You are currently viewing 9th Tamil Unit 6 Book Back Answers 

9th Tamil Unit 6 Book Back Answers 

9th Tamil Unit 6 Book Back Answers 

வாழிய நிலனே – நாடு, சமூகம், அரசு, நிருவாகம்

• உரைநடை – இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
• செய்யுள் – சீவக சிந்தாமணி
• துணைப்பாாடம் – விண்ணையும் சாடுவோம்
• இலக்கணம் – வல்லினம் மிகா இடங்கள்
 
Ninth Standard Tamil New Syllabus இயல் 6 – 9th Tamil along with the corresponding book back questions and answers. This post covers the book back answers and solutions for 9th Tamil Nadu State Board 9th Standard Tamil textbook Answers. 9th All Subject Text Books Download pdf. Class 9 samacheer kalvi guide.
 
 

குறுவினா

1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

• கேப்டன் தாசன்       
 
• ஜானகி
 
• அப்துல் காதர்        
 
• இராஜாமணி
 
• சிதம்பரம்             
 
• கேப்டன் லட்சுமி
 
• லோகநாதன்          
 
• இராமு
 
 

2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

  • நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.
 

3. கருக்கொண்ட பச்சைப்பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

  • கருக்கொண்ட பச்சைப்பாம்பு நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.
 

4.  ‘ஓம்புவாார்’- பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

  • ஓம்புவார் – ஓம்பு + வ் + ஆர்
  • ஓம்பு – பகுதி
  • வ் –  எதிர்கால இடைநிலை
  • ஆர் –  பலர்பால் வினைமுற்று விகுதி
 

5. இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் அவர்கள் தமிழர்கள் பற்றிக் கூறியது யாது?கலாச்சாரம் காண்.

  • இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான். இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் என்றார்.

சிறுவினா

1. குறிப்பு வரைக: டோக்கியோ கேடட்ஸ்.

  • இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.
 

2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.

சகோதர சகோதரிகளே!

  • உச்சி முதல் உள்ளங்கால் வரை உறைந்து போகும் பனிப்பொழிவிலும், மலைத்துப் போகச் செய்யும் மலைச்சரிவுகளிலும் தன்னலம் கருதாது தன் வீட்டுநலனும் நாட்டுநலனும் கருத்திற்கொண்டு ஓயாது உழைக்கும் நம் உடன்பிறவாச் சகோதரர்களுக்கு உணர்ச்சிமிக்க வணக்கத்தினைத் தெரிவிக்கிறோம்.
  • ‘வீடு காக்க என் தமிழினம் உண்டு’ நம்பிக்கையில் ‘நாடு காக்கச்’ சென்றுள்ள அஞ்சா நெஞ்சங்களின் தியாகத்தினைப் போற்றுகிறோம்.
    மன்னுயிர் காக்கத் தங்கள் இன்னுயிரையும் ஈந்த இந்தியத்தாயின் வெற்றித் திருமகன்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?
    செந்நீர் சிந்தும் தியாகச் சுடர்களே! உங்கள் வீரமிக்க பணியைப் பாராட்டுகிறோம்!

வாழ்க என் தாய் தமிழ் வீரர்கள்!
வாழ்க என் தமிழகம்!

 

3. ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் எப்படிப் பரவியுள்ளது என்பதனைத் திருத்தக்கத் தேவர் எங்ஙனம் கூறுகின்றார்?

பார் போற்றும் ஏமாங்கதம்

  • உயரமான தென்னை மரத்திலிருந்து நன்றாக முற்றிய காய் விழுகிறது.
  • அது விழுகின்ற வேகத்தில் கீழுள்ள பாக்கு மரத்தின் உச்சியிலுள்ள சுவைமிக்க தேங்காயைக் கிழித்து, பலா பழத்தினைப் பிளந்து, மாங்கனியைச் சிதற வைத்து வாழைப் பழங்களை உதிர்க்கவும் செய்தது.
  • இத்தகு வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் பரவியிருந்தது.
 

4. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

  • வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் இருக்கும்.
  • பசி என்று வருவோருக்கும், நாடி வருவோருக்கும் அறச்சாலைகள் ஆயிரம் இருக்கின்றன.
  • மகளிர் தம்மை ஒப்பனை செய்ய மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
  • செய்தொழிலில் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர்.
  • ஏமாங்கத நாட்டிலே இல்லாதவை இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன.

 

நெடுவினா

1. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக.

முன்னுரை:
 
இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் எனில் மிகையாகாது.
 
நேதாஜி அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது.
 
