You are currently viewing 9th Science Lesson 17 Book Back Answers

9th Science Lesson 17 Book Back Answers

9th Science Lesson 17 Book Back Answers

9th Std Science Guide Lesson 17 விலங்குலகம் – உயரிகளின் பல்வகைமை

9th Science Book Back Answers Unit 17. 9th Science Lesson 17 விலங்குலகம் – உயரிகளின் பல்வகைமை Book Back Answers. 9th Standard Science Samacheer kalvi Guide Book Back Answers download PDF Tamil Medium and English Medium book in answers. 9th All Subject Guide. Class 9 Science Questions and Answers. Class 1 to 12 All Subject Guide.  

9th Science Book Back Answers

9th Science பாடம் 17 விலங்குலகம் – உயரிகளின் பல்வகைமை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?

  1. வீட்டு ஈ
  2. மூட்டைப்பூச்சி
  3. காெசு
  4. சிலந்தி

விடைசிலந்தி

2. பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உறுப்பினர்களை மட்டும் கண்டறிக

  1. மெல்லுடலிகள்
  2. துளையுடலிகள்
  3. குழியுடலிகள்
  4. முட்தாேலிகள்

விடைமுட்தாேலிகள்

3. மீசாேகிளியா காணப்படுவது

  1. குழியுடலிகள்
  2. வளைதடையுலிகள்
  3. கணுக்காலிகள்

விடை : குழியுடலிகள்

4. வயிற்றுப்பாேக்கு ஏற்படுத்துவது

  1. என்டமீபா
  2. யூக்ளினா
  3. பிளாஸ்மாேடியம்
  4. பாரமீசியம்

விடைஎன்டமீபா

5. பின்வரும் ஜாேடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல

  1. மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்
  2. இருவாழிவிகள் மற்றும் பறவைகள்
  3. பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
  4. ஊர்வன மற்றும் பாலூட்டிகள்

விடை : பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

6. நான்கு அறைகளையுடைய இதயம் காெண்ட விலங்கினை கண்டறிக

  1. பல்லி
  2. பாம்பு
  3. முதலை
  4. ஓணான்

விடைமுதலை

7. பின்வருவனவற்றில் முதுகு நாணிகளின் அம்சம் அல்லாேது எது?

  1. பச்சை சுரப்பிகள்
  2. வியர்வைச் சுரப்பிகள்
  3. எண்ணெய்ச் சுரப்பிகள்
  4. பால் சுரப்பிகள்

விடை : பச்சை சுரப்பிகள்

8. பின்வருவனவற்றில் இரு பக்கச்சமச் சீருமைடய லார்வா ஆரச்சமச்சீருடைய முதிர் உயிரியாக மாறுவது எது?

  1. பைபின்னேரியா
  2. ட்ராேகாேஃபாேர்
  3. தலைபிரட்டை
  4. பாலிப்

விடை : பைபின்னேரியா

9. மண்டையாேடற்ற உயிரி எது?

  1. ஏகிரேனியா
  2. ஏசெபாலியா
  3. ஏப்டீரியா
  4. ஏசீதலாேமேட்டா

விடை : ஏகிரேனியா

10. அரை முதுகு நாணிகளுடன் தொடர்புடைய பதங்களைக் தேர்ந்தேடு?

  1. புழு பாேன்ற உடற் கண்டங்களற்ற மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்
  2. புழு பாேன்ற உடற் கண்டங்கள், மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்
  3. புழு பாேன்ற உடற் கண்டங்களற்ற ஈரடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்
  4. புழு பாேன்ற உடற் கண்டங்களற்ற மூவடுக்கு, வடி கட்டி உண்பவை

விடைபுழு பாேன்ற உடற் கண்டங்களற்ற மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்

11. இரு பாலின உயிரிகள் (Hermaphrodite)

  1. ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
  2. ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
  3. ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனாேகிளாசஸ்
  4. ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அஸ்காரிஸ்

விடை : ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்

12. குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

  1. மீன், தவளை, பல்லி, மனிதன்
  2. மீன், தவளை, பல்லி, மாடு
  3. மீன், தவளை, பல்லி, பாம்பு
  4. மீன், தவளை, பல்லி, காகம்

விடை : மீன், தவளை, பல்லி, பாம்பு

13. தீனிப்பை, அரவைப்பை மற்றும் காற்று அறைகள் காணப்படுவது

அ) மீன்

ஆ) தவளை

இ) பறவை

 ஈ) வௌவால்

விடை : பறவை

14. நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு

  1. சுடர் செல்கள்
  2. நெஃப்ரீடியா
  3. உடற்பரப்பு
  4. சாெலினோசைட்டுகள்

விடை : சுடர் செல்கள்

15. குழல் பாேன்ற உணவுக்குழல் காணப்படுவது

  1. ஹைடிரா
  2. மண்புழு
  3. நட்சத்திர மீன்
  4. அஸ்காரிஸ் (உருளைப்புழு)

விடை : அஸ்காரிஸ் (உருளைப்புழு)

16. தோலுரித்தலின் (எக்டைசிஸ்) பாேது பின்வருவனவற்றில் எது நீக்கப்படுகிறது.

