TN 8th Social Science All Unit Question & Answers Tamil medium & English Medium Samacheer Kalvi Guide

8th Social Science Geography Guide Unit 1

8th Social Science Geography Guide Unit 1

8th Standard Social Science Geography Lesson 1 பாறை மற்றும் மண்

8th Standard Social Science Geography Lesson 1 பாறை மற்றும் மண் Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.

TN 8th Social Science All Unit Question & Answers Tamil medium & English Medium Samacheer Kalvi Guide

 

8th Social Science Geography Guide Unit 1 பாறை மற்றும் மண்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.

  1. வளிமண்டலம்
  2. உயிர்க்கோளம்
  3. நிலக்கோளம்
  4. நீர்க்கோளம்

விடை : நிலக்கோளம்

2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

  1. ஆகஸ்ட் 15
  2. ஜனவரி 12
  3. அக்டோபர் 15
  4. டிசம்பர் 5

விடை : டிசம்பர் 5

3. உயிரினப் படிமங்கள் ————– பாறைகளில் காணப்படுன்றன.

  1. படிவுப் பாறைகள்
  2. தீப்பாறைகள்
  3. உருமாறியப் பாறைகள்
  4. அடியாழப் பாறைகள்

விடை : படிவுப் பாறைகள்

4. மண்ணின் முதல் நிலை அடுக்கு

  1. கரிசல் மண்
  2. பாறைப்படிவு
  3. சிதைவடையாத பாறைகள்
  4. பாதியளவு சிதைவடைந்த பாறைகள்

விடை : கரிசல் மண்

5. பருத்தி வளர ஏற்ற மண்

  1. செம்மண்
  2. கரிசல் மண்
  3. வண்டல் மண்
  4. மலை மண்

விடை : கரிசல் மண்

6. மண்ணின் முக்கிய கூறு.

  1. பாறைகள்
  2. வாயுக்கள்
  3. நீர்
  4. கனிமங்கள்

விடை : கனிமங்கள்

7. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. மலை மண்

விடை : வண்டல் மண்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு ______________

விடை : பாறையியல்

  1. _______ மண் பருத்தி விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.விடை : கரிசல்
  2. உருமாறிய புவியின் தோல்’ என்று ______________ அழைக்கப்படுகிறது

விடை : மண்

  1. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _____________________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது விடை : வெள்ளைப் பளிங்கு
  2. _______ பாறை ‘முதன்மை பாறை’ என்று அழைக்கப்படுகிறது. விடை :தீப்

III.பொருத்துக

1.

  1. கிரானைட் – அடிப்பாறை
  2. மண் அடுக்கு – அடியாழப் பாறைகள்
  3. பாரன் தீவு – பட்டைப் பயிரிடல் வேளாண்மை
  4. மண் – வளப்பாதுகாப்பு செயல்படும் எரிமலை

விடை : 1 – , 2 – , 3 – , 4 –

2.

  1. பசால்ட் (கருங்கல்) – ஆந்த்ரசைட்
  2. சுண்ணாம்புப் பாறை – வெளிப்புற தீப்பாறைகள்
  3. நிலக்கரி – உருமாறியப் பாறைகள்
  4. ஜெனிஸ் (நைஸ்) – படிவுப்பாறைகள

விடை : 1 – , 2 – , 3 – , 4 –

IV. சரியா, தவறா?

  1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது விடை : சரி
  2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது. விடை : சரி
  3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது. விடை : தவறு
  4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது விடை : சரி
  5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன விடை : தவறு

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்

1.

  1. தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
  2. பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.
  3. படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
  4. தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.

விடை : படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

2.

  1. மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது.
  2. இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
  3. மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.
  4. இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.

விடை : இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

VI கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கூற்று 1 -  படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை

கூற்று 2 -  படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

  1. கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
  2. கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
  4. கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.

விடை : கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.

VII காரணம் கூறுக

1. நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகின்றன.

  • பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது.
  • இக்கனிமங்கள் நீர்தேக்கப் படுகைகளில் படிவதால் இராசயன படிவு பாறைகள் உருவாகின்றன.

2. தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது

  • தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து எரிமலை வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்த உருவானதாகும்.
  • ஆகையால் தீப்பாறைகள் எரிமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.

VIII வேறுபடுத்துக.

1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

படிவுப்பாறைகள்

அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.

அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர்,  பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட  லமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.

 

2. மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு

மண் வள பாதுகாப்பு

மண்ணரிப்பு

மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.

மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும்

IX சுருக்கமாக விடையளிக்கவும்.

