10th Tamil Guide Unit 6.2
இயல் 6.2. பூத்தொடுத்தல்
TN 10th Standard Tamil Samacheer kalvi Guide Unit 6.2 Book Back and additional questions and answers. SSLC Tamil 6th Lesson Full Answer key based on reduced syllabus 2022. 10th Tamil Free Online Test. 10th Tamil இயல் 6.2. பூத்தொடுத்தல் Book Answers. TN 10th Tamil 6th Lesson Unit 6.1 to 6.7 Full Answers. 10th Tamil Full Guide. https://www.studentsguide360.com/
-
10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
I. பலவுள் தெரிக.
மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
- அள்ளி முகர்ந்தால்
- தளரப் பிணைத்தால்
- இறுக்கி முடிச்சிட்டால்
- காம்பு முறிந்தால்
விடை : தளரப் பிணைத்தால்
10th Tamil Guide Unit 6.2
II. சிறு வினா
நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவெடுத்தா – மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்- நாட்டுப்புறப் பாடல்
நவின கவிதையில்
நாட்டுப்புறப் பாடலில்
பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.
பூத்தொடுத்தல் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ________________ மனித வாழ்விற்கு அழகூட்டுபவை
விடை : கலைகள்
2. கவிஞர் உமா மேகஸ்வரி ________________ மாவட்டத்தில் பிறந்தவர்.
விடை : மதுரை
3. கவிஞர் உமா மேகஸ்வரி ________________ வாழ்ந்து வருகிறார்.
விடை : தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்
II. இலக்கணக் குறிப்பு
- தளர – பெயரச்சம்
- இறுக்கி – வினையெச்சம்
III. பகுபத இலக்கணம்
1. இறுக்கி = இறுக்கு + இ
- இறுக்கு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
2. சிரிக்கும் = சிரி + க் + க் + உம்
- சிரி – பகுதி
- க் -சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று விகுதி
IV. சிறு வினா
1. கலை எவற்றுடன் தன்னை பிணைத்து கொண்டுள்ளது?
- அழகியல், மண்ணுயிர்கள் அனைத்தையும் தம் வாழ்வியல் சூழலுடன் பிணைத்து கொண்டுள்ளது
2. பூக்களை தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும், தளரப் பினைப்பதாலும் நிகழ்வது என்ன?
- பூக்களை தொடுக்கும் போது
- இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.
- தளரப் பினைப்பதால் மலர்கள் தரையில் நழுவும்.
3. பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப் பூவைத் தொடுப்பது எப்படி?
- பூவை என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது.
- மனமாகிய நுட்பமான நூலால் மட்டுமே தொடுக்க முடியும்.
4. கவிஞர் உமா மேகஸ்வரி படைத்துள்ள கவிதைத் தாெகுதிகளை கூறுக
- நட்சத்திரங்களின் நடுவே
- வெறும் பாெழுது
- கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
5. கவிஞர் உமா மேகஸ்வரி பற்றி சிறு குறிப்பு வரைக
- கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
- தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
- நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
- கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.
பலவுள் தெரிக
1.இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?
அ) உமா மகேஸ்வரி
ஆ) இரா. மீனாட்சி
இ) இந்திர பார்த்தசாரதி
ஈ) தாமரை
Answer:
அ) உமா மகேஸ்வரி
2.கவிஞர் உமா மகேஸ்வரி எங்குப் பிறந்தார்?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) சேலம்
ஈ) தேனி
Answer:
அ) மதுரை
3.உமா மகேஸ்வரி, தற்போது வாழ்ந்து வருகின்ற மாவட்டம் யாது?
அ) தேனி, ஆண்டிபட்டி
ஆ) மதுரை, அனுப்பானடி
இ) தஞ்சாவூர், வல்லம்
ஈ) திருச்சி, உறையூர்
Answer:
அ) தேனி, ஆண்டிபட்டி