You are currently viewing 9th Social Science Geography Guide Lesson 2

9th Social Science Geography Guide Lesson 2

9th Social Science Geography Guide Lesson 2

9th Social Science – Geography Guide Unit 2 பாறைக்கோளம்-II புவி அகச்செயல்முறைகள் – Tamil Medium

9th Standard Social Science Geography Lesson 2 பாறைக்கோளம்-II புவி அகச்செயல்முறைகள் Book Back Answers. 9th Social Guide Geography Unit 2 Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.

9th Social Science (History) Lesson -1 Book Back Answers

9th std Social Guide – Geography Lesson 2 பாறைக்கோளம்-II புவி புறச்செயல்பாடுகள்

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க.

1. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும்  _______________ என்று அழைக்கப்படுகிறது

  1. வானிலைச் சிதைவு
  2. அரித்தல்
  3. கடத்துதல்
  4. படியவைத்தல்

விடை : வானிலைச் சிதைவு

2. இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ……………………………… என்று அழைக்கின்றோம்.

  1. படிவுகளால் நிரப்பப்படுதல்
  2. அரிப்பினால் சமப்படுத்துதல்
  3. நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
  4. ஏதுமில்லை

விடை : நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

3. ……………………… ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

  1. தள்ளல்
  2. வண்டல் விசிறி
  3. டெல்டா
  4. மலை இடுக்கு

விடை : டெல்டா

 

4. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் ………………………

  1. பனியாறு
  2. காற்று
  3. கடல் அலைகள்
  4. நிலத்தடி நீர்

விடை : நிலத்தடி நீர்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின்  படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை.

  1. சர்க்
  2. மொரைன்
  3. டிரம்லின்
  4. எஸ்கர்

விடை : சர்க்

6. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் நன்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் …………… ஆகும்.

  1. காற்றடி வண்டல்
  2. பர்கான்
  3. ஹமாடோ
  4. மணல் சிற்றலைகள்

விடை : காற்றடி வண்டல்

7. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ……………………………

  1. கடல் அலை அரித்தல்
  2. ஆற்று நீர் அரித்தல்
  3. பனியாறு அரித்தல்
  4. காற்றின் படியவைத்தல்

விடை : கடல் அலை அரித்தல்

8. ………………………….. ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.

  1. காற்று
  2. பனியாறு
  3. ஆறு
  4. நிலத்தடி நீர்

விடை : பனியாறு

9. கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

  1. ஆசியா
  2. தக்காண பீடபூமி
  3. குலு பள்ளத்தாக்கு
  4. மெரினா கடற்கரை

விடை : தக்காண பீடபூமி

II. பொருத்துக

  1. கிளையாறு – பனியாற்றின் செயல்பாடு
  2. காளான் பாறை – கடல் அலைச் செயல்
  3. எஸ்கர் – ஆற்றின் மூப்பு நிலை
  4. கல் விழுது – ஏயோலியன
  5. ஓங்கல் – சுண்ணாம்புப் பாறை

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 –

9th Social Science Geography Guide Lesson 2

III. சுருக்கமாக விடையளி.

1. வானிலைச் சிதைவு – வரையறு

  • வளிமண்டல நிகழ்வோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன.
  • இச்செயல்பாடுகள் வானிலைச் சிதைவு எனப்படும்.

2. உயிரினச் சிதைவு என்றால் என்ன?

  • மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும், மனித செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச்சிதைவு எனப்படும்.
  • எ.கா. தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்வது.

3. ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதேனாடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக

ஆற்றின் மூன்று நிலைகள்

  1. இளநிலை
  2. முதிர்நிலை
  3. மூப்புநிலை

ஆற்றின் போக்குடன் தொடர்புடைய நிலத்தோற்றங்கள்

  1. V’ வடிவ பள்ளத்தாக்கு
  2. வண்டல் விசிறிகள்
  3. வெள்ளச்சமவெளிகள்
  4. டெல்டாக்கள்

4. குறுட்டு ஆறு என்றால் என்ன?

ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளைவாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குறுட்டு ஆறு எனப்படும்

5. கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?