1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

  • தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும்.
  • இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உ ரு வா கி ன்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.

2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?

  • பாறைகள் என்பது கனிமங்கள் தனித்த கூறுகளாகவோ அல்லது கூட்டுக் கலவையாகவோ உருவாகலாம்.
  • கனிமங்கள் வேதி மூலங்களின் தொகுதிகளால் ஆனவை.

3. ‘பாறைகள்’ வரையறு.

  • பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும்.
  • இது ஒரு திடநிலையில் உள்ள ஒரு முக்கியமான இயற்கை வளம் ஆகும்.

4. மண்ணின் வகைகளைக் கூறுக.

  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • மலை மண்
  • பாலை மண்

5. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?

மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.

X விரிவான விடையளிக்கவும்

1. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.

  • மண் என்பது பல்வகை கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும்.
  • இது உயிரினங்கள் வாழ துணைபுரிகிறது.
  • மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும். புவிபரப்பின் மேல் மண் உருவாவதால் இது “புவியின் தோல்” (Skin of the Earth) என்று அழைக்கப்படுகிறது.
  • பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தபடும் பொழுது மண்ணாக உருவாகிறது.
  • நீர், காற்று, வெப்ப நிலைமாறுபாடு, புவி ஈர்ப்பு விசை, வேதிபரிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் சிதைவுறுகின்றன. மேலும், தாய்ப்பாறையை தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகின்றன.
  • காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகிறது. இந்தச் செயல்முறைகள் பாறைத் துகள்களிலிருந்து தாதுக்கள் வெளிப்படக் காரணமாகின்றன.
  • பின்னாளில் தாவரங்கள் வளர்ந்து அம் மண்ணிற்கும் இலைக்கும் சத்தை ஊட்டுகின்றன. இச்சீரான செயல்முறைகள் மண்ணை வளமடையச் செய்கின்றன.

2. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்

புவி பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  • தீப்பாறைகள் (Igneous Rocks)
  • படிவுப் பாறைகள் (Sedimentary Rocks)
  • உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் (Metamorphic Rocks)

தீப்பாறைகள்

  • தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும்.
  • இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.

படிவுப் பாறைகள்

  • படிவுப் பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.
  • இப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன.
  • பல்வேறு காலக்கட்டத்தில் படியவைக்கப்பட்டபொருள்கள் பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்பாறைகள் (Stratified Rocks) என அழைக்கப்படுகின்றன.

உருமாறிய பாறைகள்

  • அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.

3. மண்ணடுக்குகள் பற்றி விவரிக்கவும்.

இலை மக்கு அடுக்கு

  • இலைகள், சருகுகள், கிளைகள், பாசிகள் போன்ற கரிமப் பொருட்களால் உருவானவை.

மேல்மட்ட அடுக்கு

  • கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு

உயர்மட்ட அடுக்கு

  • இவ்வடுக்கு உயர்மட்ட அடுக்காகும்.
  • அதிக அளவு சுவர்தலுக்கு (Leaching), உட்பட்ட அடுக்கு
  • களிமண், இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடு போன்ற தாதுக்கள் இவ்வடுக்கில் கனிசமாக காணப்படுகின்றன.

அடி மண்

  • இவ்வடுக்கு தாய்பாறையின் இரசாயன, (அ) பௌதீக மாற்றத்திற்கு உட்பட்டவை.
  • இரும்பு, களிமண், அலுமினிய ஆக்ஸைடு மற்றும் கனிமப் பொருட்களால் தோன்றிய அடுக்கு அல்லது திரள் மண்டலம் (Zone of Accumulation) என அழைக்கப்படுகிறது

தாய்பாறை அடுக்கு

  • இவ்வடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்படுகின்றன.
  • சிதைவடையாத தாய்ப்பாறை
  • இவ்வடுக்கு சிதைவடையாத அடிமட்ட பாறையாகும்.

4. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்

வண்டல் மண்

  • வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது.
  • இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கது.
  • இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

கரிசல் மண்

  • கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
  • கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
  • கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும்.

செம்மண்

  • செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது.
  • இம்மண்ணில் உள்ள இரும்பு ஆக்சைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

சரளை மண்

  • சரளை மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது.
  • இம்மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் (Leaching) செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து காணப்படுகிறது.
  • இது தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

மலை மண்

  • மலைமண், மலைச்சரிவுகளில் காணப்படுகிறது.
  • இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது.
  • உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.

பாலை மண்

  • பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
  • இது உவர்தன்மை, மற்றும் நுண்துளைகளைக் கொண்டது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.

Leave a Reply