தூண்கள்:
 
1943ம் ஆண்டு, நேதாஜி “டெல்லி சலோ” என்ற முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை, பிரித்தானிய அரசை எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரிய தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்’ ஆவார்.
 
பசும்பொன் அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான் என்பவர், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் தான் ” என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர்.
 
இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்:
 
இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன் லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகித்து பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது.
 
இரண்டாம் உலகப்போரில் தமிழர்:
 
இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.
 
“தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது” என்றார் சர்ச்சில், அதற்கு பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்றார்.
 
மரணம் பெரிதன்று:
 
1943-45 ஆம் ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீத்தனர்.
 
நேதாஜியின் பாராட்டு:
 
இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செய்த தியாகங்களையும் கண்டு வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம் நம் தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது.
 
முடிவுரை:
 
தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும், என்றென்றும் போற்றுவதோடு, இராணுவ வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமைகளாகும்
 
 

2. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

முன்னுரை:
 
சீவகசிந்தாமணியில் “நாமகள் இலம்பகத்தில் ” நாட்டு வளம் என்னும் பகுதியில் ஏமாங்கத் நாட்டின் வளம், திருத்தக்கதேவரால் நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. ஏமாங்கதநாட்டு வளம் போலவே எம் ஊரின் வளங்களும் உள்ளன எனில் மிகையாகாது.
 
வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:
 
ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்தது.
 
தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும் முன் விழும் வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை , பலாச்சுளைகளோடு , வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது. இவ்வாறு ஏமாங்கத நாட்டை போலவே எம் ஊரும் முக்கனி வளமும், தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் நிறைந்தனவாய்க் காணப்படுகின்றது.
 
மண்வீசும் வயல்வளம்:
 
ஏமாங்கத நாட்டைப்போலவே, நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன. இவ்வாறு எருமைகளும், எருதுகளும், நீரைக் கலக்குவதாலும், சேறுமணமும், நீந்தும் மீன் மணமும் கலந்த வயல்பகுதிகளில் வெள்ளமென உழவர்கள் உழுதிருந்தனர்.
 
இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்:
 
கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள்.
 
அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.
 
ஆயிரம் விழாக்கள்:
 
வளம்மிக்க எம் ஊரில் ஆயிரம் வகையான உணவு உண்டு. பசியுடன் நாடி வருவோருக்கு உணவு வழங்கும் அறச்சாலைகள் ஆயிரம் உண்டு. மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் மணிமாடங்கள் ஆயிரம் உண்டு. சோம்பல் இன்றி தொழில் புரியும் கம்மியர்களும் ஆயிரக்கணக்கானோர் உண்டு. அதனால் திருமணங்களும், விழாக்களும் ஆயிரமாயிரமாய் நடைபெறுகின்றன.
 
முடிவுரை:
 
இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.
 

3. இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க

முன்னுரை:-
 
இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.
 
 
இஸ்ரோ:-
 
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,
குறைந்த செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.
இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
 
சாதனைகள்:-
 
1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்
1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.
சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.
நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது.
 
இஸ்ரோ:-
 
நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு.

மொழியை ஆள்வோம்

 

மொழி பெயர்க்க.

A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.

கூட்டு முயற்சி

ஒரு மான், ஓர் ஆமைக்குஞ்சு, ஒரு காகம், ஓர் எலி இவையாவும் நண்பர்கள். ஒரு நாள் மான் வேடனின் பொறியில் சிக்கியது. நண்பர்கள் அதனைக் காப்பாற்றத் திட்டமிட்டனர். திட்டமிட்டபடி மான் செத்தது மாதிரி அசைவற்றுக் கிடந்தது. காகம் அதன்மீது அமர்ந்து அதைக் கொத்தத் தொடங்கியது. ஆமைக் குஞ்சு வேடனின் பாதையைத் திசை திருப்பியது. மான் இறந்தது போலக் கிடந்ததால் வேடன் அதனை விடுவித்து, ஆமைக்குஞ்சுக்குப் பின்னால் சென்றான். அதே வேளையில் எலியும் வலையைக் கடித்தது. காகம் ஆமைக் குஞ்சினை வேடனிடமிருந்து விரைவாக எடுத்துச் சென்றது. இந்தப் பஞ்ச தந்திரக் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், கூட்டு முயற்சி மிகுந்த பலனைத் தரும் என்பதாகும்.
 

பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

1. புத்தகம் படிக்கலாம். (நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
(எ.கா) நல்ல புத்தகம் படிக்கலாம். நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்.
 
