Kalavazhi Narpathu Important Notes
களவழி நாற்பது All Exam Important Points
Kalavazhi Narpathu Important Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes களவழி நாற்பது. Tamil eligibility test. All Exams Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

களவழி நாற்பது
-
- ஆசிரியர் : பொய்கையார்
- பாடல்கள் : 40 பாடல்கள்
- 40 பாடல்களிலும் களம் என்ற சொல் வருவதால் களவழி நாற்பது என்று பெயர்பெற்றது.
- பதினெண் கீழ்க்கணக்கில் புறப்பொருள் பற்றிக் கூறும் ஒரே நூல்.
- இந்நூல் சோழனைச் சிறப்பிக்கிறது.
- இந்நூலில் குறிக்கப்படும் மன்னர்கள் சோழன் செங்காணன், சேரன் கணைக்கால் இரும்பொறை.
- இது கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களுக்கு வழிகாட்டியாக அமைந்த நூல்.
- சோழ மன்னன் செங்காணனுக்கும் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் நடந்த போர் பற்றி குறிப்பிடுகிறது.
- இந்நூல் யானைப்படையைப் பற்றி அதிகம் குறிப்பிடுகிறது.
- பொய்கையார், தமது நண்பரான இரும்பொறையை மீட்பதற்காக இப்பாடல்களை பாடினார் என்று கூறப்படுகிறது.
- நாற்பது பாடல்களும் சோழனின் படை, போர் புரிந்த காட்சிகள் பற்றி கூறுகிறது
- களவழி இரண்டு உள்ளது:
- ஏரோர் களவழி – நெல் தூற்றி அடித்தல் பற்றியது
- தேரோர் களவழி – போர்க்களத்தில் பகைவரை அழித்தல் பற்றியது
- இந்நூல் தேரோர் களவழியைச் சார்ந்தது
- போர் நடைபெற்ற இடம் கழுமலம்
- சேர மன்னன் சிறை வைக்கப்பட்ட இடம் – குடவாயிற்கோட்டம்

