9th Tamil Unit 5 Book Back Answers
9th Standard இயல் 5 கலை பல வளர்த்தல் ( கலை, அழகியல், புதுமை )
Ninth Standard Tamil New Syllabus இயல் 5 கலை பல வளர்த்தல் ( கலை, அழகியல், புதுமை ) சிற்பக்கலை, இராவண காவியம் *, செய்தி, வல்லினம் மிகும் இடங்கள், திருக்குறள் *. 9th Book Back Question and Answer 2025 – 20256. 9th Tamil along with the corresponding book back questions and answers. This post covers the book back answers and solutions for 9th Tamil Nadu State Board 9th Standard Tamil textbook Answers. 9th All Subject Text Books Download pdf. Class 9 samacheer kalvi guide.

பலவுள் தெரிக.
1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று –
அ) மாமல்லபுரம்
ஆ) பிள்ளையார்பட்டி
இ) திரிபுவனவீரேசுவரம்
ஈ) தாடிக்கொம்பு
Ans: அ) மாமல்லபுரம்
2.’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப்பகுதி –
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) பாலை
Ans: இ) முல்லை
3. இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு-
அ) தனிச் சிறப்பு
ஆ) தைத்திங்கள்
இ) வடக்குப் பக்கம்
ஈ) நிலாச் சோறு
Ans: ஆ) தைத்திங்கள்
4. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை-
அ) விலங்கு உருவங்கள்
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள்
ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
Ans: ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
5.வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர்” – பாடல் அடிகளில் முதுநீர் என்பது எது?
அ) மழை நீர்
ஆ) கடல் நீர்
இ) ஆற்று நீர்
ஈ) நிலத்தடி நீர்
Ans: ஆ) கடல் நீர்
குறுவினா
1. நடுகல் என்றால் என்ன?
- போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடப்படும் கல் நடுகல் எனப்படும். அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும்.
- தமிழர்களின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக நடுகல்லைக் குறிப்பிடலாம்.
2. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
- பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைத்தூண்கள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.
3. இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் விளக்குக.
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.
சான்று:
- கதவைத் திற
- தகவல்களைத் திரட்டு
- காட்சியைப் பார்
4. உரிய இடங்களில் வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுக.
பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன. யோகக்கலை, நாட்டியக்கலைக் கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.
- பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
- யோகக்கலை, நாட்டியக்கலைக் கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.
5. பூக்கும் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பூக்கும் = பூ +க் +க்+உம்
- பூ- பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- உம் – வினைமுற்று விகுதி
சிறுவினா
1. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
முழு உருவச் சிற்பங்கள் | புடைப்புச் சிற்பங்கள் |
உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம். | முன்பகுதி மட்டும் தெரியும் படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம். |
தெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள் முழுவடிவ உருவங்கள் என நான்கு நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. | கோவில் தரைப்பகுதி, கோபுரம், தூண்கள். நுழைவாயில்கள்,சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடிகிறது. |
2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
-
நாயக்கர் மன்னர் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டங்களை அமைத்தனர். அம்மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்களைச் செதுக்கினர்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன.
-
அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் ஆடை, ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன.
-
இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் இடம் பெற்றுள்ளது.
-
நாயக்கர் காலச் சிற்பக்கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று கூறப்படும் பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்களின் விழியோட்டம், புருவ நெளிவு.நக அமைப்பு மிக நுட்பமான கலை நயத்துடன் காணப்படுகிறது,
3. எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக.
-
எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) எட்டுத்தொகை. பத்துப்பாட்டு
-
திசைப்பெயர்களின் பின் வலி மிகும் (எ.கா) கிழக்குப் பகுதி. வடக்குப்பக்கம்
4. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
-
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும்
-
உலையிலிட்ட மலை நெல்லரசிச் சோற்றின் மணமும்
-
காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலத்தின் எல்லா இடங்களின் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.
5. இராவண காவியத்தின் வழியே மருத நிலத்தின் அழகைப் புலவர் குழந்தை எங்ஙனம் காட்சிப்படுத்துகிறார்?
-
மலையிடையே தோன்றும் ஆறு கரையை மோதித் ததும்பும்
-
குளத்து நீரும் முல்லை நிலத்தின் ஆழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்.