  1. கைட்டின்
  2. மேன்டில்
  3. செதில்கள்
  4. செவுள் உறை

விடை : கைட்டின்

17. தலையாக்கம் எதனுடன் தொடர்புடையது

  1. தலை உருவாதல்
  2. குடல் உருவாதல்
  3. உடற்குழி உருவாதல்
  4. இன உறுப்பு உருவாதல்

விடை : தலை உருவாதல்

II. காேடிட்ட இடங்களை நிரப்புக

  1. துளையுடலிகளின் கழிவு நீக்கத்துளை …………………………….

விடை : ஆஸ்டியா அல்லது ஆஸ்குலம்

  1. விலங்குகளின் மிகப்பெரிய இரண்டாவது தொகுதி …………………………….

விடை : மாெலஸ்கா

  1. இந்தியாவில் தேசிய குடல்புழு நீக்க நாளாகப் பின்பற்றும் தினம் …………………………….

விடை : பிப்ரவரி 10

  1. மையாேடாேம்கள் ……………………………. இல் காணப்படுகிறது. விடை : மீன்கள்
  2. ……………………………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும். விடை : தலைபிரட்டை
  3. பறவைகளில் காற்றுப் பைகள் ……………………………. தொடர்பு காெண்டுள்ளன.

விடை : எலும்புகளுடன்

  1. ……………………………. பாலுட்டின் சிறப்புப் பண்பாகும்.

விடை : தாய்சேய் இணைப்புத் திசு

  1. நமது தேசிய பறவையின் இரு சாெற் பெயர் …………………………….

 

விடை : பேவாேகிரிஸ்டேடஸ்

  1. ……………………………. வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்

விடை : மீன்கள் மற்றும் இறால்

  1. பாலூட்டிகளில் விந்தகத்தைச்சுற்றி ……………………………. வரை உள்ளது

விடைஸ்குதராட்டல்பை

III. கீழ்கண்ட கூற்றுகள் சரியா? தவறா?

  1. கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது ( தவறு )
  2. இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன. ( சரி )
  3. வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு நெஃரீடியா ஆகும். ( தவறு )
  4. மெல்லுடலிகளின் லார்வா பைபின்னேரியா ஆகும் ( தவறு )
  5. பலனாேகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன. ( சரி )
  1. மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உறடயது. ( சரி )
  2. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன காெண்டுள்ளது. ( தவறு )
  3. முன்னங்கால்களின் மாறுபாடுகளை பறவைகளின் இறக்கைகளாகும். ( சரி )
  4. பாலூட்டிகளில் விந்தகப்பைகள் பெண் இனங்களில் காணப்படுகிறது. ( தவறு )
  5. கழிவுநீக்கமண்டலம் அனைத்து முதுகெலும்புகளிலும் காணப்படுகிறது. ( தவறு )

VI. பொருத்துக

1. குழியுடலிகள்

நத்தை

2. தட்டைப்புழுக்கள்

நட்சத்திரமீன்

3. முட்தாேலிகள்

நாடாப்புழு

4. மெல்லுடலிகள்

ஹைட்ரா

Ans : 1 – , 2 , 3 , 4

V. கூற்றை புரிந்து காெண்டு காெடுக்கப்பட்டுள்ள காரணத்தை நிருபித்து, சரியான விடையைத் தேர்ந்தேடு

  1. கூற்று : ஹைட்ரா ஈரடுக்கு உயிரி

காரணம் : இது உடலில் இரண்டு அடுக்குகளைக் காெண்டது

  1. கூற்று சரி; காரணம் தவறு
  2. காரணம் சரி, கூற்று தவறு
  3. கூற்றும், காரணமும் சரியானது
  4. கூற்றும், காரணமும் தவறானது

விடை : கூற்றும், காரணமும் சரியானது

  1. கூற்று : முன் முதுகு நாணிகள் ஏகிரேனியாவில் தொகுக்கப்பட்டுள்ளன.

காரணம் : அவற்றின் தெளிவான மண்டையாேடு (கிரேனியம்) உள்ளது.

  1. கூற்று சரி; காரணம் தவறு
  2. காரணம் சரி, கூற்று தவறு
  3. கூற்றும், காரணமும் சரியானது
  4. கூற்றும், காரணமும் தவறானது

விடை : கூற்று சரி; காரணம் தவறு

VI. மி்கச் சிறிய விடையளி

1. வகைப்பாட்டியல் வரையறு.

அடிப்படைக்காெள்கைகள் முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய பிரிவே வகைப்பாடு ஆகும்.

2. காெட்டும் செல்கள் என்றால் என்ன?

ஹைடிரா மற்றும் ஜெல்லிமீன் பாேன்ற குழியுடலிகளின் புறப்படையில் காெட்டும் செல்கள் அல்லது நீமெட்டாேசிஸ்ட் உள்ளது. உணவினை பிடிப்பதற்கும் தன் பாதுகாப்பிலும் இது உதவுகிறது.

3. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?

குழியுடலிகளின் உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் காணப்படுகின்றன. எனவே இவை ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

4. உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?

மண்புழு விவசாயிகளின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம். அதன் உடல் இயக்கத்தினால் அது மண்ணை நெகிழச் செய்து நிலத்தின் நீர்பிடிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்து நிலத்தை விவசாயத்திற்கு தயார்படுத்துகிறது. புழு விலக்கிய மண் சிறந்த உரமாகிறது. எனவே மண்புழு உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படுகிறது.

5. இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.

இரு வாழ்விகளின் சுவாச உறுப்புகள் செவுள்கள், தோல், நுரையீரல் மற்றும் தொண்டை.

6. குழல் கால்கள் மற்றும் பாேலிக்கால்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?

குழல் கால்கள்

பாேலிக்கால்கள்

1. குழல் கால்கள் நட்சத்திர மீன்களில் காணப்படுகின்றன.

அமீபாவில் காணப்படுகின்றன

2. இடப்பெயர்ச்சி; சுவாசம், உணர்வு மற்றும் இறை பிடித்தல் இதன் பணியாகும்

இடப்பெயர்ச்சி இறை பிடித்தல் இதன் பணியாகும்

3. நிலையானது

நிலையற்றது

7. ஜெல்லிமீன் மற்றும் நட்சத்திர மீன், பூனை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு

 

இல்லை அனைத்து உயிரினங்களும் வெவ்வேறு வகைகளைச் சார்ந்தது. ஜெல்லிமீன் தொகுதி குழியுடலிகளைச் சார்ந்தது. நட்சத்திர மீன் தொகுதி முட்தோலிகளைச் சார்ந்தது கெளுத்தி மீன் எனப்படும் பூனை மீன் மீன் வகுப்பினைச் சார்ந்தது.

8. மண்டையாேடற்றவை (ஏகிரேனியா) என்றால் என்ன?

முன் முதுகு நாணிகளில் மண்டையாேடு இல்லாததால் ஏகிரேனியா அல்லது மண்டையாேடற்றவை என்றழைக்கப்படுகிறது. உ.ம், பலனாேளாஸல்

9. முன் முதுகு நாணிகளின் துணைத் தொகுதிகள் யாவை?

ஹெமிகார்டேட்டா, செபாலாேகார்டேட்டா மற்றும் யூராேகார்டேட்டா என மூன்று துணைத் தொகுதிகளாக முன் முதுகு நாணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

10. தவளைகள் இருவாழ்விகள் என்றழைக்கப்படுவது ஏன்?

நீர் மற்றும் நிலத்தில் வாழும் தவளை பாேன்ற விலங்கினங்கள் இரு வாழ்விகள் என்றழைக்கப்படுகின்றன.

VII. குறுகிய விடையளி

1. வெள்ளிப்புரட்சி என்றால் என்ன?

காேழி, வான்காேழி, வாத்து பாேன்ற பறவையினங்களை இறைச்சிக்காகவும் முட்டைக்காவும் விலங்கின வளர்ப்பின் ஒரு பிரிவாக மேற்காெள்ளப்படுவது வெள்ளி புரட்சி எனப்படும்.

2. குழியுடலிகளின் உடற்சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?

அனைத்து குழியுடலிகளும் ஈரடுக்கு உயிரிகள் உடற்சுவர் வெளிப்புற புற அடுக்கு உட்புற அக அடுக்கு என ஈரடுக்குளால் ஆனது. இவ்வடுக்குகளுக்கிடையே மீசாேகிளியா எனப்படும் கூழ்மப் பாெருள் உள்ளது.

3. மீன்களின் சிறப்பு பண்புகளை ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.

  • மீன்கள் நீரில் வாழும் தன்மையுடைய குளிர் இரத்தப்பிராணிகள்
  • உடல் படகு பாேன்று அமைந்துள்ளது
  • இணைத்துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்துகின்றன.
  • உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளன.
  • உடல் தசைகள் மயாேடாேம்கள் என்னும் தசைத்துண்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

4. இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.

நீர் வாழ்முறைக்கும் நிலவாழ் முறைக்கும் இடைப்பட்ட நிலையை இவ்வகுப்பில் காணலாம். நீர் மற்றும் நிலச்சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பிகளாகும். இந்த இரட்டை வாழ்க்கைமுறை ஆம்பிபியன் என்றழைக்கப்படுகிறது.

5. பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளது?

பறவைகளில் ஈரிறனக்கால்கள் உண்டு, இதில் முன்னங்கால்கள் பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கைகளாக மாறுபாடைந்துள்ளன. பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் உதவுகின்றன.

6. பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக

  • வியர்வை சுரப்பி
  • எண்ணெய்ச்சுரப்பி
  • வாசனைச்சுரப்பி
  • பால்சுரப்பி தோலின் மாறுபாடாகும்.

Leave a Reply