You are currently viewing 10th Science Book Back Answer Biology Unit 19

10th Science Book Back Answer Biology Unit 19

10th Science Book Back Answer Biology Unit 19

10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson.19 Origin and Evolution of Life (உயிரின தோற்றமும் பரிணாமமும்)

10th Science Book Back Answer Biology Unit 19. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 19. உயிரின தோற்றமும் பரிணாமமும் book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.

10th Science Book Back Answer Tamil Medium

10th Standard Science Book back Answers Lesson.19 Origin and Evolution of Life (உயிரின தோற்றமும் பரிணாமமும்)

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி

  1. தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.
  2. தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.
  3. தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.
  4. தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை

விடை ; தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.

2. “பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன்மொழிந்தவர்

  1. சார்லஸ் டார்வின்
  2. எர்னஸ்ட்ஹெக்கல்
  3. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
  4. கிரிகர் மெண்டல்

விடை ; ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

3. பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?

  1. கருவியல் சான்றுகள்
  2. தொல் உயிரியல் சான்றுகள்
  3. எச்ச உறுப்பு சான்றுகள்
  4. மேற்குறிப்பிட்ட அனைத்தும்

விடை ; மேற்குறிப்பிட்ட அனைத்தும்

 

4. தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை

  1. ரேடியோ கார்பன் முறை
  2. யுரேனியம் காரீய முறை
  3. பொட்டாசியம் ஆர்கான் முறை
  4. அ மற்றும் இ

விடை ; மற்றும்

5. வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

  1. கொரானா
  2. W. கார்ஸ் பெர்கர்
  3. ரொனால்டு ராஸ்
  4. ஹியுகோ டி விரிஸ்

விடை ; J.W. கார்ஸ் பெர்கர்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

  1. சூழ்நிலையின் மாற்றங்களுக்குப் எதிர்வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் __________ என அழைக்கப்படுகின்றன. விடை ; பெறப்பட்ட பண்புகள்
  2. ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள் __________ என்று அழைக்கப்படுகின்றன. விடை ; எச்ச உறுப்புகள்
  1. வௌவால்கள் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் __________ உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு. விடை ; அமைப்பு ஒத்த உறுப்புகள்
  2. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் __________ . விடை ; டார்வின்

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

  1. உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் சார்லஸ் டார்வின். ( தவறு )
  • உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் லாமார்க்
  1. செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன. ( சரி )
  2. பறவைகள் ஊர்வனவற்றிலிருந்து தோன்றியவை. ( சரி )

IV. பொருத்துக.

முன்னோர் பண்பு மீட்சி – முள்ளெலும்பு மற்றும் குடல்வால்

எச்ச உறுப்புகள் – பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்

செயல் ஒத்த உறுப்புகள் – வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி

அமைப்பு ஒத்த உறுப்புகள் – வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை

மரப்பூங்கா – கதிரியக்கக் கார்பன் (C14)

W.F. லிபி – திருவக்கரை

விடை ; 1 – C, 2 – A, 3 – D, 4 -B, 5 – F,  6 – E

V. ஓரிரு சொற்களில் விடையளி.

1. மனிதனின் கை, பூனையின் முன்னங்கால், திமிங்கலத்தின் முன் துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு என்ன பெயர்?

அமைப்பு ஒத்த உறுப்புகள்

 

2. புதைபடிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் எது?

ஆர்க்கியாப்டெரிக்ஸ்

3. புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தொல்லுயிரியல்

VI. சுருக்கமாக விடையளி.

1. கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள்,ஒரு பெறப்பட்ட பண்பு. ஏன் அது பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?

  • கிவி ஒரு பறக்க முடியாத பறவை
  • கிவி பறவையின் சிறப்பிழந்த இறக்கைகள் உறுப்பைப் பயன்படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு.
  • ஒரு உறுப்பை நீண்ட காலம் பயன்படுத்தாத போது அது படிப்படியாக குன்றல் அடைகிறது.

2. ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?

  • இது ஊர்வனமற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது.
  • இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது.
  • ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவப் பற்களையும் பெற்றிருந்தது
  • எனவே ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக கருதப்படுகிறது

3. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழி வழியாக எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி அறிவதாகும்.

வட்டார இனத் தாவரவியலின் முக்கியத்துவம்

  • பரம்பரை பரம்பரையாகத் தாவரங்களின் பயன்களை அறிய முடிகிறது. • நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்களைப் பற்றிய தகவலை அளிக்கிறது.
  • வட்டார இனத் தாவரவியலானது மருந்தாளுநர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவப் பயிற்சியாளர் முதலானோருக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறது.
  • மலைவாழ் பழங்குடி மக்கள் மருத்துவ இன அறிவியல் மூலம் பலவகையான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துத் தாவரங்களை அறிந்து வைத்துள்ளனர். எ.கா.: வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தலைவலி, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, பாம்பு கடி மற்றும் தொழு நோய் முதலான நோய்களுக்கு தாவரங்களின் பட்டை, தண்டு, வேர், இலை, பூமொட்டு, பூ, கனி, விதை, எண்ணெய் மற்றும் பிசின் முதலானவற்றைப் பயன்படுத்திக் குணமாக்கினர்.

4. புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?

  • படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமங்களால் கண்டுபிடிக்கலாம்.
  • அத்தனிமங்கள் கார்பன், யுரேனியம், காரீயம் மற்றும் பொட்டாசியமாக இருக்கலாம்.
  • உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை.
  • அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது.
  • உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன் (C14) அளவைக் கொண்டு அந்தத் தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

10th Science Book Back Answer Biology Unit 19

VII. விரிவான விடையளி.

1. பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?

அதிக இனப்பெருக்கத்திறன்:

  • உயிரினங்கள், அதிக அளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை.
  • அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை.

வாழ்க்கைக்கான போராட்டம்:

  • அதிக உற்பத்தி காரணமாக, உயிரினங்கள் வாழத் தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது.
  • இது உயிரினங்களுக்கான உணவு மற்றும் இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

வேறுபாடுகள்

  • டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள் உயிரினத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.

தக்கன உயிர் பிழைத்தல் அல்லது இயற்கைத் தேர்வு:

  • வாழ்க்கைக்கான போராட்டத்தின் போது, கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள், உயிர் பிழைத்து சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும்.
  • கடினமான சூழலை எதிர்கொள்ள முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்துவிடும்.
  • சாதகமான வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை, இயற்கைத் தேர்வு என அழைக்கப்படுகிறது.

சிற்றினங்களின் தோற்றம்

  • பல தலைமுறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின் தொகுப்பினால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன

2. அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?

அமைப்பு ஒத்த உறுப்புகள் செயல் ஒத்த உறுப்புகள்
ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட,

பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக

உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும்

செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளன.

 

பாலூட்டிகளின் முன்னங் கால்கள், அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும்.

எ.கா.

மனிதனின் கை

பூனையின் முன்னங்கால்

திமிங்கலத்தின் துடுப்பு

எ.கா.

பறவையின் இறக்கை

பூச்சியின் இறக்கை

வௌவாலின் இறக்கை

3. படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு நடைபெறுகிறது?

  • படிவமாதல் தாவரங்களில், 2000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தாவத்ததண்டு பகுதியானது ஆற்றங்கரையில் புதையுண்டு காலப்போக்கில் அதிலுள்ள கரிமப்பொருள்கள் சிலிகாவினால் நிரப்பப்பட்டு படிவமாகியுள்ளது.
  • கல்மரமான பின்பு இத்தாவரங்கள் முந்தைய நிறம், வடிவம், வரித்தன்மை முதலானவற்றை தக்க வைத்துக்கொண்டுள்ளன.
  • ஆண்டு வளையம், நிறங்களி் அடுக்கு, கணுப்பகுதிகள் போன்ற அனைத்து பண்புகளுகம் கல்மரமான பிறகும் புலப்படும் வகையில் அமைந்துள்ளன.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

1. அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் . திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைளை உற்று நோக்கினான். காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.

அருண் நினைத்தது சரி

காரணம்

காக்கையின் இறக்கையும், தும்பியின் இறக்கையும் செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது.

2. புதை உயிர்ப் படிவங்களின் பதிவுகள் நமக்குப் பரிணாமம் பற்றித் தெரிவிக்கின்றன. எவ்வாறு?

பெரும்பாலான முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்பு உள்ளவைகளின் பரிமாணப் பாதையைப்ப புரிந்து கொள்ள புதைபடிவங்கள் பற்றிய ஆய்வுகள் உதவுகின்றன. பரிணாம வளரச்சி என்பது எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது என்பதை புதை படிக ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

3. ஆக்டோபஸ், கரப்பான்பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன. இவை பொதுவான பரிணாம தோற்றத்தைக் கொண்டுள்ளதால் ஒரே வகையாக கருத முடியுமா?

உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.

ஆக்டோபஸ், கரப்பான்பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன

ஆக்டோபஸ்

மெல்லுடலி தொகுதியைச் சார்ந்தது. இதன் கண்கள் எளிய அமைப்புடன் லென்சு இல்லாமல் காணப்படும்.

கரப்பான்பூச்சி

பூச்சியினத்தை சார்ந்தது (முதுகெலும்பற்றவை). கூட்டுகண்கள் அமைப்பை கொண்டது.

தவளை

நீர், நில வாழ்வன. முதுகெலும்புடையது. சிறப்பான அமைப்பு கொண்டது. மேற்கூறிய மூன்றிலும் வெவ்வேறு அமைப்புகளை கொண்ட பொழுதிலும் ஒரே பணியை செய்கின்றன. இவை ஒரு இனத்தில் படிப்படியாக நிகழும் வேறுபாடுகளின் தொகுப்பினால் ஏற்படுகிறது.

Leave a Reply