11th Tamil Guide unit 3

11th Tamil Guide unit 3.2

11th Tamil Guide Unit 3.2

இயல் 3.2 காவடிச்சிந்து

Book Back | Additional Question and Answers

11th Tamil Samacheer kalvi guide Lesson 3. Unit 3.2 Book Back and Additional Question Answers.  இயல் 3.2 காவடிச்சிந்து. +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 3 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 3 Full Answer Key

11th Tamil Guide Unit 3 Book Back and Additional Question – Answers  இயல் 3.2 காவடிச்சிந்து

11th Tamil Guide unit 3

பலவுள் தெரிக

1.காலம் சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) அண்ணாமலையார்
இ) முருகன்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) அண்ணாமலையார்
2.கூற்று 1 : வழிநடைப் பாடல் வகையிலிருந்து தோன்றிய பா வடிவம் சிந்து.
கூற்று 2 : நாட்டார் வழக்கியல் இசைமரபு சிந்து.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
இ) கூற்று 1, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு
Answer:
இ) கூற்று 1, 2 சரி
 
3.கூற்று 1 : காவடிச் சிந்துவுக்கு மெட்டு அமைத்தவர் அருணகிரியார்.
கூற்று 2 : அண்ணாமலையார் காவடிச் சிந்துக்கு மெட்டுகள் அமைத்தார்.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றும் சரி
ஈ) இரண்டு கூற்றும் தவறு
Answer:
ஆ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
 
4.‘ஊற்றுமலை’ இருதயாலய மருதப்பத் தேவரின் அவைப் புலவராக இருந்தவர் ……………..
அ) அருணகிரியார்
ஆ) உமறுப்புலவர்
இ) அண்ணாமலையார்
ஈ) பாரதியார்
Answer:
இ) அண்ணாமலையார்
 
5.காவடி எடுக்கும் அடியார் பாடிய திருப்புகழ் முழக்கம், ………….. தேவர்களின் செவியை அடைகிறது.
அ) கைலாயம்
ஆ) வைகுண்டம்
இ) அமராவதிப் பட்டினம்
ஈ) சென்னைப் பட்டினம்
Answer:
இ) அமராவதிப் பட்டினம்

 

குறுவினா

 1.காவடிச்சிந்து என்பது யாது?
தமிழ்நாட்டில் பண்டைக்காலம்முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே, ‘காவடிச்சிந்து’ எனப்படும்.
கூடுதல் வினாக்கள்
 
2.தன் காவடிச்சிந்தின் சிறப்பாக அண்ணாமலைதாசன் குறிப்பிடுவது யாது?
நான் பாடியது, உலகம் போற்றும் ‘காவடிச்சிந்து’ என்றும், இனிமையான தன கவிமாலையை, மலைபோல் அகன்ற தோள்களில் முருகன் சார்த்திக் கொள்கிறான் என்றும் கூறுகிறார்.
 
3.கழுகுமலை முருகன் கோவில் அமைப்பை அண்ணாமலையார் எவ்வாறு கூறியுள்ளார்?
கடலில் வாழும் மீன், மகரம்போன்ற உருவ அமைப்புக் கொண் கொடிகள் எல்லாம் சிறக்கக் கழுகுமலை முருகன் கோவில் திகழ்வதாக அண்ணாமலையார் கூறுகிறார்.
 
4.திருப்புகழ் முழக்கம் எங்குச் சென்றடைவதாகக் காவடிச்சிந்துக் கூறுகிறது?
அமராவதிப் பட்டினத்திலுள்ள தேவர்களின் செவிகளைச் சென்றடைவதாகக் காவடிச்சிந்து கூறுகிறது.
 
5.முருகன் அருள்பெற்று அடியார் எவ்வாறு இன்பம் அடைவர்?
காவடியைத் தோளில் தூக்கிக் கொண்டு, கனலில் உருகிய மெழுகென முருகனை நோக்கிப் பக்தியோடு பாடி ஆடி வரும் அன்பர்கள் அனைவரும், முருகனின் அருளைப் பெற்று இன்பம் அடைவர்.

 

சிறுவினா

 1.தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.
‘காவடி’ என்பது, தடம்ப் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ்மக்கள், குலவதோறும் வீற்றிருக்கும் முருகனின் கோவிலை நோக்கி வழிபடச் செல்வர்.
அப்போது பருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் கொண்டு செல்வர். அப்படிச் செல்லும்போது வழிநடைக் களைப்புப் போக, முருகப் பெருமானின் புகழைச் சிந்துவகைப் பாடலாகப் பாடுவர்.

