10th Social Science – Economics Guide Unit 2 Book Answer
Unit 2. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
10th Social Science – Economics Tamil Medium Book Back & Additional Question – Answers
10th social Science – Economics Unit 2. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back & Additional Question – Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1.உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
அ) அமைச்சரவை
ஆ) தலைமை இயக்குநர்
இ) துணை தலைமை இயக்குநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: ஆ) தலைமை இயக்குநர்
2.இந்தியாவில் காலனியாதிக்க வருகை……………………….
அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
ஆ) டச்சு, ஆங்கிலேயர் , டேனிஷ், பிரெஞ்சு
இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்
ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
விடை: அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர்கள், டேனிஷ், பிரெஞ்சு
3.காட்(GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ………………………
அ) டோக்கியோ
ஆ) உருகுவே
இ) டார்குவே
ஈ) ஜெனீவா
விடை: ஈ) ஜெனீவா
4.இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
அ) 1984
ஆ) 1976
இ) 1950
ஈ) 1994
விடை: ஈ) 1994
5.1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?
அ) ஜஹாங்கீர்
ஆ) கோல்கொண்டா சுல்தான்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
விடை: ஆ) கோல்கொண்டா சுல்தான்
6.வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு …………
அ) ஜூன் 1991
ஆ) ஜூலை 1991
இ) ஜூலை – ஆகஸ்ட் 1991
ஈ) ஆகஸ்ட் 1991
விடை: இ) ஜூலை – ஆகஸ்ட் 1991
7.இந்திய அரசாங்கத்தால் 1991இல் ………………ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) உலகமயமாக்கல்
ஆ) உலக வர்த்த அமைப்பு
இ) புதிய பொருளாதார கொள்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: இ புதிய பொருளாதார கொள்கை
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.ஒரு நல்ல பொருளாதாரம் …………….. விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
விடை: மூலதனச் சந்தையின்
2.உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ………………. ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
விடை: ஜனவரி 01 1995
3.……………… ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
விடை: பேராசிரியர் தியோடோர் லெவிட்
III. பொருத்துக.
- 1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் – 1947
- 2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) – அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்
- 3. சுங்கவரி, வாணிபம் குறித்த போது உடன்பாடு (GATT) – உற்பத்தி செலவு குறைத்தல்
- 4. 8வது உருகுவே சுற்று – இன்ஃபோசிஸ்
- 5. உலக வர்த்தக அமைப்பு (WTO) – 1986
விடை:- 1-ஈ, 2-இ, 3-அ , 4-உ, 5-ஆ
10th Social science Guide Economics Unit 2
IV. கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.
1. உலகமயமாக்கல் என்றால் என்ன?
- உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
- அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.
2. உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.
- தொன்மையான உலகமயமாக்கல்
- இடைப்பட்ட உலகமயமாக்கல்
- நவீன உலகமயமாக்கல்
3. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
- பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.
4. உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
- சில தொழிற்சாலைகளைத் தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
- பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
- அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
- இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.
5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
- நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும்.
6. “நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.
- வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
- நியாயமான வர்த்தக / நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
- குழந்தைத் தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது,
7. “உலக வர்த்தக அமைப்பின்” முக்கிய நோக்கம் யாது?
- அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
- வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சுவார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
- வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
- நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைந்து அறிமுகம் செய்தல்.
- உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
- முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
- முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
8. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
- ஒரு சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
- வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
- புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
- உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.
1. பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
MNCயின் நன்மைகள் :
- பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள் :
- பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் சுற்று சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
2. ‘உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
உலக வர்த்தக அமைப்பு (WTO):
- 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் போது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
- WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
உலக வர்த்த க அமைப்பு (World Trade Organisation):
- தலைமையகம் : ஜெனிவா, சுவிட்சர்லாந்து
- நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்
- உறுப்பினர்கள் : தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர்-4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.
- உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:
- அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
- வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
- வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
- நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
- உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
- முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
- முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
3.உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
உலகமயமாக்கலின் சவால்கள்:
- உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
- வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
- உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள் தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
- இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
- மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
10th Social science Guide Economics Unit 2
Additional Questions and Answers
சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. காட்இன் GATT) ஏழாவது சுற்று …………….. இல் நடந்தது.
