You are currently viewing 10th Social science Guide Economics Unit 1

10th Social science Guide Economics Unit 1

10th Social Science – Economics Guide Unit 1 Book Answer

Unit 1. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

10th Social Science – Economics Tamil Medium Book Back & Additional Question – Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide Civics – Samacheer Kalvi Tamil Medium Full Guide. SSLC Economics Unit 1 Answers. 10th Social Science Civics  1st Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide Unit 1. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science – Economics Unit 1. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back & Additional Question – Answers

10th Social science Guide Economics Unit 1

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1.GNPயின் சமம் …………………

அ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
ஆ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

விடை: இ GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

2.நாட்டு வருமானம் அளவிடுவது …………………..

அ) பணத்தின் மொத்த மதிப்பு
ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

விடை: ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

3.முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ……………..

அ) வேளாண்மை
ஆ) தானியங்கிகள்
இ) வர்த்த கம்
ஈ) வங்கி

விடை: அ) வேளாண்மை

4.………………… முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.

அ) செலவு முறை
ஆ) மதிப்பு கூட்டு முறை
இ) வருமான முறை
ஈ) நாட்டு வருமானம்

விடை: ஆ) மதிப்பு கூட்டு முறை

5.GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

அ) வேளாண் துறை
ஆ) தொழில் துறை
இ) பணிகள் துறை
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: இ பணிகள் துறை

6.பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 இல் ………………….. லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அ) 91.06
ஆ) 92.26
இ) 80.07
ஈ) 98.29

விடை: ஆ) 92.26

7.வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ……………… அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

அ) 1 வது
ஆ) 3 வது
இ) 4 வது
ஈ) 2 வது

விடை: ஈ) 2 வது

8.இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் …………….. ஆண்டுகள் ஆகும்.

அ) 65
ஆ) 60
இ) 70
ஈ) 55

விடை: அ) 65

9.கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?

அ) நீர்பாசன கொள்கை
ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
இ) நில சீர்திருத்தக் கொள்கை
ஈ) கூலிக் கொள்கை

விடை: ஆ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

10.இந்தியப் பொருளாதாரம் என்பது ……………………..

அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்
ஆ) தோன்றும் பொருளாதாரம்
இ) இணை பொருளாதாரம்
ஈ) அனைத்தும் சரி

விடை: ஈ) அனைத்தும் சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்தியாவில் மிகப்பெரிய துறை ______________ துறையாகும்

விடை: பணிகள்

2. GDP ________________ பொருளாதாரத்தின் ஒரு குறியீடாகும்.

விடை: வளரும்

3. இரண்டாம் துறையை வேறுவிதமான _________________ துறை என அழைக்கலாம்

விடை: தொழில்

4. இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் _______________________ துறையாகும்.

விடை:  தொழில்

5. இந்தியா உலகத்தில் _____________ மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்.

விடை:  ஆறாவது

6. இந்தியா ______________ மிக வேகமாக வளரும் நாடாகும்

விடை:  ஐந்தாவது

7. GDP யின் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற நவீன மயமாக்கத்துடன் கூடிய விரைவான தொழிமயமாக்கல் என்று ___________________________ கொள்கை கூறுகிறது

விடை: தொழில்துறை

III. பொருத்துக.

  • 1. மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர் – நாட்டு வருமானம் / மக்கள் தொகை
  • 2. விலைக் கொள்கை – மொத்த நாட்டு உற்பத்தி
  • 3. GST – தொழில் துறை
  • 4. தனி நபர் வருமானம் – வேளாண்மை
  • 5. C+I+G+(X-M) – பண்ட மற்றும் பணிகள் மீதானவரி
விடை:- 1- இ, 2-ஈ, 3- உ, 4-அ, 5-ஆ

10th Social science Guide Economics Unit 1

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

1.நாட்டு வருமானம் – வரையறு.

  • நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
  • பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

2.மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  • ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

 3.GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.

  • பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.
  • பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

 4.தனிநபர் வருமானம் என்றால் என்ன?

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.

5.மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு.

  • ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், இறுதிப்பண்டத்தின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.
  • மதிப்புக் கூட்டு முறை:
  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

6.இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.

  • வேளாண் கொள்கை
  • தொழில்துறை கொள்கை
  • புதிய பொருளாதாரக் கொள்கை
  • வணிகக் கொள்கை
  • ஊதியக் கொள்கை
  • மக்கள் தொகைக் கொள்கை

7.சிறு குறிப்பு வரைக.

1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

  • ஐக்கிய நாடுகள் சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு – மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • உறுப்பு நாடுகள் பூடானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும் நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர். (அடிப்படை மனித குறிக்கோள்).

GNHயின் 4 தூண்கள் :

  • நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்
  • நல்ல ஆட்சித் திறன்
  • மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)
  • மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப்-உல் ஹக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDP யின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

1.நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.

மொத்த நாட்டு உற்பத்தி (GNP):

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.

GNP = C + I + G + (X-M) +NFIA

  1. C – நுகர்வோர்
  2. I – முதலீட்டாளர்
  3. G – அரசு செலவுகள்
  4. X-M – ஏற்றுமதி – இறக்குமதி
  5. NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):

  • ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

நிகர நாட்டு உற்பத்தி (NNP):

  • மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்.

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):

  • நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

தலா வருமானம் அல்லது தனி நபர் வருமானம் (PCI):

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.

தனிப்பட்ட வருமானம் (PI):

  • நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

செலவிடத் தகுதியான வருமானம் (DI):

  • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.
  • இதனை இவ்வாறு அழைக்கலாம்.
  • DPI = தனிப்பட்ட வருமானம் – நேர்முகவரி
  • நுகர்வு முறையில் DI = நுகர்வுச் செலவு + சேமிப்பு)

2.GDPஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள் :
செலவின முறை :

  • இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப்பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும்.
  • Y = C + I + G + (X – M)

வருமான முறை:

  • பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.
  • வருமான முறையில் GDPஐ கணக்கிடும்போது
  • வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

மதிப்பு கூட்டு முறை:

  • “இறுதிப்பண்டம்” என்பது ஹோட்டலில் ஒரு கோப்பை தேனீர் (Tea) நமக்கு வழங்கப்படுவதாகும். அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் டீதூள், பால் மற்றும் சர்க்கரை “இடைநிலை பண்டங்கள்” ஆகும்.
  • ஒரு கோப்பை தேனீர் இறுதிப் பண்டமாக மாறுவதற்கு இவைகள் ஒரு பகுதியாக அமைகிறது.
  • ஒரு கோப்பை தேனீர் தயாரிக்க பயன்படுத்திய ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், தேனீரின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

3.இந்தியாவில் GDPயில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி.

  • GDPயின் துறை வாரியான பங்களிப்பு (2018-2019):
  • வேளாண்மைத் துறை – 15.87%,
  • விவசாயம், காடுகள் மற்றும் மீன்பிடித்தல் – 15.87%
  • தொழில்துறை – 29.73%
  • சுரங்கம் மற்றும் குவாரி – 2.7%
  • உற்பத்தி – 16.83%
  • மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் – 2.67%
  • கட்டுமானம் – 7.54%
  • பணிகள் துறை – 54.4%
  • வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் – 18.62%
  • நிதி, ரியல் எஸ்டேட் தொழில்முறை சேவைகள் – 20.96%
  • பொது நிர்வாகம், பாதுகாப்பு பிறபணிகள் – 14.82%
  • இந்திய பொருளாதாரத்தில் விவசாய துறையின் பங்களிப்பு, உலக சராசரி 6.4% விட அதிகமாக உள்ளது.
  • ஆனால், தொழில்துறை மற்றும் பணிகள் துறைகளின் பங்களிப்பு, உலக சராசரியை விட 30% தொழில்துறையிலும் மற்றும் 63% பணிகள் துறையிலும் குறைவாகவுள்ளன.

4. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.

10th Social science Guide Economics Unit 1

5.கீழ்க்காணும் பொருளாதார கொள்கைகளை விவரி.

1. வேளாண் கொள்கை
2. தொழிற்கொள்கை
3. புதிய பொருளாதார கொள்கை
வேளாண் கொள்கை:

  • உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருள்கள் பற்றிய அரசின் முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும்.
  • சில பரவலான கருப்பொருள்கள், இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத் தன்மை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு பொருள்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை வேளாண் கொள்கையில் அடங்கும்.
  • சில வேளாண் கொள்கைகள் : விலைக் கொள்கை நில சீர்திருத்த கொள்கை, பசுமைப் புரட்சி, பாசனக் கொள்கை, உணவுக் கொள்கை, விவசாய தொழிலாளர் கொள்கை மற்றும் கூட்டுறவு கொள்கை போன்றவைகளாகும்.

தொழில்துறை கொள்கை:

  • தொழில்துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான அம்சமாகும்.
  • இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது.
  • உண்மையில், தொழில் துறை வளர்ச்சி, விவசாயத்துறை (புதிய பண்ணை தொழில் நுட்பம்) மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன.
  • இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • 1948லிருந்து பல தொழில் துறை கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.
  • எடுத்துக்காட்டாக, சில தொழில் கொள்கைகள்: ஜவுளித் தொழில் கொள்கை சர்க்கரை தொழில் கொள்கை, தொழில்துறை வளர்ச்சி விலைக் கொள்கை, சிறுதொழில் தொழிற்கொள்கை மற்றும் தொழில்துறை தொழிலாளர் கொள்கை போன்றவைகளாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை:

  • 1990களின் ஆரம்பத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தம், LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என அழைக்கப்படுகிறது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றமடையச் செய்தது.

10th Social science Guide Economics Unit 1

Additional Questions and Answers ( TNPSC, TN TET, TRB )

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது ………………. ஒரு பகுதியாகும்.

அ) மொத்த நாட்டு உற்பத்தி
ஆ) நாட்டு வருமானம்
இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஈ) நிகர நாட்டு உற்பத்தி

விடை: இ மொத்த உள்நாட்டு உற்பத்தி

2.GDPயின் நவீன கருத்து ……………… உருவாக்கப்பட்டது.

அ) 1934
ஆ) 1943
இ) 1955
ஈ) 1933

விடை: அ) 1934

3.…………… என்பது கூலி + வாரம் + வட்டி + லாபம்.

அ) மதிப்பு கூட்டு முறை
ஆ) அ) (ம) ஆ)
இ) செலவின முறை
ஈ) வருமான முறை

விடை: ஈ) வருமான முறை

4.…………………..யை முதன்மைத் துறை என்பர்.

அ) பணிகள் துறை
ஆ) வேளாண் துறை
இ) தொழில் துறை
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) வேளாண் துறை

5.தொழில் துறைக்கு எடுத்துக்காட்டு ……………..

அ) மீன்பிடித்தல்
ஆ) காடு உருவாக்கம்
இ) பெட்ரோலியம்
ஈ) கால்நடை வளர்ப்பு

விடை: இ பெட்ரோலியம்

6.…………….யை மூன்றாம் (ம) நான்காம் தொழிலிருந்து வேறுபடுத்திட முடியும்.

அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) பணிகள் துறை
ஈ) அ) (ம) ஆ)

விடை: இ) பணிகள் துறை

7.2019இல் பணிகள் துறையில் …………….. லட்சம் கோடி நடப்பு விலையில் மொத்த மதிப்பு உள்ளது.

அ) 28.62
ஆ) 98.26
இ) 92.26
ஈ) 94.26

விடை: இ 92.26

8.பொருளாதார முன்னேற்றம் என்பது ……………. யைக் குறிக்கும்.