-
நெற்பயிரினைக் காக்கும் கரும்பு வளர்ந்து நிற்கும்,
-
பெருகி வரும் நீரினைக் கால்வாய்வழி வயலில் தேக்கி வளம் பெருக்கும்
-
மருதநில வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.
நெடுவினா
1. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
குறிப்புச்சட்டகம்
- முன்னுரை
- பல்லவர் காலம்
- பாண்டியர் காலம்
- சோழர் காலம்
- விஜயநகர மன்னர் காலம்
- நாயக்கர் காலம்
- முடிவுரை
முன்னுரை:
கல்லிலும் உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன். அதில் சிற்பமெனும் நுண்கலையைக் கற்றான்.
தமிழர்களின் அழகியலை வெளிப்படுத்தியதால் அவர்களைக் கற்கவிஞர்கள் என அழைத்தனர். தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருக்கின்றன.
பல்லவர் காலம் :
பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும். அங்கு உருவாக்கப்பட்ட பஞ்சபாண்டவர் இரதங்கள் என அழைக்கப்படும் ஒற்றைக்கல் கோவில்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
காஞ்சிபுரம். திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்கள் இதற்குச் சான்றாகும்.
பாண்டியர் காலம்:
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை போன்ற இடங்களில் காணப்படும் சிற்பங்கள் பாண்டியர் காலத்தின் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.
சோழர் காலம் :
கங்கைகொண்ட சோழபுரம். திரிபுவன வீரேசுவரம். தஞ்சை பெரிய கோவில், நார்த்தாமலை, கொடும்பாளூர், குரங்குநாதர் கோவில் (திருச்சி) போன்ற இடங்களில் காணப்படும் சிற்பங்கள் சோழர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகள் ஆகும்.
விஜயநகர மன்னர் காலம்:
கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன.
மிகுதியான சிற்பத்தூண்கள், ஓசைகளை எழுப்பும் இசைக்காற்றூண்கள் போன்றவை விஜயநகர மன்னர் காலச் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது.
நாயக்கர் காலம் :
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் காணப்படும் சிற்பங்களும், சிற்பங்களில் ஆடை, ஆபரணங்களும் கலைநயத்துடன் காணப்படுகின்றன.
பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக்கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று கூறலாம்.
முடிவுரை :
சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகளாகவும், மனித அறிவு வளர்ச்சியின் முதிர்ச்சியாகவும் திகழ்கிறது. அத்தகு சிறப்புமிக்க சிற்பக்கலையைப் போற்றிப் பாதுகாப்போம்.
2. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
இயற்கை எழில் காட்சிகள்:
குறிஞ்சி :
- தீயில் இட்ட சந்தனம், அகில் இவற்றின் மணமும், நெல்லரிசிச் சோற்றின் மணமும். காந்தள் மலரின் மணமும் எல்லா இடங்களிலும் பரவின.
முல்லை:
- முதிரை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி நெல் போன்ற கதிர்களைக் குன்றுபோல் குவித்தனர். கதிரடிக்கும் ஓசை கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.
பாலை :
- பாலை நிலத்தின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குட்டிகள் வாய் குழறியது.
- வெயிலுக்குத் தானே நிழலாக நின்று தன் குட்டிகளை இளைப்பாறச் செய்தது தாய்.
மருதம்:
- மலையில் தோன்றும் ஆறும். கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலக்காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்.
- மருதநிலத்தில் பாயும் ஆறும் குளமும் கரும்பையும் நெற்பயிரையும் வளப்படுத்தின. அங்கே காஞ்சி, வஞ்சி மலர்களும் பூத்து நிற்கும்.
நெய்தல் :
- சான்றோர்கள் பசியால் வாடுவோரைக் கண்டு வருந்துவர். அதுபோலத் தான் வாழுமிடம் கடலில் மூழ்கினாலும் பவளங்களையும் முத்துகளையும் கடற்கரையில் கொண்டுவந்து குவிப்பர்.
3. இசைக்கு நாடு,மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக.
முன்னுரை:
- இசையின் செவ்வியில் தலைப்படும் மனமானது இனம், நாடு என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டிவிடும். இசை தாண்டவைக்கும்.