கூடுதல் வினாக்கள்

 
2.அண்ணாமலையார் குறித்து அறிவன யாவை?
சென்னிகுளம் என்னும் ஊரினரான அண்ணாமலையார், தம் 18ஆம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான ‘இருதயாலய மருதப்பத் தேவர்’ அரசவைப் புலவராக இருந்தார். இவர் பாடிய காவடிச்சிந்து, அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.
காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவையாகும். எனவே, ‘காவடிச்சிந்தின் தந்தை’ எனப் போற்றப் பெற்றார். இவர் வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன் கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

நெடுவினா

 
1.காவடிச்சிந்து ஒரு வழிநடைப் பாடல் – இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க.
முருக வழிபாடு :
குன்றுதோறும் கோவில் கொண்டிருக்கும் தமிழ்க்கடவுள் முருகன். அந்த முருகப் பெருமானை வழிபடச் செல்வோர், பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் வைத்துத் தோள்களில் இட்டுச் சுமந்து செல்வர். இது, தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றாகும்.
காவடி எடுத்தல் :
காவடி எடுத்துச் செல்வதைச் சுமையாகக் கருதாமல், சுகமாக எண்ணி, வழிநடையில் மணிகளை ஒலித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாதசாரிகள் செல்வர். இது, தமிழ்நரட்டில் பண்டைக்காலம் முதல் ‘நாட்டார் வழக்கியல்’ என்னும் இசைமரபோடு கூடியதாக அமைந்துள்ளது.
முருகன் பெருமை :
‘காவடிச்சிந்தின் தந்தை’ எனப் போற்றப் பெறுபவர், சென்னிகுளம் அண்ணாமலையார். இவர் பாடிய காவடிச்சிந்து, அருணகிரியாரின் திருப்புகழ் தந்த தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.
கழுகுமலை முருகனை வழிபடக் காவடி எடுத்துவரும் அடியவர்கள் பாடும் பாடல் முழக்கம், வானுலகத்திலுள்ள தேவர்களின் செவியைச் சென்றடையும் என்கிறார். அண்ணாமலையார் சிந்தில், கழுகுமலை முருகன் சிறப்புகள், அருள்புரியும் திறம், பக்தர்கள் வழிபடும்முறை எனப் பலவும் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளன.
வழிநடைக் களைப்பின்றி, முருகன் அருள்பெற நல்வழி காட்டுவதாக, அண்ணாமலையார் காவடிச் சிந்து அமைந்துள்ளது. பயணக் களைப்பைப் போக்குவதோடு, வழி இடையே விலங்குகளின் தொல்லைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளக் காவடிச்சிந்து உதவுகிறது.

கற்பவை கற்றபின்

 1.எந்தெந்த நாடுகளில் காவடி ஆட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது? அதற்கான காரணங்களைத் திரட்டிக் கலந்துரையாடல் நிகழ்த்துக.
வேலன் : எழில், எங்கே இரண்டு நாள் காக உன்னைப் பள்ளியில் காணவில்லை.
எழில் : என் அப்பாவும் மாமாவும் விரதம் இருந்து காவடி எடுத்து முருகன் கோவிலுக்குச் சென்றனர். நானும் தான் சென்றிருந்தேன்.
 
வேணி : இது, புதிய பழக்கமாகத் தெரிகிறதே!
எழில் : இல்லை. காவிகொடுப்பது என்பது, தமிழகத்தில் பழைய வழக்கமாக நிகழும் விழாக்காலக் கொண்டாட்டமாகும்.
வேணி : காவ ரன் எடுக்கிறார்கள்?
எழில் : முருகனை வழிபடச் செல்பவர்கள், பால், தேன், தினைமாவு, முக்கனி, தேங்காய், சூடம பகலான வழிபாட்டுக்குரிய பொருள்களை ஒரு கழியின் இரு முனைகளிலும் கட்டித் தோள்மேல் சுமந்து, மலைமேல் ஏறிச் சென்று வழிபடுவார்கள். அதுவே காலப்போக்கில் முருகனைக் காவடி எடுத்து வழிபடும் முறையாக மாறிவிட்டது.
வேணி : ஏன் முருகன் கோவில் மலைமேல் உள்ளது?
எழில் : உலகில் மனிதன் தோன்றிய முதல் இடம் மலை. ஆதி குடிகளான தமிழர்கள், இயற்கையில் அழகையும் தெய்வத் தன்மையையும் கண்டு, தாங்கள் வாழ்ந்த மலைநிலத்தில் அழகான தமிழ்க்கடவுள் முருகனுக்குக் கோவிலமைத்து வழிபட்டார்கள். அதுவே பிற்காலத்தில் முருகன் கோவில்கள், மலைமேல் அமைவதற்குரிய காரணமாயிற்று.
தேன்மொழி : காவடி எடுப்பவர்கள், காவடிச்சிந்து பாடிச் செல்கிறார்களே? ஏன்?
எழில் : வழிநடைக் களைப்புத் தெரியாமல் இருக்கத் தாங்கள் வழிபடும் முருகப்பெருமானின்
பெருமைகளைக் கூறிச் செல்வது வழிபாட்டுக்கு உகந்த முறை என்பதால், முருகன் புகழ்பாடக் காவடிச் சிந்தைப் பயன்படுத்துகிறார்கள்.
மலர்விழி : அது சரி! இந்த வழிபாட்டு முறை, தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளதா?
எழில் : இல்லை. பொருள் தேடத் தமிழர்கள் எங்கெல்லாம் உழைக்கச் சென்றார்களோ அங்கெல்லாம், தங்கள் கடவுள் முருகனுக்குக் கோயிலெடுத்து இந்தமுறையில் வழிபடுகிறார்கள்.
வேணி : ஆமாம். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எல்லாம்கூட முருக வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எழில் : வாணிகம் செய்யச் சென்ற நாடுகளில் எல்லாம், அந்த வாணிகர்கள், முருகனுக்குக் கோயில் எடுத்தார்கள். பின்னர்ப் பிழைப்புத் தேடி ஆப்பிரிக்கா, பர்மா, மாலத்தீவுகள், லட்சத் தீவுகள், மொரீஷியஸ் தீவு முதலான இடங்களுக்குச் சென்ற உழைக்கும் தமிழரும் மறக்காமல் முருகனை வழிபடக் கோவில்களை அமைத்தனர். முருகலக்குக் காவடி எடுப்பதை விழாவாக நடத்துகிறார்கள். குறிப்பாகத் தைப்பூச விழாவும் வாங்குனி உத்திர விழாவும் பெரிதாகக் கொண்டாடப்படுகின்றன.
தேன்மொழி : அப்பாடா, எவ்வளவு செய்திகளைத் தெரிந்து வைத்துள்ளீர்கள்! நன்றி

