா மற்றும் அலுமினியம்
  3. சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
  4. இரும்பு மற்றும் மெக்னீசியம்

விடை : நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

2. நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ நுனியின் அருகில் ஏற்படுகின்றது.

  1. மலை
  2. சமவெளிகள்
  3. தட்டுகள்
  4. பீடபூமிகள்

விடை : தட்டுகள்

3. நில நடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை _______________ மூலம் அளக்கலாம்.

  1. சீஸ்மோகிராஃப்
  2. ரிக்டர் அளவு கோல்
  3. அம்மீட்டர்
  4. ரோட்டோ மீட்டர்

விடைரிக்டர் அளவு கோல்

 

4. பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான குழாயை _______________ என்று அழைக்கிறோம்.

  1. எரிமலைத்துளை
  2. எரிமலைப் பள்ளம்
  3. நிலநடுக்க மையம்
  4. எரிமலை வாய்

விடை : எரிமலை வாய்

5. எரிமலைக் குழம்பு கூம்புகள் _______________ ஆகும்.

  1. மலைகளின் குவியல்
  2. மலைகளின் உருக்குலைவு
  3. எஞ்சியமலைகள்
  4. மடிப்பு மலைகள்

விடை : மலைகளின் குவியல்

6. எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு ____________ என்று பெயர்.

  1. எரிமலைப் பள்ளம்
  2. லோப்போலித்
  3. எரிமலைக் கொப்பரை
  4. சில்

விடை : எரிமலைப் பள்ளம்

7. _______________ பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

  1. பசிபிக்
  2. அட்லாண்டிக்
  3. ஆர்க்டிக்
  4. அண்டார்ட்டிக்

விடை : பசிபிக்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _______________ என்று அழைக்கப்படுகிறது.விடை : மாேஹாேராேவிசிக்
  2. நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.விடை : நில அதிர்வு மானி
  3. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி _______________ என்று அழைக்கப்படுகிறது.விடை : : எரிமலை வெளியேற்றம்
  1. செயல்படும் எரிமலைக்கு உதாரணம் _______________ ஆகும்.விடை : ஸ்ட்ராம்போலி
  2. எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை _______________ என அழைக்கின்றனர்.விடை : எரிமலை ஆய்வியல்

III. பொருந்தாததை வட்டமிடுக.

1. மேலோடு, மாக்மா, புவிக்கரு, கவசம்

விடை :  மாக்மா

2. நில நடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலை

விடை : எரிமலைவாய்

3. உத்தரகாசி, சாமோலி, கெய்னா, கரக்கட்டாவோ

விடை : கரக்கட்டாவோ

4. லாவா, எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்

விடை : சிலிக்கா

5. ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பூயூஜியாமா

விடை : பூயூஜியாமா

IV. பொருத்துக:

  1. நில நடுக்கம் – ஜப்பானிய சொல்
  2. சிமா – ஆப்பிரிக்கா
  3. பசிபிக் நெருப்பு வளையம் – திடீர் அதிர்வு
  4. சுனாமி – சிலிகா மற்றும் மக்னீசியம்
  5. கென்யா மலை – உலக எரிமலைகள்

Ans : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்

I. கூற்று: பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு கூட ஒப்பிடலாம்

காரணம்: புவியின் உட்பகுதி மேலோடு மெல்லிய புறத்தோல், புவிக்கரு ஆகியவற்றைக் கொண்டது.

  1. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
  2. கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
  3. கூற்று சரி காரணம் தவறு
  4. கூற்றும் காரணமும் தவறானவை

விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

2. கூற்று: உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளது.

காரணம்: பசிபிக்கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.

  1. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
  2. கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
  3. கூற்று தவறு காரணம் சரி
  4. கூற்றும் காரணமும் தவறானது

விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. ஒரு வரியில் விடையளிக்கவும்

1. புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக.

கிரஸட்

2. சியால் என்றால் என்ன?

சிலிக்கா மற்றும் அலுமனியம் தாதுக்களால் ஆன புவியின் மேலாேடு

3. புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?

கழைதிட்டு நகர்வுகள்

4. செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் கொடு.

ஆப்பரிக்காவின் கிளிமாஞ்சரோ

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

1. மெல்லிய புறத்தோல் (அ) அடுக்கு என்றால் என்ன?

  • புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது. இது புவி மேலோட்டையும் கவசத்தையும் மோஹோரோவிசிக் என்ற எல்லை மூலம் பிரிக்கப்படுகிறது.

2. புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்

  • புவியின் மையப்பகுதியை புவிக்கரு என குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது. வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.

3. நில நடுக்கம் வரையறு.

  • புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும், ஏற்படுத்துவதே நிலநடுக்கம் என்கிறோம்.

4. சீஸ்மோ கிராஃப் என்றால் என்ன?

  • புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை நில அதிர்வு மானி (Seismograph) என குறிப்பிடுகின்றனர்.

5. எரிமலை என்றால் என்ன?

  • புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக்குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம்.

6. உருவத்தின் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக.

  1. கேடய எரிமலை
  2. தழல் கூம்பு எரிமலை
  3. பல்சிட்டக் கூம்பு எரிமலை

VIII. காரணம் கூறு

1. புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை

  • பூமியின் உட்புற அடுக்கு கோர் என்று அழைக்கப்படுகிறது. மைய மையத்தில் மிக அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தம் உள்ளது. எனவே பூமியின் உட்புறத்திலிருந்து யாராலும் மாதிரிகள் எடுக்க முடியவில்லை.

2. கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டைவிட அடர்த்தி குறைவு

  • அதிக தடிமன் இருந்தபோதிலும், கண்ட மேலோடு கடல் மேலோட்டத்தை விட குறைவான அடர்த்தியானது, ஏனெனில் இது ஒளி மற்றும் அடர்த்தியான பாறை வகைகளால் ஆனது.

IX. வேறுபடுத்துக

1. சியால் மற்றும் சிமா

சியால்

  • இது சிலிக்கா மற்றும் அலுமினா ஆகிய முக்கிய கனிம கூறுகளைக் கொண்டுள்ளது.
  • எனவே இது கூட்டாக SIAL என்று அழைக்கப்படுகிறது
  • இதன் சராசரி அடர்த்தி7 கி/செ.மீ3.

சிமா

  • இது சிலிக்கா மற்றும் மெக்னீசியம் ஆகிய முக்கிய கனிம கூறுகளைக் கொண்டுள்ளது.
  • எனவே இது சிமா என்று அழைக்கப்படுகிறது.
  • இதன் சராசரி அடர்த்தி0 கி/செ.மீ3.

2. கேடய எரிமலை மற்றும் பல்சிட்ட எரிமலை

கேடய எரிமலை :

  • சிலிகாவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேறும்போது கேடய எரிமலை உருவாகின்றது.
  • இவை அகன்று மென்மையான சரிவுகளைக் கொண்ட கூம்பு வடிவத்தில் காணப்படும்.
  • ஹவாய் தீவுகளிலுள்ள எரிமலைக் குன்றுகள் இவ்வகையை சார்ந்தவையாகும்.

பல்சிட்டக் கூம்பு எரிமலை :

  • லாவா, பல்சிட்டம், எரிமலை சாம்பல் ஆகியவை மாறி மாறி அடுக்குகளாக படியும்போது பல்சிட்டக் கூம்பு எரிமலைகள் உருவெடுக்கின்றன.
  • இவ்வகை எரிமலைகளை அடுக்கு எரிமலைகள் எனவும் அழைக்கலாம்.
  • அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரத்தின் அருகே உள்ள செயின்ட் ஹெலன் எரிமலை பல்சிட்டக் கூம்பு எரிமலைக்கு எடுத்துக்காட்டாகும்.

3. செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை

செயல் எரிமலை

  • அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன.
  • பசிபிக் கடற்கரையோரமாக பெரும்பாலான எரிமலைகள் அமைந்திருப்பதால் இப்பகுதி பசுபிக் நெருப்பு வளையம் எனப்படுகிறது.
  • சராசரியாக உலகெங்கும் 600 செயல்படும் எரிமலைகள் உள்ளன.
  • மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஸ்ட்ராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ, மவுனாலோ (3,255 மீட்டர்) உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலையாகும்.

செயலற்ற எரிமலை

  • வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எரிமலைகள் செயல்படாத எரிமலைகள் என அழைக்கப்படுகிறது.
  • இதை உறங்கும் எரிமலை என்றும் அழைப்பர்.
  • இத்தாலியில், வெசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் சிரகோட்டா ஆகியவை இவ்வகைக்கு பிரசித்தி பெற்ற எடுத்துக் காட்டுகளாகும்.

X. பத்தியளவில் விடையளி

1. நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.

  • நிலநடுக்கம் புவி பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
  • நிலநடுக்கங்கள், மலைப்பிரதேசங்களில் நிலச் சரிவுகளை ஏற்படுத்துகின்றன. கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும்.
  • மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுங்கி மரணக்குழிகளாக மாறுகின்றன.
  • நிலத்தடிநீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது.

2. எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.

எரிமலைகளின் வடிவத்தை கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  1. கேடய எரிமலை
  2. தழல் கூம்பு எரிமலை
  3. பல்சிட்டக் கூம்பு எரிமலை

கேடய எரிமலை :

  • சிலிகாவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேறும்போது கேடய எரிமலை உருவாகின்றது. இவை அகன்று மென்மையான சரிவுகளைக் கொண்ட கூம்பு வடிவத்தில் காணப்படும்.
  • ஹவாய் தீவுகளிலுள்ள எரிமலைக் குன்றுகள் இவ்வகையை சார்ந்தவையாகும்.

2. தழல் கூம்பு எரிமலை :

  • மிகுந்த சிலிகா கொண்ட மாக்மாவை உள்ளிருக்கும் வாயுக்கள் தடுக்கும்போது ஏற்படும் அதிக அழுத்தத்தினால் வாயுக்களும், சாம்பல் துகள் சேர்ந்த ஓர் கலவை மிகுந்த சத்தத்துடன் வளிமண்டத்தில், பலநூறு கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்து சிதறும்போது, தழல் கூம்பு எரிமலைகள் உருவாகின்றன. இவ்வகை எரிமலைகள் தழல் கூம்பு வடிவத்தை பெறுகின்றன.
  • மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா எரிமலைகள் இவ்வகையை சார்ந்தவையாகும்.

பல்சிட்டக் கூம்பு எரிமலை :

  • லாவா, பல்சிட்டம், எரிமலை சாம்பல் ஆகியவை மாறி மாறி அடுக்குகளாக படியும்போது பல்சிட்டக் கூம்பு எரிமலைகள் உருவெடுக்கின்றன. இவ்வகை எரிமலைகளை அடுக்கு எரிமலைகள் எனவும் அழைக்கலாம்.
  • அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரத்தின் அருகே உள்ள செயின்ட் ஹெலன் எரிமலை பல்சிட்டக் கூம்பு எரிமலைக்கு எடுத்துக்காட்டாகும்.

Leave a Reply