You are currently viewing 9th Tamil Guide Unit 3.1

9th Tamil Guide Unit 3.1

9th Tamil Guide Unit 3.1

9th Tamil 3rd Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 3.1 ஏறு தழுவுதல் Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 3 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 3

9th Tamil Samacheer Kalviuide Guide 3rd Lesson – Unit 3.1 ஏறு தழுவுதல்

3.1. ஏறு தழுவுதல்

I. பலவுள் தெரிக.

1. பொருந்தாத இணை எது?
  1. ஏறுகோள் – எருதுகட்டி
  2. திருவாரூர் – கரிக்கையூர்
  3. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  4. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
விடை : திருவாரூர் – கரிக்கையூர்
2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
  1. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
  2. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
  3. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
  4. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.
அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
  1. ஆ – அ – இ
  2. ஆ – இ – அ
  3. இ – ஆ – அ
  4. இ – அ – ஆ
விடை : ஆ – அ – இ

II. குறு வினா

1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
ஜல்லிக்கட்டு
மாடு பிடித்தல்
மஞ்சு விரட்டு
2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
ஏறுகோள்
எருதுகட்டி
3. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
சேலம்
நீலகிரி – கரிக்கையூர்
மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
தேனி – சித்திரக்கல் புடவு
சிந்துசமவெளி அகழாய்வு

III. சிறு வினா

1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
ஏறுதழுவுதல் இங்கனம் திணைநிலை வாழ்வுடன் பிணைந்துள்ளதை அறியலாம்.

IV. நெடு வினா

1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க
காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக்  ஸ்பெயின் நாடு கொண்டுள்ளது.
காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அதில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சில நாடுகளில் கொல்லவதும் உண்டு.வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது.
நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.
எவராலும் அடக்க முடியாத காளைகள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.
நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.
மாட்டுப் பொங்கள் விழாவினைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.
நமது கலை, பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.
குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும் வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஏறு தழுவுதல் – கூடுதல் வினாக்கள்

Leave a Reply