You are currently viewing 7th Tamil Term 2 Unit 3.2 Book Back Answer

7th Tamil Term 2 Unit 3.2 Book Back Answer

7th Tamil Term 2 Unit 3.2 Book Back Answers

TN 7th Standard Tamil Term 2 – Lesson 3 – இயல் 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் Book back answers

TN 7th Tamil Term 2 Unit 3.2 Book Back Answers. 7th Standard Tamil Term 2 Lesson 3 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 2 – 3rd Lesson இயல் 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் Book Back and additional question and answers download pdf. Class 7 2nd Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Term 2 Lesson 3 Book Back Answer

7th Standard Tamil Term 2 Lesson 3 இயல் 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே*

                 – காளமேகப்புலவர்

நூல்வெளி

காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.

மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என அழைக்கப்பட்டார்.

திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மாடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  1. வண்கீரை – வளமான கீரை
  2. பரி – குதிரை
  3. முட்டப்போய் – முழுதாகச் சென்று
  4. கால் – வாய்க்கால், குதிரையின் கால்
  5. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “ஏறப் பரியாகுமே” என்றும் தொடரில் “பரி” என்பதன் பொருள்

  1. யானை
  2. குதிரை
  3. மான்
  4. மாடு

விடை : குதிரை

2. பொருந்தாத ஓசை உடைய சொல்

  1. பாய்கையில்
  2. மேன்மையால்
  3. திரும்புகையில்
  4. அடிக்கையால்

விடை : திரும்புகையில்

3. ‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. வண் + கீரை
  2. வண்ணம் + கீரை
  3. வளம் + கீரை
  4. வண்மை + கீரை

விடை : வண்மை + கீரை

4. ‘கட்டி + அடித்தல்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. கட்டியிடித்தல்
  2. கட்டியடித்தல்
  3. கட்டிஅடித்தல்
  4. கட்டுஅடித்தல்

விடை : கட்டியடித்தல்

III. சிறுவினா

1. கீரைபாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

கீரைப்பாத்தி குதிரை
1. மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
2. மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்;
3. வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். எதிரிகளை மறித்துத் தாக்கும்;
4. நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும். போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. காளமேகப்புலவரின் இயற்பெயர் ____________விடை : வரதன்
  2. காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் ___________ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளனவிடை : தனிப்பாடல் திரட்டு
  3. மறித்தல் என்பதன் பொருள் __________விடை : தடுத்தல்

II. பொருத்துக

  1. வண்கீரை — அ. தடுத்தல்
  2. பரி — ஆ. வளமான கீரை
  3. முட்டப்போய் — இ. குதிரை
  4. கால் — ஈ. முழுதாகச் சென்று
  5. மறித்தல் — உ. வாய்க்கால்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

II. எதிர்ச்சொல் தருக

  1. வளமான x வளமற்ற
  2. முழுதாக x முழுமையற்ற
  3. தாழ்மை x மேன்மை
  4. எதிரி x நண்பன்
  5. கட்டுதல் x உடைத்தல்

III. இப்பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எழுதுக

எதுகைச் சொற்கள்

  • கட்டி – வெட்டி – முட்டப்போய்
  • மாற – ஏற

மோனைச் சொற்கள்

  • பாய்கையால் – பாத்தியுடன்

IV. வினாக்கள்

1. காளமேகப்புலவர் பெயர்காரணம் யாது

மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என அழைக்கப்பட்டார்.

2. காளமேகப்புலவர் எழுதியுள்ள நூல்கள் எவை?

  • திருவானைக்கா உலா
  • சரசுவதி மாலை
  • பரபிரம்ம விளக்கம்
  • சித்திர மாடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

4. கீரைப்பாத்தி பற்றி காளமேகப்புலவர் கூறியது யாது?

  • மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.
  • மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.
  • வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர்.
  • நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

5. குதிரை பற்றி காளமேகப்புலவர் கூறியது யாது?

  • வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
  • கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்;
  • எதிரிகளை மறித்துத் தாக்கும்;
  • போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

Leave a Reply