அ) சுவிட்சர்லாந்து
ஆ) ஜப்பான்
இ) இங்கிலாந்து
ஈ) டோக்கியோ
விடை: ஈ) டோக்கியோ
2. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ……………..
அ) பராகுவே
ஆ) டோக்கியோ
இ) அன்னிசி
ஈ) ஜெனீவா
விடை: ஈ) ஜெனீவா
3. FERA …………….. உருவானது.
அ) 1947
ஆ) 1999
இ) 1974
ஈ) 1954
விடை: இ 1974
4. ஹரோ மோட்டோகிராப் …………….. தொழில்சார் நிறுவனம்.
அ) தகவல் தொடர்பு
ஆ) வங்கி
இ) ஆட்டோமொபைல்ஸ்
ஈ) எதுவுமில்லை
விடை: இ ஆட்டோமொபைல்ஸ்
5. பயனுள்ள விளம்பர (ம) விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்கிறது, ……………..
அ) சந்தைப்படுத்தும் மேன்மை
ஆ) நல்ல கருவிகள் கண்டுபிடிப்பு
இ) பண்டங்களின் கண்டுபிடிப்பு
ஈ) நிதி மேன்மை
விடை: அ) சந்தைப்படுத்தும் மேன்மை
6.……………….. கிழக்கிந்திய நிறுவனம் துவங்கியது.
அ) 13 டிசம்பர் 1600
ஆ) 31 டிசம்பர் 1600
இ) 21 டிசம்பர் 1800
ஈ) 20 டிசம்பர் 1900
விடை: ஆ) 31 டிசம்பர் 1600
7.…………….. தலைமையகம் பழவேற்காடு ஆகும்.
அ) போர்த்துகீசியர்
ஆ) டேனியர்
இ) ஸ்பானியர்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை: ஈ) டச்சுக்காரர்கள்
8. இந்தியாவில் டேனிஷ் குடியேற்றங்களால் ……………………….. தலைமையிடமாக மாறியது.
அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)
ஆ) புலிகாட்
இ) மசூலிப்பட்டினம்
ஈ) பிரெஞ்சு
விடை: அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)
9. ஆரம்பத்தில் இந்தியாவில் போர்த்துகீசியரின் தலைநகரமாக ……………. இருந்தது.
அ) கொச்சின்
ஆ) புலிகாட்
இ) பிரெஞ்சு
ஈ) அச்சிவி
விடை: அ) கொச்சின்
10.…………… வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தார்.
அ) மே 1948
ஆ) மே 1498
இ) மார்ச் 1498
ஈ) மார்ச் 1948
விடை: ஆ) மே 1498
11.……………… நூற்றாண்டிற்கிடையே உலகமயமாக்கல் குறிப்பிட்ட வேறுபாட்டைக் கொண்டிருந்தது.
அ) 15ஆம்
ஆ) 20ஆம்
இ) 12ஆம்
ஈ) 19ஆம்
விடை: 20 ஆம்
12. நவீன காலகட்டத்துக்கு முந்தைய காலம் …………………… உலகமயமாக்கல் எனப்படும்.
அ) நவீன
ஆ) இடைப்பட்ட
இ) தொன்மையான
ஈ) வெளி
விடை: இ தொன்மையான
13.…………….. பேரரசின் எழுச்சியால் கடல்வழி வாணிபம் ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர்.
அ) ஐரோப்பிய
ஆ) அமெரிக்க
இ) ஆசிய
ஈ) ஆப்பிரிக்க
விடை: அ) ஐரோப்பிய
14. கிழக்கிந்திய நிறுவனம் ………………. தொடங்கப்பட்டது.
அ) 1948
ஆ) 1602
இ) 1600
ஈ) 1653
விடை: ஆ) 1602
15.……………. காலகட்டம் உலகமயமாக்கலில் ஒரு முக்கிய ஆரம்பகட்டமாக இருந்து வந்தது.
அ) ஹெலினிஸ்டிக்
ஆ) இஸ்லாமிய
இ) இந்துத்துவ
ஈ) அ) (ம) இ)
விடை: ஆ) இஸ்லாமிய
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.……………. என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
விடை:உலகமயமாக்கல்
2.உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவத்தை ………….. உலகமயமாக்கல் என்பர்.
விடை:தொன்மையான
3.17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ……………… மயமானது.
விடை:தனியார்
4.19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் ……………… வடிவத்தைப் பெற்றது.
