7th Tamil Guide Term 2 Unit 1 Book answers

 7th Tamil Term 2 Unit 1.3 Book Back Answers

 7th Tamil Term 2 Unit 1.3 Book Back Answers

7th Standard Samacheer Kalvi Guide Unit 1.3. தமிழரின் கப்பற்கலை

7th Standard Term 2 Unit 1.3 Samacheer Kalvi Guide Book back and additional answers. 7th All Terms Full Answers. 7th TNPSC Important Notes, Free Online Test.  7th Standard All Important Study Materials. 7th Tamil Term 2 Unit 1.3 Book Back and additional question Answers.

7th Tamil Term 2 – Unit 1.1 to 1.5 Full BookAnswers – Click Here

7th Tamil Term 2 Unit 1.1 Book Back Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ___________.

  • கலம்
  • வங்கம்
  • நாவாய்
  • ஓடம்

விடை : ஓடம்

2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.

  • நன்னீர்
  • தண்ணீர்
  • முந்நீர்
  • கண்ணீர்

விடை : முந்நீர்

3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________.

  • சுக்கான்
  • நங்கூரம்
  • கண்ணடை
  • சமுக்கு

விடை : சுக்கான்

II. கோடிட்ட இடங்ளை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் __________________ என அழைக்கப்படும்.

விடை : தொகுதி

2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது __________________

விடை : நங்கூரம்

3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் __________________ எனக் குறிப்பிடப்படும்.

விடை : கண்ணடை

III. பொருத்துக.

  1. எரா               – அ.திசைகாட்டும் கருவி
  2. பருமல்         – .அடிமரம்
  3. மீகாமன்     –  இ. குறுக்கு மரம்
  4. காந்தஊசி  – ஈ.கப்பலைச் செலுத்துபவர்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

IV. தொடர்களில் அமைத்து எழுதுக.

1. நீரோட்டம்

  • ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்

2. காற்றின் திசை

  • கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர்

3. வானியல் அறிவு

  • தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்

4. ஏற்றுமதி

  • துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

V. குறுவினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

  • எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து தோண்டப்பட்டவை தோணி எனப்பட்டன.

2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

  • மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

  • ஏரா
  • பருமல்
  • வங்கு
  • கூம்பு
  • பாய்மரம்
  • சுக்கான்
  • நங்கூரம்

 

VI. சிறுவினா

1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

  • தோணி
  • ஓடம்
  • படகு
  • புணை
  • மிதவை
  • தெப்பம்

கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

  • கலம்
  • வங்கம்
  • நாவாய்

 

2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர் .

திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.

கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர்.

கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.

3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.

நீர் மட்ட வைப்பிற்கு வேம்ப், இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்கு தேக்கு, வெண் தேக்கு மரங்களையும் பயன்படுத்தினர்.

சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.

மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்ட காலம் உழைத்தன.

இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மர ஆணிகளைப் பயன்படுத்தினர்.

தமிழரின் கப்பற்கலை – கூடுதல் வினாக்கள்  

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. __________________ செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு.

விடை : பயணம்

2. வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை __________________ ஆகும்.

விடை : கப்பல்கள்

3. தொல்காப்பியம் __________________ என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது.

விடை : முந்நீர் வழக்கம்

4. கப்பல் கட்டும் கலைஞர்கள் __________________ என்று அழைக்கப்பட்டனர்.

விடை : கம்மியர்

5. நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்க __________________ என்னும் நீட்டல் அளவையால் கணக்கிட்டனர்

விடை : தச்சுமுழம்

II. வினாக்கள்

1. பயணம் எத்தனை வகைப்படும்?

  • பயணம் மூன்று வகைப்படும்.
  • தரைவழிப் பயணம்
  • நீர்வழிப் பயணம்
  • வான்வழிப் பயணம்

 

2. நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்?

  • நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இருவகைப்படுத்தலாம்.

3. கட்டுமரங்கள் என்றால் என்ன?

  • மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி அவற்றின மீது ஏறிப் பயணம் செய்வதை கட்டுமரங்கள் எனப்படும்

4. தோணி என்றால் என்ன?

  • எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்து விட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான். உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.

5. கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்றால் என்ன?

கரிமுக அம்பி

  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை தலையை போன்று வடிவமைப்பதாகும்

பரிமுக அம்பி

  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை குதிரை தலையை போன்று வடிவமைப்பதாகும்

6. கலங்கரை விளக்கம் என் பெயர் வருவதற்கு காரணம் யாது?

கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.

உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டாதாக இஃது அமைக்கப்படும்

கலம் என்றால் கப்பல், கரைதல் என்றால் அழைத்தல் அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் இது கலங்கரை விளக்கம் எனப்படும்

7. பெரிய கப்பற்படை கொண்டு பல நாடுகள் வென்ற சோழர்கள் யாவை?

  • இராசராச சோழன்
  • இராசேந்திர சோழன்

8. தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள் யாவை?

  • பெரிய பாய்மரம்
  • திருக்கைத்திப்பாய்மரம்
  • காணப்பாய்மரம்
  • கோசுப்பாய்மரம்

 

9. கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

  • மாலுமி
  • மீகான்
  • நீகான்  
  • கப்பலோட்டி

Leave a Reply