10th Social Science Unit 1 Question answers

10th Social Science Unit 1 Question answers

10th Social Science Unit 1 Question answers

10th Social Science Samacheer kalvi guide – Unit 1 Book Back and Additional Question and Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide Unit 1 Book Back and Additional Question and answers Tamil Medium. SSLC Social Science 1st Lesson Full answers. Its very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Text Book Back Questions and Answers. SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் – Full Answer Key

10th Social Science Unit 1 Question answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, ரஷ்யா
இ) ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி

விடை: அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) கொரியா
ஈ) மங்கோலியா

விடை: ஆ) ஜப்பான்

3. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

அ) லெனின்
ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென்
ஈ) மா சே தூங்

விடை: அ) லெனின்

4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

அ) ஆகாயப் போர்முறை
ஆ) பதுங்குக் குழிபோர்முறை
இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ) கடற்படைப் போர்முறை

விடை: ஆ) பதுங்குக் குழிபோர்முறை

5. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை: அ) பிரிட்டன்

6.பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்ஸ்

விடை: ஆ) ரஷ்யா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.………………..ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
விடை: 1894
2.1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ………………… உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
விடை: லண்டன்
3.……………… ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
விடை: 1902
4.பால்கனில் ………………… நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
விடை: மாசிடோனியா
5.டானென்பர்க் போரில் …………………. பேரிழப்புகளுக்கு உள்ளானது.
விடை:ரஷ்யா
6.பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ……………… ஆவார்.
விடை:கிளமென்சோ
7.…………………ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
விடை:1925

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1.i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) iv) சரி
ஈ) i), ii), iv) ஆகியன சரி

விடை:
ஈ) i), ii), iv) ஆகியன சரி

2.கூற்று : ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருட்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
காரணம் : இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்தன.

அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.

விடை:
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல

3.கூற்று : ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
கராணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.

விடை:
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.

IV. பொருத்துக.

10th Social Science Unit 1 Book Back and Addition Question answers

விடை:

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

1.சீன – ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

  • 1894இல் ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது.
  • இச்சீன-ஜப்பானியப் போரில் (1894 – 1895) சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது உலகை வியக்கவைத்தது.
  • ஜப்பான் லியோடஸ் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்துக்கொண்டது.

2.மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை:
மூவர் கூட்டு நாடுகள் :

  • இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா.

3.ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

விடை:

  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று,
  • பிரான்சின் அதி தீவிரப்பற்று,
  • ஜெர்மனியின் வெறிக்கொண்ட நாட்டுப்பற்று
  • ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர்வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

4.பதுங்குக் குழிபோர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

விடை:

  • போர்வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக் குழிகள் எதிரிகளின் சுடுதலில் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின.
  • பிரதானப் பதுங்குக் குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும்.
  • அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்துசேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.

5.முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?

விடை:

  • துருக்கி ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார்.
  • அவர் துருக்கியை நவீன மயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்து மாற்றியமைத்தார்.

6.பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

விடை:

  • சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை .
  • ‘கூட்டுப்பாதுகாப்பு’ எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.

10th Social Science Unit 1 Question answers

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

1.முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.

விடை:
முதல் உலகப் போருக்கான காரணங்கள்:

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள் இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
  • ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • பிஸ்மார்க்கின் வழிகாட்டுதலில் அவை 1882இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன.
  • மற்றொரு முகாமில் பிரான்சு, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்தன.
  • இந்த நாடுகளுக்கு இடையே 1902இல் இணைப்பு உருவாக்கப்பட்டது.
  • இந்த இணைப்பு மூவர் கூட்டு எனப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம் :

  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் அதி தீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறிக்கொண்ட நாட்டுப்பற்று, ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு :

  • ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை :

  • பிரான்சும், ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
  • ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது குறித்த கசப்பான நினைவுகளை பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியின் மீது கொண்டிருந்தனர்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு:

  • 1908ஆம் ஆண்டில் துருக்கியல் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது.
  • அதன்படி பாஸ்னியா, ஹெர்சகோவினா ஆகிய இரண்டையும் ஆஸ்திரியா இணைத்துக்கொண்டது.
  • இதன் தொடர்பில் ஜெர்மனி ஆஸ்திரியாவிற்கு உறுதியான ஆதரவை நல்கியது.
  • ஆஸ்திரியாவிற்கும் செர்பியாவிற்குமான இப்பகை 1914 இல் போர் வெடிக்கக் காரணமாயிற்று.

பால்கன் போர்கள் :

  • பதினெட்டாம் நூற்றாண்டின் முதல்பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில் துருக்கி வலிமை வாய்ந்த நாடாகத் திகழ்ந்தது.
  • ஆர்மீனிய இனப்படுகொலைகள் இதற்கு ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டு ஆகும். 1912ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அவை பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின.
  • இக்கழகம் முதல் பால்கன் போரில் (1912-1913) துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தன.
  • 1913 மே திங்களில் கையெழுத்தான இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
  • 1913 ஆகஸ்டு திங்களில் கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்:

  • பால்கனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் உச்சகட்டம் பாஸ்னியாவிலுள்ள செராஜிவோ என்னுமிடத்தில் அரங்கேறியது.
  • 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
  • ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
  • பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கவே இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று

2.ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.

விடை:

  • போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும்.
  • ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது.
  • சிறிய கப்பற்படையொன்றை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
  • ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்ட்டது.
  • ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன.
  • ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
  • அல்சேஸ் லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.
  • முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, விதுவேனியா ஆகியன சுதந்திரநாடுகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
  • வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன.
  • போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
  • நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ்ரைன்லாந்து இருக்கும் என்றும், ரைன்நதியின் கிழக்குக்கரைப் பகுதி படை நீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

3.லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.

விடை:

  • லெனின் 1870-இல் மத்திய வோல்கா பகுதி அருகே பிறந்தார்.
  • அவர் கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளால் கவரப்பட்டார்.

புரட்சியின் விளைவுகள் :

  • புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
  • புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
  • அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
  • போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் ரொட்டி, அமைதி, நிலம் எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
  • ஆனால் தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
  • ஒன்று நிலங்களின் விநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது.
  • மற்றொன்று போரைத் தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
  • லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுதல்:
  • அக்டோபர் திங்களில், லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவுசெய்யக் கேட்டுக்கொண்டார்.
  • டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார்.
  • நவம்பர் 7இல் முக்கியமான அரசுக் கட்டடங்கள், குளிர்கால அரண்மனை, பிரதமமந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை அனைத்தும் ஆயுதமேந்திய ஆலைத் தொழிலாளர்களாலும், புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன.
  • 1917 நவம்பர் 8இல் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது.
  • போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப் பெயரிடப்பட்டது.

4.பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

விடை:
சங்கத்தின் செயல்பாடுகள்:

  • 1920-25ஆகிய ஆண்டுகளுக்கிடையே பன்னாட்டுச் சங்கம் சிக்கல்களைத் தீர்த்துவைக்க அழைக்கப்பட்டது.
  • மூன்று பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதில் சங்கம் வெற்றிபெற்றது.
  • 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
  • பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
  • அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டு, பிரச்சனையைத் தீர்த்துவைக்கச் சங்கம் அழைக்கப்பட்டபோது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
  • 1925இல் மூன்றவாது பிரச்சனை கிரீஸ், பல்கேரியா நாடுகளுக்கிடையே ஏற்பட்டதாகும்.
  • ஆகவே 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை சர்வதேச சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
  • இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது.
  • பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.

10th Social Science Unit 1 Question answers

10th Social Science – History

Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )

 

Leave a Reply