You are currently viewing 7th Tamil Guide Term 1 Unit 1.3 Book Back Answers

7th Tamil Guide Term 1 Unit 1.3 Book Back Answers

7th Tamil Guide Term 1 Unit 1.3 Book Back Answers

 Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் Solution | Lesson 1.1

7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1, Term 2, Term 3 Book Back and additional Questions and answers download pdf. 7th Tamil Term 1 Lesson 1 Unit 1.3  பேச்சுமொழியும் எழுத்துமொழியும் Book Answers and solutions. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Guide Term 1 Lesson 1.1

7th Tamil Samacheer Kalvi Guide Term 1 Unit 1.3. பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.

படித்தல்
கேட்டல்
எழுதுதல்
வரைதல்
விடை : கேட்டல்
 

2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.

பேச்சு
எழுத்து
குரல்
பாட்ட
விடை : எழுத்து
 

3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________

உருது
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
விடை : தெலுங்கு
 

4. பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்

இலக்கிய
உலக
நூல்
மொழி
விடை : உலக
 

II. சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

விடை : சரி
 

2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

விடை: சரி
 

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி. ()

விடை: தவறு
 

4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

விடை: தவறு
 

5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

விடை : சரி
 

III. ஊடகங்களை வகைப்படுத்துக.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
 
எழுத்துமொழி பேச்சுமொழி
மின்னஞ்சல், செய்தித்தாள்,  நூல்கள் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்

IV. குறுவினா

1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?

  • பேச்சு மொழி
  • எழுத்து மொழி

2. பேச்சுமொழி என்றால் என்ன?

  • வாயினால் பேசப்பட்டு உணரப்படுவது பேச்சு மொழி ஆகும்
 

3. வட்டார மொழி எனப்படுவது யாது?

இடத்திற்கு இடம் பேச்சு மொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.
 

V. சிறுவினா

1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.

பேச்சுமொழி எழுத்துமொழி
1. பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும். – எழுத்து மொழியல் சொற்கள் முழுமையாக எழுதப்படும். எ.கா. நன்றாகச்சாப்பிட்டான்
எ.கா. நல்லாச் சாப்டான்
 
2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம் – உணர்ச்சிக் கூறுகள் குறைவு
3. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் உண்டு – உடல் மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் இல்லை
4. திருத்தமான மொழி நடையில் அமைகிறது –  திருத்தமான மொழி நடையில் அமைவதில்லை
2. கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
 
ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றன.
வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே கிளை மொழி என்பர்
கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழி ஆகும்

  பேச்சுமொழியும் எழுத்துமொழியும் – கூடுதல் வினாக்கள்  

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பேசுவதும் கேட்பதும் மொழியின் ______________ ஆகும்.
 
விடை: முதல் நிலை
 
2. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிமே ______________ ஆகும்.
 
விடை: எழுத்து மொழி
 
3. வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது ______________ ஆகும்.
 
விடை: பேச்சுமொழி
 
4. கண்ணால் கண்டு உணருமாறு வரி வடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது ___________________ ஆகும்.
 
விடை: எழுத்து மொழி
 
5. எழுதப்படுவதும், படிக்கப்படுவது மொழியின் ______________
 
விடை: இரண்டாம் நிலை
 
6. மாறுபாடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் ______________ என்பர்.
 
விடை : வட்டார மொழி
 

II. வினாக்கள்

1. இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.
 

2. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் யாவை?

கன்னடம்
தெலுங்கு
மலையாளம்

3. மொழி என்பது யாது?

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும்.
 

4. திருத்தமான தமிழை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும்?

திருத்தமான தமிழை ஊடகங்களிலும், இலக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும்
 

5. பேச்சு மொழியின் சிறப்புக்கூறுகள் யாவை?

பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்பு கூறுகள் ஆகும்.
 

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பேசுவதும் கேட்பதும் மொழியின் ……………….. நிலை

அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer: அ) முதல்
 

2. வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது ………………. ஆகும்.

அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer: ஆ) பேச்சுமொழி
 

3. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………..

அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer: அ) எழுத்துமொழி
 

4. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் …………… நிலை

அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer: ஆ) இரண்டாம்
 

5. நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க உதவுவது

அ) எழுத்து மொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer: அ) எழுத்து மொழி
 

6. மனிதனின் சிந்தனை காலம் கடந்தும் வாழ்வதற்குக் காரணம்

அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer: அ) எழுத்துமொழி
 

7. மொழியின் உயிர் நாடியாக விளங்குவது

அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer: ஆ) பேச்சுமொழி
 

8. பேச்சுமொழியில் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க என்று கூறும்போது ‘கவனி என்னும் சொல்தரும் பொருள்

அ) பேணுதல்
ஆ) கவனித்துச்செல்
இ) பாதுகாப்புப் பொருள்
ஈ) பாருங்கள்
Answer: அ) பேணுதல்
 

9. ‘நான் பறவையைப் பார்த்தேன் – இத்தொடர் ‘பறவையைப் பார்த்தது யார்?’ என்ற வினாவாக அமையும் போது அழுத்தம் கொடுக்கவேண்டிய சொல் எது?

அ) பறவை
ஆ) நான்
இ) பார்த்தது
ஈ) யார்
Answer: ஆ) நான்
 

10. மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்……….. என்பர்.

அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) வட்டார மொழி
Answer: ஈ) வட்டார மொழி
 

11. பொருந்தாதவற்றைத் தேர்ந்தேடுக்க.

அ) தமிழ் – கிளை மொழி
ஆ) கன்னடம் – கிளை மொழி
இ) மலையாளம் – கிளை மொழி
ஈ) தெலுங்கு – கிளை மொழி
Answer: அ) தமிழ் – கிளை மொழி
 

12. பொருத்துக

1. தமிழ் – அ) இரட்டை வழக்கு
2. கன்னடம் – ஆ) நல்லாச் சாப்ட்டான்
3. வட்டார மொழி – இ) கீது
4. பேச்சு வழக்கு – ஈ) கிளை மொழி
 
அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ
ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4- அ
இ) 1- ஈ, 2 – இ, 3-அ, 4-ஆ
ஈ) 1- அ, 2-இ, 3-ஆ. 4-ஈ

Answer: அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ

 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. உலக வழக்கு , செய்யுள் வழக்கு பற்றிக் குறிப்பிடுபவர் ………………..
2. இரட்டை வழக்கு மொழி ………………..
3. எழுத்துமொழியில் பெரும்பாலும் ………………. பேணப்படுகின்றது.
4. ஒருமொழி உயிர்ப்போடு வாழ …………………….. யும், காலம் கடந்து வாழ்வதற்கு ……………….. யும் தேவைப்படுகின்றன.
5. ‘எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்’ என்று பாடியவர் ………………….
 

Answer:

1. தொல்காப்பியர்
2. தமிழ்
3. மொழித்தூய்மை
4. பேச்சுமொழி, எழுத்துமொழி
5. பாவேந்தர் பாரதிதாசன்.
 

குறுவினா

1. இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன? சான்று தருக.

Answer:
பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி ஆகும்.
சான்று: தமிழ் மொழி
 

2. குழந்தைகளுக்குத் தாய்மொழியும் பிறமொழியும் எவ்வாறு அறிமுகமாகின்றன?

(i) கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.
 
(ii) படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் குழந்தைகளுக்குப் பிறமொழிகள் அறிமுகமாகிறது.
 

3. பேச்சுமொழி, எழுத்துமொழி என்பத்ை தொல்காப்பியர் எச்சொற்களால் குறிப்பிடுகிறார்?

  • பேச்சுமொழி – உலக வழக்கு,
  • எழுத்துமொழி – செய்யுள் வழக்கு

4. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் யாவை?

  • கன்னடம்,
  • தெலுங்கு,
  • மலையாளம்
 

5. பேச்சுமொழி, எழுத்து மொழி என்னும் இரு கூறுகளையும் கொண்ட மொழி எது?

தமிழ் மொழி.
 

6. பழமையும் புதுமையும் நிறைந்து சிறந்த மொழி எது?

தமிழ் மொழி.
 

7. மொழி என்பது யாது?

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி என்பர்.
 

8. பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் யாவை?

பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.
 

9. ஊடகங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

  • வானொலி
  • தொலைக்காட்சி
  • நாளேடுகள்
 

10. திருத்தமான தமிழை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும்?

திருத்தமான தமிழையே ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும்
 

சிறு வினா

1. பேச்சு மொழி, எழுத்துமொழி, வட்டார வழக்கு ஆகியவற்றை விளக்கி சான்று தருக.

பேச்சு மொழி : வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும். உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக்
கூறுகள் ஆகும்.
 
சான்று : குழந்தையை நல்லாக் கவனிங்க.
 
எழுத்துமொழி : பேச்சு மொழிக்கு நாம் தந்த வடிவமே எழுத்துமொழி – கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி. ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெற எழுத்து மொழியே காரணம்.
 
சான்று : நன்றாகச் சாப்பிட்டான்.
 
வட்டார வழக்கு : இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே
மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டாரமொழி என்பர்.
 
சான்று : ‘இருக்கிறது’ என்ற சொல்லை இருக்கு’, ‘கீது’ என வழங்குவது.
 

நெடு வினா

1. பேச்சுமொழியில் சொற்பொருள் வேறுபாடுகள் குறித்து எழுதுக.

  • (i) பேசப்படும் சூழலைப் பொறுத்து பேச்சுமொழியில் பொருள் வேறுபடும்.
  • (ii) எடுத்துக்காட்டாகக் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க’ என்று கூறும்போது ‘கவனி’ என்னும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகின்றது. ‘நில்’, ‘செல்’, கவனி’ என்பதில் கவனி’ என்னும் சொல் கவனித்துச் செல் என்னும் பாதுகாப்புப் பொருளைத் தருகின்றது.
  • (iii) ஒலிப்பதன் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும்.
  • (iv) எடுத்துக்காட்டாக என்னால் போக முடியாது’ என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும் போது மறுப்பையும், மென்மையாக ஒலிக்கும் போது இயலாமையை உணர்த்துகின்றது.
  • (v) தொடரில் எச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்ப பேச்சுமொழியின் சொல் வேறுபடுகின்றது.
  • (vi) எடுத்துக்காட்டாக ‘நான் பறவையைப் பார்த்தேன்’ என்னும் தொடரில் ‘நான்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், பறவையைப் பார்த்தது யார்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.
  • (vii) ‘பறவையை’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ எதைப் பார்த்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.
  • (viii) ‘பார்த்தேன்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ பறவையை என்ன செய்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

Leave a Reply