9th Tamil Guide Unit 5.4
9th Tamil 4th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers
9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.
- 9th Tamil Guide Unit 5 – Full Guide – Click Here
9th Tamil Samacheer Kalviuide Guide 5th Lesson – Unit 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை
5.4. வீட்டிற்கோர் புத்தகசாலை
I. குறு வினா
1. நீங்கள் விரும்பி படித்த நூல்கள் யாவை?
- திருக்குறள்
- மணிமேகலை
- தமிழ்விடு தூது
- புறநானூறு
2. அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளும் உனக்கு பிடித்தமானவற்றை எழுதுக.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
II. நெடு வினா
நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துக்ள யாவை?
முன்னுரை:-
- வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும் என்ற கருத்தை நம் ஒவ்வொருவரின் மனத்திலும் விதைத்தவர் பேரறிஞர் அண்ணா நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி வெளிப்படுகின்ற கருத்துக்களைக் காண்போம்.
நூலகம்:-
- வீடுகளில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பல பொருட்களும், சிறு கடை அளவுக்கு உடைகளும், சிறு வைத்தியசாலை அளவுக்கு மருந்துகள் இருக்கும். ஆனால் புத்தகசாலை மட்டும் இருக்காது.
- வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். மக்கள் மனத்திேல உலக அறிவு புக வழிவகை செய்ய வேண்டும்.
- அவர்கள் உலகம் மற்றும் நாட்டை அறி ஏடுகள் வேண்டும். அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
- கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் விஷேசங்களுக்குச் செல்லும்போது புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் சிறு புத்தகச் சாலையை எளிதில் அமைக்கலாம்.
நூலகள்:-
- பூகோளம், சரித்திரம் தொடர்பான ஏடுகள் இருக்க வேண்டும்.
- நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- சங்க இலக்கிய சாராம்சத்தைச் சாதாண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ஏடுகள் இருக்க வேண்டும்.
- விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தரும் நூல்கள் இருக்க வேண்டும்
- விடுதலைக்கு உழைத்தோர், மக்கள் மனமாசு துடைத்தோட, தொலை தேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள் விவேகிகள் ஆகியோர் வாழக்கைக்குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
முடிவுரை:-
- வீட்டிற்கோர் புத்தகசாலை
வீட்டிற்கோர் புத்தகசாலை – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. உலகமெங்கும் பயணம் செல்லும் ________________ நூலகம் தருகிறது.
விடை : பட்டறிவை
2. இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன ________________.
விடை : நூல்கள்
3. நடுவண் அரசு 2009 ஆம் ஆண்டு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ________________ வெளியிட்டது.
விடை : ஐந்து ரூபாய் நாணயத்தை
4. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ________________ உருவாக்கியது.
விடை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தை
5. எதையும் தாங்கும் ________________ வேண்டும்.
விடை : இதயம்
6. சென்னை மாகாணத்தைத் ________________ என மாற்றியவர் பேரறிஞர் அண்ணா
விடை : ‘தமிழ்நாடு’
7. ________________ உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா
விடை : இருமொழிச் சட்டத்தை
II. குறு வினா
1. தலைசிறந்த நண்பன்” என்று ஆபிரகாம் லிங்கன் யாரைக் கூறுகிறார்?
“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன்.
2. மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது எவை?
மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது சிரிப்பு, சிந்தனை
3. சிந்தனையைத் தூண்டுவது எவை?
சிந்தனையைத் தூண்டுவது கற்றல், நூல்கள்
4. எவற்றை தேடிப் பெற வேண்டும்?
நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெறவேண்டும்.
5. இளைஞர்களுக்குப் தேவையானவை எவை?
இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை
II. குறு வினா
அண்ணாவின் சிறப்பியல்களை கூறு
- தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர்.
- சிறந்த எழுத்தாளர்
- அண்ணாவைத் ‘தென்னகத்துப் பெர்னாட்ஷா‘ என்று அழைக்கப்ட்டார்.
- இவர் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்ப ஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர்.
- தம் திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர்
- 1935இல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
- ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார்.
- முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார்.
- சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
II. நெடு வினா
புகழுக்குரிய நூலகங்கள் சிலவற்றை கூறுக.
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்:-
- ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
- இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
கன்னிமரா நூலகம்:-
- உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமரா நூலகமே
- இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
- திருவனந்தபுரம் நடுவண் நூலகம்:-
- இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது.
தேசிய நூலகம்:-
- காெல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும்.
- இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
லைப்ரரி ஆப் காங்கிரஸ்:-
- உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்