அ) அளவின்
ஆ) தரம்
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) தரம்

9.……………… என்பது பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதாகும்.

அ) நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல்
ஆ) நிகர நாட்டு உற்பத்தி
இ) நிகர உள்நாட்டு உற்பத்தி
ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு

விடை: ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு

10.ஐந்தாண்டுத் திட்டத்தில் ……………… உருவாக்கப்பட்டது.

அ) பொருளாதார வளர்ச்சி
இ) வேலை வாய்ப்பு
ஈ) வறுமை

விடை: இ வேலை வாய்ப்பு

11.…………….. பொருளாதார வளர்ச்சியின் பொருந்தும் தன்மை ஆகும்.

அ) வளர்ந்த
ஆ) வளர்ந்து வரும்
இ) வளர்ச்சியடைந்த
ஈ) எதுவுமில்லை

விடை: அ) வளர்ந்த

12.நிகழ்வெண் அதிர்வெண் பொருளாதார முன்னேற்றத்தில் ………………. செயல்முறை ஆகும்.

அ) படிப்படியாக
ஆ) இலக்க
இ) தொடர்ச்சியான
ஈ) ஆ) (ம) இ)

விடை: இ தொடர்ச்சியான

13.பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ……………. கருத்தாகும்.

அ) குறுகிய
ஆ) அகலமான
இ) பரந்த
ஈ) ஆழமான

விடை: இ பரந்த

14.தலா வருமானம் ………………. ஆண்டுகளில் 2 மடங்காய் உயர்ந்துள்ளது.

அ) 21
ஆ) 25
இ) 22
ஈ) 12

விடை: ஈ) 12

15.மொத்த தேசிய மகிழ்ச்சி உருவாக்கப்பட்ட ஆண்டு ………….. ஆகும்.

அ) 1927
ஆ) 1972
இ) 1955
ஈ) 1966

விடை: ஆ) 1972

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.இருப்பு (அ) செயல்பாட்டில் நிச்சயமற்ற (அ) ஆபத்தான நிலை தொடர்ந்தால் …………… ஏற்படும்.

விடை:தடுமாற்றம்

2.……………. என்ற வார்த்தை பிரிட்டிஷ் பத்திரிக்கையால் உருவாக்கப்பட்டது.

விடை:GNH

3.இந்திய பொருளாதாரம் ……………… துறைகளைக் கொண்டது.

விடை:3

4.உலகளாவிய மென்பொருள் வணிகங்களின் மையம் ………………வில் உள்ளது.

விடை:பெங்களூரு

5.UNDP என்பது ……………..

விடை:ஐ.நா. வளர்ச்சித் திட்டம்

6.பொருளாதார வளர்ச்சி ………………. உயர்த்தும்.

விடை:நாட்டு வருமானத்தை

7.இந்தியாவில் ………….. வேகமாக வளரும் மக்கள் உள்ள னர்.

விடை:உழைக்கும் வயதில்

8.வெளி உலகத்துடனான ……………… குறைவாகவே இருந்தது.

விடை:வர்த்தகம் (ம) தொடர்பு

9.பொருளாதார அளவைக் கண்டறிய ……………… உதவுகிறது.

விடை:GDP & GNP

10.……………… ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகும்.

விடை:பொருளாதார வளர்ச்சி

11.உலகின் மொத்த விவசாயப் பொருட்களின் வெளியீட்டில் …………………… இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.

விடை:7.39%

12.GDP அளவை மட்டும் அளவிடுகிறது …………. அல்ல.

விடை:தரத்தை

13.வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய உதவுவது …………….

விடை:மொத்த உள்நாட்டு உற்பத்தி

14.தாதாபாய் நௌரோஜி ……………… பற்றிய கருத்தை வெளியிட்டார்.

விடை:தனிநபர் விருமானத்தைப்

15.அங்காடியில் விற்கும் பண்டங்கள் (ம) பணிகளின் மதிப்பு …………..