போல்ஸ்காவின் அறிமுகம்:
- நாகசுர வித்வான் பக்கவாத்தியங்களுடன் வக்கீல் வீட்டிற்குள் நுழைய அங்கே போல்ஸ்காவின் குழுவினரை நாகசுர வித்துவானுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தன்னை இழத்தல்:
- நாகசுர வித்வான் கீர்த்தனையில் போல்ஸ்கா தன்னை இழந்தார். அவருடைய ஆத்மா வேறு உலகிற்கு இழுத்துச் சென்றது.
ஆகாசன நிலை :
- வித்வான் வாசித்த சாமா ராகத்தை போல்ஸ்கா தலையசைத்து மகிழ்ந்து கொண்டிருந்தான். அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது. முகத்தில் புன்சிரிப்போடு உள்ளம் ஆகாசன நிலையை அடைந்தது.
வேறு ஏதும் வேண்டாம்:
- போல்ஸ்கா வித்வானைப் பார்த்து ‘வேறு ஒன்றையும் வாசிக்காதீர்கள். என் உயிர்போய்விடும் போல் இருக்கிறது. வேறு வேண்டாம்’ என்று கெஞ்சினான். எனவே அதையே மீண்டும் வாசித்தார்.
முழவுரை:
- இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதை இக்கதை உணர்த்துகிறது.
படித்துச் சுவைக்க.
மொழியை ஆள்வோம்
வான் தந்த பாடம் | The Lesson the Sky Teaches |
எத்தனை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே; இத்தரை, கொய்யாப் பிஞ்சு, நீ அதில் சிற்றெறும்பே, அத்தனை பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே! -பாவேந்தர் பாரதிதாசன் | How Vast is the sky! Think you of yourself; The earth is a tiny Guava fruit; you. like all Others are a tiny ant In it? is that not so? Why talk madly of The high and the low? Pavendar Bharathidasan (translated by P. Parameswaran |
மொழிபெயர்க்க.
-
1. Strengthen the body – உடலை உறுதி செய்
-
2. Love your Food – உணவை விரும்பு
-
3. Thinking is great – உள்ளுவது உயர்வுள்ளல்
-
4. Walk like a bull – காளையைப் போல் நட (ஏறு போல் நட)
-
5. Union is Strength – ஒற்றுமையே பலம்
-
6. Practice what you have learnt – நீ கற்றுக்கொண்டதைப் பயிற்சி செய்.
(- Puthiya Aathisoodi by Bharathiyar)
மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.
எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத் தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன். (எ.கா.) முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.
Ans:
எ.கா. எட்டாக்கனி – முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.
1. உடும்புப்பிடி – சான்றோர்களையும் அவர்களது அறிவுரைகளையும் உடும்புப்பிடியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
2. கிணற்றுத்தவளை – அறிவியல் தொழில்நுட்ப உலகில் நாம் மாறிக்கொள்ளாமல் கிணற்றுத்தவளையாக இருப்பதால் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.
3. ஆகாயத் தாமரை – (இல்லாத ஒன்று) உழைக்காமல் வெற்றி பெற நினைப்பது ஆகாயத்தாமரைக்கு ஆசைப்பட்டது போல இருக்கும்.
4. எடுப்பார் கைப்பிள்ளை – கரோன் சுயமாக எதையும் சிந்திக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் சொல்பவர்கள் பேச்சை எல்லாம் கேட்டு நடப்பான்.
5.மேளதாளத்துடன் – எங்கள் ஊர்த் திருவிழா மேளத்தாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
(எ.கா.) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
- விடை : இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
2. கயல் பானை செய்யக் கற்றுக்கொண்டாள்.
- விடை : கயல் பானை வனையக் கற்றுக்கொண்டாள்.
3.நேற்று தென்றல் காற்று அடித்தது.
- விடை : நேற்று தென்றல் காற்று வீசியது.
4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
- விடை: தென்னை நெற்றிலிருந்து நார் உரித்தார்.
5. அணில் பழம் சாப்பிட்டது.
- விடை : அணில் பழம் தின்றது.
கவிதை படைக்க
எ.கா.
1) மூடநம்பிக்கை
பூனை குறுக்கே போனதற்குக் கவலைப்படுகிறாயே!
அந்தப் பூனைக்கு என்ன ஆனதோ?
