You are currently viewing 7th Tamil Guide Term 3 Unit 3.3

7th Tamil Guide Term 3 Unit 3.3

7th Tamil Term 3 Unit 3.3 Book Back Answers | 7th Tamil Samacheer kalvi guide Term 3, Lesson 3

7th Tamil Term 3 Unit 3.3 Book Back Answers

3.3 கண்ணியமிகு தலைவர்

TN 7th Tamil Term 3, Lesson 3, Unit 3.3 கண்ணியமிகு தலைவர் Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Book Back Answers. Class 7 Term 1, Term 2, Term 3 Book Answers Solutions. Tamil Nadu State Board Syllabus Samacheer Kalvi 7th Tamil Book Answers Solutions Guide Download  Pdf. 7th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 7th Std Tamil Guide Pdf. Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Unit Wise Important Questions with answers, Study Material, Question Bank, Model Questions, Revision Test question Papers, Notes, and revise our understanding of the subject. Samacheer Kalvi 10th & 12th Tamil Book Solutions Guide Pdf Free Download, Tamilnadu State Board Samacheer Kalvi 7th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

7th Tamil Samacheer Kalvi Guide Term 3, Unit 3.3 கண்ணியமிகு தலைவர் Book Back Answers

7th Tamil Guide Term 3 Unit 3.3

7th Tamil Term 3 Unit 3.3 Book Back Answers

Class 7 | Term 3 | Unit 3.3. கண்ணியமிகு தலைவர்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

  • தண்மை
  • எளிமை
  • ஆடம்பரம்
  • பெருமை

விடை : எளிமை

2. ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் _______ என்பது பொருள்.

  • சுற்றுலா வழிகாட்டி
  • சமுதாய வழிகாட்டி
  • சிந்தனையாளர்
  • சட்ட வல்லுநர்

விடை : சமுதாய வழிகாட்டி

3. விடுதலைப் போராட்டத்zன்போது காயிதேமில்லத் _______ இயக்கத்தில் கலந்து கொண்டார்.

  • வெள்ளையனே வெளியேறு
  • உப்புக் காய்ச்சும்
  • சுதேசி
  • ஒத்துழையாமை

விடை : ஒத்துழையாமை

4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் _______.

  • சட்டமன்றம்
  • நாடாளுமன்றம்
  • ஊராட்சி மன்றம்
  • நகர் மன்றம்

விடை : நாடாளுமன்றம்

5. ’எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  • எதிர் + ரொலித்தது
  • எதில் + ஒலித்தது
  • எதிர் + ஒலித்தது
  • எதி + ரொலித்தது

விடை : எதிர் + ஒலித்தது

6. முதுமை+மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

  • முதுமொழி
  • முதுமைமொழி
  • முதியமொழி
  • முதல்மொழி

விடை : முதுமொழி

II. குறுவினா

1. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.

  • நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை இயக்கதத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் .
  • காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.
  • கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

2. காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.

  • காயிதே மில்லத் அவர்கள் தன் மகனுக்கு திருமண செய்ய முடிவு செய்தார்.
  • பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர்.
  • பெண் வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார்.

 

III. சிறு வினா

ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.

  • ஆட்சி மொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதே மில்லத் “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன்.
  • மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான்.
  • அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப்பழமையான மொழி.
  • அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

 

கண்ணியமிகு தலைவர் –  கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காயிதே மில்லத் என்னும் அரபு சொல்லுக்கு _________________ என்று பொருள்.

விடை : சமுதாய வழிகாட்டி

2. _________________ என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் தலைவர் காயிதே மில்லத்

விடை : கண்ணியமிகு

3. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு _________________

விடை : 1962

4. காயிதே மில்லத்தின் இயற்பெயர் _________________

விடை : முகமது இசுமாயில்

5. காயிதே மில்லத் ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கிய இடம் _________________

விடை : திருச்சி

II. வினாக்கள்

1. காயிதே மில்லத் பற்றி தலைவர்கள் கூறியது யாது

  • தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார். – அறிஞர் அண்ணா
  • இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் – தந்தை பெரியார்

 

2. காயிதே மில்லத் பெயர் வரக் காரணம் யாது?

  • காயிதே மில்லத் இயற்பெயர் முகமது இசுமாயில்.
  • ஆனால் மக்கள் அவரை அன்போடு காயிதே மில்லத் எனறு அழைத்தனர்.
  • காயிதே மில்லத் என்னும் அரபு சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்று பொருள்.
  • அப்பெயருக்கேற்ப மக்களின் வழிகாட்டியாக திகழ்ந்தானர்

 

3. ஒருவர் ‘கண்ணியமிகு’ என்னும் அடைமொழியால் எப்போது அழைக்கப்படுகிறார்?

  • மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் பலர். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கே உரிய தனித்தன்மையான பண்புகளால் முத்திரை பதித்துள்ளனர்.
  • எளிமை, நேர்மை, உழைப்பு, பொறுமை, நாட்டுப்பற்று முதலிய பண்புகளை ஒருங்கே கொண்டு சிறந்து விளங்கிய தலைவர் ஒருவர் ‘கண்ணியமிகு’ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுகிறார்.

 

4. காயிதே மில்லத் அவர்களின் நேர்மைக்கு சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.

  • காயிதே மில்லத் ஒருமுறை தமது இயக்க அலுவலகத்தில் இருந்த போது அங்கிருந்த பணியாளரை அழைத்தார். அவரிடம் ஓர் உறையையும் பணத்தையும் கொடுத்து, “அஞ்சல்தலை வாங்கி இந்த உறையில் ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுங்கள்“ என்று கூறினார்.
  • அந்தப் பணியாளர் “ஐயா நம் அலுவலகத்திலேயே அஞ்சல்தலைகள் வாங்கி வைத்துள்ளோம், அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒட்டி விடுகிறேன்“ என்றார்.
  • அதற்கு அந்தத் தலைவர், “வேண்டாம். இது நான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம்.
  • அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது“ என்று கூறினார்
  • இதுவே  காயிதே மில்லத் அவர்களின் நேர்மைக்கு சான்றாக உள்ள நிகழ்வு ஆகும்.

 

5. காயிதே மில்லத் அரசியல் பணிகள் யாவை?

  • 1946  முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
  • இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினர்
  • இந்தியா விடுதலை பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினர்
  • மக்களவை உறுப்பினர்

Leave a Reply