கடற்குகை

கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடற்குகை எனப்படுகின்றன

 

கடல் வளைவு

அருகருகிலுள்ள இரு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள் மேலும் அரிக்கப்படுவதால் அவை இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வைளவுகள் கடல் வளைவுகள் எனப்படுகின்றன.

6. இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக.

  • மேற்கு பீஹார் – குப்தததாம் குகைகள்
  • உத்தரகாண்ட – ராபர்ட் குகை
  • மத்தியபிரதேசம் – பாண்டவர் குகைகள்
  • சத்தீஸ்கர் – குடும்சர் குகைகள்
  • ஆந்திரப்பிரதேசம் – போரோ குகைகள்

7. தாெங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?

  • முதன்மை பனியாற்றினோல் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தாங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.
  • பனியாறுகளின் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றகங்ளில் தொங்கும் பள்ளதாக்கும் ஒன்றாகும்.

8. வரையறு, அ) மொரைன் ஆ) டிரம்ளின் இ) எஸ்கர்

அ) மொரைன்

  • பள்ளத்தாக்கு அல்லது கண்டப் பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன் எனப்படும்.
  • படுகை மொரைன், விளிம்பு மொரைன் மற்றும் பக்க மொரைன் என வகைப்படுத்தப்படும்

ஆ) டிரம்ளின்

கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைனகள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.

இ) எஸ்கர்

  • பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள் சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது.
  • இவ்வோறு படிய வைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகளே எஸ்கர்கள் எனப்படுகின்றன.

9. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களைப் பட்டியலிடு

காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்

  1. காளான் பாறை
  2. இன்சல்பர்க்
  3. யார்டங்

10. கடல் அலை அரிமேடை என்றால் என்ன?

  • ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு தோன்றும் அலை அரிமேடை ஆகும்.
  • இது பென்ச், திட்டு, திடல், சமவெளி எனவும் அழைக்கப்படுகிறது

9th Social Science Geography Guide Lesson 2

IV. வேறுபடுத்துக

1.இயற்பியல் சிதைவு மற்றும் இரசாயனச் சிதைவு

இயற்பியல் சிதைவு

இரசாயனச் சிதைவு

இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும்  அடையாமல் உடைபடுவது இயற்பியல் சிதைவு எனப்படும்

பாறைறகளில் இரசாயன மாற்றம் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைதல் இரசாயனச் சிதைவு எனப்படும்

உதாரணம் : பாறை உரிதல், சிறு துகள்களாகச் சிதைவுறுதல்,பாறை பிரிந்துடைதல்

உதாரணம் : ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்கொள்ளல்

2. டெல்டா மற்றும் ஓத பொங்கு முகம்

டெல்டா

ஓத பொங்கு முகம்

ஆற்றின் முகத்துவாரங்களில் படிவுகள் முக்கோண வடிவில் படிவுகளால் ஏற்படும் நிலத்தோற்றம் டெல்டா ஆகும்.

ஆறு கடலில் சேருமிடங்களில்  உருவாகிறது. இவ்வகை நிலத் தோற்றங்களில் படிய வைத்தல் செயல் கிடையாது.

உதாரணம் : காவிரி டெல்டா

உதாரணம் : நர்மதா மற்றும் தபதி

 

3. கல்விழுது மற்றும் கல்முனை

கல்விழுது

கல்முனை

குகைகளின் கூரைகளில் இருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் ஆவியாகும் போது கால்சைட்  விழுதுகள் போன்று காட்சி அளிக்கும். இது கல்விழுது எனப்படும்

குகைகளின் கூரைகளில் இருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல்நோக்கி
வளர்வது கல் முனை எனப்படும். இது கல்முனை எனப்படும்

கல்விழுது கீழ் நோக்கி வளரும்

கல்முனை மேல் நோக்கி வளரும்

4. நீண்ட மணற்குன்று மற்றும் குறுக்கு மணற்குன்று

நீண்ட மணற்குன்று

குறுக்கு மணற்குன்று

1. நீண்ட மணல் மேடுகள் குறுகிய மணற் தொடர்களாக நீண்டு  காணப்படும்.