2] புவியைப் போற்று
இறைவன் தந்த கொடை
புவியெனும் உயிர்க்கோளம்
வரமாய்ப்பெரும் மரங்களை
அழித்தொழிக்காது அனுதினமும்
காத்து வாழ்ந்திடுவோம்!
புவியெனும் தாயைப்
போற்றி வணங்கிடுவோம்!
3) அன்பின் வழி
வாழ்வின் வியப்பே
உறவுப் பின்னல்
உயர்வின் மந்திரம்
உழைப்பு என்போம்
மகிழ்வாய் மண்ணில்
மனிதம் மலர்ந்திட
அன்பின் வழியில்
அனைவரும் ஒழுகிடவே
கண்டுபிடிக்க.
1. எண்ணும் எழுத்தும் கண் – இந்தத் தொடரை ஒருவர் 1 2 3 4 1 5 6 7 4 8 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றிக் கீழ்க்காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்?
அ) எழுது – 157
ஆ) கண்ணும் – 1234
இ) கழுத்து – 1567
ஈ) கத்து – 867
2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் – இக்கூற்று
அ) உண்மை
ஆ) பொய்
இ) உறுதியாகக் கூறமுடியாது
Ans: இ) உறுதியாகக் கூறமுடியாது
அகராதியில் காண்க.
ஏங்கல், கிடுகு, தாமம், பான்மை, பொறி
-
ஏங்கல் – ஆரவாரித்தல், மயிலின் குரல், அழுகை
-
கிடுகு – கேடயம், மரச்சட்டம், பின்னிய ஓலைக்கீற்று, ஒரு முரசு
-
தாமம் – கயிறு, பூ மாலை, ஒழுங்கு, ஒளி, புகழ், சங்கிலி
-
பான்மை – இயல்பு, குணம், பகுதி, தகுதி, சிறப்பு, நல்வினைப்பயன்
-
பொறி – சிதறு, குறியீடு, வரி, புள்ளி, செல்வம், அறுபடு
உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
1. மலர்விழி வீணை வாசித்தாள்; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
- விடை : விழிமலர் வீணை வாசித்தாள். கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்.
2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
- விடை : குழலியின் இசையைச் சுவைத்தவர். கவலைக்கடலிலிருந்து நீங்கினார்.
3. தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள்.
- விடை: மொழித்தேனை வாய்ப்பவளத்தால் திறந்து படித்தாள்.
4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
- விடை : நகைமுத்துதன் புருவவில்லில் மை தீட்டினாள்.

உளியால் உன்னைச் செதுக்கி !
உள்ளம் உயரே உயர்த்தி !
அல்லவற்றை நீக்கிவிடு!
அரியவற்றை ஆக்கிவிடு!
உன்னை நீயே செதுக்கிக்கொள்!
பழமை நீக்கிப் புதுப்பித்துக்கொள்!
தவறுகளை நீயே திருத்திக் கொள் !
பாதைகளை நீயே வகுத்துக் கொள்!
உன்வாழ்வு உன்கையில் உள்ளதுபோல்!
உன்நெறியும் உன்கையில் உளியில் தான்!
நிற்க அதற்குத் தக
எ.கா. என்னை மகிழச்செய்த பணிகள்
1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
2. எனது வகுப்றையில் கரும்பலகையின்கீழ் சிதறிக்கிடந்த சுண்ணக்கட்டித் துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
3. என் பள்ளி வளாகத்தில் வாடிய மரஞ்செடிகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்றியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியரின் பாராட்டையும், “இயற்கையின் நண்பன்” என்ற பட்டமும் பெற்றேன்.
4. படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்குப் பாடம் சொல்லி கொடுத்ததற்கு ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றேன்.
5. என் தெருவில் உள்ளவர்களிடம் குப்பைகளைத் தரம்பிரித்துத் துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தியதால் சமூகச் சேவகர்களிடம் பாராட்டுப் பெற்றேன்.
படிப்போம்; பயன்படுத்துவோம்!
-
Cave temple – குடைவரைக் கோவில்
-
Treasury – சிற்பம்
-
Sculpture – கருவூலம்
-
Statue – சிலை
-
Embossing – புடைப்பு
அறிவை விரிவு செய்
-
நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி
-
திருக்குறள் கதைகள் – கிருபானந்தவாரியார்
-
கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக் (தமிழில் – சா.சுரேஷ்)