* நல்ல புத்தகத்தை ஆழ்ந்து படிக்கலாம்.
* நல்ல புத்தகத்தை நாளும் ஆழ்ந்து படிக்கலாம்.
* நல்ல புத்தகத்தை நாளும் ஆழ்ந்து தேர்ந்து படிக்கலாம்.
* நல்ல புத்தகத்தை நாளும் ஆழ்ந்து மகிழ்ந்து படிக்கலாம்.
* நல்ல புத்தகத்தை நாளும் ஆழ்ந்து உணர்ந்து படிக்கலாம்.
 
2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
* ஓடியாடி விளையாடுவது நன்று.
* மாலையில் ஓடியாடி விளையாடுவது நன்று.
* மாலையில் ஓடியாடி அனைவருடன் சேர்ந்து விளையாடுவது நன்று.
* மாலையில் ஓடியாடி அனைவருடன் சேர்ந்து திடலில் விளையாடுவது நன்று.

பிழை நீக்குக.

விடை :

பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்குப் புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போதும் அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.

பயண அனுபவங்களை விவரிக்க.

“எனது பயணம்” என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.

எனது பயணம்
  • எங்கள் ஊர் திருநெல்வேலி. எங்கள் வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா மற்றும் 4 சகோதரிகள், 3 சகோதரர்கள் என பதினெட்டு நபர்கள் சேர்ந்த கூட்டுக் குடும்பமாகும்.
  • வீட்டில் உள்ள நாங்கள் அனைவரும் கோடை விடுமுறையில் சென்னைக்குச் சுற்றுலா செல்லலாம் என முடிவெடுத்தோம்.
  • ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலி இரயில் நிலைய சந்திப்பில் சென்னை விரைவு வண்டியில் ஏறினோம். சென்னை அடைந்ததும் அனைவரும் மகிழ்வுந்தில் ஏறி வண்டலூரில் உள்ள எங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் ஓய்வு எடுத்துவிட்டு காலைச்சிற்றுண்டி உண்டுவிட்டு முதலில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குச் சென்றோம்.
  • பார்ப்பவர் அனைவரும் மலைத்துப்போகும் வகையில் எல்லாவகை வனவிலங்குகளையும் கண்டோம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
  • பின் அங்கிருந்து அஷ்டலெட்சுமி கோவில், சாந்தோம் கடற்கரை, மெரினா கடற்கரை, இறந்த தலைவர்களின் நினைவிடங்கள் ஆகிய அனைத்தையும் பார்த்தோம்.
  • பின் அனைவரும் செவ்வாய்கிழமை கிளம்பி திருநெல்வேலி வந்து சேர்ந்தோம்.
  • எங்கள் பயண நினைவுகள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து மகிழ்ச்சி தந்தது.

குறிப்புச் சட்டகம்

➤ முன்னுரை
➤ திரண்ட கருத்து
➤ பொருள்நயம்
➤ மையக்கருத்து
➤ மோனைத்தொடை
➤ எதுகைத்தொடை
➤ இயைபு
➤ சொல்நயம்
➤ சந்தநயம்
➤ சுவைநயம்
➤ அணி நயம்
➤ தலைப்பு
➤ முடிவுரை

முன்னுரை :

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களுள் ஒருவர் வாணிதாசன் எளிய சொற்களால் அரிய கருத்துகளை அழகுறப் பாடுவதில் வல்லவர். இயற்கையில் ஓடுகின்ற ஆறு, ஆற்றின் செயல்களை அழகுபடப் படம் பிடித்துச் சித்தரித்துள்ளார் வாணிதாசன். இதன் நயங்களைக் கீழ்க் காண்போம்.

திரண்ட கருத்து :

ஆறானது. வயலில் புகுந்து, நெல்மணிக்கதிர்களை விளையச் செய்து; வளைந்து பாய்ந்து, வயலின் பக்கத்திலுள்ள ஓடைகளிலும் சென்று, தாமரை கொட்டி ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச் செய்கிறது.

மீன்களாகிய செங்கண்ணையுடைய வரால், வாளை இவை கரையைத் தொட்டு வளர்ந்திருக்கின்ற தென்னை மரத்தில் பாயப் பெரிய வானைப் போன்று தோன்றுகின்ற குளத்தையும் நீரால் நிறைத்துவிடுகிறது.

பொருள்நயம்: மருதநிலத்தின் வளங்கள் இயற்கை தரும் இன்பக் காட்சிகள் இப்பாடலில் இடம்பெறுகின்றன.

மையக்கருத்து: ஆற்றின் வளம் அழகுபடக் கூறப்பட்டுள்ளது.

மோனைத்தொடை : அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனைத்தொடை ஆகும்.