குறுக்கு மணல் மேடுகள் சமச்சீரற்ற வடிவத்தில் காணப்படும

இவை காற்று வீசும் திசைக்கு இணையாகக் காணப்படும்.

காற்று வேகமாகவும் மிதமாகவும் மாறி, மாறி ஒரே திசையில் வீசும் போது குறுக்கு மணல் மேடுகள் உருவாகின்றன.

5. இன்சல்பர்க் மற்றும் யார்டங்

இன்சல்பர்க்

யார்டங்

இன்சல்பர்க் என்றால் ஜெர்மனிய வார்த்தையில் தீவுமலை எனப் பொருள்படும். வறண்ட பிரதேசத்தில் காணப்படும். தீப்பாறைகள் காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும், இந்நிலத்தோற்றமே இன்சல்பர்க் எனப்படும்

வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சிலபாறைகள் கடின மற்றும் மென்பாறை என மாறி மாறி அமைந்திருக்கும். இந்த வரிசையில் மென் பாறைகள் காற்றினால் எளிதல் அரிக்கப்பட்டு விடும். காற்றினால் அரிக்கப்படாத கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போன்று காட்சி அளிக்கும். இவ்வகை நிலத்தோற்றங்களே யார்டங்குகள் எனப்படும்

6. கண்டப்பனியாறு மற்றும் பள்ளத்தாக்குப் பனியாறு

கண்டப்பனியாறு

பள்ளத்தாக்குப் பனியாறு

கண்டங்களில் அடர்ந்த பனியால் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு கண்டப் பனியோறு எனப்படுகிறது

பனி மூடிய மலைத் தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறு, பள்ளத்தாக்கு பனியாறு எனப்படுகிறது.

7. நீண்ட மணல் திட்டு மற்றும் மணல்திட்டு

நீண்ட மணல் திட்டு

மணல்திட்டு

மணல் திட்டின் ஒருமுனை நிலத்தோடு இணைந்தும் மறுமுனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும

கடற்கரையில் மணற்படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றம்.

பொதுவாக ஓத பொங்கு முகங்களில் காணப்படும்

இவை கடற்கரைக்கு இணையாகக் காணப்படும்.

 

V. காரணம் கூறு

1. வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த மண்டலங்களில் இரசாயனச் சிதைவு அதிகமாக ஏற்படுகிறது.

அதிக வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட நிலநடுக்கோட்டுப் பகுதிகள், வெப்ப மண்டலப் பகுதிகள், மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் இரசாயனச் சிதைவுறுதல் அதிகம் நடைறுகிறது.

காரணம் இரசாயனச் சிதைவுகளான ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைசல், நீர்கொள்ளல் ஆகியவை நீர், வெப்பம் இன்றி நிகழாது.

2. ஒதப் பாெங்கு முகங்களில் மென்மையான வண்டல் படிவுகள் குறைவாகப் படிய வைக்கப்படுகிறது.

ஒதப் பொங்கு முகங்களில் அலைகளின் அரித்தல் காரணமாக இங்கு டெல்டாக்களர் போல மென்மையான வண்டல் படிவுகளை படிய வைக்க முடிவதில்லை அல்லது மிகக் குறைவாக படிய வைக்கப்படுகிறது.

3. துருவப் பகுதிகளில் உதை பனிக்காேடு கடல் மட்டத்திற்கு இணையாக உள்ளது.

துருவப்பகுதிள் மிகவும் குளிரானவை. நிரந்தரமாக பனி மூடியிருக்கும் பகுதியாகும். உதாரணமாக ஆல்ப்ஸ் மலையில் உறைபனிக்கோடு 2700மீ ஆகும். ஆனால் கீரின்லாந்தில் உறைபனிக்கோடு 600 மீ ஆகும்.

4. பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு

காற்று எப்போதும் ஒரே திசையில் அடிப்பதில்லை. காற்று அனைத்து திசைகளிலும் கலத்திற்கேற்ப மாறி அடிப்பதால், பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு.

5. சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களின் மேற்பரப்பில் வடிகால் குறைவாக இருக்கும்.