விடை:அங்காடி மதிப்பு

16.இடைநிலைப் பண்ட மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால் அது ……………….. எனப்படும்.

விடை:“இருமுறை கணக்கிடுதல்”

17.………….. குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உயர்வு பணமதிப்பால் அளவிடும் அளவுகோல் ஆகும்.

விடை:பொருளாதார வளர்ச்சி

18.வறுமை ஒழிப்பு (ம) ……………. ஆகியவை இந்திய வளர்ச்சிப் பாதையின் பகுதியாகும்.

விடை:கிராமப்புற வளர்ச்சி

19.இந்தியா ………………. சட்ட முறையைக் கொண்டுள்ளது.

விடை:கடுமையான

20.பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு …………………………. மூலம் மேற்கொள்ளப்படும்.

விடை:மனித மேம்பாட்டுக்குறியீடு

கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

1.மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகள் யாவை?

  1. GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்ல.ை
  2. GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல.
  3. GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை .
  4. GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை.

2.மொத்த நாட்டு உற்பத்தி (GNP) வரையறு.

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும்.
  • வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.

GNP = C+I+G + (X-M) + NFIA

  1. C – நுகர்வோர்
  2. I – முதலீட்டாளர்
  3. G – அரசு செலவுகள்
  4. X – M – ஏற்றுமதி – இறக்குமதி
  5. NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

3.மொத்த மதிப்பு கூடுதல் – வரையறு.

  • பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும்.
  • GVA = GDP + மானியம் – வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

4.தனிப்பட்ட வருமானம் (P) வரையறு.

  • நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

5.பண்டங்கள் மற்றும் பணிகள் வரையறு.

  • பண்டங்கள் என்பது தொடக் கூடிய பொருளும், பணிகள் என்பது தொட்டு உணர முடியாததுமான நடவடிக்கைகள் ஆகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

1.மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகளை விவரி.

1. GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை :

  • சந்தையில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.
  • சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது.
  • இதற்கு சந்தை மதிப்பு இல்லை. ஆகவே, இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரம்புக்கு வருவதில்லை .

2. GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல:

  • 1970களில் பள்ளிகள் மற்றும் வங்கிகளில் பந்துமுனை பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை .
  • ஏனென்றால், இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிக தரமற்ற பொருளாக இருந்தது.
  • பண்டத்தினுடைய தரம் எனபது மிக முக்கியமானதாகும். ஆனால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுவதில்லை.

3. GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை :

  • ஒரு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவாக வளரலாம். ஆனால் வருமானம் சமனற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • இதனால் ஒரு சிறிய சதவீத மக்களே பயன் அடைகிறார்கள்.

4. GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை :

  • GDP, மிகவும் குறைந்த சுகாதார நிலை, மக்கள் ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பு, தற்கொலை விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட தனிநபர் வருமானத்துடன் கைகோர்த்து செல்கிறது.

2. பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி விவரிக்க.

பொருளாதார வளர்ச்சி:

  • ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்.
  • ஒரு பொருளாதாரத்தில் அல்லது நாட்டின் உற்பத்தியில் அதன் குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உயர்வு பணமதிப்பினால் அளவிடப்பட்ட அளவு கோல் ஆகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மொத்த தேசிய உற்பத்தி (GNP) ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவுகோல்.

பொருளாதார முன்னேற்றம்:

  • உற்பத்தி நிலையை அல்லது பொருளாதாரத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.
  • இது உற்பத்தி அளவு அதிகரிப்பதை மட்டுமில்லாமல், சமூக பொருளாதார காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
  • தொழில் நுட்ப மேம்பாடு, தொழிலாளர் சீர்திருத்தம், வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவது, பொருளாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய தரமான அளவுகளை அளப்பதே பொருளாதார முன்னேற்றமாகும்.
  • ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (HDI) சரியானதாகும்.

Leave a Reply