You are currently viewing 7th Tamil Book Back Answer Term 1 Unit 2.4

7th Tamil Book Back Answer Term 1 Unit 2.4

7th Tamil Book Back Answer Term 1 Unit 2.4

7th Standard Tamil Book Term 1 – Unit 2.4 இந்திய வனமகன் Solution | Lesson 2.4

7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1 2nd Lesson Unit 2.4 இந்திய வனமகன் Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Book Back Answer Term 1 Unit 2.1

 

7th Standard Tamil Book Term 1 இந்திய வனமகன் Solution | Lesson 2.4

அணில் நிழல் காடு – 2.4. இந்திய வனமகன்

மதிப்பீடு

ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?

முன்னுரை

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங். இந்திய வனமகன் என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

மரம் வளர்க்கும் எண்ணம்

1979 ஆம் ஆண்டும் அது போன்று ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் ஏராளமான பாம்புகள் கரை ஒதுங்கின. அவற்றுள் சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இந்தக்காட்சி அவரை மிகவும் பாதித்தது. ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் இதைப் பற்றிப் பேசினார். ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம் என்றனர். அப்பொழுதே இந்தத்தீவு முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் ஆழப்பதிந்து விட்டது. ஊர் மக்களிடம் தீவில் மரங்கள் வளர்க்கலாம் என்று கூறியபோது, அதனை யாரும் ஏற்கவில்லை.

மரம் வளர்க்கும் எண்ணம்

ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைத்து நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வந்தார். ஆயினும் ஒரு விதைகூட முளைக்கவில்லை. பிறகு வனத்துறையினரை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை விரிந்து வளரத் தொடங்கின. மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை. அசாம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின் படி மண்புழுவுடன் சிவப்பு கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்னமை மாறி பசும்புல்லும் மரங்களம் வளரத் தொடங்கின.

புதிய காடு உருவானது

மரங்களில் விளைந்த பழங்களை உண்டு, அதன் கொட்டைகளை விதையாக சேமித்து வைத்து விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். மழை பெய்யாத காலங்களி் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுககு விட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு பெருங்காடானது. யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலிகள் முதலிய காட்டு விலங்குகள் வரத் தொடங்கின.

முடிவுரை

ஜாதவ்பயேங்போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும் செல்வோம்.

மரங்கள் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

காட்டினை உருவாக்குவோம்!

கூடுதல் வினாக்கள்

1. ஜாதவ்பயேங்கை பாராட்ட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்றார்?

ஜாதவ்பயேங்கை பாராட்ட வேண்டுமெனில், ஆளுக்கு இரண்டு மரக்கன்றுகளை நட்டு வளருங்கள். அதுவே அவருக்கு போதும்.

2. ஜாதவ்பயேங் காடு பற்றி எந்த இதழில் செய்தி வெளிவந்தது?

ஜாதவ்பயேங் காடு பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் செய்தி வெளிவந்தது.

3. ஜாதவ்பயேங் பகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டம் யாது?

அரசு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம்

4. ஜாதவ்பயேங் பெற்ற விருதுகள் யாவை?

2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ‘இந்திய வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

கெளகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியுள்ளது.

Leave a Reply