9th Tamil Unit Test Model Question Paper 2021

9th Tamil Unit Test Model Question Paper 2021

9th Standard Tamil Model Question Paper Unit 1, 2, 3 Madurai District. 50 Marks Question Paper PDF Download Link available at end of the page. 10th All Subject Unit Test Question Paper 2021. 11th All Subject Unit Test Question Paper 2021. 12th All Subject Unit Test Question Paper 2021.

  • ஒன்பதாம் வகுப்பு
  •  தமிழ்
  • அலகுத்தேர்வு ( இயல்கள் 1, 2, 3 )
  • காலம்: 1:30 மணி
  • மதிப்பெண்கள்: 50

பகுதி – 1

( மதிப்பெண்கள்: 06 )

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) தமிழ்விடு தூது —— என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ ) தொடர்நிலைச்செய்யுள்

ஆ ) புதுக்கவிதை

இ ) சிற்றிலக்கியம்

ஈ ) தனிப்பாடல்

2 ) மல்லல் மூதூர் வயவேந்தே – வண்ணமிட்ட சொல்லின் பொருள் என்ன ?

அ ) மறுமை

ஆ ) பூவரசுமரம்

இ ) வளம்

ஈ ) பெரிய

3 ) பொருந்தாத இணை எது ?

அ ) எருதுகோள் – எருதுகட்டி

ஆ ) திருவாரூர் – கரிக்கையூர்

இ ) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு

ஈ ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

4 ) தீரா இடும்பை தருவது எது ?

அ ) ஆராயாமை , ஐயப்படுதல்

ஆ ) குணம் , குற்றம்

இ ) பெருமை , சிறுமை

ஈ ) நாடாமை , பேணாமை

பாடலைப் படித்து விடை தருக.

” வசியும் வளனும் சுரக்க ! என வாழ்த்தி

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் “

5 ) இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ ) புறநானூறு

ஆ ) மணிமேகலை

இ ) தமிழ்விடுதூது

ஈ ) பெரியபுராணம்

6 ) வசியும் வளனும் – இலக்கணக்குறிப்பு

அ ) உம்மைத்தொகை

ஆ ) பெயரெச்சம்

ஆ ) வினைத்தொகை

ஈ ) எண்ணும்மை

 

பகுதி – 2

( மதிப்பெண்கள் 12 )

பிரிவு – 1

குறுகிய விடை தருக. ( மூன்று மட்டும் )

( வினா எண் 10 , கட்டாய வினா )

7 ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.

8 ) விடைக்கேற்ற வினா அமைக்க.

அ ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் கால்டுவெல்.

ஆ ) திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

9 ) ஏறுதழுவுதல் குறித்த தொல்லியல்

சான்று கள் இரண்டு கூறுக.

10 ) ‘ விடல் ‘ என முடியும் குறளை எழுதுக.

 

பிரிவு – 2

விடை தருக ( மூன்று மட்டும் )

11 ) பழமொழிகளை நிறைவு செய்க.

அ ) இளமையில் கல்வி ——–

ஆ ) கற்றோருக்குச் சென்ற ——

12 ) மரபு இணைச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ ) நகமும் சதையும்

ஆ கண்ணும் கருத்தும்

13 ) தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.

அ ) Every flower is a soul blossoming in nature

ஆ ) The art of people is a true mirror to their minds.

14 ) பொருள் எழுதித் தொடர் அமைக்க.

வாழை – வாளை

 

பகுதி – 3

( மதிப்பெண்கள் : 09 )

சுருக்கமான விடை தருக ( மூன்று மட்டும் )

( வினா எண் : 17 கட்டாய வினா )

15 ) மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது ?

16 ) நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை ?

17 ) ‘ காடெல்லாம் ‘ எனத்துவங்கும் பெரியபுராணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

18 ‘ படி ‘ என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு தொடர்கள் ( செய்தித்தொடர் , கட்டளைத்தொடர் , வினாத்தொடர் ) உருவாக்குக.

பகுதி – 4

( மதிப்பெண்கள் : 15 )

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.

19 ) உங்கள் நண்பர் பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணனின் ‘ கால் முளைத்த கதைகள் என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

20 ) நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்;

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் – பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

கவிமணி

21 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

9th Tamil Unit Test Model Question Paper 2021 STUDENTS GUIDE 360

22 ) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை –

இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

 

பகுதி – 5

( மதிப்பெண்கள் : 08 )

விரிவான விடை தருக.

23 ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்கள் யாவை ?

அல்லது

அகழாய்வின் தேவை குறித்த உனது கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

 

9th Tamil Unit Test Model Question Paper 2021 DOWNLOAD PDF

 

Leave a Reply