You are currently viewing 9th Tamil Guide Unit 8.1

9th Tamil Guide Unit 8.1

9th Tamil Guide Unit 8.1

9th Tamil 8th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 8.1 பெரியாரின் சிந்தனைகள். Ninth Standard Tamil 8th Lesson Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 8 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 8

9th Tamil Samacheer Kalviuide Guide 8th Lesson – Unit 8.1 பெரியாரின் சிந்தனைகள்

8.1. பெரியாரின் சிந்தனைகள்

I. பலவுள் தெரிக

கூற்று – பெரியார் உயிர் எழுத்துக்களில் “ஐ” என்பதனை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார்
காரணம் – சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாக தமிழ் எதுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
  1. கூற்று சரி, காரணம் தவறு
  2. கூற்று, காரணம் இரண்டும் சரி
  3. கூற்று, காரணம் இரண்டும் தவறு
  4. கூற்று தவறு, காரணம் சரி

விடை : கூற்று சரி, காரணம் தவறு

II. குறு வினா

1. ‘பகுத்தறிவு’ எனறால் என்ன?

எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.

III. சிறு வினா

2. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
  • விழாக்கள் மற்றும் சடங்குகளால் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற விழாக்கள் மற்றும் சடங்குளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
  • திருமணத்தை எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
  • விழாக்கள், திருமணங்கள் மற்றும் சடங்குகள் நடத்த கடன் வாங்கி செலவு செய்து கடன்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
  • பெரியார் சொன்னதைக் கடைபிடித்திருந்தால் இந்நிலை வராது.

IV. நெடு வினா

1. மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக

இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்க வேண்டும்.
மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.
மதம், கடவுள் தொடரபற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான அறிவைத் தரும் இலக்கியம், அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலமே மொழியும் இலக்கியமும் மேன்மை அடையும்.
திருக்குறளைப் பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதுகிறார்.
இந்நூலில் அறிவியல் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம் என்றார் பெரியார்.
தமிழில் “ஐ” என்பத “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.

பெரியாரின் சிந்தனைகள் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. _____________ பெண்ணினப் போர்முரசு என்று புகழப்பட்டார்
விடை : தந்தை பெரியார்

2. பெரியாருக்குத்  _____________  என்ற பட்டம் கொடுத்த அமைப்பு யுனெஸ்கோ
விடை : “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்”

3. பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செயத உயிரெழுத்துகள் _____________ ஆகும்
விடை : ஐ, ஒள

4. _____________ பெரியார் தோற்றுவித்தார்
விடை : சுயமரியாதை இயக்கத்தை

5. அறிவியல் அடிப்படையில் _____________ அமைந்தவை
விடை : பெரியாரின் சிந்தனைகள்

6. _____________ என்பது மனித சமூகத்தின் வாழக்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன.
விடை : மதங்கள்

7. சமூக வளர்ச்சிக்குக் _____________ மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.

விடை : கல்வியை

8. ஒரு மொழியின் தேவை அதன்_____________ கொண்டே அமைகிறது.
விடை : பயன்பாட்டு முறையை

9. 1938-ல் சென்னை பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு _____________ பட்டம் வழங்கியது.
விடை : பெரியார்

II. குறு வினா

1. பெரியாரின் சிறப்பு பெயர்கள் யாவை?
  • வெண்தாடி வேந்தர்
  • சுயமரியாதைச் சுடர்
  • பகுத்தறிவுப் பகலவன்
  • வைக்கம் வீரர்
  • ஈரோட்டுச் சிங்கம்
  • தெற்காசியாவின் சாக்ரடீஸ்
  • பெண்ணினப் போர்முரசு
  • புத்துலகத் தொலைநோக்காளர்
2. எது மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்துகிறார் பெரியார்?
  • சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப்போவதில்லை. அதனால் சண்டைகளும், குழப்பங்களும் தான் மேலோங்கிறது.

அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தினார் பெரியார்.

3. பெரியாரின் தன் சிந்தனையால் புரட்சியை ஏற்படுத்திய துறைகள் எவை?
  • சமூகம்
  • பண்பாடு
  • மொழி
  • கல்வி
  • பொருளாதாரம்
4. தந்தை பெரியார் எதிர்த்தவை எவை?
  • இந்தி திணிப்பு
  • குலக்கல்வித் திட்டம்
  • தேவதாசி முறை
  • எள்ளுண்ணல்
  • குழந்தைத் திருமணம்
  • மணக்கொடை
5. பெரியார் சுய மரியாதை இயக்கத்தை எப்போது தோற்றுவித்தார்?
  • பெரியார் சுய மரியாதை இயக்கத்தை 1925 தோற்றுவித்தார்
6. பெரியார் எந்தெந்த இதழ்களை நடத்தினார்?
  • குடியரசு
  • உண்மை
  • விடுதலை
  • ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

III. சிறு வினா

1. பெரியார் விதைத்த விதைகள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிடலாம்?
  • கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்களுக்கு சொத்துரிமை
  • குடும்ப நலத் திட்டம்
  • கலப்புத் திருமணம்
  • சீர்திருத்தத் திருமணச் சட்டம்

Leave a Reply