எ.கா. : வயலிடை, வளைந்து, அயலுள, ஆம்பலின், விளைத்தாய், விரித்தாய், கயலிடை, கருவரால், கரை, பெயரிடை, பெருங்குளம்.

எதுகைத்தொடை : அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.
எ.கா. : வயலிடை, அயலுள, பாயப், பெயரிடை, கயலிடை, விளைத்தாய், வளைந்து, வாளை

இயைபு : அடிதோறும் இறுதி எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது இயைபு ஆகும்.
எ.கா. : விளைத்தாய், விரித்தாய், புகுந்தாய்.

சொல்நயம் : மணிக்கதிர், வளைந்துசெல் கால்களால், இதழ்களை விரித்தாய், கரைவளர் தென்னை, கருவரால் வாளை போன்ற சொற்றொடர்களில் சொல்நயம் மிகுந்துள்ளது.

சந்தநயம் : விளைத்தாய், விரித்தாய், நிறைத்து விட்டாயே எனச் சந்த நயங்கள் அமைந்துள்ளன.

சுவைநயம் : எண்வகை மெய்ப்பாடுகளில் ………… ஆற்றின் வளம் செய்யும் பெருமையை அழகுபடக் கூறியிருப்பது பெருமிதச் சுவையாக உள்ளது).

அணி நயம் : செய்யுளில் உள்ளதை மிகைப்படுத்தி உயர்வாகக் கூறுவது உயர்வு நவிற்சியணி ஆகும்.

“பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும் பெருங்குளம் …………

தலைப்பு : ஆற்றின் வளம்

முடிவுரை : வாணிதாசன் கவிஞர், வடித்த இப்பாடலில், பொருள் நயம், தொடைநயங்கள், சொல்நயம், சுவைநயம், அணி நயம் என அத்தனை நயங்களும் அழகுபட அமைந்துள்ளதால் இப்பாடல் சிறப்புற அமைந்துள்ளது.

 

விடை: அம்புலி  

பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை)

மானாமதுரை ஓர் அழகான பேரூர்; நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது.

வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

  • கால்
  • காலை
  • அன்பு
  • அதிகாலை
  • கலை
  • வலை
  • கல்
  • காதல்
  • புதன்
  • காவல்
  • புத்தகம்
  • அறிவன்
  • தில்லை
  • கா
  • தகவல்
  • அம்பு

விடை

தை மகள் மகிழ்ந்து புரியும் “தைப்பொங்கல்”
உழவர் தமக்கு உதவி புரியும் நன்றியின் விழா
“மாட்டுப்பொங்கல்” வழியும் இனிய
“பொங்கலோ பொங்கல்”
செங்கரும்பும் – கனிகளும் கதிரவனுக்குப்
படைத்திடும் சீர்மிகு விழா
பாரதமாதா களிநடம் புரியும் கலை விழா.

 

அகராதியில் காண்க.

  1. ஈகை – இல்லாதோர்க்குக் கொடுத்தல், வாரி வழங்குதல், கற்பகம், மேகம்.
  2. குறும்பு – சேட்டை, குற்றம், பகைவர், அரண், வலிமை.
  3. கோன் – அரசன், தலைவன், கட்டியங்காரன்.
  4. புகல் – கூறு, விருப்பம், புகழ், புகுதல், துணை, சரண்.
  5. மொய்ம்பு – வலிமை, தோள்.

 

நிற்க அதற்குத் தக

சமூகத்திற்கு எனது பணிகள்

அ) குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவேன்.

ஆ) தண்ணீர் வீணாவதை எங்குக் கண்டாலும் தடுப்பேன்.

இ) மழைநீர்ச் சேகரிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்துவேன்.

ஈ) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன்.

உ) ஊனமுற்றோர் சாலைகளைக் கடந்திட உதவுவேன்.

ஊ) சுவரில் வகுப்பறையிலோ, வெளியிலோ, கழிப்பறையிலோ வரைந்து கிறுக்குவதைத் தடுத்துத் தூய்மை காத்திட வலியுறுத்துவேன்.

எ) சாப்பாடு கொண்டுவராத உடன்பயிலும் நண்பனுக்கு எனது உணவைப் பகிர்ந்துக் கொடுத்து உண்பேன்.

படிப்போம் பயன்படுத்துவோம்

  • Martyrs – உயிர்த்தியாகம் செய்தவர்கள்
  • Combination – புணர்ச்சி
  • Indian National Army – இந்திய தேசிய இராணுவம்
  • Patriotism – நாட்டுப்பற்று
  • World War – உலகப்போர்

Leave a Reply