You are currently viewing 9th Tamil Guide Unit 9.1

9th Tamil Guide Unit 9.1

9th Tamil Guide Unit 9.1

9th Tamil 9th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 9.1 விரிவாகும் ஆளுமை. Ninth Standard Tamil 9th Lesson Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 9 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 9

9th Tamil Samacheer Kalviuide Guide 8th Lesson – Unit 9.1 விரிவாகும் ஆளுமை

9.1. விரிவாகும் ஆளுமை

I. பலவுள் தெரிக

1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
  1. கொம்பு
  2. மலையுச்சி
  3. சங்கு
  4. மேடு

விடை : மலையுச்சி

2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை?
  1. நிலையற்ற வாழ்க்கை
  2. பிறருக்காக வாழ்தல்
  3. இம்மை மறுமை
  4. ஒன்றே உலகம்

விடை : ஒன்றே உலகம்

II. குறு வினா

1. தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?
  • தமிழ்ச்சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்ற வரை சமுதாயத்திற்குப் பல நன்மைகள் செய்வான்.
  • ஆனால், உரோமையரின் சான்றோர் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்க்க வேண்டும்.

III. சிறு வினா

1. உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளைக் ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
  • மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.
  • இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
  • திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.
2. கோர்டன் ஆல்பர்ட கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
  • முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமைதான என்கிறார் கோர்டன் ஆல்பர்ட்
  • முதலாவது மனிதன், தன் ஈடுபாடுகளை வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய நலத்திற்கும், இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப் படுத்த வேண்டும்.
  • இரண்டாவது ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்து ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
  • மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையத் தரும் தத்துவத்தை கடைபிடித்து நடத்தல் வேண்டும்.

IV. நெடு வினா

1. தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துக்களைத் தனிநாயக அடிகளாரின் வழி நிறுவுக.
உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி பாராட்டுவது நம் இயல்பு
அதனையே

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு வரிகளையும்,
“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”
– என்னும் குறட்பா வரிகளும் கூறுகின்றன.

மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.

இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.

திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.

 விரிவாகும் ஆளுமை – கூடுதல் வினாக்கள்… 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி நம் இயல்பு.
விடை : அன்பு பாராட்டுவது
2. குறிக்கோள் இல்லாத வீழ்ச்சி அடையும்
விடை : சமுதாயம்
3. தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் _____________ குறிப்பிடத்தக்கவர்.
விடை : தனிநாயகம் அடிகள்
4. திருவள்ளுவரை _____________ உலகப்புலவர் என்று போற்றினார்
விடை : ஜி.யு.பாேப்

II. குறு வினா

1. சீன அறிஞர்கள் யாவர்?
வாவோட்சு, கன்பூசியசு

2. கிரேக்க அறிஞர்கள் யாவர்
பிளேட்டா, அரிஸ்டாட்டில்

3. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை புறநானூற்றில் ஆலந்துகிழார் எப்படி கூறுகிறார்?
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று புறநானூற்றில் ஆலந்துகிழார் கூறுகிறார்.

4. எப்போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது?
பிறருக்காகப் பணி செய்யும் போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது.

5. சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் யார்?
சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் இத்தாலி நாட்டினர் உரோமையர்.

6. பிறர் நலக்கொள்கையும், பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் யார்?
தமிழ்நாட்டுப் பாணர்
புலவர்

7. தனிநாயகம் அடிகள் எவற்றை உருவாக்க காரணமாய் இருந்தார்?
தனிநாயகம் அடிகள் அகில உலகத் தமிழாய்வு மன்றம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக்க காரணமாய் இருந்தார்.

8. திருக்குறள் எதற்காக எழுதப்பட்ட நூல்?

மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்.

9. பண்புடமை பற்றி பரிப்பெருமாள் கூறியன யாவை?
பண்புடைமையாவது யாவர்மாட்டம் அன்பினராய் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்ததிறகுப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை

Leave a Reply