இலக்கணக்குறிப்பு

  • தாவி, மேவி, உயர்ந்து, போற்றி, ஏற்றி – வினையெச்சங்கள்
  • மாதே – விளி
  • நுண்ணிடை, கொழுங்கனல் – பண்புத்தொகைகள்
  • உயர்ந்தோங்கும் – ஒருபொருட்பன்மொழி
  • நகர்வாசன் – ஐந்தாம் வேற்றுமைத்தொகை
  • புயவரை – உருவகம்
  • புனைதீரன், தருகழுகாசலம், இடுமுழவோசை – வினைத்தொகைகள்
  • பதம்பணி (பதத்தைப் பணி), கொடி சூடிய (தொடியைச் சூடிய) – இரண்டாம் வேற்றுமைத் தொகைகள்
  • குறவள்ளி – ஐந்தாம் வேற்றுமை உருபும் பானம் உடன்தொக்க தொகை.
  • மொழிபோதினில் (மொழியைக் கூறும் போதினில்) – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை நூபுரத்துத் தொனி (நூபுரத்தினது தொனி), அடியார் கணம் – (அடியாரது கணம்) – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்.
  • தங்கக்காவடி – (தங்கத்தால் ஆகிய காவடி) – மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
  • பூண்டார் – வினையாணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. வருகின்ற – வா (வரு) + கின்று + அ
வர குதி, வரு’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.
2. சொல்வன் – சொல் + வ் + அன்
சொல் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, அன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.
3. ‘ஏறிய – ஏறு + இ(ன்) + ய் + அ.
ஏறு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன்’ புணர்ந்து கெட்டது,
ய் – சந்தி (உடம்படுமெய்), அ – பெயரெச்ச விகுதி.
4. மேவி – மேவு + இ
மேவு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.
5. போற்றி – போற்று + இ
போற்று – பகுதி, இ – வினையெச்ச விகுதி.
6. ஏற்றி – ஏற்று + இ
ஏற்று – பகுதி, இ – வினையெச்ச விகுதி.
7. காண்பார் – காண் + ப் + ஆர்
காண் – பகுதி, ப் – எதிர்கால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. திருப்புகழ் – திரு + புகழ்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (திருப்புகழ்)
2. உயர்ந்தோங்கும் – உயர்ந்து + ஓங்கும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உயர்ந்த் + ஓங்கும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உயர்ந்தோங்கும்)
3. நுண்ணிடை – நுண்மை + இடை
“ஈறுபோதல்” (நுண் +இடை),
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நுண்ண் +இடை),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நுண்ணிடை )
4. முழவோசை – முழவு + ஓசை
“உயிர்வரின் … முற்றும் அற்று” (முழவ் + ஓசை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (முழவோசை )
5. கொழுங்கனல் – கொழுமை + கனல்
“ஈறுபோதல்” (கொழு + கனல்), “இனம் மிகல் ” (கொழுங்கனல்)
6. தங்கத்தூபி – தங்கம் + தூபி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” (தங்க – தூபி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிதம் (தங்கத்தூபி)
7. செகமெச்சிய – செகம் + மெச்சிய
“மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” சோகமெச்சிய)
8. பொன்னாட்டு – பொன் + நாட்டு
“னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” (பொன்னாட்டு)
9. தங்கக்காவடி – தங்கம் + காவடி
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்” (தங்க + காவடி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும். (தங்கக்காவடி)
10. மின்னிக்கறங்கும் – மின்ன + கறங்கும்
“இயல்பினும் விதியினும் நன்ற உயிர்முன் கசதப மிகும். (மின்னிக்கறங்கும்)
11. இமையோர் – இமை ஓர்
“இ ஈ ஐ வழி யவும்” (இமை + ய் + ஓர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இமையோர்)

Leave a Reply