சுண்ணாம்புப் பாறை நீரில் எளிதில் கரையும் தன்மையுடையது. கரைதல் மூலமாக பள்ளங்களில் நீர் உறிஞ்சப்படுகின்றது.

VI. பத்தியளவில் விடையளி

1. வானிலைச் சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.

  • வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன
  • இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கிறோம்.

வானிலைச் சிதைவு மூன்று வகைப்படும்

  1. இயற்பியல் சிதைவு,
  2. 2. இரசயானச் சிதைவு,
  3. 3. உயரினச் சிதைவு

இயற்பியல் சிதைவு

  • இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற்பியல் சிதைவு எனப்படுகிறது.
  • பகல் நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன.
  • இரவு நேரத்தில் அதிகக் குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன.
  • இந்த தொடர்ச்சியோன நிகழ்வின் காரணமாக பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன.

இயற்பியல் சிதைவு நிகழ்வுகள்

  1. பாறை உரிதல்,
  2. சிறு துகள்களாகச் சிதைவுறுதல்
  3. பாறைப் பிரிந்துடைதல்

இரசயானச் சிதைவு

  • பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதல் இரசாயனச் சிதைவு எனப்படுகிறது

இரசயானச் சிதைவு நிகழ்வுகள்

  • ஆக்ஸிகரணம்
  • கார்பனாக்கம்
  • கரைதல்
  • நீர்கொள்ளல்

உயரினச் சிதைவு

  • மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும், மனித செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச்சிதைவு எனப்படும்.
  • எ.கா. தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்வது.

உயரினச் சிதைவு நிகழ்வுகள்

  1. தாவர வேர்கள் மற்றும் மண்புழுக்கள் ஊடுருவுதல்
  2. தாவர வேர்களால் விரிவடைதல்
  3. விலங்குகள் குழி தோண்டுதல்
  4. மனித செயல்பாடுகள்

2. நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி

சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் கார்பன்-டை ஆக்ஸைடு கலந்த மலை நீர் விழும் போது அப்பிரதேசங்களிலுள்ள சுண்ணாம்புடன் வேதிவினைபுரிந்து அதனை கரைத்து, சிதைத்து விடுகிறது.

இதன் விளைவாக டெர்ரா ரோஸா, லேப்பீஸ், உறிஞ்சித்துளை, மழைநீரால் கரைந்து உண்டான குடைவு, டோலின், யுவாலா, போல்ஜே குகைகள், அடிநிலக்குகை போன்ற நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன

டெர்ரா ரோஸா

  • சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் உள்ள சுண்ணாம்பு மண் கரைந்து சிதைவுற்று பின்னர் அதிலுள்ள எஞ்சிய செம்மண் இங்கு படியவைக்கப்படுவதால் இந்நிலத்தாேற்றம் உருவாக்கப்படுகிறது.
  • இம்மண் சிகப்பு நிறமாக காணப்படுவதற்கு அதிலுள்ள இரும்பு ஆக்ஸைடு காரணமாகும்.

லேப்பீஸ்

  • கரடு முரடாக உள்ள சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடும் போது நீண்ட அரிப்புக் குடைவுகள் ஏற்படுகின்றன.
  • இக்குடைவுகளே லேப்பீஸ்கள் எனறு அழைக்கப்படுகின்றன.

உறிஞ்சித்துளை

  • சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள் உறிஞ்சு துளைகள் எனப்படுகின்றன.
  • இதன் சராசரி ஆழம் 3 முதல் 9 மீ வரை காணப்படும்.

குகைகள் மற்றும் அடிநலக் குகைகள்

  • கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது.
  • அடிநிலக் குகைகளின் தரைப்பகுதி சமமற்றுக் காணப்படும்.

கல்விழுது, கல்முனை, மற்றும் செங்குத்துக் கல்தூண்

  • குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும்போது கால்சைட் விழுதுகள் போன்று காடசியளிக்கும். இது கல்விழுது என்று அழைக்கப்படுகிறது.
  • கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல்நோக்கி வளர்வது கல்முனை எனப்படும்
  • கீழ்நோக்கி வளரும் கல்விழுதும், மேல்நோக்கி வளரும் கல்முனையும் ஒன்று சேரந்து செங்குத்து கல்தூணாக உருவாகிறது.