விடை:நவீன
5.வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், விரிவுபடுத்தவும் வணிகர்கள் உருவாக்கினார்கள்.
விடை:தென்னிந்திய வர்த்தக குழுவை
6.……………… புதிய கடல்வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
விடை:வாஸ்கோடகாமாவால்
7.வாஸ்கோடகாமாவின் இரண்டாவது பயணம் ………………. தொடங்கியது.
விடை:1502
8.……………….. என்பவரால் டச்சு நிறுவனம் தொடங்கப்பட்டது.
விடை:அட்மிரல் வான் டெர் ஹகேன்
9.பிரெஞ்சுக்காரர்களின் தலைமையகமாக 1704ல் ………….. விளங்கியது.
விடை:பாண்டிசேரி
10.உலகமயமாக்கலின் கொள்கை ………….. கையெழுத்திட்டபோது சரியானது.
விடை:டங்கல் வரைவில்
11.SLR என்பது ……………… எனப்படுகிறது.
விடை:சட்ட ரீதியிலான நீர்மை விகிதம்
12.15 பன்னாட்டு நிறுவனங்களில் ………………. அமெரிக்காவை சேர்ந்த தாகும்.
விடை:11
13.……………….ஆம் ஆண்டுகளுக்கிடையில் மொத்தம் 12,760 வெளிநாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
விடை:1948-1988
14.……………… நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கிறது.
விடை:நியாயமான வர்த்தகம்
15.பன்னாட்டு நிறுவனங்கள் ………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:பெரு நிறுவனங்கள்
கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.
1. நவீன உலகமயமாக்கல் வரையறு.
- 19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் நவீன வடிவத்தை நெருங்கியது.
- 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன.
- அவை, அந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டதும், 20ஆம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள், வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்ததும் ஆகும்.
2. சுங்க வரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு வரையறு.
- 1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- காட்டின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
- இதன் இயக்குநர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டு வந்த இறுதி சட்ட/ஒப்பந்த வரைவு “டங்கல் வரைவு” என்று அழைக்கப்பட்டது.
- காட்டின் (GATT) முக்கிய நோக்கம், அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும் ஒதுக்கீடுகளையும், மானியங்களையும் குறைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பது ஆகும்.
3. நியாயமான வர்த்தக அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் யாவை?
- சிறிய அளவிலான விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் உறுதிப்படுத்துவது.
- பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய பொருளாதார இலாபங்கள், வாய்ப்புகள் மற்றும் இடர்பாடுகளை சமமாக்குதல்.
- உற்பத்தியாளர் குழுக்களின் நிறுவன மற்றும் வர்த்தக திறன்களை அதிகரித்தல்.
4. பன்னாட்டு நிறுவனத்தின் (MNC) பரிமாண வளர்ச்சி பற்றிக் கூறுக.
- கிழக்கிந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவிற்கு வந்தது.
- 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருள்களை கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
- இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளது.
- இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும். இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.
கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.
1. MNC-யின் வளர்ச்சிக்கான காரணங்கள் பற்றி விவரிக்க.
1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்:
- பெரிய அளவிலான நிறுவனங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.
2. சந்தைப்படுத்தும் மேன்மை:
- ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது.
- மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்கிறது.
3. நிதி மேன்மை :
- இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன.
- இதனால் வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.
4. தொழில்நுட்ப மேன்மை :
- பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.
5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள் :
- பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை மேம்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
2. உலகமயமாக்கலின் எதிமறைத் தாக்கம் பற்றி விவரிக்கவும்.
- நாடுகளுக்கிடையே மிக அதிகமான மூலதனமானது நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
- தேசிய ஒருமைப்பாட்டை இழந்து வருவதோடு, மிக அதிகமான வர்த்தக பரிமாற்றம் இருப்பதால், சுதந்திரமான உள்நாட்டுக் கொள்கைகள் இழக்கப்படுகின்றன என்பது அச்சத்திற்குரியதாகும்.
- முக்கிய உள்கட்டமைப்பும் மற்றும் வளங்களை பிரித்தெடுத்தலும் ஒரு பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், இது எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளை அதிகரிக்கும்.
- அந்நிய செலாவணியை பெறுவதற்காக, இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.
- சுற்றுச்சூழல் பற்றிய தரங்களும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.