You are currently viewing 7th Tamil Term 2 Unit 3.6 Book Back Answer

7th Tamil Term 2 Unit 3.6 Book Back Answer

7th Tamil Term 2 Unit 3.6 Book Back Answers

TN 7th Standard Tamil Term 2 – Lesson 3 – இயல் 3.6 திருக்குறள் Book back answers

TN 7th Tamil Term 2 Unit 3.6 Book Back Answers. 7th Standard Tamil Term 2 Lesson 3 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 2 – 3rd Lesson இயல் 3.6 திருக்குறள் Book Back and additional question and answers download pdf. Class 7 2nd Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Term 2 Lesson 3 Book Back Answer

7th Standard Tamil Term 2 – Lesson 3 – இயல் 3.6 திருக்குறள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. _____________ தீமை உண்டாகும்.

  1. செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
  2. செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
  3. செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
  4. எதுவும் செய்யாமல் இருப்பதால்

விடை : செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

2. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.

  1. சோம்பல்
  2. சுறுசுறுப்பு
  3. ஏழ்மை
  4. செல்வம்

விடை : சோம்பல்

3. ‘எழுத்தென்ப’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  1. எழுத்து + தென்ப
  2. எழுத்து + என்ப
  3. எழுத்து + இன்ப
  4. எழுத் + தென்ப

விடை : எழுத்து + என்ப

4 . ’கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  1. கரைந்து + இன்னும்
  2. கரை + துண்ணும்
  3. கரைந்து + உண்ணும்
  4. கரை + உண்ணும்

விடை : கரைந்து + உண்ணும்

5. ‘கற்றனைத்து+ ஊறும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

  1. கற்றனைத்தூறும்
  2. கற்றனைதூறும்
  3. கற்றனைத்தீறும்
  4. கற்றனைத்தோறும்

விடை : கற்றனைத்தூறும்

III. பொருத்துக

  1. கற்கும் முறை — அ. செயல்
  2. உயிர்க்குக் கண்கள் — ஆ. காகம்
  3. விழுச்செல்வம் — இ. பிழையில்லாமல் கற்றல்
  4. எண்ணித் துணிக — ஈ. எண்ணும் எழுத்தும்
  5. கரவா கரைந்துண்ணும் — உ. கல்வி

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

III. பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

7th Tamil Term 2 Unit 3.6 Book Back Answer

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

7th Tamil Term 2 Unit 3.6 Book Back Answer

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

IV. குறுவினா

1. ‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்’ எப்போது?

நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்

2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.

செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்

3. துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?

துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு ______________ செய்ய வேண்டும். விடை : நன்மை
  1. கற்க வேண்டியவற்றைப் ______________ கற்க வேண்டும்.விடை : பிழை இல்லாமல்
  2. எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் ______________ போன்றதுவிடை :
  3. எந்தச் செயலையும் நன்கு ______________ பின் தொடங்க வேண்டும் விடை : சிந்தித்த

II. பிரித்து எழுதுக

  1. எழுத்தென்ப = எழுத்து + என்ப
  2. இவ்விரண்டும் = இ + இரண்டும்
  3. தொட்டனைத்து = தொட்டு + அனைத்து
  4. கற்றனைத்து = கற்று + அனைத்து
  5. நன்னாற்றல் = நல்ல + ஆற்றல்
  6. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்
  7. பண்பறிந்து = பண்பு + அறிந்து

III. வினாக்கள்

1. எப்படி கற்க வேண்டும்? எந்த வழியில் நடக்க வேண்டும்?

கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும்.

2. எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் எது போன்றது?

எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றது

3. மக்கள் அறிவு எதனைப்போல் வளரவேண்டும்?

தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். அதுபோல் கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும்.

4. ஒருவருக்கு சிறந்த செல்வம் எது?

அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.

5. எது குற்றமாகும் என வளளுவர் கூறுகிறார்?

எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின்

எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

6. யாரிடம் செல்வம் சேரும்?

காகம் தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும். அத்தகைய பண்பு உடையவர்களிடமே செல்வமும் சேரும்.

Leave a Reply