3. பனியாறு என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக

  • பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது.
  • பெரும் பரப்பளவில் உள்ள பனிக்கட்டிகள் அதன் அடிப்பாகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வெப்பம் உருவாகி பனிகட்டியின் அடியில் உருகி மெல்ல நகரத் தொடங்குகிறது.
  • இந்நகர்விற்கான காரணங்கள் சரிவு, பனிக்கட்டியின் கன அளவு, அடர்த்தி, பயனிக்கும் நித்தின் உராயும் தன்மை மற்றும் வெப்பம் போன்றவை ஆகும்.

பனியாறுகளின் வகைகள்

பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாக கொண்டு

  • கண்டப் பனியாறுகள்
  • பள்ளத்தாக்கு பனியாறுகள்

கண்டப் பனியாறுகள்

கண்டங்களில் அடர்ந்த பனியால் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு கண்டப் பனியாறு எனப்படுகிறது.

பள்ளத்தாக்கு பனியாறுகள்

பனிமூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படுகிறது.

4. காற்று படியவைத்தல் செயலினை விவரி

மணல்மேடு

பாலைவனங்களில் வீசும் மணல் புயல் மிக மிக அதிக அளவில் மணலைக் கடத்துகின்றன. காற்றின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட படிவுகள் மிக அதிக அளவில் குன்று போல் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு குன்று அல்லது மேடாக காணப்படும் நிலத்தோற்றம் மணல் மேடு எனப்படுகிறது.

இதன் வகைகள்

  1. பர்கான்
  2. குறுக்கு மணல்மேடு
  • நீண்ட மணல்மேடு
  1. காற்றடி வண்டல்
  2. பர்கான்

பிறை வடித்தில் தனித்துக காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் என

அழைக்கப்படுகின்றன. அவை காற்று வீசும் பக்கத்தில் மென் சரிவையும், காற்று வீசும் திசைக்கு எதிர் பக்கத்தில் வன்சரிவையும் காெண்டிருககும்.

  1. குறுக்கு மணல்மேடு

குறுக்கு மணல்மேடுகள் சமச்சீரற்ற வடித்தில் காணப்படும். காற்று வேகமாகவும், மிதமாகவும் மாறி, மாறி ஒரே திசையில் வீசும் போது குறுக்கு மணல் மேடுகள் உருவாகின்றன.

iii. நீண்ட மணல்மேடு

நீண்ட மணல்மேடுகள் குறுகிய  மணற் தொடர்களாக நீண்டு காணப்படும். இம்மணற் தொடர்கள் காற்று வீசும் திசைக்கு இணையாக காணப்படும். இவை சகாராவில் செய்ப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

  1. காற்றடி வண்டல்

பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான மற்றும் நுண்ணிய படிவுகளே காற்றடி வண்டல் எனப்படும்

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. ‘I’ வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
  2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
  3. ‘V’ வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவோகிறது
  4. 1,2 மற்றும் 3ம் சரி
  5. 1,2 சரி
  6. 1 மற்றும் 3ம் சரி
  7. 1 மட்டும் சரி

விடை : 1,2 சரி

  1. வாக்கியம் I : ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்.

வாக்கியம் II : ஆறுகள் ஒடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.

  1. வாக்கியம் I தவறு II சரி
  2. வாக்கியம் I மற்றும் II தவறு
  3. வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
  4. வாக்கியம் I மற்றும் II சரி

விடை : வாக்கியம் I மற்றும் II சரி

III. வாக்கியம்: சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.

காரணம்: நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.

  1. வாக்கியம் சரி காரணம் தவறு
  2. வாக்கியம் தவறு காரணம் சரி
  3. வாக்கியம் மற்றும் காரணம் தவறு
  4. வாக்கியம் மற்றும் காரணம் சரி

விடை : வாக்கியம் சரி காரணம் தவறு

Leave a Reply